Untitled Document
April 25, 2024 [GMT]
கலகம் அடக்கும் பொலிஸ் குவிக்கப்பட்டதால் பதற்றம்! - எதிர்ப்புகளால் திரும்பிச் சென்றனர். Top News
[Monday 2022-05-02 20:00]

காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்களுடன் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்ட நிலையில், அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டு வந்த மக்கள் குழப்பமடைந்துள்ளனர்


13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை! Top News
[Monday 2022-05-02 20:00]

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பாஜக கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


காணாமல் ஆக்கப்பட்ட மகன், மருமகன், பேரனைத் தேடியலைந்த மூதாட்டி மரணம்!
[Monday 2022-05-02 20:00]

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரையும் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று இரவு மரணமடைந்துள்ளார். வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த செல்லையா செல்வராணி (வயது 75) என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.


புதன்கிழமை பதவி விலகுகிறார் பிரதமர் மஹிந்த?
[Monday 2022-05-02 20:00]

எதிர்வரும் புதன் கிழமை நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி விட்டு, பிரதமர் மகிந்த ராஜபக்ச, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்திற்குள் நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர், பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


எரிபொருள் கொள்வனவுக்கு மேலும் 200 மில்லியன் டொலர்!
[Monday 2022-05-02 20:00]

அவசரகால எரிபொருள் இருப்புக்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசாங்கம், 200 மில்லியன் டொலர் இந்திய கடனுதவியை நீடித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


மல்லாவியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை!
[Monday 2022-05-02 20:00]

முல்லைத்தீவு மல்லாவி -திருநகர் பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் நேற்று இரவு இரு குழுக்களுகிடையே மோதல்கள் இடம்பெற்றதாகவும் இதனால் பிரதேசத்தில் பதட்டமான சூழல் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


பதுங்குகுழிகளில் அரசாங்கத் தலைவர்கள்!
[Monday 2022-05-02 20:00]

69 இலட்சம் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மே தினக் கூட்டத்தைக் கூட ஏற்பாடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.


சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சி!
[Monday 2022-05-02 20:00]

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 50% குறைந்துள்ளது.


இடைக்கால அரசு விவகாரம் - இன்று மீண்டும் சுயாதீன அணியை சந்திக்கிறார் ஜனாதிபதி!
[Monday 2022-05-02 06:00]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அண்மையில் சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.


கோட்டா கோ ஜெயில் என கூறுங்கள்!- சாணக்கியனுக்கு வழிகாட்டிய பெண். Top News
[Monday 2022-05-02 06:00]

தென்னிலங்கையில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை கண்டு அஞ்சிய போது, மட்டக்களப்பிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


நாளை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!
[Monday 2022-05-02 06:00]

நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை என்பன நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற மே தின பேரணியில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.


அனுமான் சஞ்சீவி மலையை சுமந்தது போல, இலங்கையை சுமப்பார் மோடி!
[Monday 2022-05-02 06:00]

அனுமான் எப்படி சஞ்சீவி மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவரான அண்ணாமலை தெரிவித்தார்.


லிபியாவில் நடந்ததே இலங்கையிலும் நிகழும்!
[Monday 2022-05-02 06:00]

கோபத்துடன் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் நாட்டை அராஜக நிலைக்கே கொண்டுசெல்லும். அவ்வாறானதொரு நிலைக்கு இடமளித்தால் லிபியாவுக்கு நடந்த நிலையே எமது நாட்டுக்கும் இடம்பெறும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.


ஓமந்தையில் ஆவா குழுவின் கொண்டாட்டம்- 16 பேர் கைது!
[Monday 2022-05-02 06:00]

வவுனியா - ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


இடைக்கால அரசு அமைக்கும் பணிகளை முன்னெடுக்க ஐவர் அணி நியமனம்!
[Monday 2022-05-02 06:00]

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்காக, சுயாதீனமாக இயங்கிவரும் 11 கட்சிகளைச் சேர்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இடைக்கால அரசு சூதாட்டத்துக்கு தயாராக இல்லை!
[Monday 2022-05-02 06:00]

நாட்டை அழித்த ராஜபக்ச அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் இடைக்கால அரசு சூதாட்டத்தில் ஈடுபட ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


தரகுப் பணம் பெறும் மோசடியால் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படும்!
[Monday 2022-05-02 06:00]

எரிபொருளை ஏற்றி வரும் கப்பல்களில் இருந்து தரகுப் பணம் பெறும் மோசடி காரணமாக நாட்டில் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும் என கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


கட்டாய தடுப்பூசி ஆணை ரத்து!
[Monday 2022-05-02 06:00]

மக்கள் பொது இடங்களுக்குள் நுழைவதற்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குள் நுழைய முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என, கட்டாயமாக்கி வெளியிடப்பட்ட வர்த்தமானியே இரத்து செய்யப்பட்டுள்ளது.


பிரதமர் பதவி குறித்த ஜனாதிபதியின் எந்த தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயார்!
[Sunday 2022-05-01 18:00]

பிரதமர் பதவி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு! Top News
[Sunday 2022-05-01 18:00]

கிளிநொச்சி மே தின நிகழ்வில் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், சவப்பெட்டியும் எரித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது.


நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 120 பேர் கையொப்பம்!
[Sunday 2022-05-01 18:00]

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.


மீன்பிடிப் படகு மீது மோதிய கடற்படைப் படகு! Top News
[Sunday 2022-05-01 18:00]

வடமராட்சி கடற்பரப்பில் கடற்படைப் படையினரின் படகு மோதி மீனவர்களின் படகு சேதமடைந்துள்ளது. சம்பவத்தில் கடற்தொழிலாளிகள் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன், படகு மற்றும் இயந்திரம் மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளன.


ராஜபக்ஷக்களுடனான 15 வருட உறவு இன்றுடன் முறிந்தது!
[Sunday 2022-05-01 18:00]

ராஜபக்ஷாக்களுடனான 15 வருட உறவை இன்றுடன் முறித்துக் கொள்கின்றோம் என மே தினக் கூட்டத்தில் இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.


அலரி மாளிகைக்கு முன்பாக நடுவீதியில் போராட்டம்! Top News
[Sunday 2022-05-01 18:00]

அலரி மாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ கம’ போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர போராட்டக் கூடாரங்களை பொலிஸார் அகற்றியதையடுத்து, அவர்கள் இவ்வாறு நடுவீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


அனைத்து தலைவர்களும் பதவி விலக வேண்டும்!
[Sunday 2022-05-01 18:00]

மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அனைத்து தலைவர்களும் பதவி விலகி தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு இடமளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


ரஷ்யாவிடம் குறைந்த விலைக்கு மசகு எண்ணெய் பெற முயற்சி!
[Sunday 2022-05-01 18:00]

ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய்யை பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கை அவதானம் செலுத்தியுள்ளது. வெளிநாட்டு கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறைந்த விலையில் மசகு எண்ணெய்யை பெற்றுக் கொள்வதன் மூலம் செலவை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது.


பூநகரி பற்றைக்குள் கஞ்சா பொதிகள்!
[Sunday 2022-05-01 18:00]

130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.


ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது!
[Sunday 2022-05-01 18:00]

வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா