Untitled Document
May 19, 2024 [GMT]
விரைவில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்!
[Saturday 2019-01-12 19:00]

எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தாம் விரைவில் ஆளுங்கட்சி ஆசனத்தையும் கைப்பற்றுவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


கிழக்கு பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை!
[Saturday 2019-01-12 19:00]

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் 14ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய மாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவுக்குப் பறந்தார் மங்கள சமரவீர!
[Saturday 2019-01-12 19:00]

நிதி அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் வொஷிங்டன் பயணமானார். மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் அவருடன் அமெரிக்கா சென்றுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட் மற்றும் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளை இவர்கள் சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர்.


கிளிநொச்சியில் 50 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
[Saturday 2019-01-12 19:00]

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் உத்தரவின் பேரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் உமையாள்புரம் பகுதியில், முதல்கட்டமாக ஐம்பது குடும்பங்களுக்கு, ஏழரை இலட்சம் ரூபாய் பெறுமதியில் வீடுகளை வழங்குவதற்கு, இன்று 11 மணியளவில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.


வடக்கில் சீமெந்துக் கல் விற்பனையிலும் இறங்கியது இராணுவம்! Top News
[Saturday 2019-01-12 09:00]

முல்லைத்தீவு- முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தை ஆக்கிரமித்து, அங்கு படைத்தலைமையகத்தில் அமைத்து நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், வீடு கட்டுவதற்குப் பயன்படும் சீமெந்து கற்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை ஆரம்பித்துள்ளனர்.


அமெரிக்கத் தூதரகத்தில் அதிகாலையில் தீவிபத்து!
[Saturday 2019-01-12 09:00]

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 தீயணைப்பு வாகனங்கள் 12 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.


சவேந்திர சில்வா நியமனம் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு!
[Saturday 2019-01-12 09:00]

இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டமைக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பில் வடக்கு- கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கனகரஞ்சினி ஜோகராசா தெரிவிக்கையில்-


கிளிநொச்சியில் துப்பாக்கி, வாள் முனையில் கொள்ளை!
[Saturday 2019-01-12 09:00]

கிளி


வீதியில் டயர் எரித்த இளைஞர்கள் கைது!
[Saturday 2019-01-12 09:00]

மட்டக்களப்பில் நேற்று நடந்த ஹர்த்தாலின் போது, வீதியில் டயர் எரித்த சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கிழக்கு மாகாண ஆளுநராக எம். ஹஸ்புல்லா நியமிக்கப்பட்டதை கண்டித்து கிழக்கு மக்கள் ஒன்றியத்தினால் நேற்று ஹர்தாலுக்கு துண்டுப்பிரசுர மூலம் அழைப்பு விடுவிக்கப்பட்டது.


கிளிநொச்சி, முல்லைத்தீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்!
[Saturday 2019-01-12 09:00]

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது. இதுதொடர்பாக வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய தெரிவிக்கையில், இதற்கான திட்டத்தின் கீழ் 500 புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன என்று தெரிவித்தார்.


மைத்திரியை ஆதரிக்கமாட்டோம் - மாகாணசபை உறுப்பினர்கள் தீர்மானம்!
[Saturday 2019-01-12 09:00]

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிரிசேன போட்டியிட்டால், ஆதரிப்பது இல்லை என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர் என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அதேசமயம் அடுத்துவரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் கூட்டணியாக போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


வடக்கிற்கு சம்பிக்க விடுத்துள்ள எச்சரிக்கை!
[Saturday 2019-01-12 09:00]

காலநிலை மாற்றத்தினால், வட மாகாணம் கடுமையான சவால்களை எதிர்நோக்குகின்றது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணமானது அரை பாலைவனமாக மாறும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.


ரணிலுக்கு ராகுல் வாழ்த்து!
[Saturday 2019-01-12 09:00]

இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.


கிழக்கு ஆளுநரை மாற்றக் கோரி மட்டக்களப்பில் ஹர்த்தால்! Top News
[Friday 2019-01-11 19:00]

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் அழைப்பில் இன்று காலை முதல் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.


நிபுணர் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் ரணில்!
[Friday 2019-01-11 19:00]

நாட்டை பிளவுபடுத்துவதற்கோ அல்லது பௌத்த மதத்திற்கு உரித்தான பிரதான இடத்தை இல்லாமல் ஆக்குவதற்கான ஏற்பாடுகளோ புதிய அரசியல் அமைப்பில் எந்தவொரு இடத்திலும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரசியலமைப்பு நிர்ணய சபை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியது.


ஹிஸ்புல்லாவுக்கு எதிராக போராட்டம் - விசாரணையில் இறங்கியது பொலிஸ்!
[Friday 2019-01-11 19:00]

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இடம்பெற்ற ஹர்த்தாலை முன்னிட்டு மட்டக்களப்பு நகர் பகுதியில் பூட்டப்பட்டிருந்த இரு அரசாங்க வங்கிகள் மற்றும் பூட்டப்பட்ட கடைகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


விரைவில் அரசியல் கைதிகளுக்கு நல்ல செய்தி!
[Friday 2019-01-11 19:00]

நீண்டகாலமாக, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு, விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.


போதை தலைக்கேறி வகுப்பறையில் மயங்கிக் கிடந்த மாணவர்கள்!
[Friday 2019-01-11 19:00]

வலி.வடக்கு பகுதி பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர்கள் மூவர் நேற்று போதை மாத்திரைகள் உட்கொண்டு, போதை ஏறிய நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது.


மன்னாரில் அம்பியூலன்ஸ் சாரதி மீது தாக்குதல்!
[Friday 2019-01-11 19:00]

மன்னார்- பேசாலை பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மீது நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில், சாரதி காயமடைந்துள்ள நிலையில் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவத்தை பேசாலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் ஈற்றன் பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.


அசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!
[Friday 2019-01-11 19:00]

மேல் மாகாண ஆளுநராக அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட, அசாத் சாலிக்கு எதிராக, மேல் மாகாண சபையின் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்குத் தயாராகி வருகின்றனர். மேல் மாகாணசபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்து நிறைவேற்றும் வகையில், இருதரப்பும் கலந்துரையாடி வருகிறது.


வடக்கில் இராணுவம் நிலைகொண்டிருந்த இடங்களில் மனிதப் புதைகுழிகள்!
[Friday 2019-01-11 19:00]

வடபுலத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளன என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும், முன்னாள் வடக்கு மாகாண அமைச்சருமானஅனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் சர்வதேச கண்காணிப்புடன் மனித புதை குழி தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


வடக்கு பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை - ஆளுநர் உத்தரவு!
[Friday 2019-01-11 19:00]

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த சிறப்பு விடுமுறைக்கான கட்டளையை கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.


வீரவன்சவின் நூலுக்குத் தடை - 10 மில்லியன் ரூபா செலுத்தவும் நீதிமன்றம் உத்ரவு!
[Friday 2019-01-11 19:00]

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜே.வி.பிக்கு 10 மில்லியன் ரூபாவைச் செலுத்துமாறு, கொழும்பு வணிக நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது. விமல் வீரவன்சவினால் அண்மையில் வெளியிடப்பட்ட


புதிதாக இரு அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் பதவியேற்பு! Top News
[Friday 2019-01-11 19:00]

அமைச்சரவையில் இடம்பெறாத அமைச்சர்கள் இருவரும், பிரதியமைச்சர் ஒருவரும் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக வீ.இராதாகிருஸ்ணனும், தொ​ழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சராக ரவிந்திர சமரவீரவும் அமைச்சரவையில் இடம்பெறாத அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


கடல் அலையில் சிக்கிய மாணவன் சடலமாக மீட்பு! Top News
[Friday 2019-01-11 19:00]

மட்டக்களப்பு -புன்னக்குடா கடலில் நீராடிய மாணவன் ஒருவர், அலையில் சிக்கி மரணமானார். அவரது சடலம், இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். செங்கலடி குமாரவேரலியார் கிராமத்தைச் சேர்ந்த, 14 வயதுடைய மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.


இராணுவ, பொலிஸ் பாதுகாப்புடன் வெடுக்குநாறிமலையில் ஆய்வு!
[Friday 2019-01-11 08:00]

ஜனாதிபதி செயலகம் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக வெடுக்குநாறிமலையில் நேற்று ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக மாவட்டத்தின் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தலையீடு செய்ய வெளிநாடுகளுக்கு அதிகாரம் இல்லை!
[Friday 2019-01-11 08:00]

இலங்


இன்று சமர்ப்பிக்கப்படுகிறது நிபுணர் குழு அறிக்கை!
[Friday 2019-01-11 08:00]

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு பேரவை இன்று முற்பகல் பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது. இதன்போது புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை ஒன்று சமர்பிக்கப்பட உள்ளது. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையே இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.

 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா