Untitled Document
April 30, 2024 [GMT]
வடக்கின் நிலைமைகள் குறித்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி!
[Friday 2016-01-08 07:00]

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடு களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நோர்வே தயாராக இருக்கின்றது என்று நேற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே தெரிவித்தார்.


புதன்கிழமை சீனா செல்கிறார் மகிந்த!
[Friday 2016-01-08 07:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எதிர்வரும் புதன்கிழமை சீனா செல்லவுள்ளார். சீனாவின் அழைப்பின் பேரில் செல்லும் அவர் 16 ஆம் திகதி வரையில் அங்கு தங்கியிருப்பார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் சீன விஜயத்தை அவரது இணைப்பாளர் உறுதிப்படுத்தியதுடன் இந்த விஜயமானது மதம் சார்ந்த விஜயம் என்றும் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இந்த விஜயத்தின் போது சீன அரசின் முக்கியஸ்தர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வதைமுகாம் வீடுகளை பார்வையிட மறுத்தார் முதலமைச்சர்!
[Friday 2016-01-08 07:00]

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக வடமாகாண முதலமைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் நேற்று மாலை சென்றிருந்தார். அதன்போது வீமன்காமம் பகுதியில் இராணுவத்தினரின் வதை முகாமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற இரு வீடுகளுக்கு அருகில் முதலமைச்சர் நின்றிருந்த வேளை மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் அந்த இரு வீடுகளுமே இராணுவத்தின் வதை முகாம் என சந்தேகிக்க படுகின்றது எனவும் அதனை மிக அருகில் சென்று பார்வையிட வருமாறும் அழைத்தார்.


யாழ்ப்பாணத்தில் இன்னும் 7000 ஏக்கர் காணிகள் படையினர் வசம்! - அமைச்சர் டி எம் சுவாமிநாதன்
[Friday 2016-01-08 07:00]

யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் பொதுமக்களின் ஏழாயிரம் ஏக்கர் நிலம் படையினர் வசம் இன்னும் உள்ளது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். எனினும் சிறிது சிறிதாக அந்த நிலங்களை தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத வகையில் விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்.


மிதமான அரசியல் கொள்கை மூலம் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும்! - நோர்வே வெளிவிவகார அமைச்சர் Top News
[Thursday 2016-01-07 19:00]

மிதமான அரசியல் கொள்கை மூலம் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும் என நோர்வே வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். நோர்வே வெளிவிவகார அமைச்சர் போகே பிரன்டேவுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


வடக்கு மாகாணம் மலர்ச்சி பெற்று வருகிறது! - முதலமைச்சர் விக்னேஸ்வரன்
[Thursday 2016-01-07 19:00]

எமது இளைஞர் யுவதிகள் புதிய சிந்தனைகளுக்கு இடம்கொடுக்க முன்வர வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். பட்டதாரிப் பயிலுனர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், சாரதிகள் ஆகியோருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கோப்பாய் கல்வியியற் கல்லூரி மண்டபத்தில் இன்று காலை 09 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றினார்.


ரியூசன் செல்லாது 8 கிலோமீற்றர் பயணித்து மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற வவுனியா மாணவி:
[Thursday 2016-01-07 19:00]

ரியூசன் செல்லாது பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி 8 கிலோமீற்றர் தூரம் பயணித்து கலைப்பிரிவில் முதல்நிலை பெற்றுள்ளார் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி அழகுசுந்தரம் ஹம்சாயினி. இது தொடர்பில் அம் மாணவி தெரிவித்ததாவது, ஆரம்ப கல்வியை சுந்தரபுரம் வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை புதுக்குளம் மகாவித்தியாலயத்திலும் கற்றேன். வரலாறு, தமிழ், இந்துநாகரிகம் ஆகிய பாடங்களைக் கற்று 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளேன். என்னுடைய கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம். ரியூசன் வசதிகள் இல்லை. நான் ரியூசனோ அல்லது எந்தவிதமான பிரத்தியேக வகுப்புக்களுக்கோ செல்லாது பாடசாலைக் கல்வியை மட்டுமே நம்பிப் படித்து இந்த நிலையை அடைந்துள்ளேன். அதேபோல் வீட்டில் எனக்கு படிப்பு சம்மந்தமாக எந்தவித கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை. சுதந்திரமாக படித்தேன்.


வீட்டில் சட்டி, முட்டிகளை எண்ணுகிறாராம் மகிந்த!
[Thursday 2016-01-07 19:00]

சமையலறையில் உள்ள சட்டி, முட்டி, பானைகள் போன்ற சமையல் பாத்திரங்களை எண்ணிக்கொண்டிருப்பதால், தற்போது ஊடகங்களில் தோன்றுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மின்சாரத்தில் இயங்கும் சமையல் அறை மற்றும் கழிப்பறை உபகரணங்கள் பற்றி தன்னிடம் தற்போது விசாரணை நடத்தி வருவதால், இவ்வாறு தான் அவற்றை எண்ணிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


உள்ளக பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் அடுத்த வாரம் ஆரம்பம்! - மங்கள சமரவீர Top News
[Thursday 2016-01-07 19:00]

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பிலான உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயற்பாடுகள், அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சர் போகே பிரன்டேவுடனான சந்திப்பையடுத்து, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.


ஜோசப் எம்.பி படுகொலை- இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்!
[Thursday 2016-01-07 19:00]

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மீறாலெப்பை கலீல் என்ற அதிகாரியை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்தார். கடந்த திங்கட்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று புலனாய்வுத்துறை அதிகாரியினால் ஆஜர்படுத்தப்பட்டார்.


தெல்லிப்பளையில் 948 ஏக்கர் காணியை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
[Thursday 2016-01-07 19:00]

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 948 ஏக்கர் காணியை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ண தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் ராஜித்த சேனாரட்ண இவ்வாறு தெரிவித்தார். இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


தமிழினி எழுதிய நூல் பெப்ரவரியில் வெளியாகிறது!
[Thursday 2016-01-07 19:00]

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதிய நூல் எதிர்வரும் பெ்பரவரி மாதம் தமிழில் வெளியிடப்பட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது.


நம்பிக்கையில்லாப் பிரேரணை - முதலமைச்சருக்குத் தெரியாதாம்!
[Thursday 2016-01-07 19:00]

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் நியமன கடிதங்கள் வழங்கும் வைபவம் வடமாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வை தொடர்ந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


தண்டவாளத்தில் படுத்துறங்கிய காவலாளி ரயில் மோதி மரணம்! Top News
[Thursday 2016-01-07 19:00]

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு பயணித்த ரயில் மோதி ரயில்வே பாதுகாப்பு கடவையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புதுக்கமம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தேத்தாவாடி மதுரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் சிவகுமாரன்(வயது-36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சித்திரவதை முகாம் தகவல் பொய்யானது என்கிறார் அமைச்சர் ராஜித!
[Thursday 2016-01-07 18:00]

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சித்திரவதை முகாம் காணப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று நடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


ஜனாதிபதி மைத்திரியை கொல்ல முயன்றவருக்கு பொதுமன்னிப்பு!
[Thursday 2016-01-07 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முற்பட்டதான குற்றச்சாட்டில், தண்டனை விதிக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு, ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. 2005


தீவிபத்தில் உயிரிழந்த முன்னாள் போராளியின் உடல் தீயுடன் சங்கமம்! Top News
[Thursday 2016-01-07 18:00]

தீவிபத்தில் படுகாயமடைந்து கடந்த சனிக்கிழமை உயிரிழந்த கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த முன்னாள் போராளியும் மூன்று பிள்ளைகளின் தாயாருமாகிய செல்வக்குமாரியின் உடல் நேற்று அக்கினியுடன் சங்கமமானது. ஈழ விடுதலைக்காக ஒரு கண்ணை இழந்த செல்வகுமாரி அதன் பாதிப்பால் மறுகண் பார்வையையும் இழந்தார்.


பாடசாலைப் படிப்பை மட்டும் நம்பி படித்த வவுனியா மாணவிக்கு மாவட்டத்தில் முதலிடம்! Top News
[Thursday 2016-01-07 18:00]

தனியார் கல்வி நிலையம் செல்லாது பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி, படித்த வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி அழகுசுந்தரம் ஹம்சாயினி கலைப்பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளார். இது தொடர்பில் அம் மாணவி தெரிவித்ததாவது, ஆரம்ப கல்வியை சுந்தரபுரம் வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை புதுக்குளம் மகாவித்தியாலயத்திலும் கற்றேன். வரலாறு, தமிழ், இந்துநாகரிகம் ஆகிய பாடங்களைக் கற்று 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளேன்.


இலங்கைக்கு நாசா எச்சரிக்கை!
[Thursday 2016-01-07 07:00]

இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும் காலநிலை தாக்கத்தினால் இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களை இலங்கை இந்த வருடத்தில் எதிர்நோக்குமென நாசா குறிப்பிட்டுள்ளது.


மக்களின் குறைகளை ஜனாதிபதி மைதிரிக்கு தெரிவிக்க புதிய சேவை ஆரம்பம்!
[Thursday 2016-01-07 07:00]

இலங்கையில் வாழ்கின்ற சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் புதிய சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.


முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - பொய் என்கிறார் அவைத்தலைவர்!
[Thursday 2016-01-07 07:00]

வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் அடுத்துவரும் ஒரு சில வாரங்களில் அது வட மாகாணசபையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.


சந்திரிகாவுடனும் பேசுகிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்!
[Thursday 2016-01-07 07:00]

நோர்வே அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் பேச்சு நடத்த உள்ளது. நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்கே பிரன்டே ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். சந்திரிகா ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில் நோர்வே அரசாங்கம் சமாதான முனைப்புக்களில் முக்கிய பங்காற்றியிருந்தது. 2005ம் ஆண்டிலேயே இறுதியாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.


பிரகீத் கடத்தல் வழக்கில் திருப்பம் - உத்தரவிட்டவரின் பெயர் அம்பலம்!
[Thursday 2016-01-07 07:00]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பான விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படடுள்ள இரண்டு பேர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்துமாறு உத்தரவிட்ட அதிகார தலைமை யார் என்பதை வெளியிட்டுள்ளனர். இந்த கடத்தலுக்கு, முன்னைய அரசாங்கத்தின் முன்னிலை பாதுகாப்பு முக்கியஸ்தர் ஒருவரே உத்தரவிட்டுள்ளார் என்று சீஐடி சந்தேகம் வெளியிட்டுள்ளது.


பதன்கோட் தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம்!
[Thursday 2016-01-07 07:00]

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட் விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. இந்த சம்பவத்தின் போது பலியான படையினரின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கமும் மக்களும் தமது அனுதாபத்தை தெரிவிப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. பிராந்தியத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்படுவதற்கு இலங்கை தொடர்ந்தும் தயாராகவுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.


ஐ.எஸ் அமைப்பு குறித்து படையினர் உசார் நிலையில்! - பாதுகாப்பு அமைச்சு
[Thursday 2016-01-07 07:00]

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்து பாதுகாப்பு படையினர் மிகவும் உன்னிப்பாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தமது செயற்பாடுகளை இலங்கையில் ஆரம்பிப்பது மற்றும், இலங்கையில் தோற்றம் பெறுவது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில், அவர்களின் எச்சரிக்கை குறித்து, இலங்கை பாதுகாப்பு படையினர் உஷாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.


சீனா செல்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிறார் மகிந்த!
[Thursday 2016-01-07 07:00]

சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்வதா, இல்லையா என்று தான் இன்னும் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்‌ஷ சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ள. இந்த நிலையில், திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


மேலும் பல இடங்களை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு இணக்கம்! - பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தகவல்
[Thursday 2016-01-07 07:00]

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத வகையில், மேலும் பல இடங்களை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளது என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.


புலம்பெயர் புலிகளைத் திருப்திப்படுத்தவே இராணுவ அதிகாரிகள் கைது! - விமல் வீரவன்ச
[Thursday 2016-01-07 07:00]

புலம்பெயர் விடுதலைப் புலிகளை திருப்திப்படுத்துவதற்காகவே ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வாளர்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது என்று விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இராணுவ புலனாய்வு அதிகாரிகளையும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவாவையும் நேற்று சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.

Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா