Untitled Document
May 17, 2024 [GMT]
ஞானசார தேரரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
[Monday 2016-01-25 19:00]

பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்ய ஹோமகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தல் வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சாகும்வரை தூக்கிலிடுங்கள்! - வித்தியா கொலை சந்தேக நபர்கள் தெரிவிப்பு
[Monday 2016-01-25 19:00]

குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டால் தம்மை சாகும் வரை தூக்கிலிடுமாறு வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இன்றைய தினம் சந்தேகநபர்கள் பத்து பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


முல்லைத்தீவில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்த போது இருவேறு ஆர்ப்பாட்டங்கள்! Top News
[Monday 2016-01-25 19:00]

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், நடைபெற்ற இடத்துக்கு முன்பாக, இன்று இரண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கோப்பாப்புலவு பகுதியைச் சேர்ந்த மக்கள், இராணுவத்தினர் வசமுள்ள தங்கள் வயல் காணிகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


மைத்துனரின் கோடரி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவர் மரணம்!
[Monday 2016-01-25 19:00]

குப்பிளான் வடக்கு பகுதியில் கடந்த 21ஆம் திகதி கோடரி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர், நேற்று உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சீவரத்தினம் ஜீவராஜ் (வயது 38) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.


மைத்திரிக்கு வாக்களித்திருக்காவிடின் ஆறடி மண்ணுக்குள் அடங்கியிருப்பார்! - சந்தியா எக்னெலிகொட
[Monday 2016-01-25 19:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்திருக்காவிட்டால், அவர் ஆறடி மண்ணுக்குள் அடங்கியிருப்பார் என காணாமல்போன ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதனை நான் சொல்லவில்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தெரிவித்திருந்தார்,அதனையே நான் சுட்டிக்காட்டுகின்றேன்.


அரசியல் பேசினால் வெளியேறுவேன்! - அன்ரனி ஜெயநாதன் ஆவேசம். Top News
[Monday 2016-01-25 19:00]

இணைத்தலைவர்கள், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தங்கள் கட்சி மற்றும் தங்கள் சார்ந்த அரசியல் விடயங்களை பேசிக்கொண்டிருந்தால், கூட்டத்திலிருந்து வெளியேறுவேன் என வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், கே.காதர் மஸ்தான் ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், இன்று நடைபெற்றது.


படையினர் வசமுள்ள எல்லாக் காணிகளும் விடுவிக்கப்படாது! - பாதுகாப்புச் செயலாளர் உறுதி
[Monday 2016-01-25 07:00]

தேசிய பாதுகாப்பு நலனுக்கு தேவைப்படும் காணிகள் எவையும் வடக்கில் விடுவிக்கப்படாது. அதற்குப் பதிலாக உரிமையாளர்களுக்கு மாற்று காணிகள் வழங்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தக் குழு ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.


யாழ்.நகரில் இன்று ஆர்ப்பாட்டம்!
[Monday 2016-01-25 07:00]

காணாமல்போன சகலரையும் கண்டுபிடிக்குமாறு கோரியும், சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐதேகவை தோற்கடிக்கக் கூடிய கட்சிக்கே ஆதரவு! - என்கிறார் திஸ்ஸ விதாரண
[Monday 2016-01-25 07:00]

உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கக் கூடிய கட்சிக்கு ஆதரவளிக்கப்படும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கக் கூடிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்படுவதனை விரும்புகின்றோம். அவ்வாறான கூட்டணி உருவாக்கப்பட்டால் ஆதரவளிக்கத் தயார்.


அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!
[Monday 2016-01-25 07:00]

அரசியல் கட்சிகளின் வரவு செலவுக் கணக்கை சமர்ப்பிப்பதற்கு தேர்தல் ஆணையம் காலக்கெடு விதித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கணக்காய்வுக்குட்படுத்தப்பட்ட கட்சியின் வரவு செலவுக் கணக்கை எதிர்வரும் 29ம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான அறிவுறுத்தல் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் அனுப்பப்பட்டுள்ளது.


இந்தியாவுடன் உடன்படிக்கை செய்து கொண்டால் வீதியில் இறங்கிப் போராடுவோம்! - ஜேவிபி எச்சரிக்கை
[Monday 2016-01-25 07:00]

இலங்கை இந்திய நாடுகளுக்கிடையில் சீபாவுக்கு பதிலான பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையில் பெப்ரவரி மாதம் இரகசியமாக அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளது. உடன்படிக்கை தொடர்பிலான திட்ட வரைபைகூட இந்திய தூதுக் குழுவினரிடம் இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ளது என ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. இரகசியமாக இவர்கள் செய்யும் இந்த மோசடிகளை நிறுத்தாவிடின் அனைத்து தொழில் சங்கங்களையும் பொதுமக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக போராடவேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் ஜே.வி.பி தெரிவித்தது.


நாளை அவசரமாக கூடுகிறது சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழு!
[Monday 2016-01-25 07:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவின் அவசர கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பேச்சு நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹாவலி கேந்திர நிலையத்தில் நாளை முற்பகல் 10 மணிக்கு சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இரண்டு மாதங்களின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.


முதலாம் வகுப்பில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த பரிந்துரை!
[Monday 2016-01-25 07:00]

இலங்கையில் முதலாம் வகுப்பு தொடங்கி பாலியல் கல்வியை முன்னெடுக்க தேசிய சிறார் அதிகார சபை பரிந்துரை செய்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் வகுப்பு முதல் கட்டம் கட்டமாக பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என அந்த அமைப்பு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதை அந்த அமைப்பின் தலைவி நடாஷா பாலேந்திரா உறுதிப்படுத்தினார்.


குருநகர் கடலில் மூழ்கி சிறுவன் பலி!
[Monday 2016-01-25 07:00]

சகோதரனுடன் கடலில் விளையாடிய சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மதியம் குருநகர் பகுதியில் இடம்பெற்றது. தொடர்மாடி குருநகரைச் சேர்ந்த குருநகர் சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 05 இல் கல்வி கற்கும் ரூபன் அன்ரனி பேட் கீர்த்தனன் (வயது 10) என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.


இந்தியா கொடுத்த 40 பஸ்களை விழுங்கிய தொண்டமான்!
[Monday 2016-01-25 07:00]

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலDனுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 'டாடா சிட்டி ரைடர்' வகையைச் சேர்ந்த 40 பஸ்களை முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மிகவும் இரகசியமான முறையில் விற்று, அப்பணத்தைத் தன்னுடைய சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


புதிய சட்டத்தால் பிக்குகளுக்கு ஆபத்து! - உசுப்பேற்றுகிறார் மஹிந்த
[Monday 2016-01-25 07:00]

பௌத்த பிக்குகள் தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், பௌத்த துறவியொருவரைக் கண்டுபிடிப்பது, எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையாகிவிடும். நாட்டிலுள்ள பல விகாரைகள், தற்போது மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலைமை, எதிர்காலத்தில் அதிகரிக்கும் அபாயம் தோன்றும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பேரவையின் உப குழு தயாரித்த தீர்வு யோசனை முதலமைச்சரிடம் கையளிப்பு!
[Sunday 2016-01-24 20:00]

தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுக்கான யோசனைகள் இன்று பேரவையின் இணைத்தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு -கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு சுயாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக உபகுழுவின் உறுப்பினர் தெரிவித்தார்.


கூட்டமைப்பு- முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த வாரம் பேச்சு!
[Sunday 2016-01-24 20:00]

புதிய அரசியலமைப்பில் தமிழ், முஸ்லிம் தேசிய இனங்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையில் முக்கிய பேச்சு அடுத்தவார இறுதியில் நடைபெறவுள்ளதாக மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் நேரில் கோரினார் ஜெனீபன்! Top News
[Sunday 2016-01-24 20:00]

அண்மையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ஜெனீபனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மீண்டும் சந்தித்தார். புதுக்குடியிருப்பில் ஆடைத் தொழிற்சாலையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு ஜனாதிபதி சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தன்னை விடுதலை செய்தமைக்கு இதன்போது ஜெனீபன் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததாகவும், சிறைவாசம் அனுபவித்து வரும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிபனின் பெற்றோரும் ஜனாதிபதியை சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்தனர்.


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனுக்கு கல்முனையில் அஞ்சலி நிகழ்வு! Top News
[Sunday 2016-01-24 20:00]

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10வது ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம், யாழ் ஊடக மையம் ஆகியவற்றுடன் இணைந்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனம் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.


இரகசியமாக புதுக்குடியிருப்பு வந்த ஜனாதிபதி! - ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்தார் Top News
[Sunday 2016-01-24 20:00]

முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.'ஹைட்ராமணி' என்ற ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்குள்ள பணியாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளோடும் கலந்துரையாடியுள்ளார். இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் போன்றோருக்கு கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.


இலங்கைச் சட்டத்தரணிகளின் கடிதங்கள் நம்பிக்கையற்றவை! - பிரித்தானியா
[Sunday 2016-01-24 20:00]

பிரித்தானியாவில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்களை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்படும் சட்டத்தரணிகளின் கடிதங்கள் பெரும்பாலும் நம்பிக்கையற்றவையாக உள்ளன என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவர் பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அரசியல் அடைக்கலம் கோரியவர்களுடைய 80 கோரிக்கைகளை பரிசீலித்தபோது அதில் 30 கோரிக்கைகளின் சட்டத்தரணிகள் கடிதங்கள் நம்பிக்கைக்குரியனவாக இருக்கவில்லை.


ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தண்டிக்கும் அதிகாரம்?
[Sunday 2016-01-24 20:00]

பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது. ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தண்டனை வழங்கும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள யோசனை சம்பந்தமாக ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் அரசாங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சு நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி அல்லது அவரது பிரதிநிதி அல்லது பிரதமர் அல்லது அவரது பிரதிநிதி மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர் உள்ளிட்ட தரப்பினருடன் இந்தப் பேச்சு நடத்தப்படவுள்ளது.


இலங்கையில்
[Sunday 2016-01-24 20:00]

இலங்கையில்


யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வசம் 5,341 ஏக்கர் காணிகள்! -அதிகாரபூர்வ தகவல் வெளியானது Top News
[Sunday 2016-01-24 20:00]

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் வலிகாமம் வடக்கில் இன்னமும் 5,341.28 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர் வலிகாமம் வடக்கில் 7080.5 ஏக்கர் நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்தது. இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இரண்டு கட்டங்களாக 1,739.02 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.


நவக்கிரியில் ஏற்பட்டது நில அதிர்வல்ல, தரைஇறக்கமே!
[Sunday 2016-01-24 20:00]

புத்தூர் மேற்கு, நவக்கிரி பகுதியில் நிலத்தில் உண்டான தீடிர் பிளவுகள் புவியதிர்வல்ல எனவும், அவை நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு பாறைகளில் உண்டாகும் உடைவுகளால் ஏற்படும் தரை இறக்கம் மட்டுமே எனவும், பேராதனை பல்கலைக்கழக புவியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் நேற்று அதிகாலை வீடொன்றிலும் தோட்ட நிலங்களிலும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்தன.


வந்தாறுமூலை விபத்தில் 6 பேர் படுகாயம்! Top News
[Sunday 2016-01-24 19:00]

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒரு வயதுக் குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனையிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி, மதகு ஒன்றினுள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் முச்சக்கரவண்டிச் சாரதியான ச.மகாதேவன் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த கே.பரதன், கே.யாழினி, கே.அனுஷ்கன், ஐ.ரஞ்ஜினி மற்றும் பீ.காருனி (வயது 01) ஆகியோரே படுகாயமடைந்தனர்.


வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரிக்கும் ஜனாதிபதியின் கருத்துக்கு கூட்டமைப்பு கண்டனம்!
[Sunday 2016-01-24 09:00]

ஐ.நா.மனித உரிமைகள் பேரவைதீர்மானத்துக்கு அமைய போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் போது வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா