Untitled Document
May 5, 2024 [GMT]
அவுஸ்திரேலிய கடற்கரையில் செத்து ஒதுங்கிய கடல் டிராகன்கள்! Top News
[Thursday 2022-04-14 16:00]

கடற்பகுதியில் மட்டுமே காணப்படும் அரிய வகை கடல் டிராகன்கள் அதிக அளவில் செத்து கரையில் ஒதுங்கியுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் கடல் டிராகன்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. நீண்ட மூக்குடன், பார்ப்பதற்கு குட்டி டைனோசார்கள் போன்று காணப்படும் இந்த கடல் டிராகன்கள் அரிய இன வகையாக கருதப்படுகிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக கடல்நீரில் வாழ்கின்றன. இதனை பாதுகாக்கவும் ஆஸ்திரேலியா அரசு கவனம் செலுத்தி வருகிறது.


103 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட முதியவர்: அவரின் ஆசை என்ன தெரியுமா?
[Tuesday 2022-04-12 16:00]

ஈராக்கை சேர்ந்த 103 வயதான முதியவர் மேலும் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். Hajji Mukheilif Farhoud Al-Mansouri என்ற நபர் கடந்த 1919ஆம் ஆண்டு பிறந்த நிலையில் அவருக்கு 103 வயதாகிறது. இவருக்கு 2 மனைவிகள் மூலம் 15 குழந்தைகள் மற்றும் நூறுக்கும் அதிகமான பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் உள்ளனர்.


ஏலியனுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண்: பரபரப்பு தகவல்!
[Saturday 2022-04-09 16:00]

ஏலியனுடன் உறவு கொண்டதன் காரணமாக பெண்ணொருவர் கர்ப்பமானார் என அமெரிக்கப் புலனாய்வுத் துறை சேகரித்து வைத்துள்ள தகவல்களின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை பெறப்பட்டது. UFOs என்று குறிப்பிடப்படும் ஏலியன்கள் தொடர்பான ஆவணங்களையே அமெரிக்கப் புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ளது.


போர்க்களத்தில் திருமணம் செய்துகொண்ட உக்ரேனிய ராணுவ வீரர்கள்!
[Friday 2022-04-08 16:00]

உக்ரேனிய ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் திருமணம் செய்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. உக்ரைன் மீது 44வது நாளாக தொடர்ந்து படையெடுத்து வரும் ரஷ்யா, தங்கள் தரப்பிற்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது.


லொட்டரியில் கனேடியருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Thursday 2022-04-07 17:00]

கனடாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக லொட்டரியில் ஒரே எண்ணில் விளையாடி வந்த ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ரொரன்றோவில் வாழும் ஜேம்ஸ் (45), இரண்டு பிள்ளைகளின் தந்தை. அவரது தந்தை பல ஆண்டுகளாக ஒரே எண்ணில் LOTTO 6/49 என்ற லொட்டரி விளையாட்டை விளையாடுவாராம். தந்தை இறந்த பிறகு ஜேம்ஸும் அதே எண்களில் விளையாடத் துவங்கியுள்ளார்.


சினிமா பட பாணியில் ஜன்னலில் சிக்கிய திருடன்!
[Wednesday 2022-04-06 16:00]

கொள்ளையடிக்க சென்று 'கலகலப்பு’ பட பாணியில் ஜன்னலில் சிக்கிக் கொண்ட திருடனின் வினோத நிகழ்வு ஆந்திர மாநிலத்தில் நடந்து உள்ளது. ஸ்ரீகாகுளம் ஜாடுபுடியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் எல்லையம்மன். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் விமரிசையாக திருவிழா நடைபெறும்.


வளர்ப்பு நாய்க்கு கோயில் கட்டிய எஜமான்!
[Tuesday 2022-04-05 16:00]

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் முத்து(வயது 82). ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியரான இவர், அவரது தோட்டத்தில் தனது வளர்ப்பு நாய் ‘டாம்’ நினைவாக கோவில் ஒன்றை கட்டியுள்ளார். இது குறித்து முத்து கூறுகையில், தனது வளர்ப்பு நாய்க்கு ‘டாம்’ என்று பெயரிட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் வளர்த்து வந்ததாகவும், தனது குழந்தையை விட அதிகமாக அதை நேசித்ததாகவும் கூறுகிறார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2021 ஜனவரி மாதம் டாம் உயிரிழந்துள்ளது.


அழிவின் விளிம்பில் இலங்கை பழங்குடியினர்!
[Monday 2022-04-04 16:00]

இலங்கையின் பழங்குடியினர் என கருதப்படும் வேடர் சமூகத்தினர் இலங்கையின் பல பாகங்களில் சிறு குழுக்களாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைமைகளை கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் நவீன நாகரிகத்தின் வருகையால் உறைவிடமாக இருந்த காடுகள் அழிக்கப்பட்டன. வேட்டையாடுவதற்குத் தடை, காட்டிலே தேன் எடுப்பதற்கு தடை போன்ற பல தடைகளால் வாழ்வியல் முற்றாக மாறி வருகின்றது.


தனது ஆன்மாவை ஏலத்தில் விட்ட வினோத இளைஞர்!
[Sunday 2022-04-03 18:00]

பெரிய பெரிய சொத்துகளைதான் எல்லாரும் ஏலம் விடுவாங்க. ஆனால் இந்த இளைஞர் சற்றே வித்தியாசமானவர். 21 வயதான இந்த வெளிநாட்டு மாணவர், ஓப்பன் ஸீ என்ற என்எஃப்டி மார்க்கெட்டில் ஏலத்தில் விட்டுள்ளார். அந்த இளைஞரின் பெயர் ஸ்கைக். இவர் நெதர்லாந்தை சேர்ந்தவர். இவர் ஓபன் ஸீ மார்க்கெட்டில் சாயில் ஆஃப் ஸ்டினஸ் என்ற பெயரில் விற்பனை விளம்பரத்தைப் பதிவிட்டிருந்தார்.


87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்!
[Sunday 2022-04-03 08:00]

ஜேர்மனியைச் சேர்ந்த ஒருவர் குறைந்தது 87 முறை கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஃப்ரீ பிரஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.


இரண்டு தலை, மூன்று கைகளுடன் பிறந்த வினோத குழந்தை! Top News
[Thursday 2022-03-31 16:00]

இந்தியாவில் பெண் ஒருவர் கர்ப்பமுற்றிருந்த நிலையில், அவருக்கு கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த Shaheen Khan, Sohail தம்பதியருக்கு திங்கட்கிழமையன்று (மார்ச் 28)குழந்தை பிறந்தபோது, அவர்கள் மட்டுமின்றி மருத்துவர்களும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், பிறந்த குழந்தை இரண்டு தலைகளுடன் காணப்பட்டது.


பூமியை தாக்கவிருக்கும் சூரியப்புயல்: இணையசேவை பாதிக்கும் அபாயம்!
[Wednesday 2022-03-30 16:00]

மேற்பரப்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக வெப்பப்புயல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த புயல் நாளை பூமியைத் தாக்கும் எனவும் கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புயலினால் ஏற்படும் அலைகள் கிரகத்தின் வழியாகவோ, செயற்கைக்கோள் வழியாகவோ செல்லும் போது பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சூரியனின் மேற்பரப்பில் கடந்த 28-ம் தேதி வெடிப்பு ஏற்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்ட காந்தப் புயல் நாளை பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் வேகம் விநாடிக்கு 496-607 கிலோ மீட்டர் வரை இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


கடற்கரையில் பிரித்தானிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Monday 2022-03-28 17:00]

கடற்கரை ஒன்றில் சும்மா பொழுதுபோகாமல் சிப்பி முதலான பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. Jennie Fitzgerald (38), வடக்கு Norfolk கடற்கரையில் சிப்பி போன்ற பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அவர் கண்களில் மரப்பெட்டி ஒன்று சிக்கியுள்ளது.


22 குழந்தைகளை பெற்றெடுத்த 24 வயது இளம்பெண்! Top News
[Sunday 2022-03-27 16:00]

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள தகவல் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்டர்க். 24 வயதான இந்தப் பெண்ணுக்கு இப்போது 22 குழந்தைகள் உள்ளன.


மனித இரத்தத்தில் பிளாஸ்டிக்: எச்சரிக்கை பதிவு!
[Friday 2022-03-25 08:00]

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் - 0.2 இன்ச் (5 மிமீ) விட்டம் கொண்ட சிறிய பிளாஸ்டிக் துகள்கள் முதல் முறையாக மனித இரத்தத்தில் கண்டறியப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் 22 ஆரோக்கியமான மனிதர்களிடமிருந்து இரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில், ஒரு அங்குலத்தில் 0.00002 மடங்கு சிறிய துகள்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர.


சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் ஒளிரப்பட்ட உலகின் மிகப்பெரிய 'அமைதி புறா'! Top News
[Wednesday 2022-03-23 08:00]

உலகின் மிகப்பெரிய 'அமைதி புறா' சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் ப்ரொஜக்ட் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெரிய, கிலோமீட்டர் நீளமுள்ள வெள்ளைப் புறாவின் கணிப்பு இப்போது ஸ்விஸ் மாகாணத்தில் உள்ள கிராண்ட் மைதன் (Grand Mythen) மலையில் ப்ரொஜக்ட் செய்யப்பட்டுள்ளது. உலகில் இதுவரை முன்வைக்கப்படாத மிகப்பெரிய படம் இதுவாகும்.


ஆசியாவின் NO.1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் வீடு குறித்து யாரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்!
[Saturday 2022-03-19 16:00]

ஆசியாவின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி, இவரது சொத்து மதிப்பு மட்டும் 10,300 கோடி டொலராகும். அதாவது கடந்தாண்டில் மட்டும் சொத்து மதிப்பு 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது, இவரது பிரம்மாண்டமான வீடு உலகின் இரண்டாவது விலை மதிப்புமிக்க பங்களாவாகும். தெற்கு மும்பையின் ஆடம்பரமாக கம்பீரமாக காட்சி தரும் அன்டிலியா பங்களாவின் புகைப்படங்கள் மற்றும் சுவாரசிய தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.


இணையத்தை மிரட்டும் வெள்ளை நிற மாங்காய்?
[Thursday 2022-03-17 16:00]

மாங்கா வடிவில் இருக்கும் முட்டை ஒன்றின் புகைப்படம் இணையத்தில் பார்வையாளர்களை வியக்க வைத்து வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், பிட்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்தி பாபு. இவர் தனது கடையின் விற்பனைக்காக கோழிப்பண்ணையில் இருந்து முட்டைகளை வாங்கி வந்துள்ளார்.


உலக சாதனை படைத்த இலங்கை தமிழ் தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை!
[Wednesday 2022-03-16 16:00]

அனுராதபுரம் - அழகப்பெருமாகம பகுதியில் ஒன்றரை வயதான பெண் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆ ண்டு மே 8 ஆம் திகதி பிறந்த ஐரின் என்ற குழந்தை 7 நிமிடங்கள் மற்றும் 6 வினாடிகளில் அதிக எண்ணிக்கையிலான பறவைகளை அடையாளம் கண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. ஆசிய சாதனை புத்தகத் திலும் இந்த குழந்தையின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சுவிஸில் ஆரஞ்சு நிறத்தில் தோன்றிய வானம்!
[Wednesday 2022-03-16 08:00]

சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் உள்ள மக்கள் நேற்று விசித்திரமான ஆரஞ்சு நிற வானத்தை பார்த்துள்ளனர். இந்த நிகழ்வு சஹாரா பாலைவனத்தில் இருந்து மணல் மூலம் ஏற்படுகிறது. இது நன்கு அறியப்பட்ட வானிலை நிகழ்வு ஆகும், இது சுவிட்சர்லாந்தில் வருடத்திற்கு மூன்று முறை, பொதுவாக வசந்த காலத்திலும் இலையுதிர்காலத்திலும் நிகழ்கிறது.


சிப்ஸை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் விசித்திர பெண்!
[Sunday 2022-03-13 16:00]

இன்றைய நவீன உலகில் துரித உணவுகளை சாப்பிட்டு பலரும் மருத்துவமனை நாடுகிறார்கள். ஆனால், இங்கு ஒரு பெண் கிட்டத்தட்ட 22 வருடங்களாக இதுபோன்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். லண்டன் கேம்பிரிட்ஜ் மாகாணத்தை சேர்ந்தவர் சம்மர் மோன்ரோ(25). இந்த பெண் ஒரு தீவிர நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.


உலகின் மிக நீளமான கார்: என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா? Top News
[Saturday 2022-03-12 16:00]

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோ ஓர்பெர்க் என்பவர் கார்களை மறுசீரமைக்கும் பணிகளை செய்து வருபவர். இவர் 1986-ல் 60 அடி நீளமும் 26 சக்கரங்களையும் கொண்ட உலகின் மிக நீண்ட காரை வடிவமைத்து கின்னஸ் சாதனை பெற்றார்.


72 வயதில் இப்படி ஒரு அழகா? - வாயைப்பிளந்த இணையவாசிகள்!
[Saturday 2022-03-12 08:00]

ஆடை வடிவமைப்பாளர் வேரா வாங் என்ற 72 வயது கொண்ட பெண் தற்போதும் இளமையான தோற்றத்துடன் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் இவ்வாறான இளமையான தோற்றத்திற்கு காரணம் என்ன என்பதையும் அவரே கூறியுள்ளார்.


நாய்க்கு வளைகாப்பு நடத்திய எஜமான்!
[Friday 2022-03-11 16:00]

வீட்டில் வளர்க்கப்படட நாய் ஒன்றிற்கு வளைகாப்பு நடத்தியுள்ள காணொளி முகநூலில் வைரலாகி வருகின்றது. தற்போது வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் அந்த குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே மாறிவிடுகின்றனர். ஆம் மனிதர்கள் மற்ற மனிதர்களிடம் காட்டும் பாசம் என்பது இன்றைய காலத்தில் மிக மிக குறைவே.


திடீரென பிரபலமாகும் Balmain டி ஷர்ட்: விலை எவ்வளவு தெரியுமா?
[Thursday 2022-03-10 18:00]

இந்திய திரையுலக நடிகர்கள் எந்த விழாக்களுக்கு சென்றாலும், குறிப்பிட்ட பிராண்டின் டி ஷர்ட்டை அணிவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், ஷாருக்கான், ஜாக்குலின், கிரிக்கெட் வீரர் தோனி, அல்லு அர்ஜூன், என இவர்கள் வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். அப்படி பிரபலங்கள் அணிந்த அந்த பிராண்ட் டி-ஷர்ட் Balmain என்ற கம்பெனி தான். அப்படி என்ன இதில் இருக்கு எவ்வளவு விலை என தெரிந்துகொள்வோம் வாங்க...


மீன்கள் தூங்குமா? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
[Thursday 2022-03-10 08:00]

மீன்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம். கடலுக்கு அடியில் நம்மால் நம்ப இயலாத வகையிலான பல உயிரினங்கள் வாழ்கிறது. இதில் மீன் வகைகள் மிக முக்கியமானது. மீன்கள் உருவாகி, சுமார் 50 கோடி வருடங்கள் ஆகிறது என்று கூறப்படுகிறது. முதுகெலும்பு உடைய பிற உயிரினங்களை விட மீன்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.


300 ஆண்டு பழமையான கடற்கன்னி வடிவிலான மம்மி கண்டுப்பிடிப்பு! Top News
[Monday 2022-03-07 16:00]

பொதுவாக மம்மி என்பது பல ஆண்டுகளுக்கு முன், பாதுகாக்கப்பட உயிரினத்தின் சடலத்தை குறிப்பதாகும். இந்த உடல்கள், இயற்கையாகவே பல காரணங்கள் கொண்டு பாதுகாக்கப்படுவதும் உண்டு. அப்படியுள்ள அழியாத நிலையில் இருக்கும் மனித மற்றும் விலங்குகளின் மம்மிகளை உலகெங்கிலுமுள்ள அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து, ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.


தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை நிறுத்துவது எப்படி?
[Sunday 2022-03-06 18:00]

ஜிமெயில் பயனர்கள், தாங்கள் அனுப்பிய மின்னஞ்சலை 30 வினாடிகளுக்குள் தடுத்து நிறுத்த முடியும். சில சமயங்களில் மின்னஞ்சல்களை தவறுதலாக அனுப்பி விடுவோம். அனுப்பிய மின்னஞ்சல்களை தடுத்து நிறுத்துவதற்கு போதுமான இடையக நேரத்தை (buffer time) வழங்குகிறது ஜிமெயிலின் இந்த அம்சம். அனுப்புவதை நிறுத்து (Undo Send) என்ற அம்சம் அனைத்து பயனர்களுக்கும் இயல்பாகவே கிடைக்கும்,


நீங்கள் லட்சாதிபதி ஆக வேண்டுமா? - 2 ரூபாய் இருந்தால் போதும்!
[Friday 2022-03-04 16:00]

பழங்கால பொருட்களை, பழைய ரூபாய் நோட்டுகள் காசுகள் சேகரிப்பதில் சிலருக்கு ஆர்வம் இருக்கும். பழைய ரூபாய் நோட்டு, காசுகளுக்கு ஈடாக பல லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பது போன்ற செய்திகளை நீங்கள் அடிக்கடி படித்திருப்பீர்கள். உங்களிடமும் பழைய நாணயங்கள் இருந்தால், அதற்கு ஈடாக லட்சக்கணக்கான ரூபாயையும் பெறலாம்.


திருமணத்திற்கு முன் பலருடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் வினோத மக்கள்!
[Thursday 2022-03-03 16:00]

இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் திருமணத்திற்கு முன்பு பலருடன் உடலுறவு கொள்ளும் பழக்கத்தை வைத்திருக்கிறது. சட்டிஸ்கர் மாநிலத்தில் அதிகம் வாழும் முரியா மற்றும் கோண்ட் என்ற பழங்குடியின மக்கள் மத்தியில்தான் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது. அந்த மக்கள் கோட்டுல் என்ற ஒரு இடத்தை அமைத்துள்ளனர்.

Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா