தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை நிறுத்துவது எப்படி? | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
May 18, 2024 [GMT]

தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை நிறுத்துவது எப்படி?
[Sunday 2022-03-06 18:00]

ஜிமெயில் பயனர்கள், தாங்கள் அனுப்பிய மின்னஞ்சலை 30 வினாடிகளுக்குள் தடுத்து நிறுத்த முடியும். சில சமயங்களில் மின்னஞ்சல்களை தவறுதலாக அனுப்பி விடுவோம். அனுப்பிய மின்னஞ்சல்களை தடுத்து நிறுத்துவதற்கு போதுமான இடையக நேரத்தை (buffer time) வழங்குகிறது ஜிமெயிலின் இந்த அம்சம். அனுப்புவதை நிறுத்து (Undo Send) என்ற அம்சம் அனைத்து பயனர்களுக்கும் இயல்பாகவே கிடைக்கும்,


  

அதோடு, ஜிமெயில் பயனர்கள் மின்னஞ்சல் அனுப்பிய 5 முதல் 30 வினாடிகளுக்குள் தவறை சரிசெய்யலாம்.

இன்றைய உலகில், அனைவரும் மின்னஞ்சல் அனுப்ப ஜிமெயிலைப் பயன்படுத்துகின்றனர். இந்த தளத்திலிருந்து மின்னஞ்சல்களை அனுப்புவது ஒப்பீட்டளவில் எளிதானது. ஆனால் பல நேரங்களில், மக்கள் அவசரமாக தவறுதலான தவறை செய்வதால், மின்னஞ்சல் வேறொருவரை சென்றடைகிறது.

ஜிமெயில் பயனர்கள் 30 வினாடிகளுக்குள் மின்னஞ்சல்களை திரும்பிப் பெற அனுமதிக்கும் இந்த அம்சம், அனைவருக்கும் பிடித்ததாக இருக்கிறது. அனுப்பிய மின்னஞ்சலை எப்படி நிறுத்துவது?

முதலில், ஜிமெயில் பக்கத்தில் மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானைக் (Settings icon) கிளிக் செய்யவும்.

இப்போது பொது தாவலைக் (General Tab) கிளிக் செய்யவும்.

அனுப்பியதை திரும்பப்பெறும் (Undo Send) தெரிவைப் பார்க்கலாம்.

இப்போது நீங்கள் நேரத்தை அமைக்க வேண்டும். இதன் இயல்புநிலை நேரம் 15 வினாடிகளாக இருக்கும்.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல, 5, 10, 20 மற்றும் 30 வினாடிகள் என நேரத்தை மாற்றி அமைக்கலாம். அதிகபட்ச பஃபர் டைம் 30 வினாடிகள்.

இனிமேல் ​​​​நீங்கள் மின்னஞ்சலை அனுப்பும் போதெல்லாம், திரையின் இடது பக்கத்தில் ஒரு விருப்பத்தைக் காண்பீர்கள், அதில் இதற்கு முன்பு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் குறித்த விவரம் காணப்படும்.

இப்போது, ​​நீங்கள் தவறுதலாக ஒருவருக்கு மின்னஞ்சலை அனுப்பியிருந்தால், செயல்தவிர் என்ற Undo தெரிவை கிளிக் செய்யலாம். இது மின்னஞ்சலை உடனடியாக திருப்பி அனுப்பும்.

டெஸ்க்டாப்பில் உள்ள ஜிமெயில் பயனர்கள் டெஸ்க்டாப்பில் திரையின் கீழ் இடதுபுறத்திலும், மொபைலில் கீழ் வலதுபுறத்திலும் மிதக்கும் கருப்புப் பெட்டியில் செயல்தவிர்க்கும் (Undo) இணைப்பைக் காணலாம்.

நேரம் முடிவதற்கு முன்பு பயனர்கள் இணைப்பைக் கிளிக் செய்தால், அவர்களின் செய்தி செல்லாது. பயனர்கள் மின்னஞ்சலை மீண்டும் திருத்தலாம், நீக்கலாம் மற்றும் அனுப்புவதை முழுவதுமாக தவிர்க்கலாம்.

  
   Bookmark and Share Seithy.com


கடற்கரையில் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றி திரியும் சுற்றுலாப்பயணிகள்!
[Friday 2024-04-26 19:00]

விசித்திரமான முறையில் ஆடை அணிவதற்கு தடை செய்யப்பட்ட சுற்றுலாத்தளங்கள் நிறைய உள்ளன. இங்கு சுற்றுலாப்பயணிகள் நிர்வாணமாக சுற்றி திரிந்து மகிழ்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை விருந்தளிக்கும் அதிசய கிராமம்!
[Monday 2024-04-22 19:00]

ஹிம்பா பழங்குடி மக்கள் தங்களுக்கென உள்ள தனியான விதிமுறையில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தளிக்கும் விசித்திர பழக்கத்தை கொண்டுள்ளனர். உலகத்தின் தற்போதைய முன்னனேற்றம் எவ்வளவாக இருந்தாலும் தங்ஙளின் பழக்க வழக்கத்தை மாற்றாமல் அப்படியே வாழும் பழக்கத்தை கொண்டுள்ள மக்கள் பழங்குடி மக்களாவர்.


சோகமாக இருந்தால் 10 நாள் விடுமுறை: நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி!
[Friday 2024-04-19 16:00]

சீனாவைச் சேர்ந்த Fat Dong Lai தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளமை அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Fat Dong Lai நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை . ஊழியர்க்ளுக்கு 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது.


டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறை: ஒரு அபூர்வ புகைப்படம்! Top News
[Saturday 2024-04-13 18:00]

மூழ்கடிக்க முடியாத கப்பல் என பெயர் பெற்ற டைட்டானிக் கப்பல் இரண்டு துண்டாக உடைந்து கடலில் மூழ்கிய சம்பவம், டைட்டானிக் திரைப்படம் வந்த பிறகு அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் என்றே கூறலாம். அந்த துயர சம்பவத்தில் 1,522 பேர் பலியானார்கள். தற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறையின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


சூரிய கிரகணத்தின்போது கனேடியர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை!
[Tuesday 2024-04-09 18:00]

உலக நாடுகள் பல, முழு சூரிய கிரகணம் என்னும் அபூர்வ நிகழ்வைக் காண ஆங்காங்கே கூடியிருந்த அதே நேரத்தில், கனேடியர்கள் சிலர், கின்னஸ் சாதனை ஒன்றை முறியடிக்கத் திட்டமிட்டார்கள். ஆம், 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, சீனாவின் Guangdong மாகாணத்தில், 287 பேர், சூரியனைப்போல உடையணிந்து ஒன்று திரண்டு கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்தார்கள்.


பெரு குகையில் வேற்று கிரகத்தின் மம்மிகள்?
[Sunday 2024-04-07 16:00]

பெரு நாட்டின் நாஸ்கா பகுதியில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் நாஸ்கா(Nazca) பகுதியில் குகை ஒன்றில், நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


சுவிட்சர்லாந்தில் மஞ்சளாக மாறிய வானம்!
[Monday 2024-04-01 18:00]

சுவிட்சர்லாந்தில் வாழும் மக்கள், சனிக்கிழமை, வானம் மஞ்சள் நிறமாக மாறியதைக் கண்டார்கள். இப்படி வானம் மஞ்சள் நிறமாக மாறுவதற்குக் காரணம், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து அடித்துவரப்படும் தூசிதான் காரணம்.


பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
[Saturday 2024-03-30 18:00]

பாம்புகள் என்றால் நாம் எல்லோருக்கும் தெரிந்தது நிலத்தில் ஊர்ந்து செல்பவை மாத்திரம் தான். ஆனால் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் நான்கு கால்கள் கொண்ட பாம்புகள் உலகில் வாழ்ந்துள்ளன. இந்த இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்கின்றன. இவற்றிற்கு கால்கள் இருப்பதற்கான காரணம் இரைகளை பிடிப்பதற்காகும்.


ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: எங்கு தெரியுமா?
[Sunday 2024-03-10 17:00]

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றிற்குள் நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு ரூ.1.5 கோடி கிடைக்கும்.


கனடாவில் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் காணித்துண்டு?
[Wednesday 2024-03-06 19:00]

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் இது குறித்து அறிவித்துள்ளார்.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா