Untitled Document
May 10, 2024 [GMT]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்! - மட்டக்களப்பில் போராட்டம். Top News
[Sunday 2024-04-21 16:00]

 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலோடு தொடர்புடைய சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலோடு தொடர்புடைய சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  

இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்று 5 வருட நினைவுதினத்தை முன்னிட்டு சூத்திரதாரிகளை கைது செய்ய கோரி சமூக செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து காந்தி பூங்காவின் முன்னால் பொதுமக்கள் அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்றுதிரண்டனர்.

'அரசே கொலையாளிகளை மறைக்காதே', 'குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது செய்', 'சர்வதேசமே மெனத்தை கலைத்து ஈஸ்ரர் குண்டுவெடிப்பின் நீதியை தா', 'வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்', 'ஐ.நாவில் வழங்கிய வாக்குமூலம் என்னாச்சு', '5 ஆண்டு கடந்தும் அவலத்துக்கு நீதி இல்லையா?' போன்ற சுலோகங்கள் ஏந்தியும், கோஷம் எழுப்பியும் சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச மேற்பார்வையை கோருமாறு பிரித்தானிய நாடாளுமன்றில் பிரேரணை!
[Friday 2024-05-10 04:00]

இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளின்போது சர்வதேச சட்ட நியமங்களை முறையாகப் பேணுமாறும், பக்கச்சார்பற்ற நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் வகையில் சர்வதேச மேற்பார்வையைக் கோருமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.



இலங்கையில் போர் முடிந்த பின்னரும் தொடரும் சித்தரவதைகள்! - ஆவணப்படுத்தினார் சூகா.
[Friday 2024-05-10 04:00]

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தமிழ் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஆண்கள் பெண்களை பாதுகாப்பு படையினர் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.



ரஷ்யாவுக்கு கூலிப்படையினரை அனுப்பும் கும்பலை பிடிக்க விசேட பிரிவு!
[Friday 2024-05-10 04:00]

சட்டவிரோதமான வழிகளில் ரஷ்யா - உக்ரைன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை முப்படை வீரர்களை அனுப்பி ஆள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு விசேட பிரிவொன்றை அமைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.



கந்தர்மடத்தில் பாலியல் தொழில் - வீடு முற்றுகை!
[Friday 2024-05-10 04:00]

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இயங்கி வந்த பாலியல் தொழில்இடம்பெற்ற வீடு ஒன்று நேற்று யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரின் உதவியுடன் முற்றுகை இடப்பட்டுள்ளது.



அதிக வெப்பத்தினால் யாழ்ப்பாணத்தில் இன்னொரு மரணம்!
[Friday 2024-05-10 04:00]

அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றுமுன்தினம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



இலங்கையைச் சுற்றியுள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம்!
[Friday 2024-05-10 04:00]

தற்போது அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு மாத காலம் நீடித்தால் இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.



மூன்று நாடுகளின் தூதுவர்கள் அனுரகுமாரவுடன் சந்திப்பு!
[Friday 2024-05-10 04:00]

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ,தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் ஆகியோர் வியாழக்கிழமை பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்தனர்.



இலங்கை கூலிப்படையினர் 6 பேர் ரஷ்ய போரில் மரணம்!
[Friday 2024-05-10 04:00]

மனித கடத்தல்காரர்களால் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.



பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான்! - வர்த்தமானி வெளியானது.
[Friday 2024-05-10 04:00]

உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.



நிற்காது அரசியல் பயணம், மீண்டும் வருவேன் பாராளுமன்றம்! - டயானாவின் சூளுரை.
[Friday 2024-05-10 04:00]

நான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவேன் எனச் சூளுரைத்திருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த டயானா கமகே.



நாடுகடந்த தமிழீழ அரச தேர்தல்! எழுந்த பிணக்குக்கு என்னால் தீர்வு காண முடியவில்லை: ரஞ்சன் மனோரஞ்சன்.
[Thursday 2024-05-09 21:00]

இத் தேர்தல் நடைமுறையின்போது கனடா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் சிலரது தேர்தல் வேட்புமனுக்கள் இந் நாடுகளின் தேர்தல் ஆணையகங்களால் நிராகரிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் எனக்குக் கிடைக்கப் பெற்றிருந்தன. இவற்றுள் கூடுதலான வேட்புமனுக்கள் நிராகரிக்பட்டிருந்த கனடா நாட்டில் இந்த முறைப்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மூவர் கொண்ட குழுவொன்று என்னால் நியமிக்கப்பட்டது.



இனவழிப்புப் போரில் பலியாகியுள்ள ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு நினைவு வணக்கத்தைச் செலுத்துகிறோம் கனேடியத் தமிழர் கூட்டு
[Thursday 2024-05-09 20:00]

1. இலங்கை அரசின் இனவழிப்புப் போரில் பலியாகியுள்ள ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நினைவு வணக்கத்தைச் செலுத்துவதோடு, கனேடியத் தமிழர் கூட்டாக எமது மக்கள் மீதி மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுடனும், உயிர் பிழைத்தவர்களுடனும் ஒரு கூட்டாகவும், ஒற்றுமையாகவும் மிகவும் உறுதியாகவும் நாம் நிற்கிறோம்.



செப்ரெம்பர் 17இற்கும் ஒக்டோபர் 16இற்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல்! - அதிகாரபூர்வமாக அறிவிப்பு.
[Thursday 2024-05-09 16:00]

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



சட்டி பானைகளுடன் போராட்டத்தில் குதிப்போம்!
[Thursday 2024-05-09 16:00]

முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்களை மாவட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மாவட்டத்தின் அரசாங்க அதிகாரிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்களா என்ற சந்தேகம் எங்களிடம் மேலோங்கியுள்ளது. இதற்கு எதிராக மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சட்டி பானையுடன் போராட வேண்டிய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து. ரவிகரன் தொரிவித்தார்.



டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறத் தடை!
[Thursday 2024-05-09 16:00]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.



சஜித்தின் கேள்விகளை உதாசீனம் செய்து வெளியேறிய ஜனாதிபதி!
[Thursday 2024-05-09 16:00]

ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்த சில விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தலை கோரி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வியெழுப்பி கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எழுந்து சென்றதால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.



கூலிப்படையினரை ரஷ்யாவுக்கு அனுப்பிய மேஜர் ஜெனரல் கைது!
[Thursday 2024-05-09 16:00]

முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



நல்லிணக்க ஆணைக்குழுவை எதிர்க்கிறோம்!
[Thursday 2024-05-09 16:00]

நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று புதிதாக உருவாக்குவதை முற்று முழுதாக நாம் எதிர்க்கிறோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.



சுதந்திரக் கட்சி தலைவராக செயற்பட மைத்திரிக்கு தடை நீடிப்பு!
[Thursday 2024-05-09 16:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



தேர்தலுக்கான செயற்பாட்டு மையத்தை திறந்தது மொட்டு!
[Thursday 2024-05-09 16:00]

எதிர்வரும் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் பத்தரமுல்லையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா