Untitled Document
April 27, 2024 [GMT]
பொலித்தீன் பைகளில் கசிப்பு - கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம்!
[Tuesday 2018-12-25 08:00]

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டைக் கிராமத்தில் கசிப்பு விற்பனை அதிகரித்துள்ளது. ஐயன்கோவில், சேற்றுக்கண்டி,இரண்டாம் யுனிற், ஊரியான் ஆகிய பகுதிகளில் வைத்து இவ் விற்பனை நடைபெறுகின்றது சிறு பொலித்தீன் பைகளில் தயார் செய்யப்பட்டு வீடுகைளும் வீதிகளிலும் வைத்து விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


தடம்புரண்டது இராணுவ வாகனம்!
[Tuesday 2018-12-25 08:00]

முல்லைத்தீவில் முள்ளியவளை வீதியில் வீதியை விட்டு விலகிய வாகனம் தடம்புரண்டதில், அதில் பயணித்த ஐந்து படையினர் படுகாயமடைந்தனர். முல்லைத்தீவில் இருந்து கொக்கிளாய் நோக்கிப் பயணித்த இராணுவ வாகனமே விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட படையினர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


முல்லை., கிளிநொச்சி மாவட்டங்களுக்கு போதிய நிதி! Top News
[Monday 2018-12-24 19:00]

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு, கோரிய நிதி விடுவிக்கப்பட்டு மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்படும் என பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞசித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.


மஹிந்த, கோத்தா மீது வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழக்கு?
[Monday 2018-12-24 19:00]

மஹிந்த ராஜபக்ஷ,கோத்தாபய ராஜபக்ஷ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டோருக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கோத்தாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமைச்சர் சந்திப்பு! Top News
[Monday 2018-12-24 19:00]

கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று நேரில் சென்று பார்வைிட்டார். அமைச்சருடன் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிவமோகன், அமைச்சின் செயலாளர், அரச அதிபர் ஆகியோரும் சென்றிருந்தனர்.


முடிந்தளவுக்கு உதவுங்கள் - விக்னேஸ்வரன் கோரிக்கை!
[Monday 2018-12-24 19:00]

வடமாகாணத்தில் பெய்துள்ள அடைமழையினால் இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களும், கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம், மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் தம்மால் முடிந்தளவு உதவிகளை வழங்குமாறு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கர்ப்பிணியை காலால் உதைந்து விட்டு தாலிக்கொடி அறுப்பு!
[Monday 2018-12-24 19:00]

தென்மராட்சி - மீசாலையில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரித்துச் சென்றனர். இன்று மதியம் 1.30 மணிக்கு மீசாலை கிழக்கு சிற்றம்பலம் வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


ஒரு வருடத்துக்குள் ஆட்சி மாற்றம் - மிரட்டுகிறார் மஹிந்த!
[Monday 2018-12-24 19:00]

ஒரு வருடத்திற்குள் நாம் நினைத்தால் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொரட்டுவை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


பாரிய பேரணிக்கு தயாராகும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!
[Monday 2018-12-24 19:00]

எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடத்தவுள்ளதாக வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி உ.சரஸ்வதி தெரிவித்தார். இன்று வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் நிவாரண உதவி!
[Monday 2018-12-24 19:00]

வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான பாடசாலை சீருடை மற்றும் சப்பாத்துக்கள் என்பவற்றுக்கான வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் பதவிக்காக மைத்திரியிடம் மண்டியிடுவேனா?
[Monday 2018-12-24 19:00]

புதிய அமைச்சரவையில் அமைச்சர் பதவி வேண்டும் என்றால் தன்னிடம் மன்னிப்பு கோருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாவனல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.


வலி.தெற்கு பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர்!
[Monday 2018-12-24 19:00]

வலி.தெற்கு பிரதேசசபை உறுப்பினர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான அ. தவப்பிரகாசம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.குறித்த உறுப்பினர் வெற்றிடத்திற்கு கட்சியின் நீண்டகால உறுப்பினரான அ. தவப்பிரகாசத்தை தெரிவு செய்து அவரின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தமிழரசு கட்சியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளார்.


குடும்பத்துடன் தாய்லாந்து செல்கிறார் ஜனாதிபதி!
[Monday 2018-12-24 19:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு, தனது குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு பயணமாகவுள்ளார். அவர் அங்கு ஒருவாரகாலம் விடுமுறையைக் கழிப்பதற்காக தங்கியிருப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.


வன்னியில் 60 ஆயிரம் பேரைத் தவிக்க வைத்த வெள்ளம்! Top News
[Monday 2018-12-24 09:00]

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 16,872 குடும்பங்களைச் சேர்ந்த 60345 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனடி வெள்ள நிவாரணம் - உறவுகளுக்கு உதவுங்கள்!
[Monday 2018-12-24 09:00]

தாயகத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் முற்றிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அந்த மக்கள் பாடசாலைகளிலும் இடைத்தங்கல் முகாங்களிலும் தங்கியுள்ளார்கள். அவர்களுக்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாக கனடியத் தமிழர் தேசிய அவையின் மண்வாசனை அவசரகால நிதியினை நம் உறவுகளிடம் கோரி நிற்கிறது.


இலங்கைக்கான நிதி உதவி குறைப்புக்கு அமெரிக்க செனெட் எதிர்ப்பு!
[Monday 2018-12-24 09:00]

இலங்கைக்கான நிதி உதவிகளை குறைக்கும் திட்டத்திற்கு அமெரிக்க செனட் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு 43 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவது தொடர்பான நிதி ஒதுக்கீட்டு பிரேரணை நேற்று அமெரிக்காவின் செனட் நிதி ஒதுக்கீட்டுக்கான குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.


மஹிந்தவின் எதிர்காலம் தெரிவுக்குழுவின் கையில்!
[Monday 2018-12-24 09:00]

பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல எம்.பிகளின் அரசியல் எதிர்காலம் தெரிவுக்குழுவில் முடிவாகும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நீர்கொழும்பு ஐ.தே.க தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,


சேதமுற்ற வீடுகளுக்கு 10 ஆயிரம் ரூபா!
[Monday 2018-12-24 09:00]

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 157 ஆகும். இவற்றில் 6 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக ஆரம்ப கட்ட நிதியுதவியாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.


வடக்கு அரச அதிபர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!
[Monday 2018-12-24 09:00]

வட மாகாணத்தில் வெள்ளம் மற்றும் அடைமழை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆராயப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கும், வடக்கு மாகாண அரசாங்க அதிபர்கள் மற்றும் வடக்கிலுள்ள அரச அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.


மொட்டு கட்சியில் இணையவில்லையாம்!
[Monday 2018-12-24 09:00]

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை தான் பெற்றுக்கொண்டதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு பறம்பானதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


யானை மீது மோதியது சொகுசு பஸ்! Top News
[Monday 2018-12-24 09:00]

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேரூந்து நேற்று நள்ளிரவு புத்தளத்திற்க்கு அருகில் யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. மன்னாரில் இருந்து நேற்று இரவு 11 மணி அளவில் கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேரூந்து வீதியில் நின்ற யானை ஒன்றுடன் மோதியது. விபத்தில், யானை உயிரிழந்தது. பேரூந்தில் பயணித்தவர்கள் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பபட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேரூந்தும் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.


படுகொலை சதித் திட்டம் - ஸ்கொட்லன்யார்ட் விசாரணை!
[Monday 2018-12-24 09:00]

ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அறிக்கைகள் ஸ்கொட்லாண்ட யார்ட் பொலிஸாருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.


பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கிய 11 சீனர்கள் கைது!
[Monday 2018-12-24 09:00]

கொழும்பில் கட்டுமான வேலைத்தளத்தில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய 11 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு -1 இல் உள்ள சாத்தாம் தெருவில் கட்டுமானத் தளமொன்றில் பாதுகாப்புப் பிரிவினருடன் ஏற்பட்ட மோதலிலேயே சனிக்கிழமை குறித்த சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கிளிநொச்சியில் வெள்ளத்தினால் 31,234 பேர் பாதிப்பு! Top News
[Sunday 2018-12-23 18:00]

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 3338 குடும்பங்களை சேர்ந்த 31234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


மன்னார் புதைகுழி எலும்பு மாதிரிகளை கொழும்புக்கு அனுப்ப நடவடிக்கை!
[Sunday 2018-12-23 18:00]

மன்னர் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளிலிருந்து அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு கொழும்பிற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


வடக்கில் சிங்களக் கட்சிகள் ஆட்சியமைக்கும் ஆபத்து!
[Sunday 2018-12-23 18:00]

சிங்கள கட்சிகள் வடமாகாணசபையில் ஆட்சியமைக்கக் கூடிய ஆபத்தான நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா, பழைய கற்பகபுரத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.


உதவிப் பொருட்களை அனைவருக்கும் பகிருமாறு கோரிக்கை! Top News
[Sunday 2018-12-23 18:00]

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குகின்ற தரப்புக்கள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்று அதற்கமைவாக உதவிகளை வழங்குமாறும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


வெள்ளத்தில் மூழ்கியுள்ள பிரதேச செயலகம்- ஆவணங்கள் நாசம்! Top News
[Sunday 2018-12-23 18:00]

கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேச செயலகம் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ஆவணங்கள் மற்றும் அலுவலகப் பொருட்கள் சேதமடைந்துள்ளன. அலுவலகத்தின் அனைத்துப் பகுதிகளுமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா