Untitled Document
May 15, 2024 [GMT]


கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் யூலை 23.2016 சனிக்கிழமை கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல்:
[Friday 2016-07-22 07:00]

உலகளாவிய ரீதியில் நீதிவேண்டி உரிமை வேண்டித் தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் நடைபெறவுள்ளது.

இடம்: Albert Campbell Square (Scarborough Civic Center))

காலம்: யூலை 23, 2016 சனிக்கிழமை

நேரம்: மாலை: 6:30 மணி

1983 யூலை ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 33 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. தனது பொறுப்பில் இருந்து தொடர்ந்தும் தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம்.


எம்மை சீண்டிவிடும் செயற்பாட்டில் எவரும் ஈடுபடக்கூடாது!
[Wednesday 2024-05-15 17:00]

தமிழர் தாயகத்தில் இராணுவத்தினரின் தர்ம சாலைகளையும், பௌத்த பாராயண ஒலிபெருக்கி சத்தங்களையும் இன முரண்பாட்டுக்கு உரிய ஒன்றாகவே நாம் பார்க்கின்ற போதும் அதற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாடவில்லை. இன, மத நல்லிணக்கமென நாமும் அமைதி கொள்ளும்போது எம்மை சீண்டிவிடும் செயற்பாட்டில் எவரும் ஈடுபடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு. இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுமந்திரன் பொய் சொல்கிறார் - அவரிடம் அப்படிக் கேட்கவே இல்லை என்கிறார் சுரேஷ்!
[Wednesday 2024-05-15 17:00]

"ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு எம்.ஏ.சுமந்திரனைக் கேட்கவில்லை. இது வெறும் அப்பட்டமான பொய், என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.கோப்பாயில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


பொலிசாரின் மூர்க்கத்தனமான செயற்பாடு தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச் செல்லும்!
[Wednesday 2024-05-15 17:00]

சம்பூர் பொலிஸாரின் அடுத்தடுத்த கண் மூடித்தனமான ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையிலான மூர்க்கத்தனமான செயற்பாடானது தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச் செல்வதற்கான ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் செயற்பாடாகும் என சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.


குழந்தையை கைவிட்டுத் தப்பிய சிறுமி கண்டுபிடிப்பு! - கர்ப்பமாக்கிய இளைஞன் கைது.
[Wednesday 2024-05-15 17:00]

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாடத்துக்கு 2 புள்ளிகள் இலவசம்!
[Wednesday 2024-05-15 17:00]

இன்றுடன் முடிந்த கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில், விஞ்ஞான பாட வினாக்கள் இரண்டுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தூதுவர்! Top News
[Wednesday 2024-05-15 17:00]

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று விஜயம் செய்தார். வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கான வழிகளை ஆராய்வதற்காக சிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் பலதரப்பட்ட கண்ணோட்டங்களைக் கேட்பதற்காக இந்த வாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளேன் என அமெரிக்க தூதர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியைப் பெற்றவர்கள் அச்சப்பட வேண்டாம்!
[Wednesday 2024-05-15 17:00]

இரத்த உறைவு குறித்த கவலைகள் காரணமாக அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியைப் பெற்ற நபர்கள் அதன் பாதுகாப்பு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு - தந்தையும் மகனும் படுகாயம்!
[Wednesday 2024-05-15 17:00]

திருகோணமலை - ஈச்சிலம்பற்று இலங்கைத்துறை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் வீட்டிலிருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் உதவியுடன் ஆயுதங்களை உற்பத்தி செய்ய திட்டம்!
[Wednesday 2024-05-15 17:00]

சிறிய ஆயுதங்களை உற்பத்திசெய்யும் ஆயுத தொழிற்சாலையை அமைப்பது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.


ஆர்ப்பாட்டத்தினால் ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம்! Top News
[Wednesday 2024-05-15 17:00]

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பொலிசுடன் சேர்ந்து சுகாதாரப் பரிசோதகர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தடுக்க முயற்சி! Top News
[Wednesday 2024-05-15 04:00]

மட்டக்களப்பில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, பொலிஸாரின் கடுமையான தடைகளையும் மீறி, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், நேற்று விநியோகிக்கப்பட்டது.


நினைவேந்தல் உரிமையை நிராகரிக்கவே முடியாது!
[Wednesday 2024-05-15 04:00]

தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


பலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலை தான் இலங்கையிலும் தமிழர்களுக்கு நடந்தது!
[Wednesday 2024-05-15 04:00]

பலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலைதான் இலங்கையில் தமிழர்களுக்கும் நடந்தது, ஆனால் பலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கும் இலங்கை, தமிழர்களுக்கு என்ன செய்தது? இதுதான் இலங்கையின் நயவஞ்சக தன்மை மற்றும் இரட்டை வேடம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.


தமிழர்களுக்கு எதிராகவே போர் நடத்தப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் தனிஈழம் வெற்றி பெறும்!
[Wednesday 2024-05-15 04:00]

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும் என்று பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.


பரவலாக நடைபெறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! Top News
[Wednesday 2024-05-15 04:00]

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக சமூகத்தால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட நுழைவாயிலில் நேற்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.


யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தமிழ் ஈழம் உருவாகியிருக்கும்!
[Wednesday 2024-05-15 04:00]

விடுதலை புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால் தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும்,காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.


உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்துச் செய்ய உத்தரவு!
[Wednesday 2024-05-15 04:00]

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்வது குறித்தும், பழைய முறையின் கீழ் அடுத்த வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் முக்கிய தரப்பினருடன் கலந்தாலோசிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


நெதன்யாகு பயங்கரவாதி! - சபையில் சீறிய டிலான்
[Wednesday 2024-05-15 04:00]

பலஸ்தீனர்களுக்கு இலங்கை தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.சர்வதேச யுத்த கோட்பாடுகளை இஸ்ரேல் கடைப்பிடிக்கும் வரை இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பயங்கரவாதி என்று குறிப்பிடுவதை தவிர்க்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.


போரில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை உள்ளது!
[Wednesday 2024-05-15 04:00]

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் உரிமை உண்டு என கூறியுள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் , அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


ரணில் மீட்பர் அல்லர், பொருளாதார அடியாள்! - ஐங்கரநேசன் குற்றச்சாட்டு.
[Wednesday 2024-05-15 04:00]

ரணில் மீட்பர் அல்லர். அவர் ஒரு பொருளாதார அடியாள். உலக வங்கி, நாணய நிதியம் ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களின் தாழ்பணியும் ஒரு சேவகராகவே அவர் செயற்பட்டுவருகின்றார் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன் கடுமையாகச் சாடியுள்ளார்.


பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்குத் தடை! Top News
[Tuesday 2024-05-14 17:00]

அம்பாறை- பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.


முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவாக குருதிக் கொடைக்காக குவிந்த மாணவர்கள்! Top News
[Tuesday 2024-05-14 17:00]

கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இன்றையதினம் காலை முதல் இடம்பெற்றது.


பொலீஸ் அராஜகத்திற்கு மௌன அங்கீகாரம்!
[Tuesday 2024-05-14 17:00]

திருகோணமலை சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து விற்பனை செய்த பெண்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டு கைதுசெய்யதுள்ளதை கண்டித்துள்ள புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக்கட்சி இச் சம்பவம் பற்றி ரணில்-ராஜபக்ச ஆட்சி கண்டும் காணாதது போன்று இருந்து வருவது தொடரும் பொலீஸ் அராஜகத் திற்கு மௌன அங்கீகாரம் வழங்குவதாகும் என தெரிவித்துள்ளது


சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும்!
[Tuesday 2024-05-14 17:00]

படுகொலையுண்ட தமது உறவுகளை நினைவேந்தும் நமது மக்களின் உரிமையை அடக்குமுறைச் சட்டங்களை ஏவி மறுப்பது நாட்டில் அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.


நல்லிணக்கத்துக்கான கடைசி வாய்ப்பையும் இறுக மூடியிருக்கிறது இலங்கை அரசு!
[Tuesday 2024-05-14 17:00]

தமிழர்கள் மறைந்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வையும் கூட, இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் மூலம் தடுப்பதற்குக் களம் இறங்கியமை மூலம் தேசிய நல்லிணக்கத்துக்கான கடைசி வாய்ப்பையும் இறுக மூடி இருக்கின்றது இலங்கை ஆட்சிப் பீடம். இது பெரும் துரதிஷ்டவசமானதாகும் என ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


பெறுபேறுகள் வர முன்னரே உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!
[Tuesday 2024-05-14 17:00]

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைவாக அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.


எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கத் தயார்!
[Tuesday 2024-05-14 17:00]

தமிழ்ப் பொதுவேட்பாளராக நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரச தலைவராக வருவதற்கு அரச தலைவர் வேட்பாளராக, எதிரணி சார்பான பொதுவேட்பாளராக, என்னைக் களமிறங்கச் சொன்னால் அது தொடர்பில் பரிசீலிக்கமுடியும் என அரச தலைவர் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


15 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்! - இரு இளைஞர்கள் கைது.
[Tuesday 2024-05-14 17:00]

மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேசத்தில் தனது அம்மம்மா வீட்டிற்கு சென்று தனிமையில் வீதியில் திரும்பிக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 26, 21 வயதுடைய இளைஞர்கள் இருவரை திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா