Untitled Document
March 29, 2024 [GMT]
 
வெறும் ஹார்லிக்ஸ் குடித்து உயிர் வாழும் அதிசய பாட்டி!
[Friday 2023-01-20 18:00]

உலகில் விநோதமாக சம்பவங்கள் பல இடங்களில் நடந்துக் கொண்டிருக்கதான் செய்கிறது. அவ்வாறுதான் 50 ஆண்டுகளாக எந்த உணவும் இல்லாமல் வெறும் ஹார்லிக்ஸ், டீ மாத்திரம் குடித்து ஒரு பாட்டி உயிர்வாழ்ந்து வருகின்றார். மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பெல்டிஹா என்ற கிராமத்தில் வசிப்பவர் அனிமா சக்ரவர்த்தி என்ற 76 வயது மூதாட்டி.


வேலைக்காக தினமும் 1300 கிலோமீற்றர் பயணம் செய்யும் பெண்!
[Thursday 2023-01-19 20:00]

கியூசெப்பினா கியுலியானோ(Giuseppina Giuliano)என்ற பெண் தனது தொழில் நிமித்தம் தினமும் 1300 கிலோமீற்றர் பயணம் செய்கிறார். கியூசெப்பினா(Giuseppina Giuliano) ஒரு நாளைக்கு ரயிலில் ஒன்பது மணிநேரம் பயணம் செய்வதாக தெரிவிக்கிறார். நேபிள்ஸில் வசிக்கும் அவர் அங்கிருந்து ரயிலில் பயணம் செய்து மிலனில் இருக்கும் அலுவலகம் ஒன்றில் பணிக்கு செல்ல வேண்டும்.


பல்லாயிரம் ஆண்டுக்குப் பின் வானில் தோன்றவிருக்கும் அதிசயம்!
[Saturday 2023-01-14 06:00]

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கும் பச்சைவால் நட்சத்திரம் பூமியிலிருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.


வளர்ந்து கொண்டே இருக்கும் அதிசய மனிதர்!
[Saturday 2023-01-07 16:00]

உயர்ந்த மனிதனை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி செய்ய முடியாத நிலை. வழமையான உயரத்தை விட அதிக உயரத்துடன் இருக்கும் சுலேமனா அப்துல் சமேட்டின் பற்றிய ஆச்சரிய பதிவு!


11 நாட்கள் நிற்காமல் பறந்து அவுஸ்திரேலியா சென்றடைந்த பறவை!
[Friday 2023-01-06 06:00]

13,500 கிலோமீற்றர், 11 நாட்கள் இடைவெளியே இல்லாமல் அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பறந்து சென்ற பறவை உலக சாதனையை முறியடித்துள்ளது. பார்-டெயில் காட்விட் பறவை (bar-tailed Godwit) ஒன்று அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு 8,435 மைல்கள் இடைவிடாமல் பறந்து, ​​ஒரு பறவையின் நீண்ட இடைவிடாத இடம்பெயர்வுக்கான முந்தைய சாதனையை முறியடித்தது.


பல இலட்சம் ரூபாய் செலவு செய்து உருமாறிய ஓநாய் மனிதன்!
[Tuesday 2023-01-03 06:00]

ஜப்பானில் இளைஞரொருவர் பல இலட்சம் ரூபாய் செலவு செய்து ஓநாய் மனிதனாக உருமாறியுள்ளார். பொதுவாக மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும். அதன்படி, தன்னை மாற்றிக் கொள்வதற்கு பல சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். அந்தவகையில் ஜப்பானை சேர்ந்த இளைஞரொருவர் பிரபல்யமான ஆடை வடிவமைப்பாளர்களை வரவழைத்து அசல் ஓநாய் போலவே ஆடையொன்றை பல இலட்சம் செலவு செய்து வடிவமைத்துள்ளார்.


உலகின் முதல் நாடாக புத்தாண்டை கொண்டாடிய நியூசிலாந்து!
[Saturday 2022-12-31 19:00]

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் ‘2023’ புத்தாண்டு பிறந்துள்ளது. 2022ஆம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து 2023 பிறக்கிறது. இந்தப் புத்தாண்டை உலக மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடி வரவேற்க தயாராக இருக்கின்றனர்.


இலவசமாக கட்டிப்புடி வைத்தியம்: நூதன முயற்சியில் இறங்கிய இரு பெண்கள்!
[Sunday 2022-12-25 16:00]

பெங்களூரு சர்ச் சாலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இளம்பெண்கள் 2 பேர் அனைவருக்கும் இலவசமாக கட்டிப்புடி வைத்தியம் செய்து வருகின்றனர். பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து அபூர்வ அகர்வால் (வயது 19) மற்றும் தனிஷா பரஸ்ராம்கா (22) என்ற இவர்கள் சர்ச் தெருவில், கைகளில் 'ப்ரீ ஹக்ஸ்' என்ற ஒரு பதாகை ஏந்தியபடி நின்று வருகின்றனர்.


இறுதிச்சடங்கின்போது எழுந்து உட்கார்ந்த சடலம்!
[Friday 2022-12-16 18:00]

தமிழகத்தில் இறந்ததாக நினைத்து தந்தைக்கு மகன் பால் ஊற்றியபோது அவர் திடீரென்று எழுந்து நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டம் முரண்டாம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (60) விவசாயியான இவர் தனியார் மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி மருத்துவர்கள் ஆம்புலன்சில் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.


கனேடிய நபருக்கு லொட்டரியில் கிடைத்துள்ள பெருந்தொகை!
[Saturday 2022-12-10 18:00]

கனடாவின் ரொரன்றோவில் வாழும் நபர் ஒருவருக்கு லொட்டரியில் பெருந்தொகை ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. ரொரன்றோவில் வாழும் நிஷித் (Nishit Parikh)க்கு லொட்டரியில் 55 மில்லியன் டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது. என் பெற்றோர்கள் எனக்காக செய்த தியாகம் பெரியது என்று கூறும் நிஷித், அதற்கேற்ற வகையில் நான் அவர்களுக்கு பதில் செய்யப்போகிறேன், அவர்களை நன்றாக கவனித்துக்கொள்ளப்போகிறேன் என்கிறார்.


வெளிநாட்டில் வசிக்கும் தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Wednesday 2022-12-07 18:00]

வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்த தமிழருக்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியாத மிகப்பெரிய பரிசு பணம் லொட்டரியில் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த காதர் ஹுசைன் என்ற 27 வயதான இளைஞர் சார்ஜாவில் உள்ள கார்களை கழுவி சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். அவருக்கு மாதம் Dh1,500 சம்பளம் கிடைக்கிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் டிப்ஸ் பணத்தை காதரும், அவரின் நண்பர் தேவராஜும் சேமித்து வைத்த நிலையில் அதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிக் டிக்கெட் டிராவில் விளையாடினர்.


ஒரே நேரத்தில் 9 பெண்களுடன் குடும்பம் நடத்தும் ஆண்மகன்!
[Thursday 2022-12-01 19:00]

9 பெண்களை திருமணம் செய்து நேர அட்டவணை போட்டு குடும்பம் நடத்தும் ஆண் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேசிலை சார்ந்த இளைஞர் ஒருவன் சுமார் 9 பெண்களை திருமணம் செய்துள்ளார். இவர்களின் மனைவிமார்களும் கணவர் தொடர்ந்து திருமணம் செய்துக் கொள்ள சம்பதம் தெரிவித்துள்ளனர்.


உலகின் விலை உயர்ந்த மரக்கறி பற்றி தெரியுமா? Top News
[Saturday 2022-11-26 18:00]

விலையும் தரமும் எல்லா நேரத்திலும் சேர்ந்தே இருப்பதில்லை, சில நேரங்களில் விலை குறைந்த உணவுப் பண்டங்களும் மிகுந்த சுவையாக காணப்படும். கவர்ச்சியான விலை உயர்ந்த உணவுப் பண்டங்களும் காணப்படுகின்றன. குங்குமப்பூ மற்றும் ஹிமாலய மலைத் தொடரில் வளரும் காட்டுக் காளான் போன்றவையே இந்த விலை உயர்ந்த உணவுப் பண்டங்களின் வகையீடாக எம் மனதில் தோன்றும். எனினும் சில மரக்கறி வகைகளும் அந்தளவு உயர் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்றால் நம்ப முடிகின்றதா?


உலகின் மிகப்பெரிய தங்கமீனை பிடித்த பிரித்தானிய மீனவர்! Top News
[Tuesday 2022-11-22 19:00]

பிரான்ஸ் ஏரி ஒன்றில் பிரித்தானிய மீனவர் ஒருவர் உலகிலேயே மிகப்பெரிய தங்கமீனை பிடித்துள்ளார். தி கேரட் (The Carrot) என்று செல்லப்பெயர் சூட்டப்பட்ட பிரம்மாண்டமான தங்கமீனின் எடை 30.5 கிலோகிராம் (67 பவுண்ட் 4 அவுன்ஸ்) ஆகும். இது 2019-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மின்னசோட்டாவில் ஜேசன் ஃபுகேட்டால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தங்கமீனாகக் கருதப்பட்ட மீனை விட 13.6 கிலோ எடை அதிகம்.


பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!
[Wednesday 2022-11-16 19:00]

மேலை நாடுகளில் மரத்தை திருமணம் செய்யும் பெண்கள், ஆவியைத் திருமணம் செய்யும் பெண்கள், ஏன், தன்னைத்தான் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள்கூட உண்டு. அவ்வகையில், Meirivone Rocha Moraes (37) என்ற பெண், Marcelo என்ற பொம்மையைத் திருமணம் செய்துகொண்டார். தன் மகள் தனியாக இருப்பதாக அவரது தாய் வருத்தப்பட்டதால், Marcelo என்ற பொம்மையைத் திருமணம் செய்துகொண்டார் Rocha.


இரண்டு பிறப்புறுப்புகளுடன் வாழும் அதிசய பெண்!
[Saturday 2022-11-12 18:00]

இயற்கையாகவே ஒரு பெண்ணிற்கு இரண்டு பிறப்புறுப்புக்கள் இருக்கின்றது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், ஒரு பெண்ணிற்கு இரண்டு பிறப்புறுப்புக்கள் இருக்கின்றன. இது சில ஹார்மோன் மாற்றங்களினால் நிகழ்கின்றது. இரண்டு பிறப்புறுப்புக்கள் பற்றியும் இது போன்ற பிரச்சினை யாருக்கெல்லாம் இருக்கும் என்பது குறித்தும் தெளிவாக பார்க்கலாம்.


பூமிக்கு அடியில் வினோத கிராமம்! Top News
[Monday 2022-11-07 18:00]

தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் கிராமம் ஒன்று உள்ளதுடன், இங்கு அனைத்து ஆடம்பர பொழுது போக்கு அம்சங்களும் காணப்படுகின்றது. தெற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்த கிராமத்தின் பெயர் கூப்பர் பேடி. இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.


கன்று ஈன்றாமலே 24 மணிநேரம் பால் கறக்கும் அதிசய பசுமாடு!
[Saturday 2022-11-05 16:00]

பசுமாடு ஒன்று கன்று ஈன்றாமலே 24 மணிநேரம் பால் கறக்கும் அதிசயம் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்த பெருமாள்(50) மற்றும் மயில்(460 தம்பதிகள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்து வருகின்றனர். விவசாயம் பார்த்து வரும் பெருமாள் கால்நடைகளையும் வளர்த்து வரும் நிலையில், சமீபத்தில் கன்றுக்குட்டி ஒன்றினை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.


இலங்கையில் பதிவான ஆபத்தான அதிசயம்! Top News
[Tuesday 2022-11-01 18:00]

இலங்கையில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் சுழல் காற்று கடல் நீரை அள்ளிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது. இதில் கடல் நீர் சுழல் போல் தோன்றி வானத்தை நோக்கிச் சென்றது. சில நிமிடங்கள் நீடித்த காட்சி பிறகு கலைந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடற்பரப்பில் மேகம் கீழிறங்கி வந்து கடல் நீர் எடுக்கும் அரிய நிகழ்வு ரொனாடோ எனப்படும் ஒருவகைச் சூழல் காற்று ஆகும்.


உலக சாதனை படைத்த பறவை: எப்படி தெரியுமா?
[Sunday 2022-10-30 16:00]

வருடத்தின் இந்த நேரத்தில் மில்லியன் கணக்கான பறவைகள் இடம்பெயர்கின்றன. விமானத்தில், அவை அடுத்த சில மாதங்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடங்களுக்கும், உணவளிக்கும் இடங்களுக்கும் செல்கின்றன,பலர் குளிர்ந்த காலநிலையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள்.


கனடாவில் இரு இலங்கை தமிழர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Thursday 2022-10-27 18:00]

கனடாவில் நண்பர்களான இரண்டு இலங்கை தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. Ajaxல் வசிக்கும் Vikneswararajah Amirthalingam மற்றும் Paramsothy (Param) Kathirgamu ஆகிய இருவரும் 10 ஆண்டுகால நண்பர்கள் ஆவர். இருவரும் இணைந்து லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.


பிரபல நடிகை போல மாற முயற்சித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி? Top News
[Wednesday 2022-10-26 18:00]

முகம் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல மாற அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதாக கூறிய ஈரானிய பெண், அவை அனைத்தும் ஒப்பனை மற்றும் போலியாக உருவாக்கப்பட்டவை என ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஈரானைச் சேர்ந்த சஹர் தபார் என்ற பெண், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியை போல் தோற்றம் வேண்டும் என பலமுறை அறுவை சிகிச்சை செய்ததாக கூறினார்.


சூரிய கிரகணத்தில் செங்குத்தாக நிற்கும் உலக்கை!
[Tuesday 2022-10-25 19:00]

உலக்கை எந்தப் பிடிமானமும் இன்றி செங்குத்தாக நிற்பதன் அடிப்படையில் பழைய காலங்களில் சூரிய / சந்திர கிரகணங்களைக் கணக்கிட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது. தமிழகத்தில் 5.14 மணி முதல் 5.44 மணி வரை சூரிய கிரகணத்தை காண முடியும். தமிழகத்தில் 8 சதவீதம் அளவிற்கு மட்டுமே சூரியன் மறைப்பு நிகழ்ந்தது.


புகை கக்கும் அதிசய பறவை! Top News
[Thursday 2022-10-20 18:00]

பறவை ஒன்று தனது வாயில் இருந்து புகையை கக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. காட்டுயிர் புகைப்பட கலைஞர்கள் எப்போதும் அரிதான விஷயங்களை படம் பிடிப்பது வழக்கம். அந்த வகையில் புகைப்பட கலைஞர் ஒருவர் ஒரு பறவையை படம் பிடித்துள்ளார். அந்த பறவை செய்யும் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இலங்கையில் புதிய வகை கொசு கண்டுபிடிப்பு!
[Sunday 2022-10-16 16:00]

மருத்துவ ஆராய்ச்சி குழு இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பைக் கண்டுபிடித்துள்ளது. இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் இந்த நுளம்பு இனம் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் திசானக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


76,000 டொலர்களுக்கு விலைபோன அரியவகை ஜீன்ஸ் பேண்ட்!
[Friday 2022-10-14 18:00]

மெக்சிகோவில் 1880-களில் தயாரிக்கப்பட்ட பழமையான ஜீன்ஸ் பேண்ட் ஒன்று, ஏலத்தில் 76 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் மேற்கு பகுதியில் பாழடைந்த சுரங்கத்தில் ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்திருக்கின்றனர்.


இறந்து 90 நிமிடங்களுக்குப் பின் உயிர்பெற்ற அதிசய நபர்!
[Wednesday 2022-10-12 19:00]

சமீபத்தில் அவுஸ்திரேலியா நாட்டவரான Alistair Blake (61) என்பவர், மாரடைப்பால் உயிரிழந்தார். மருத்துவர்கள் அவரை காப்பாற்ற எடுத்த கடுமையான முயற்சியைத் தொடர்ந்து, உயிரிழந்து 90 நிமிடங்களுக்குப் பின் அவர் மீண்டும் உயிர்பெற்றார். அவரிடம், நீங்கள் உயிரிழந்தபோது என்ன பார்த்தீர்கள் என பலரும் கேட்கிறார்களாம்.


சொந்த நிறுவனத்தை வெறும் 1 யூரோவுக்கு ரஷ்யாவிடம் விற்ற நிசான்!
[Wednesday 2022-10-12 06:00]

ரஷ்யாவில் நிசான் மோட்டார் நிறுவனம் தங்களது சொந்த நிறுவனத்தை வெறும் 1 யூரோ தொகைக்கு ரஷ்ய அரசு நிறுவனத்திடம் விற்றுள்ளது தொழில்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிசான் மோட்டார் நிறுவனத்தின் மொத்த இழப்பு 687 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. ஜப்பான் மோட்டார் நிறுவனமான நிசான் ரஷ்யாவில் தங்களின் மொத்த பங்கையும் அரசு சார்பு நிறுவனமான NAMI- இடம் ஒப்படைத்துள்ளது.


எவ்வாறு கடலின் ஆழம் கணக்கிடப்படுகிறது?
[Sunday 2022-10-09 16:00]

புவியின் பரப்பில் 70 விழுக்காட்டை ஆக்கிரமித்துள்ள உப்பான நீர் கொண்ட தொடர்ச்சியான நீர்நிலையே கடல் ஆகும். இதன் ஆழத்தை கண்டறிய 19ம் நூற்றாண்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, அப்போது நவீனக் கருவிகள் இல்லாததால் மிக நீளமான கயிற்றை அல்லது சங்கிலியைக் கடலின் உள்ளே ஆங்காங்கே இறக்கி மிகவும் பழமையான முறையை மேற்கொண்டு, சுமார் 7000 இடங்களில் ஆழம் கண்டறிந்தனர்.


கடலுக்கடியில் 11 வருடங்களாக மனைவியின் உடலை தேடிவரும் நபர்!
[Friday 2022-10-07 18:00]

ஜப்பானில் சுனாமியில் சிக்கி மாயமான தனது மனைவியை 11 ஆண்டுகளாக கணவர் ஒருவர் தொடர்ந்து தேடி வரும் சம்பவம் தொடர்ப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் 2011ல் ஏற்பட்ட சக்திவாய்ந்த சுனாமியால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி Onagawa என கூறப்படுகிறது. இந்த பகுதியில் தான் Yasuo Takamatsu தமது மனைவியை சுனாமியில் தொலைத்துள்ளார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா