Untitled Document
May 17, 2024 [GMT]
வடக்கின் நிலைமைகள் குறித்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி!
[Friday 2016-01-08 07:00]

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடு
களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நோர்வே தயாராக இருக்கின்றது என்று நேற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே தெரிவித்தார்.

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடு களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நோர்வே தயாராக இருக்கின்றது என்று நேற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே தெரிவித்தார்.

  

இலங்கைக்கு நேற்றைய தினம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே நேற்றுக்காலை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நோர்வே வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில்- இலங்கைக்கு 11 வருடங்களின் பின்னர் வெளிவிவகார அமைச்சராக வருகைதர கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையில் மிக முக்கியமான மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் விஜயம் செய்ய கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகும். குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்துக்கு வந்து ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளமை தொடர்பில் கொண்டாட்டங்கள் இடம்பெறுகையில் இலங்கைக்கு வரக்கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

இலங்கைக்கு சர்வதேச நாடுகள் உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளன. நோர்வேயிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவானது 1986 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டன. மிகவும் நெருக்கமான உறவு இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்றது. குறிப்பாக மீன்பிடித்துறை விவசாயத்துறை உள்ளிட்ட விடயங்களில் இலங்கையுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம். அந்த விடயங்கள் குறித்து இன்றைய (நேற்று) சந்திப்பின்போதும் விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையின் பல்லின மற்றும் பல் கலாசார தன்மைதான் இந்த நாட்டின் பலத்துக்கு காரணமாக அமைந்துள்ளன. அதனை மேலும் பலப்படுத்தவேண்டும். அந்தவகையில் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நோர்வே தயாராக இருக்கின்றது.

விசேடமாக வடக்கில் காணப்படும் நிலைமைகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். வீடமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அவை குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். நோர்வேயை உங்களின் நெருங்கிய மற்றும் உண்மையான நண்பனாக பாருங்கள். நாங்கள் உங்களுக்கு உதவிகளை வழங்குவோம். உங்களின் நல்லிணக்க பணிகளுக்கு ஒத்துழைப்பை நல்குவோம். இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கின்றோம். இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.

மேலும் இலங்கையினால் முன்னேற்றமடைந்து செல்வதற்கு பாரிய ஆற்றல் காணப்படுகின்றது. அந்த ஆற்றலை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். விசேடமாக இலங்கையில் நேரடி முதலீடுகளை முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளது. அதன்மூலம் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!
[Friday 2024-05-17 16:00]

திருகோணமலை - மூதூர் - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் மூதூர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.



காணாமல் ஆக்கப்பட்டுவதற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும்!
[Friday 2024-05-17 16:00]

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் அதற்கு காரணமானவர்கள் அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



எலிசபெத் வேண்டாம்! - நிராகரியுங்கள் என்கிறார் கம்மன்பில.
[Friday 2024-05-17 16:00]

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது டெலோ!
[Friday 2024-05-17 16:00]

தேசியத்தின்பால் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் டெலோ ஈடுபடுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 16:00]

முள்ளிவாய்க்கால் போரின் 15 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின், முன்னாள் போராளிகளின் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டக் கைதிகளின் குடும்பங்களை இன்று சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.



மூன்று மீனவர்களுடன் சம்பில்துறையில் கரையொதுங்கியது இந்தியப் படகு!
[Friday 2024-05-17 16:00]

தமிழகம்- மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர் படகு ஒன்று வியாழக்கிழமை மாலை எரிபொருள் தீர்ந்ததனால் யாழ்ப்பாணம் - சம்பில்துறையில் கரையொதுங்கியது. பெருமாள் வாஞ்சிநாதன், ராஜேந்திரன் மகேஷ், இளங்கோவன் ரஞ்சித்குமார் ஆகிய மீனவர்கள் படகுடன் கரையொதுங்கினர். குறித்த மீனவர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



நினைவேந்தல்களை தடுக்க வேண்டாம்! - என்கிறார் மைத்திரி
[Friday 2024-05-17 16:00]

வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கைது செய்து அவர்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று அரசிடம் கோரியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.



நாடு நல்ல நிலையை அடைந்த பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு!
[Friday 2024-05-17 16:00]

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.



சஜித்துடன் இணைந்தார் முன்னாள் இராணுவத் தளபதி!
[Friday 2024-05-17 16:00]

முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.



தாவடியில் இளம் குடும்பப் பெண் மர்ம மரணம்!
[Friday 2024-05-17 16:00]

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசில் பிரேரணை!
[Friday 2024-05-17 05:00]

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிக்கு தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்! Top News
[Friday 2024-05-17 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் .



கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்க முடிவு!
[Friday 2024-05-17 05:00]

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.



நினைவேந்தல் தொடர்பில் பொது கொள்கை இல்லையா? - ரணிலின் மனோ கேள்வி.
[Friday 2024-05-17 05:00]

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்றும் கேட்டேன்.



தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார் அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 05:00]

தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் என அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்,தெரிவித்துள்ளார்.



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டம்! Top News
[Friday 2024-05-17 05:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின்,தொடக்கக் கூட்டம் மே 17 முதல் 19 வரை நியூயார்க்கில் நடைபெறுகிறது.



சுமைகாவியின் கன்னத்தில் அறைந்த அமைச்சர்!
[Friday 2024-05-17 05:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் சுமைகாவி ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியுள்ளார்.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!
[Friday 2024-05-17 05:00]

முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.



மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளராக போட்டியிட தமிழர் தெரிவு!
[Friday 2024-05-17 05:00]

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஜூன் 4ஆம் திகதி உயர்தர வகுப்புகள் ஆரம்பம்!
[Friday 2024-05-17 05:00]

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா