Untitled Document
May 4, 2024 [GMT]
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்!
[Thursday 2022-05-12 06:00]

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் தொடர்ந்து முன்னெடுத்தல் தொடர்பான சகல செயற்பாடுகளையும் அமுல்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் இரண்டு மேலதிக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இன்று 5 மணிநேர மின்வெட்டு!
[Thursday 2022-05-12 06:00]

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று 5 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஏ முதல் டபிள்யூ வரையான பிரிவுகளில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை 3 மணி நேரம் 20 நிமிடங்களும் மாலை 6 மணிமுதல் இரவு 11.30 மணிவரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.


போராட்டக்காரர்கள் மீது கைவைக்க கூடாது!
[Thursday 2022-05-12 06:00]

காலி முகத்திடல் மைதானத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


சுயாதீனப் பங்காளிகள் பிரதமர் பதவிக்கு மூவரைப் பரிந்துரை!
[Thursday 2022-05-12 06:00]

பிரதமர் பதவிக்கு மூவரின் பெயர்களை பரிந்துரைத்து 11 கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழு ஜனாதிபதிக்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.


மூடர்களால் இலங்கை வரலாற்றில் கறுப்பு முத்திரை!
[Thursday 2022-05-12 06:00]

கடந்த ஒருமாத காலமாக ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்பட்ட எழுச்சி போராட்டத்தில் அரசாங்கத்தின் ஒரு தரப்பு மூடர்களின் செயற்பாட்டின் பெறுபேற்றினால் தாய் நாடு நீதியற்ற நாடாக மாற்றமடைந்துள்ளது என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அரசியல் கைதிகளுக்கு வைரஸ் காய்ச்சல்!
[Thursday 2022-05-12 06:00]

புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே முருகையா கோமகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


காலிமுகத்திடல் தாக்குதல் - மஹிந்த, நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு!
[Thursday 2022-05-12 06:00]

அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட மக்களின் உரிமைகளை மீறும் வகையில், கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், ரோஹித்த, பவித்ரா, சனத் உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத்துக்கு அதிகாரமளிக்க மீண்டும் 19 ஆவது திருத்தம்! - ஜனாதிபதி வாக்குறுதி.
[Wednesday 2022-05-11 21:00]

இந்த வாரம்புதிய பிரதமர், அமைச்சரவையை நியமிப்பதாகவும், நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.


ஒன்றுகூட முடியாது - கோட்டா கோ கமவில் அறிவிப்பு!
[Wednesday 2022-05-11 21:00]

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக காலிமுகத்திடல் பகுதியில் அமைதிப் போராட்டங்கள் முன்னெடுத்து வரப்படும் நிலையில், விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலகத்துக்கு மேலாக கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி மூலம் இந்த அறிவிப்பு பொலிஸாரால் விடுக்கப்பட்டு வருகின்றது


நாளை 7 மணித்தியாலங்களுக்கு மட்டும் ஊரடங்கு தளர்வு!
[Wednesday 2022-05-11 21:00]

நாட்டில் கடந்த 2 நாட்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும், மீண்டும் நாளை பிற்பகல் 2 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7 மணித்தியாலங்களுக்கு மட்டும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.


முன்னாள் பிரதமர் ரணில் ஜனாதிபதி கோட்டாவை சந்திப்பு!
[Wednesday 2022-05-11 21:00]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இன்று மாலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இடைக்கால அரசின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


ஊரடங்கை தளர்த்தினால் மின்வெட்டு அதிகரிப்பு!
[Wednesday 2022-05-11 21:00]

ஊரடங்கு உத்தரவு நாளைய தினம் தளர்த்தப்படாவிட்டால் மின் வெட்டு மூன்று மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.


ஊருக்குள் புகுந்த கடல் நீர்!
[Wednesday 2022-05-11 21:00]

அக்கரைப்பற்று கடற்கரைப் பகுதியை அண்டிய மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் இன்று அதிகாலை வேளை கடல் நீர் புகுந்தமையால் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பதற்ற நிலையும் ஏற்பட்டது.


கொழும்பு நகர வீதிகளில் இராணுவ கவசவாகனங்கள்! Top News
[Wednesday 2022-05-11 21:00]

இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிறுத்தப்பட்டுள்ளன என இராணுவம் அறிவித்துள்ளது. பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு தனது படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.


சுடும் அதிகாரம்- சட்டவிரோத உத்தரவு!
[Wednesday 2022-05-11 21:00]

சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்கிற உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


வருகிறதா இந்திய இராணுவம்?- மறுக்கிறது தூதரகம்.
[Wednesday 2022-05-11 21:00]

இலங்கையின் தற்போதையை நிலையை கட்டுப்படுத்துவதற்காக இந்திய இராணுவம் இலங்கைக்கு வரவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை இந்திய தூதரகம் மறுத்துள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகினார் ஹரின்!
[Wednesday 2022-05-11 21:00]

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயேச்சை எம்.பி.யாக இருக்க முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தைக் கூட்டும் முடிவை கைவிட்டார் சபாநாயகர்!
[Wednesday 2022-05-11 08:00]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேட நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


கீரி கடித்த பெண் 3 மாதங்களின் பின் மரணம்!
[Wednesday 2022-05-11 08:00]

கீரி கடிக்குள்ளாகிய வயோதிபப் பெண் 3 மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு நீர்வெறுப்பு நோய் காரணம் என்று மருத்துவ அறிக்கையிட்டுள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்த வயோதிபப் பெண்ணின் மூளையை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்ப சட்ட மருத்துவ வல்லுநர் க.வாசுதேவா பணிந்துள்ளார்.


முள்ளியானில் கணவனை கொன்று புதைத்த மனைவி!
[Wednesday 2022-05-11 08:00]

வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் கணவனை மனைவி கொலை செய்து புதைத்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஜனாதிபதி வெளியேறும் வரை போராட்டம் - ஆசிரியர்கள் வரமாட்டார்கள்!
[Wednesday 2022-05-11 08:00]

அதிபர் , ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு வரமாட்டார்கள் என்பதுடன், இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து சமயோசித்தமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் ஆ. தீபன் திலீசன் தெரிவித்தார்.


மகிந்த இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை!- இந்திய தூதரகம் அறிவிப்பு.
[Wednesday 2022-05-11 08:00]

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


முப்படைகளுக்கும் சுடும் அதிகாரம்!
[Wednesday 2022-05-11 08:00]

பொது சொத்துக்களை கொள்ளையிடும் மற்றும் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் நபர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முப்படைக்கும் கட்டளையிடப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து நீடிக்கும் வன்முறைகள்! Top News
[Wednesday 2022-05-11 08:00]

பெரியமுல்ல மற்றும் கட்டுவாப்பிட்டிய உட்பட நீர்கொழும்பில் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.


நாளை வரை தொடர்கிறது ஊரடங்கு!
[Wednesday 2022-05-11 08:00]

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் நாளை காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அங்கஜனின் அலுவலக பதாதைகள் தீக்கிரை! Top News
[Wednesday 2022-05-11 08:00]

யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.


படைகள் பதற்றத்தை தூண்டாதாம்!
[Wednesday 2022-05-11 08:00]

பொது மக்களிடையே பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படை ஒருபோதும் ஈடுபடாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இழுத்து வீழ்த்தப்பட்டது டி.ஏ.ராஜபக்சவின் உருவச் சிலை! Top News
[Tuesday 2022-05-10 18:00]

தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச சகோதரர்களின் தந்தையான டி.ஏ. ராஜபக்சவின் உருவச்சிலை, குழுவொன்றினால், கட்டி இழுத்து வீழ்த்தப்பட்டுள்ளது.

Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா