Untitled Document
May 17, 2024 [GMT]


இன்று தொடக்கம் புதிய வீசா நடைமுறை!
[Wednesday 2024-04-17 05:00]

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை இன்று முதல் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.


முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!
[Friday 2024-05-17 16:00]

திருகோணமலை - மூதூர் - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் மூதூர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.


காணாமல் ஆக்கப்பட்டுவதற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும்!
[Friday 2024-05-17 16:00]

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் அதற்கு காரணமானவர்கள் அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


எலிசபெத் வேண்டாம்! - நிராகரியுங்கள் என்கிறார் கம்மன்பில.
[Friday 2024-05-17 16:00]

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது டெலோ!
[Friday 2024-05-17 16:00]

தேசியத்தின்பால் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் டெலோ ஈடுபடுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 16:00]

முள்ளிவாய்க்கால் போரின் 15 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின், முன்னாள் போராளிகளின் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டக் கைதிகளின் குடும்பங்களை இன்று சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.


மூன்று மீனவர்களுடன் சம்பில்துறையில் கரையொதுங்கியது இந்தியப் படகு!
[Friday 2024-05-17 16:00]

தமிழகம்- மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர் படகு ஒன்று வியாழக்கிழமை மாலை எரிபொருள் தீர்ந்ததனால் யாழ்ப்பாணம் - சம்பில்துறையில் கரையொதுங்கியது. பெருமாள் வாஞ்சிநாதன், ராஜேந்திரன் மகேஷ், இளங்கோவன் ரஞ்சித்குமார் ஆகிய மீனவர்கள் படகுடன் கரையொதுங்கினர். குறித்த மீனவர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நினைவேந்தல்களை தடுக்க வேண்டாம்! - என்கிறார் மைத்திரி
[Friday 2024-05-17 16:00]

வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கைது செய்து அவர்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று அரசிடம் கோரியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.


நாடு நல்ல நிலையை அடைந்த பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு!
[Friday 2024-05-17 16:00]

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.


சஜித்துடன் இணைந்தார் முன்னாள் இராணுவத் தளபதி!
[Friday 2024-05-17 16:00]

முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.


தாவடியில் இளம் குடும்பப் பெண் மர்ம மரணம்!
[Friday 2024-05-17 16:00]

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசில் பிரேரணை!
[Friday 2024-05-17 05:00]

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிக்கு தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்! Top News
[Friday 2024-05-17 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் .


கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்க முடிவு!
[Friday 2024-05-17 05:00]

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


நினைவேந்தல் தொடர்பில் பொது கொள்கை இல்லையா? - ரணிலின் மனோ கேள்வி.
[Friday 2024-05-17 05:00]

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்றும் கேட்டேன்.


தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார் அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 05:00]

தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் என அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்,தெரிவித்துள்ளார்.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டம்! Top News
[Friday 2024-05-17 05:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின்,தொடக்கக் கூட்டம் மே 17 முதல் 19 வரை நியூயார்க்கில் நடைபெறுகிறது.


சுமைகாவியின் கன்னத்தில் அறைந்த அமைச்சர்!
[Friday 2024-05-17 05:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் சுமைகாவி ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியுள்ளார்.


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!
[Friday 2024-05-17 05:00]

முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.


மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளராக போட்டியிட தமிழர் தெரிவு!
[Friday 2024-05-17 05:00]

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஜூன் 4ஆம் திகதி உயர்தர வகுப்புகள் ஆரம்பம்!
[Friday 2024-05-17 05:00]

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


வெருகலிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை! - இரவில் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்.
[Thursday 2024-05-16 15:00]

திருகோணமலை- வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று, நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.


ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை மூடுவேன்! - சஜித் அதிரடி அறிவிப்பு.
[Thursday 2024-05-16 15:00]

எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கம் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபானக் கடைகளை மூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.


அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி! - பாதுகாப்பு தீவிரம்.
[Thursday 2024-05-16 15:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.


முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும், நினைவு நிகழ்வுகளும்! Top News
[Thursday 2024-05-16 15:00]

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்றிரவு 7மணியளவில் மாவிட்டபுரம் மற்றும் தெல்லிப்பழையில் ஆகிய இடங்களில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.


அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்!
[Thursday 2024-05-16 15:00]

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு எதிரான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸ் நிலையம் ஆரம்பித்துள்ளது.


தாளையடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கைது!
[Thursday 2024-05-16 15:00]

யாழ்ப்பாணம் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.


இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி!
[Thursday 2024-05-16 15:00]

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்கத் திட்டம்!
[Thursday 2024-05-16 15:00]

2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா