Untitled Document
May 18, 2024 [GMT]
இலங்கைக்கு உதவ ரஷ்யா பரிசீலனை!
[Saturday 2022-05-28 07:00]

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு இலங்கை விடுத்துள்ள கோரிக்கையை ரஷ்ய தரப்பு பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உதவி வழங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தற்போது பரிசீலித்து வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் நகைகளை அபகரித்த யுவதி கைது!
[Saturday 2022-05-28 07:00]

வவுனியாவில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 21 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை!
[Friday 2022-05-27 16:00]

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் அவரை குற்றவாளியாக அறிவித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.


சம்பள அதிகரிப்பு - தீர்மானம் எடுக்கவில்லை!
[Friday 2022-05-27 16:00]

இடைக்கால வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள பிரதமர் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


சஷி வீரவன்ச தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு!
[Friday 2022-05-27 16:00]

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல்!
[Friday 2022-05-27 16:00]

முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


நடேஸ் - பிரியா குடும்பம் அவுஸ்ரேலியாவில் குடியமர அனுமதி!
[Friday 2022-05-27 16:00]

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த நடேஸ் - பிரியா மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பம் குயின்ஸ்லாந்து நகரத்திற்குத் திரும்புவதற்கான நான்கு ஆண்டுகாலப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.


இன்று முதல் நான்காவது டோஸ்!
[Friday 2022-05-27 16:00]

20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்று முதல் கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள், கொரோனா வைரஸுக்கு எதிரான முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களை பெற்றிருத்தல் வேண்டும்.


ஒரே ஆசனத்துடன் ஜனாதிபதியாவார் ரணில்!
[Friday 2022-05-27 16:00]

ரணில் விக்ரமசிங்க ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக் கொண்டு பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் உருவாகும் வல்லமை கொண்டவர் என தான் முன்னர் கூறியது இன்று நடந்து கொண்டிருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


மதுபான விடுதி கொலை - பிரதான சந்தேக நபர் சரண்!
[Friday 2022-05-27 16:00]

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி வல்லையிலுள்ள மதுபான விடுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சபாநாயகரை சந்தித்த அமெரிக்க தூதுவர்!
[Friday 2022-05-27 16:00]

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்தார்.


தோணி கவிழ்ந்து மீனவர் பலி!
[Friday 2022-05-27 16:00]

தோணி கவிழ்ந்து மீனவர் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னுமொருவர் உயிர்த் தப்பியுள்ளார்.


டிப்பர் மோதியதில் பாடசாலை அதிபர் பலி!
[Friday 2022-05-27 07:00]

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை டிப்பர் வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சாணக்கியன் மீது சட்ட நடவடிக்கை!
[Friday 2022-05-27 07:00]

மக்கள் வங்கியில் இருந்து 3பில்லியன் கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் என்மீது பொய் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கின்றார். அவருக்கு எதிராக மான நஷ்டஈடு வழக்கு தொடுப்பேன் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார்.


கோட்டா கோ கமவுக்கு 50 ஆவது நாள்! - மெழுகுவர்த்தி போராட்டத்துக்கு அழைப்பு.
[Friday 2022-05-27 07:00]

கோட்டா கோ கம போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள் நிறைவடையவுள்ள நிலையில் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டமொன்றிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டத்தின் ஐம்பதாவது நாளான நாளை, காலை பத்து மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.


நாடுகளை ஏமாற்றிய எமக்கு எப்படி உதவி கிடைக்கும்?
[Friday 2022-05-27 07:00]

நாம் வங்குரோத்து நிலையில் உள்ளதுடன், பல்வேறு நாடுகளை ஏமாற்றியுள்ளோம். இதனால், வெளிநாட்டு உதவிகள் எமக்கு முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது, என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


இலங்கைகக்கு அனைத்து உதவிகளையும் வழங்குகிறது இந்தியா!
[Friday 2022-05-27 07:00]

இலங்கை சிரமான சூழ்நிலையை கடந்து கொண்டு இருக்கிறது எனவும் ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் அண்டை நாடு என்ற ரீதியிலும் இந்தியா அனைத்து விதமான உதவிகளையும் வழங்கிவருகிறது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


அமைதிப் போராட்டத்தை தடை செய்ய முடியாது! - பொலிஸ் கோரிக்கைக்கு நீதிவான் மறுப்பு.
[Friday 2022-05-27 07:00]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு அமைந்துள்ள கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐந்தாம் ஒழுங்கை கேம்பிரிஜ் பிளேஸ் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பதை தடை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.


இலங்கைக்கு தேவையான மருந்துப் பொருட்களை வழங்க இணக்கம்!
[Friday 2022-05-27 07:00]

எதிர்வரும் ஆகஸ்ட் முதல் ஜூலை 2023 வரை நாட்டிற்கு போதுமான மருத்துவப் பொருட்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.


வன்முறையில் ஈடுபட்டவர்களை இனங்காண இன்று அடையாள அணிவகுப்பு!
[Friday 2022-05-27 07:00]

காலி முகத்திடல் கோட்டா கோ கம போராட்டம் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட மைனா கோ கம போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கான அடையாள அணிவகுப்புக்கள் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


21 ஐ நிறைவேற்றாவிடின் 225 எம்.பிக்களும் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்!
[Friday 2022-05-27 07:00]

21 ஆவது திருத்தத்தை மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய நிறைவேற்றாவிடின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாரதுரமான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை மக்கள் பிரதிநிதிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.


இலங்கை நிலவரம் - இந்திய வெளிவிவகார செயலாளருடன் மிலிந்த மொறகொட பேச்சு!
[Friday 2022-05-27 07:00]

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் புதிய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவாத்ராவை புது தில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார்.


பதவியில் இருந்து விலகுகிறார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!
[Thursday 2022-05-26 18:00]

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.


மண்ணெண்ணெய் தரக் கோரி முல்லைத்தீவில் கடற் தொழிலாளர்கள் போராட்டம்! Top News
[Thursday 2022-05-26 18:00]

கடற்றொழிலுக்கு மண்ணெண்ணெய்யை பெற்றுத் தரக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள், இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணி! - பிளவர் வீதியில் பதற்றம். Top News
[Thursday 2022-05-26 18:00]

கொழும்பு பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோ டீல் கம ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டதால் இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


படையினரின் கவனயீனங்கள் குறித்து ஆராய படைத் தளபதிகள் குழு நியமனம்!
[Thursday 2022-05-26 18:00]

கடந்த மார்ச் 31ஆம் திகதி மிரிஹானவில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் மே 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சம்பவங்களின் போது முப்படையினரின் கவனயீனம் ஏதும் இடம்பெற்றதா என ஆராய முன்னாள் படைத் தளபதிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!
[Thursday 2022-05-26 18:00]

இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.


மீண்டும் வருவாராம் மஹிந்த!
[Thursday 2022-05-26 18:00]

மக்கள் கோரிக்கை விடுத்தால், மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா