Untitled Document
May 8, 2024 [GMT]
28 நாள் சிசுவை உயிருடன் புதைத்த தாய்!
[Thursday 2019-01-03 19:00]

பிறந்து 28 நாட்களான சிசுவை, உயிருடன் புதைத்து கொலை செய்த தாய் மற்றும் தாயின் தாயார் ஆகிய இருவரையும், சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன், கொட்டகலை யூனிபில்ட் தோட்ட பகுதியில் இன்று காலை 11.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரிப்போம்!
[Thursday 2019-01-03 09:00]

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில், ஒற்றையாட்சி முறைமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவேந்தல்! Top News
[Thursday 2019-01-03 09:00]

திருகோணமலையில் விசேட அதிரடிப்படையினரால் ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 13 வது ஆண்டு நினைவு தினம் நேற்று மாலை திருகோணமலை கடற்கரையில் அனுஸ்டிக்கப்பட்டது. திருகோணமலை இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவு தின நிகழ்வில், பலரும் கலந்து கொண்டு மாணவர்களின் உருவப்படத்திற்கு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


மஹிந்தவின் கோரிக்கை- அமைச்சரவை நிராகரிப்பு!
[Thursday 2019-01-03 09:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்துக்பு மேலதிக செயலாளர் ஒருவரை நியமிக்குமாறு மஹிந்த ராஜபக்ச அமைச்சரவைக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை. மஹிந்தவின் இந்தக் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரப்பட உள்ளதாக அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


நாமலுக்கு எதிராக சிஐடி விசாரணை!
[Thursday 2019-01-03 09:00]

போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கை விமானப்படை மற்றும் இராணுவத்தில் இணைந்தமை மற்றும் பயிற்சியின் போது தப்பிச்சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஊழல் தடுப்பு படையணி எனும் அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் அறிவித்துள்ளது.


ஊடகவியலாளர்களுக்கு யாழ். மேயர் புதிய கட்டுப்பாடு!
[Thursday 2019-01-03 09:00]

யாழ். மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு, ஒவ்வொரு அமர்வின்போதும் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டிடம் எழுத்துமூல அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாரடைப்பால் இறந்த மாணவனுக்கு 3 ஏ!
[Thursday 2019-01-03 09:00]

கடந்தவாரம் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில், அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவன் ஒருவர் திடீரென மரணமானார். கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இந்த மாணவன், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.


சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று!
[Thursday 2019-01-03 09:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்திற்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள், எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.


இனவாத பிரசாரத்தில் மஹிந்த தரப்பு!
[Thursday 2019-01-03 09:00]

நாட்டை பிளவுபடுத்தும் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வரப் போவதாக போலி பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. மஹிந்த தரப்பினரால் முன்னெடுக்கப்படும் இந்த இனவாத பிரசாரத்துக்கு மக்கள் பலியாகக்கூடாது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டார்.


மார்ச் 05இல் வரவுசெலவுத் திட்டம்!
[Thursday 2019-01-03 09:00]

2019 ஆம் ஆண்டுக்குரிய வரவுசெலவுத் திட்டம் மார்ச் மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான தீர்மானத்தினை அமைச்சரவை மேற்கொண்டுள்ளது. இவ்வாண்டுக்குரிய வரவு


டெங்கினால் குடும்பஸ்தர் மரணம்!
[Thursday 2019-01-03 09:00]

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த வீரசிங்கம் ரவீந்திரன் (வயது 55) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக பணியாற்றிய குறித்த குடும்பஸ்தர் தொடர்ந்து 3 நாட்களாக கடும் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். அதற்கு வைத்தியசாலைக்குச் சென்று உரிய சிகிச்சைகளை அவர் பெறவில்லை.


புதூர் பகுதியில் காட்டுக்குள் இராணுவம் பாரிய தேடுதல்! Top News
[Wednesday 2019-01-02 18:00]

வவுனியா- புதூர் பகுதியில் நடமாடிய ஒருவரை பொலிசார் சோதனையிட முயன்ற போது, அவர் தப்பியோடிய நிலையில், அவரது பையில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்து அப்பகுதியை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டனர்.


மன்னார் எலும்புக்கூடு மாதிரிகள் அமெரிக்காவுக்கு!
[Wednesday 2019-01-02 18:00]

மன்னார் - மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி அமெரிக்காவின் புளோரிடாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.


அரசியல் நிலைமைகள் - ஐரோப்பிய எம்.பிக்கு சம்பந்தன் விளக்கம்! Top News
[Wednesday 2019-01-02 18:00]

புதிய அரசியல் யாப்பு நியாயமானதொன்றாக இருந்தால், அதற்கு எமது மக்கள் தமது ஆதரவினை கொடுப்பார்கள். தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு தொடர்பில் நான் நியாயமாக நம்பிக்கை கொண்டுள்ளேன். ஏனெனில் இது எனது நாடு இந்த நாடு செழிப்படைய வேண்டும் என்பது எனது விருப்பம் எனவே என்னால் நம்பிக்கையற்றவனாக இருக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.


கோத்தா தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை!
[Wednesday 2019-01-02 18:00]

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறிவருகின்ற போதும், தேர்தலில் போட்டியிடும் எண்ணம் அவரிடம் இல்லை என்று தெரியவருகின்றது.


யாரிடமும் இல்லை இரட்டை பிரஜாவுரிமை!
[Wednesday 2019-01-02 18:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பதாக நாங்கள் இதுவரையில் அறிந்திருக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.


வவுணதீவு கொலைகள் - மற்றொருவருக்கு 3 மாத தடுப்புக்காவல்!
[Wednesday 2019-01-02 18:00]

மட்டக்களப்பு- வவுணதீவில், பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணையைத் திசை திருப்ப முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவர், 90 நாள்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என, பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பேரம் பேசும் வாய்ப்பை வீணடித்து விட்டது கூட்டமைப்பு!
[Wednesday 2019-01-02 18:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த பேரம் பேசும் சக்தி, வீணடிக்கப்பட்டு விட்டதாக வட மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


கறையைப் போக்க ஜனாதிபதி தேர்தல்!
[Wednesday 2019-01-02 18:00]

இன்றைய சூழ்நிலையில் முதலில் நடத்தப்பட வேண்டியது ஜனாதிபதி தேர்தலே என்று, மகிந்த அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.


ஊடக சுதந்திர சுட்டி - 10 இடங்கள் முன்னேறியது இலங்கை!
[Wednesday 2019-01-02 18:00]

ஆர்எஸ்எவ் அமைப்பு வெளியிட்டுள்ள உலக பத்திரிகை சுதந்திர சுட்டிக்கு அமைய, 2017ம் ஆண்டில் 141வது இடத்தில் இருந்த இலங்கை 2018ம் ஆண்டில் 131வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த சுட்டியின்படி, உலகில் ஊடக சுதந்திரம் கூடுதலாக உள்ள நாடு நோர்வே ஆகும். ஊடக சுதந்திரம் மிகவும் குறைவாக உள்ள நாடு எரித்திரியாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியையின் தங்கச் சங்கிலி அறுப்பு!
[Wednesday 2019-01-02 18:00]

வவுனியா- மயிலங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் வீதியில் சென்ற ஆசிரியையின் தங்கச் சங்கிலியை இனந்தெரியாத நபர்கள் அறுத்துச் சென்றனர். வவுனியாவிலிருந்து ஆசிகுளத்திலுள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியை மயிலங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இரு நபர்கள் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்து சென்றனர்.


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி!
[Wednesday 2019-01-02 18:00]

யாழ்.- மானிப்பாய் வீதியில், ஆறுகால்மடம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். ஆறுகால்மடம் புதுவீதியைச் சேர்ந்த திரவியம் விஜயராசா என்ற முதியவரே உயிரிழந்தவராவர்.


கொழும்புத்துறையில் வெடிமருந்து மீட்பு!
[Wednesday 2019-01-02 18:00]

யாழ்.- கொழும்புத்துறை பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒரு தொகை வெடிமருந்தை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.கொழும்புத்துறை பகுதியில் உள்ள சிறுவர் நீதிமன்றுக்கு அருகாமையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் வெடிபொருட்கள் காணப்படுவதாக அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு குறித்த பகுதிக்கு சென்ற அதிரடிபடையினர் அங்கிருந்து 1 கிலோ சி 4 ரக வெடிமருந்து அடங்கிய 7 பொதிகளை மீட்டனர்.


இலங்கை செல்லும் கனடியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!
[Wednesday 2019-01-02 07:00]

இலங்கைக்கு செல்லும் தமிழ் கனேடியர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளது என்று, தமது பிரஜைகளுக்கு கனேடிய அரசாங்கம் போக்குவரத்து அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.


மக்கள் போராட்டத்தின் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது! - பிரதமர் வி.உருத்திரகுமாரன்
[Wednesday 2019-01-02 07:00]

கடந்து சென்ற 2018 மக்கள் போராட்டங்களின் வலிமையினை உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் கொண்ட ஆண்டாக கடந்த 2008 அமைந்திருந்த நிலையில், ஈழத்தமிழர் தேசத்திடம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எதிர்பார்க்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி வேட்பாளர்: மைத்திரி- மகிந்த இணக்கம்!
[Wednesday 2019-01-02 07:00]

ஜனாதிபதி தேர்தலின்போது, எந்த கட்சியிலிருந்து வேட்பாளரை களமிறக்குவது என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். கண்டியில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.


புலிகளுக்கு பயந்து ஒதுங்கியவர்களே பிரச்சினை!
[Wednesday 2019-01-02 07:00]

போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஒதுங்கியவர்களே வடக்கில் தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையும் விரிசலை ஏற்படுத்த முனைகின்றனர் என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.


புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று!
[Wednesday 2019-01-02 07:00]

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அமைச்சுக்களுக்குரிய பொறுப்புக்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர் இடம்பெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா