Untitled Document
January 20, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
 
அதிமுகவுக்கு ரூ.400 கோடி, திமுகவுக்கு ரூ.300 கோடி..? - பீட்டாவின் இமெயிலை ஆராய்ந்த ஹாக்கர் குழு அதிர்ச்சி தகவல் !
[Thursday 2017-01-19 22:00]

Anonymous legion என்கிற ஹாக்கர் குழு, பீட்டாவின் இமெயில் தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஹாக்கர் குழுவின் தகவலில், ஆளும் கட்சியான அதிமுகவுக்கு 400 கோடி, திமுகவுக்கு 300 கோடிக்கு மேல் கடந்த 6 மாதங்களில் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


பிரித்தானியாவில் சூட்கேஸில் பிணமாக மீட்கப்பட்ட பெண்: - அதிர்ச்சி சம்பவம்
[Thursday 2017-01-19 18:00]

பிரித்தானியாவில் பெண் ஒருவர் சூட்கேஸில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதான Kiran Daudia என்ற பெண்ணே இவ்வாறு பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.லீசெஸ்டர், Cromer தெருவில் உள்ள பொது நடைபாதையில் மர்ம சூட்கேஸ் ஒன்றை கண்ட பொதுமக்களில் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவயிடத்திற்கு விரைந்து பொலிசார் சூட்கேஸை திறந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதில் பெண் ஒருவரை பிணமாக கண்டெடுத்துள்ளனர்.


இங்கிலாந்தில் நிர்வாண உடலில் ஒன்றுகூடிய 3000 பேர்
[Wednesday 2017-01-18 13:00]

பல்லாயிரக்கணக்கானோர் உடலில் நீல வர்ணத்தைப் பூசிக் கொண்டு 3000 பேர் ஒன்றுகூடிய கண்காட்சியொன்று இங்கிலாந்தின் ஹல் சிற்றி நகரில் நடைபெற்றுள்ளது.கலைப்படைப்புக்காக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பென்ஸர் டுனிக்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் சுமார் 3000 தொண்டர்கள் உடலில் நீல வர்ணத்தைப் பூசிக் கொண்டு திரண்டிருந்தனர். ஸ்பென்ஸர் டுனிக், உலகின் பல்வேறு நகரங்களிலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களில் நிர்வாண கோலத்திலுள்ள நூற்றுக்கணக்கானோரை ஒன்றுதிரட்டி புகைப்படங்களை பிடிப்பதில் பெயர் பெற்றவர்.


ரஷ்ய அதிபரின் மாளிகையின் மதிப்பு ஒரு பில்லியன் பவுண்ட்ஸ்: - வெளியானது வியக்க வைக்கும் பட்டியல்
[Wednesday 2017-01-18 07:00]

அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை விடவும் ரஷ்ய ஜனாதிபதியின் கிரெம்லின் மாளிகை விலை மதிப்பு அதிகம் என்று புதிதாக வெளியாகியுள்ள பட்டியல் தெரிவிக்கின்றது.அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் மதிப்பு 30 மில்லியன் பவுண்ட்ஸ் எனவும் ரஷ்ய அதிபரின் மாளிகையின் மதிப்பு ஒரு பில்லியன் பவுண்ட்ஸ் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் வெளியாகியுள்ள இந்த பட்டியலில் வியப்புக்குள்ளாக்கும் வகையில் சீனா ஜனாதிபதியின் மாளிகை முதலிடத்தில் உள்ளது. சீனா ஜனாதிபதியின் மாளிகையான Zhongnanhai ன் மதிப்பு 31 பில்லியன் பவுண்ட்ஸ் என கூறப்படுகிறது.


ஆர்வக் கோளாரால் ஜிம்மில் முதுகெலும்பை உடைத்த வீரர்
[Tuesday 2017-01-17 23:00]

உடற்பயிற்சி நிலையத்தில் வீரரொருவர் அதிக நிறையுடைய பளு தூக்கிய போது முள்ளந்தண்டு இரண்டாக உடைந்த சம்பவத்தின் வீடியோவாக பதிவு இணையத்தில் வெளியாகி உடற்பயிற்சி பயிற்சி ஆசையில் இருப்பவர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி நிலையத்தில் அதிக எடையுடன் இருக்கும் பளுவை தூக்க முயற்சிக்கும் வேளையில் பளுவை தூக்கி நிமிர்ந்து நிற்கும் போது திடீரென கீழே போடுகிறார். பின்னர், அப்படியே சரிந்து கீழே விழுகிறார். பின்னர், மேற்கொண்ட வைத்திய பரிசோதனையில் அவரின் முதுகெலும்பு இரண்டாக உடைந்துள்ளது தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.


தீவிரவாதியுடன் செல்பி எடுத்தாரா ஏஞ்சலா மெர்க்கல்? - வைரலான புகைப்படம்
[Saturday 2017-01-14 16:00]

ஜேர்மனியின் சான்சலர் ஆன Angela Merkel (62) கடந்தாண்டு பெர்லினில் உள்ள அகதிகள் முகாமிற்கு சென்றார்.அப்போது சிரியாவிலிருந்து வந்து அங்கு தங்கி வேலை பார்த்து கொண்டிருக்கும் Anas Modamani (19) என்னும் இளைஞர் அவருடன் செல்பி எடுத்துள்ளார்.இந்த செல்பியானது பின்னாளில் Anasக்கு எவ்வளவு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என அவருக்கு அப்போது தெரியவில்லை.இந்த புகைப்படம் பின்னர் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் பரவ தொடங்கியது.


சவுதியில் 15 ஆயிரம் இளவரசர், இளவரசிகள்!
[Thursday 2017-01-05 18:00]

மன்னராட்சிக்குப் புகழ்பெற்ற நாடு சவுதி அரேபியா. ஆசியாவில் ஐந்தாவது பெரிய நாடு. இந்த நாட்டில் கடந்த 1938-ம் ஆண்டில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிருந்தே செல்வத்தில் கொழிக்கத் தொடங்கியது சவுதி. நாட்டின் முதல் மன்னர் அப்துல் அசீஸ். கிங் அப்துல்லாசிஸ் என பரலாக அழைக்கப்பட்டவர். பெட்ரோலிய வளத்தை முறையாகப் பயன்படுத்தி சவுதி அரேபியாவை வளம் கொழிக்கும் நாடாக மாற்ற வித்திட்டவர் இவர்தான். இரண்டாம் உலகப் போரின் போது, உலகம் முழுக்க பெட்ரோலின் தேவை அதிகமாக, அதைப் பயன்படுத்தி பாலைவனத் தேசத்தை பணக்கார பூமியாக மாற்றினார் கிங் அப்துல்லாசிஸ். இவருக்கு மட்டும் 17 மனைவிகள் வழியாக 36 குழந்தைகள் உண்டு. இப்படிதான் சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பம் உருவாகத் தொடங்கியது.


கள்ளக்காதலனை அடித்து துவைத்த கணவன்: வைரலாகும் வீடியோ! Top News
[Tuesday 2017-01-03 18:00]

அமெரிக்காவில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மனைவியின் கள்ளக்காதலனை அவரது கணவர் அடித்து உதைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அலபாமா மாகாணத்தில் கணவர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறியதும் அவரின் மனைவி தனது கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் வெளியே சென்ற அவரது கணவர் வீடு திரும்பிய போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது மனைவியுடன் படுக்கையில் வேறு ஒரு நபரை கண்ட அவர் கோபத்தின் உச்சத்திற்கே சென்றார்.


பூமியை உடைத்துக்கொண்டு நுழைந்த பெரிய விண்கல்! Top News
[Saturday 2016-12-31 08:00]

பெரிய விண்கல் ஒன்று மூன்று துண்டுகளாக பிளந்துக் கொண்டு பூமியில் நுழைந்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி வியக்க வைத்துள்ளது. பூமியில் விண்கல் விழுந்த இடத்தை குறித்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனெனில் அது தங்கத்தை விட நாற்பது மடங்கு விலை உயர்ந்தது என கூறப்படுகிறது. அந்த வீடியோவில், பெரிய தீப்பந்துகள் பூமியை உடைத்துக்கொண்டு வானத்தில் ராக்கெட்டுகள் போல் வேகமாக செல்கிறது. ஆனால், அந்த விண்கல் விழுந்த இடம் மர்மமாகவே உள்ளது.


உறவுக்கு மறுத்த இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் உடலை கரைத்த இளைஞர்!
[Wednesday 2016-12-28 08:00]

மெக்ஸிக்கோவில் இளைஞர் ஒருவர் உறவுக்கு மறுத்த இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் உடலை கரைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.26 வயதான Francia Ruth Ibarra என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். குறித்த குற்றத்தில் ஈடுபட்ட 26 வயதான Emmanuel Delani Valdez Bocanegr என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.Ibarra காணவில்லை என அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர். Ibarraவின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததின் மூலம் அவர் Tinder என்ற டேட்டிங் தளத்தில் Bocanegrவுடன் பழகி வந்தது தெரியவந்துள்ளது.


110 சீன நாய்கள் கனடாவில் தஞ்சம்: - நாய் கறி திருவிழாவில் இருந்து தப்பியது
[Monday 2016-12-26 08:00]

சீனாவில் யுலின் மாகாணத்தில் ஆண்டு தோறும் டிசம்பரில் நாய் கறி திருவிழா நடைபெறுகிறது.அன்று நாய் கறி சாப்பிட்டும், மது அருந்தியும் பொழுதை பொதுமக்கள் குதூகலமாக கழிப்பார்கள். இதன் மூலம் குளிர்காலம் தங்களுக்கு உடல் நலத்தையும், வளத்தையும் தருவதாக நம்புகின்றனர்.திருவிழா அன்று சுமார் 2 கோடி நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சி விற்கப்படுகிறது. இதற்கு சமூக நல ஆர்வலர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.அதை தொடர்ந்து கனடாவில் சர்வதேச இரக்க சிந்தனை சங்கம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.


தென் ஆப்ரிக்காவில் குழந்தையை உயிரோடு தின்ற இராட்சத எலிகள்: - மனதை உலுக்கும் சம்பவம்
[Wednesday 2016-12-21 07:00]

தென் ஆப்ரிக்காவில் இராட்சத எலிகள் மூன்று மாத பெண் குழந்தையை உயிரோடு தின்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Johannesburg, Katlehong நகரத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த குழந்தையின் 26 வயதான தாயை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் 26 வயதான பெண், தினமும் குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு மது விடுதிக்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில், சம்பவத்தன்று பெண் மது விடுதிக்கு சென்று அதிகாலை வீடு திரும்பிய போது, குழந்தை உடல் பாகங்களின்றி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது.


ஒன்பது வயது சிறுவனை பார்வையாளராக இருக்க வைத்து கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்ட சக நண்பர்கள்!
[Tuesday 2016-12-20 07:00]

பிரித்தானியாவில் 9 வயது சிறுவனை பார்வையாளராக இருக்க வைத்து கிறிஸ்துமஸ் சிறப்பு விருந்தினை சக நண்பர்கள் உண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் Rawcliffe துவக்க பள்ளியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு படித்து வரும் Callum Fox என்ற 9 வயது மாணவர் குறித்த சிறப்பு விருந்திற்கான அனுமதிச் சீட்டானது நிர்வாகத்தினரின் கவனக்குறைவால் மாறியுள்ளது.இதனால் மாணவன் Callum Fox-கு கிடைக்க வேண்டிய சிறப்பு விருந்து பாழானது. குறித்த நாளில் மாணவனின் தாயார் பாடசாலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு விருந்து குறித்து வினவியுள்ளார்.


ஏமாற்றிய காதலிக்கு மொட்டை அடித்த காதலன்!
[Thursday 2016-12-15 08:00]

பிரேசிலில் காதலன் ஒருவன் தனது காதலிக்கு மொட்டை அடித்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடத்தல் கும்பலை சேர்ந்த நபர் ஒருவரே குறித்த வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.காதலி மற்றொரு நபருடன் சேர்ந்து தன்னை ஏமாற்றி வந்தது காதலனுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, தன்னை ஏமாற்றிய குற்றத்திற்காக காதலிக்கு மொட்டை அடித்து காதலன் அதிரடி தண்டனை வழங்கியுள்ளார்.மேலும், அதை வீடியோவாக பதிவு செய்து பதிவிட்டுள்ளார்.குறித்த வீடியோவில், நபர் ஒருவர் ஒரு பெண்ணை அமர வைத்து ட்ரிம்மர் மூலம் மொட்டை அடிக்கிறார். பின்னர், இரு புருவங்களையும் எடுக்கிறார்.


நாடகம் அரங்கேறியுள்ளது , அப்பல்லோ சர்வரை ஹேக் செய்த ஹேக்கர் குழு அறிவிப்பு!
[Wednesday 2016-12-14 23:00]

ராகுல் காந்தி மற்றும் விஜய் மல்லையாவின் கணக்குகளை ஹேக் செய்த லெஜியோன் (legion) என்ற ஹேக்கிங் குழு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. legion இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ”மிகப் பெரும் நாடகம் நடந்தேரியுள்ளது. அப்பல்லோவே வருங்காளத்தில் நீ அநேக கேள்விகளுக்கு பதில் சொல்லி வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்துள்ளது. பிரபல பத்திரிக்கை வாஷிங்டன் போஸ்ட் க்கு legion குழு பிரத்யேக பேட்டியளித்துள்ளது. அதில் அப்பல்லோ மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சர்வர்களை ஹேக் செய்துள்ளோம். அப்பல்லோவின் தகவல்களை வெளியிட்டால் இந்திய அளவில் மிகம் பெரும் பிரளயம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளது.


பணத் தட்டுப்பாடு - தேநீர் மட்டும் கொடுத்து திருமணம் நடத்திய குடும்பம்!
[Tuesday 2016-12-13 08:00]

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் பணத் தட்டுப்பாடு பிரச்சனையால், புதுடெல்லி அருகே ஒரு குடும்பத்தினர்.டீ மட்டும் கொடுத்து திருமண நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். பணத் தட்டுப்பாட்டால் டீ மட்டும் கொடுத்து திருமணம் நடத்திய குடும்பம் நொய்டா: உத்தரபிரதேச மாநிலம், கிரேட் நொய்டாவை அடுத்த நட்டோகி மதியா கிராமத்தை சேர்ந்தவர் மகவீர் சிங் மற்றும் அவரது மனைவி கியானோ. இவர்கள் தன்னுடைய மகளுடைய திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நேற்று முன் தினம் இரவு நடத்தினர். மகாவீர் மற்றும் அவரது மனைவி இருவரும் மாற்றுத் திறனாளிகள். மத்திய அரசின் ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து தம்பதிகள் மிகவும் கவலை அடைந்தனர். திருமணம் நடத்த அவர்களிடம் பணம் இல்லை. பின்னர் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்து திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். திருமண நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு வெறும் டீ மட்டுமே வழங்கப்பட்டது.


யப்பானில் தோன்றிய விசித்திரமான முகில்!
[Monday 2016-12-12 18:00]

தற்போது யப்பானின் Fujisawa நகர்ப்புறத்தின் மேலாகத் தோன்றிய விசித்திரமான, கோள வடிவான முகிலின் புகைப்படங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.புகைப்படவியளாளர் தெருவிக்கும் கருத்தின் படி, மேற்படி முகில் அது புகைப்பிடிக்கப்பட்ட நேரத்திலிருந்து அதன் வடிவத்தை இழக்க ஆரம்பித்து, பின் சடுதியாக வானில் மறைந்திருக்கிறது.இது தொடர்பாக அவர் மேலும், தான் தனது காரின் வெளிப்புறமாக பார்த்தபோது கோளப்பந்து வடிவான முகிலைப் பார்க்க முடிந்ததாகவும், பின்னர் விரைந்து அதனைப் படம்பிடிக்க முயன்றதாகவும் சொல்கிறார்.ஆனால் அதன் கோளத்தன்மையை படம்பிட்க்காமல் போனமைக்காக அவர் வருந்துவதாகவும் சொல்கிறார்.


காதலியை ஏமாற்றி எய்ட்ஸ் நோயை பரப்பிய கொடூரன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
[Friday 2016-12-09 18:00]

பிரான்சில் நபர் ஒருவர் தெரிந்தே பெண்ணிற்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Gard பகுதியை சேர்ந்த 39 வயதான Rui Filipe Da Rocha என்ற நபரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.கடந்த 2005ம் ஆண்டு தான் எய்ட்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த Rui Filipe Da Rocha, Vanessa என்ற 15 வயது பெண்ணுடன் நெருங்கி பழகிவந்துள்ளார்.2006ம் ஆண்டு Vanessa தானும் எய்ட்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.


முதல்வர் உடலுக்கு சசிகலாவுடன் இணைந்து இறுதிச்சடங்கு செய்த இளைஞர் யார்?
[Tuesday 2016-12-06 19:00]

உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்றிரவு மரணமடைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர், அவரின் மத வழக்கப்படியான சம்பிரதாய சடங்குகள் மன்னார்குடியிலிருந்து வந்த ஒரு ஐயர் மூலம் அவரின் உடலுக்கு செய்யப்பட்டன. ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை சசிகலாவுடன் இணைந்து ஒரு இளைஞர் செய்தார், சசிகலாவின் சகோதரர் ஜெயராமன் - இளவரசி தம்பதியரின் மகனான விவேக் தான் முதல்வருக்கு இறுதிச்சடங்குகள் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வருக்கு இறுதிச்சடங்கு செய்த அந்த இளைஞர் யார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.


ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்..!
[Tuesday 2016-12-06 19:00]

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மரணமடைந்த விடயம் தமிழ்நாட்டை மட்டும் அல்ல அனைத்து தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. என்றாலும் அவரது மரணம் தொடர்பில் பல்வேறு வகையான மர்மங்கள் மறைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அண்மைக்காலம் முதலாக ஜெயலலிதா இறந்து விட்டார், இறக்க வில்லை என்ற முன்னுக்கு பின் முரண்பட்ட செய்திகள் வெளிவந்த வண்ணமே இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று அவர் இறந்து விட்டதாக செய்தி பரவ ஆரம்பித்தது ஆனாலும் சட்டென்று அவர் இறக்கவில்லை என மறுப்புச் செய்தியையும் அப்பலோ வெளியிட்டது. ஊடகங்களும் கூட இதனை வெளிப்படுத்தியது.


பணம் கொடுக்காத காரணத்தினால் பெற்றோரை கொடூரமாக கொலை செய்த மகன்!
[Monday 2016-11-28 17:00]

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 17 வயது இளைஞன் ஒருவன் தனது செலவுக்கு பணம் கொடுக்காத காரணத்தினால் பெற்றோரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Tyler Hadley (17) என்ற மாணவன் தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக இருப்பதற்காக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான்.இந்த விருந்துக்கான அழைப்பிதழை தனது பேஸ்புக் வாயிலாக அனைவரிடமும் தெரிவித்திருந்தான். இந்நிலையில் விருந்து தொடங்குவதற்கு முன்னர் தனது தாயாருடன் இவனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


ஒன்பதாவது முறையாக 42 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்யவுள்ள 68 வயது முதியவர்!
[Friday 2016-11-25 14:00]

ஏற்கனவே எட்டு முறை திருமணம் செய்த 68 வயது முதியவர் ஒருவர் ஒன்பதாவது முறையாக அவரை விட 42 வயது குறைவான ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ரான் ஷெப்பர்ட் (68). காதல் மன்னனான இவர் இதுவரை எட்டு பெண்களை திருமணம் செய்துள்ளார். 1966 ஆம் ஆண்டு தனது 19வது வயதில் முதல் பெண்ணான Margaretஐ திருமணம் செய்தார் ஷெப்பர்ட்.முதல் மனைவியை 1968 வருடம் விவாகரத்து செய்தவர் பின்னர் பல திருமணங்கள் செய்து கடந்த 2004 ஆண்டு Weng என்னும் பெண்ணை 8வதாக திருமணம் செய்தார்.


வயாகரா மாத்திரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய தென்கொரியா பெண் அதிபர்!
[Thursday 2016-11-24 17:00]

தென்கொரியா நாட்டில் பார்க்குன் ஹெயின் அதிபராக இருக்கிறார். பெண் அதிபரான இவர் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இவருடைய நீண்ட கால தோழி சோய் சூன். இவரை தனது உதவியாளர் போல் பெண் அதிபர் வைத்திருந்தார். ஆனால், சோய் சூன் தனது அதிகாரங்களை கையில் எடுத்து ஏராளமான தவறுகளை செய்ததாக கூறப்படுகிறது.இதனால் அதிபர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சியினரும் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.


தாய்லாந்தில் மீன் பிடியில் அரியவகை விலங்கு இனம் பிடிக்கப்பட்டுள்ளது! Top News
[Tuesday 2016-11-22 22:00]

தாய்லாந்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களினால் அரியவகை விலங்கு இனம் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி வலை ஒன்றிலேயே குறித்த விலங்கினம் பிடிக்கப்பட்டுள்ளது.


சிறுமியிடம் அநாகரீகமாக நடந்த குரங்கினால் 16 பேர் பலி: - இப்படியும் கலவரம் ஏற்படுமா?
[Monday 2016-11-21 15:00]

லிபியா நாட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட குரங்கு ஒன்று சிறுமியிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கலவரத்தில் 16 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் இருந்து சுமார் 640 கி.மீ தொலைவில் சபா என்ற பழங்குடியினர் வசிக்கும் நகர் அமைந்துள்ளது.இந்நகரில் உள்ள குடியிருப்பில் குரங்கு ஒன்று செல்லமாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது.இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் குரங்குக்கு சொந்தமான 3 பேர் சாலையில் சென்ற சிறுமிகள் மீது குரங்கை ஏவி விட்டுள்ளனர்.


பாலியல் பொம்மையை சட்டப்படி திருமணம் செய்து கொள்ளப் போகும் மனிதர்கள்!
[Saturday 2016-11-19 17:00]

அதிரடி தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள பாலியல் பொம்மைகளின் மோகத்தில் இன்றைய மனிதர்கள் திளைக்கின்றனர்.பார்ப்பதற்கு நிஜ மனிதர்கள் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பொம்மைகள் மீது காதல் கொள்ளும் அளவுக்கு மனிதர்கள் இருக்கிறார்கள்.சீனாவில் நபர் ஒருவர், தனது மனைவியுடன் எற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனிமையில் வசித்து வந்தார். அப்படி தனிமையில் வாடிய அவரின் கவலையை போக்கியது அழகிய பாலியல் பொம்மைதான்.ஆத்மாத்மாக அந்த பொம்மையை காதலித்து வந்த அவர், அதனை திருமணம் செய்துகொண்டேன் என்று கூறி மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தார்.இந்நிலையில், 2050 ஆம் ஆண்டில் அதிக மனிதர்கள் பாலியல் பொம்மையை திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்படும் என பாலியல் பொம்மைகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கம்பெனியின் தலைமை அதிகாரியான Matt McMullen கூறியுள்ளார்.


ஐந்து நாட்கள் நடைபெற்ற ஆடம்பர திருமணம்! ரூ.17 கோடி திருமண புடவை, 500 மாடல் அழகிகள்!
[Thursday 2016-11-17 18:00]

பெங்களூருவில் பல கோடி ரூபாய் செலவில் ஜனார்த்தனரெட்டி மகளின் ஆடம்பர திருமணம் நடந்தது. மணமக்களை கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்–நடிகைகள் நேரில் வாழ்த்தினர். முன்னாள் மந்திரியும், கனிம சுரங்க தொழில் அதிபருமான ஜனார்த்தனரெட்டியின் மகள் பிரமணிக்கும், ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராஜீவ்ரெட்டிக்கும் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று திருமணம் நடந்தது. பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமான முறையில் நடந்த இந்த திருமணத்திற்காக அரண்மனை மைதானத்தில் தற்காலிகமாக பிரமாண்டமான அரங்குகள், வீடுகள் அமைக்கப்பட்டு இருந்தன. திருப்பதி திருமலை கோவில், ஹம்பி கோவில் மற்றும் பல்லாரி கோவில்களின் மாதிரி கட்டிடங்களும் வடிவமைக்கப்பட்டு இருந்தன.


திரைக்கு பின்னால் இருந்து ஆடுகளத்திற்கு உள்ளே நுழைத்த தெரு நாய்:
[Thursday 2016-11-17 18:00]

இந்தியாவுக்கும், இங்கிலாந்திற்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தின்போது நாய் ஒன்று குறுக்கிட்டதால், இடைவேளைக்கு சற்று முன்னதாகவே தேனீர் இடைவேளைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் ஏற்பட்டது. விசாகபட்டினத்தில் காட்சி திரைக்கு பின்னால் இருந்து ஆடுகளத்திற்கு உள்ளே நுழைத்த இந்த தெரு நாய், காலில் அணிந்திருந்த ஷூவை எறிந்து விரட்டிய ஆடுகள பராமரிப்பாளர்களையும் தவிர்த்து விட்டு உள்ளே நுழைந்துவிட்டது.


கின்னஸ் சாதனை படைத்த உலகின் அழகான குட்டி தம்பதி!
[Thursday 2016-11-17 17:00]

உலகின் மிக குட்டியான தம்பதியாக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் Paulo Gabriel மற்றும் Katyucia Hoshino.பிரேசிலில் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று முதன்முறையாக மக்களுக்கு தோன்றியுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்டர்நெட் வழியாக இருவரும் சந்தித்தாகவும், ஒருவரை ஒருவர் பிடித்து போகவே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர்.


மார்பகம் குறித்து பேசிய ரசிகரை சரமாரியாக தாக்கிய நடிகை ஷ்ராவ்யா ரெட்டி! Top News
[Wednesday 2016-11-16 08:00]

’பேஸ்புக் லைவ்’வின் போது மார்பகம் குறித்து பேசிய ரசிகரை தெலுங்கு நடிகை ஷ்ராவ்யா ரெட்டி கடுமையாக தாக்கிஉள்ளார். பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை என்று அறிவித்ததை தொடர்ந்து, சமூக வலைதளம் பயன்படுத்துவோர் இந்த தகவலானது அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் என்று பதிவு செய்து வந்தனர். விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் போன்ற பிரபலங்களும் பிரதமர் மோடியின் அறிவிப்பை பாராட்டியும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவுசெய்தனர்.

Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
NIRO-DANCE-100213
AIRCOMPLUS2014-02-10-14
<b> 15-01-2017 அன்று ஃபான் ஃஅம் மையத்தில்  நடைபெற்ற முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களது பொதுக் கூட்ட  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 15-01-2017 அன்று மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா(Puthinamphotos.com)
<b> 14-01-2017 அன்று ரொரன்டோவில் கனேடிய தமிழர் பேரவை (CTC) நடாத்திய பொங்கல் விழா விருந்து நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா (Puthinamphotos.com)