Untitled Document
May 17, 2024 [GMT]
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் நியமனம்!
[Thursday 2022-01-13 08:00]

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 10வது உபவேந்தராக பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


தமிழ் அரசியல் கைதிகள் ஐந்து பேர் விடுதலை!
[Wednesday 2022-01-12 18:00]

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


வடமராட்சி யுவதியை சீரழித்த மிஸ்ட் கோல் காதல்! - நால்வரால் வன்புணர்வு.
[Wednesday 2022-01-12 18:00]

யாழ்ப்பாணத்தில், தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், அவரது பணம், நகைகளையும் அபகரித்துள்ளனர்.


பொங்கலுக்குத் தயாராகும் யாழ்ப்பாணம்! Top News
[Wednesday 2022-01-12 18:00]

உழவர் திருநாளான தைப்பொங்கல் நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொங்கலுக்குத் தேவையான மண் மற்றும் அலுமினியப் பானைகளையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


சர்வதேச குத்துச்சண்டைப் போட்டிக்கு செல்லும் முல்லைத்தீவு யுவதி! Top News
[Wednesday 2022-01-12 18:00]

பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொள்ளும் முல்லைத்தீவு யுவதிக்கு தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் நிதி அன்பளிப்பு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.


சிங்களத்தில் பதிவாகிய வாக்குமூலம்- கையெழுத்திடாமல் வெளியேறினார் மனோ!
[Wednesday 2022-01-12 18:00]

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் , வாக்குமூலம் தமிழில் பதிவு செய்யப்படாததால் கையெழுத்திடாமல் திரும்பினார்.


பசிலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை!
[Wednesday 2022-01-12 18:00]

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளை அனுப்பியுள்ளது.


மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவியை கைப்பற்றியது முஸ்லிம் காங்கிரஸ்!
[Wednesday 2022-01-12 18:00]

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இன்று மின்தடை வராதாம்!
[Wednesday 2022-01-12 18:00]

இன்று மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார துண்டிப்பு இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


கஞ்சா கடத்தியவர்கள் கைது!
[Wednesday 2022-01-12 18:00]

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி, 22கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை வாகனமொன்றில் கடத்தி சென்ற இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அல்லாரையில் சேவலைப் பிடித்த மலைப்பாம்பு!
[Wednesday 2022-01-12 18:00]

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 ஆடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது. சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட வீட்டிலிருந்தவர்கள் சென்று பார்த்த போது மலைப்பாம்பு சேவலை விழுங்க முற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் பெரும் முயற்சி செய்து பாம்பை பிடித்து கட்டியுள்ளனர்.


நான்காவது கட்டத்துக்கான தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது!
[Wednesday 2022-01-12 08:00]

கனடாவில் உள்ள மக்களுக்கு நான்காம் கொரோனா தடுப்பூசி ஏற்றக்கூடிய அளவிற்கு போதியளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.


புதிதாக கனடா வருபவர்களுக்கு பெருமளவில் வேலை வழங்க திட்டம்!
[Wednesday 2022-01-12 08:00]

இந்த ஆண்டில், புதிதாக கனடாவுக்கு வருபவர்களுக்கு பெருமளவில் வேலை வழங்க கனடா திட்டமிட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு, வெளிநாட்டு மாணவமாணவிகள் கனடாவுக்குத் திரும்பத் துவங்கியுள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு, இந்த ஆண்டில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை புதிய மட்டத்திற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.


பதவிக்காலம் நீடிப்பு - ஜனநாயக விரோதம்!
[Wednesday 2022-01-12 08:00]

உள்ளூராட்சி சபைகளின் பதவி காலத்தை நீடிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,


இன்று விளக்களிக்கிறார் கப்ரால்!
[Wednesday 2022-01-12 08:00]

நாட்டின் பொருளாதார நிலைமைகள் , அந்நிய செலாவணி இருப்பு , தங்கத்தின் கையிருப்பு மற்றும் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துதல் தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் இனறு விளக்கமளிக்கவுள்ளார். அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனைத் தெரிவித்தார்.


எவரும் வெளியேறலாம், எவரும் உள்ளே வரலாம்!
[Wednesday 2022-01-12 08:00]

அரசாங்கத்தை விட்டு எவரும் வெளியேறலாம். வெளியில் இருந்து எவரும் இணையலாம். அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என்ற நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.


கொழும்புக்குப் படையெடுக்கும் பிரபலங்கள்!
[Wednesday 2022-01-12 08:00]

பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் உள்ளடங்கலாக வெளிநாடுகளின் உயர்மட்டப்பிரதிநிதிகள் நால்வர் இம்மாதம் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


ஏமாற்றியது மின்சார சபை! - இருளில் தவித்த மக்கள்.
[Wednesday 2022-01-12 08:00]

நாட்டின் சில பாகங்களில் நேற்றிரவு மின்சாரத் தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே மின்சாரம் துண்டிப்புக்கு காரணம் என்று இலங்கை மின்சார சபை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


கேட்டது மூன்று நாள்- கிடைத்தது 4 மணி நேரம்!
[Wednesday 2022-01-12 08:00]

ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான விவாதத்தை மூன்று நாட்கள் நடத்துவதற்கு உடன்படாத சபாநாயகருக்கு எதிராக தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள், நேற்று அறிவித்துள்ளனர்.


சீன உரம் வந்தேயாகும்!
[Wednesday 2022-01-12 08:00]

சீனாவில் இருந்து 90,000 மெற்றிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன இவ்விடயத்தைத் தெரிவித்தார்.


சுதந்திரக் கட்சி வெளியேறாது!
[Wednesday 2022-01-12 08:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எமது அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வார்கள் என்று தான் நினைக்கவில்லை எனவும், சுதந்திர கட்சியிலுள்ள அமைச்சர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் சுமூகமான உறவே காணப்படுகிறது என்றும் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண, தெரிவித்தார்.


இந்தியப் பிரதமருக்கான ஆவணத்தை சமர்ப்பிப்பதில் இழுபறி!
[Tuesday 2022-01-11 17:00]

இந்திய பிரதமரிடம் கையளிப்பதற்காக இன்று ஒப்படைக்கப்படவிருந்த தமிழ்க் கட்சிகளின் ஆவணம் வரும் 18ஆம் திகதியே இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்படும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


திங்கட்கிழமை மீளத் திறக்கப்படும் ஒன்ராறியோ பாடசாலைகள்!
[Tuesday 2022-01-11 17:00]

ஒன்ராறியோவில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளில் வகுப்பறைக் கற்றல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒன்ராறியோ மாணவர்கள் அன்றைய தினம், நேரடிக் கற்றலுக்குத் திரும்புவார்கள் என்று மாகாண முதல்வரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


மாதகல் மீனவரை கொலை செய்தது கடற்படையே!
[Tuesday 2022-01-11 17:00]

இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் காணப்படுவதுடன், அவர் பயணித்த படகின் வெளி இணைப்பு இயந்திரம் சேதமடைந்துள்ளது.


மாதகல் மீனவர் பலி! - மோதியது கடற்படையா? இந்திய மீனவர்களா? Top News
[Tuesday 2022-01-11 17:00]

யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் சென்ற படகு சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.


மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கியது சீனா!
[Tuesday 2022-01-11 17:00]

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இருந்து சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகம் நீக்கியுள்ளது. கடந்த 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதி ஒப்பந்தத்தை மீறியமையால் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைத்தது.


மின்வெட்டு வரும்.. ஆனால் வராது!
[Tuesday 2022-01-11 17:00]

தற்போது மின்சாரம் தொடர்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்வதாகவும், எதிர்வரும் 10 நாட்களில் மின்சார சபை சமர்ப்பித்துள்ள அட்டவணையின்படி சில மின்வெட்டுகள் ஏற்படக்கூடும் எனவும், இணை அமைச்சரவைப் பேச்சாளர், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.


சிஐடி வசமிருந்த பெண் 5ஆம் மாடியில் இருந்து குதித்தார்!
[Tuesday 2022-01-11 17:00]

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 46 வயதுடைய பெண் ஒருவரே இன்றுஅதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா