Untitled Document
April 27, 2024 [GMT]
பொலிசார் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர்! - குற்றம்சாட்டுகிறார் நீதி அமைச்சர்.
[Monday 2024-04-22 05:00]

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் தவிசாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாரோ ஒரு தரப்பினரின் கைப்பாவையாக செயற்படும் பொலிஸார் சட்டத்தை கையிலெடுத்துள்ளனர். உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு தயாராக இருக்குமாறு அவர்களை எச்சரிப்பதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.


பாடசாலைகளில் 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!
[Monday 2024-04-22 05:00]

நாட்டில் உள்ள பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கவனம் - வெப்பநிலை இன்று அதிகரிக்கும்!
[Monday 2024-04-22 05:00]

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ரணிலை ஏற்கனவே மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்து விட்டனராம்!
[Monday 2024-04-22 05:00]

அரசியல்வாதிகளால் விநியோகிக்கப்படும் பொருட்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக மக்கள் ஏற்கனவே தெரிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


பட்டிருப்பு பாலத்துக்கு கீழ் ஆணின் சடலம்!
[Monday 2024-04-22 05:00]

மட்டக்களப்பு பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .


வேலு குமார் எம்.பியை தாக்க முயன்ற செல்லமுத்துவின் அடியாட்கள்!
[Monday 2024-04-22 05:00]

புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்றுக் காலை நடைப்பெற்றது. அந்த நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரும் கலந்துகொண்டிருந்தார். அந்நிகழ்வின் பின் தனது அடுத்த நிகழ்விற்காக சென்றிருந்த வேலு குமார் எம்.பியை இ.தொ.க வின் உப தலைவர் செல்லமுத்து உட்பட அவரது அடியாட்கள் குழுவொன்று தாக்க முயற்சித்தது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - கொச்சிக்கடை தேவாலயத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Sunday 2024-04-21 16:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஐந்து வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று காலை 8.45 இறகு இலங்கைத்தீவில் உள்ள அனைத்து கிறிஸ்த்தவ தேவாலயங்களிலும் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.


தியத்தலாவ கார் பந்தயத் திடலில் கோர விபத்து - பார்வையாளர்கள் 6 பேர் பலி, 21 பேர் காயம்!
[Sunday 2024-04-21 16:00]

தியத்தலாவ ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற கார் பந்தயத்தில் கார் மோதி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கார் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற கார்களில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்களை மோதிக் கவிழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் குழந்தையொன்று உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உயிர்த்த ஞாயிறு படுகொலை- யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல்! Top News
[Sunday 2024-04-21 16:00]

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 5ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டது.


நாடு முன்னோக்கி நகர வேண்டுமென்றால் பொறுப்புக்கூறல் அவசியம்!- ஐ.நா
[Sunday 2024-04-21 16:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் என ஐ.நா வலியுறுத்தியுள்ளது. கொழும்பு- கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற நினைகூரல் நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ரே பிரான்சே 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதற்கு முழுமையான வெளிப்படையான விசாரணைகள் அவசியம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்! - மட்டக்களப்பில் போராட்டம். Top News
[Sunday 2024-04-21 16:00]

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலோடு தொடர்புடைய சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ!
[Sunday 2024-04-21 16:00]

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தடை உத்தரவிக்கு உள்ளான தலைவர் மைத்திரிபால சிறிசேன தரப்பினர் இன்று காலை எதுல்கோட்டையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நிறைவேற்றுக் குழுவை கூட்டி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தனியார் காணியை தையிட்டி விகாரைக்கு உரித்தாக்குமாறு அறிவுறுத்தல்!
[Sunday 2024-04-21 16:00]

வலிகாமம் வடக்கு தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியை விகாரைக்கு உரித்தாக்குவதை உறுதி செய்வதோடு அதற்குப் பதிலாக அப்பகுதி தமிழ் மக்களுக்கு வேறு இடத்தில் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்டு ஒருமாத கால அவகாசத்துடன் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.


ஈரானிய ஜனாதிபதிக்கான அழைப்பு நிராகரிக்கப்படவில்லை!
[Sunday 2024-04-21 16:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு இதுவரையில் எவ்விதமான மறுப்பும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவருடைய வருகைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


இலங்கைக்கு வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்!
[Sunday 2024-04-21 16:00]

ஜப்பான் வெளிவிவகார ஹயாஷி யொஷிமஸா எதிர்வரும் மே மாத முற்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவிருக்கிறார். அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா ஏற்கனவே கடந்த ஆண்டு ஜுலை மாதம் 29 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தார்.


பதவி விலகுகிறார் தென் மாகாண ஆளுநர்!
[Sunday 2024-04-21 16:00]

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார். மே மாதம் 02ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


2 வருடங்களில் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்!
[Sunday 2024-04-21 05:00]

கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் அந்த சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


வாக்குச்சீட்டில் மொட்டுச் சின்னம் நிச்சயம்!
[Sunday 2024-04-21 05:00]

இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னம் நிச்சயம் இருக்கும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. யார் அந்தச் சின்னத்துக்குரிய வேட்பாளர் என்பதுதான் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று தமிழ் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ.


சீனாவின் உயர்மட்டத் தலைவர் கொழும்பு வருகிறார்!
[Sunday 2024-04-21 05:00]

சீனாவில் மிகவும் அதிகாரம் மிக்க பதவியை வகிக்கும் நபர் ஒருவர் எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார்.சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் துணை அமைச்சரும், சீன மத்திய குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட இராஜதந்திரியுமான சன் ஹையானவே (Sun Haiyan) இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்.


கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து தொடங்கியது நினைவேந்தல் ஊர்வலம்!
[Sunday 2024-04-21 05:00]

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரையான ஊர்வலம் நேற்று நள்ளிரவு ஆரம்பமாகியுள்ளது.


இலங்கையின் கட்டமைப்பான இனவழிப்பும் தமிழ் மக்களின் இன சுத்திகரிப்பும் நூல் வெளியீடு!
[Sunday 2024-04-21 05:00]

இலங்கையின் கட்டமைப்பான இனவழிப்பும் தமிழ் மக்களின் இன சுத்திகரிப்பும்(“Structural Genocide and Ethnic Cleansing of Tamils in Sri Lanka”) என்ற நூல் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் வெளியிட்டு வைக்கப்பட்டது.


நுவரெலியா மலர் கண்காட்சி தொடங்கியது!
[Sunday 2024-04-21 05:00]

நுவரெலியா நகரில் வசந்த காலத்தையொட்டி வருடம் தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனை, ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.


இஸ்ரேலில் உள்ள 70 வீதமான இலங்கையர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வேலை!
[Sunday 2024-04-21 05:00]

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களில் சுமார் 70 வீதமானோர் வீடுகளில் பாதுகாப்பாக பணியாற்றி வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். அவர்களில் சுமார் 15 வீதமானோர் விவசாயத்துறையில் பணியாற்றுவதாகவும், ஏனையோர் கட்டுமானத்துறையிலும், ஏனைய துறைகளிலும் பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கப்பலில் வரும் பயணிகளுக்கு புதிய ஒன்லைன் விசா முறை!
[Sunday 2024-04-21 05:00]

கப்பல் மார்க்கமாக இலங்கை வரும் பயணிகளுக்கு புதிய ஒன்லைன் விசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்கு இந்த ஒன்லைன் விசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதன் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகம் நிமல் குணவர்தன தெரிவித்துள்ளார் .


கரவெட்டியில் கைக்குண்டு!
[Sunday 2024-04-21 05:00]

யாழ்ப்பாணம் -வடமராட்சி கரவெட்டி வடக்கு பகுதி காணி ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரவெட்டி வடக்கு, கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது கைக்குண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து காணி உரிமையாளரால் நெல்லியடி பொலீஸாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து குறித்த கைக் குண்டு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


மின் கட்டணத்தை குறைப்பதே புதிய மின்சார சட்டமூலத்தின் நோக்கம்!
[Sunday 2024-04-21 05:00]

புதிய மின்சார சட்டமூலத்திற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாட முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். எவ்வாறாயினும், மின் கட்டணத்தை குறைப்பதே புதிய மின்சார சட்டமூலத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


சஜித், அனுர கட்சிகளின் யோசனைகளை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை!
[Saturday 2024-04-20 16:00]

ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் சமர்ப்பித்துள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரைணை தொடர்பான யோசனைகளை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.


ரணில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது!
[Saturday 2024-04-20 16:00]

ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷக்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்று சஜித் அணி பக்கம் தாவியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா