Untitled Document
April 27, 2024 [GMT]
சீனா ஜியாங்சி மாகாணத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி!
[Thursday 2016-01-21 07:00]

சீனாவில் ஜியாங்சி மாகாணம், குவாங்பெங் மாவட்டம் 300 ஆண்டுகளாக பட்டாசு தயாரிப்பில் பிரசித்தி பெற்றதாகும். அந்த மாவட்டத்தில், குன்ஷான் என்ற கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.இந்த பட்டாசு ஆலையில் நேற்று அதிகாலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து வெடிகள் வெடித்து தீப்பிடித்தது.இந்த கோர விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.


விண்வெளி ஆராய்ச்சிக்கான செலவு செய்யும் நிதி குறைப்புகளை அறிவித்த ரஷ்யா!
[Thursday 2016-01-21 07:00]

விண்வெளி ஆராய்ச்சிக்கு தாம் செலவு செய்யும் நிதியில் பெருமளவான குறைப்புகளை ரஷ்யா அறிவித்துள்ளது. உலக சந்தையில் பெட்ரோலிய எண்ணெய்யின் விலை விழுந்துவருவதால் ரஷ்யாவுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுவர, பலவித சிக்கன நடவடிக்கைகளுக்கு ரஷ்யா தயாராகிவரும் சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.ரஷ்யா தனது விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது இரண்டாயிரத்து முப்பத்தைந்தாம் ஆண்டுவரை ஒத்திப்போடப்பட்டுள்ளது.திரும்பத் திரும்பப் பயன்படுத்தவல்ல ராக்கெட்டுகளை உருவாக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.ரஷ்யா தனது புதிய தலைமுறை ராக்கெட்டுகளை ஏவுவதற்காக உருவாக்கிவரும் காஸ்மோடிரோன் மையத்தில் இரண்டுக்கு பதிலாக ஒரு ராக்கெட் ஏவுமேடையே கட்டப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.தற்போது ரஷ்யா தனது ராக்கெட்டுகளை ஏவுவதற்கு கஸக்ஸ்தானில் உள்ள காஸ்மோடிரோனையே வாடகைக்கு பயன்படுத்திவருகிறது.


அமெரிக்காவில் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சீக்கியர் மற்றும் முஸ்லிம் பயணிகள்!
[Wednesday 2016-01-20 21:00]

அமெரிக்காவை சேர்ந்த சீக்கியர் ஷான் ஆனந்த். கடந்த மாதம் இவர் கனடாவின் டொரண்டோவில் இருந்து நியூயார்க் நகருக்கு அமெரிக்க ஏர்லைஸ் விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் முஸ்லிம் நண்பர்கள் பைமுல் ஆலம் உள்ளிட்ட 3 பேரும் இருந்தனர். இவர்களில் பைமுல் ஆலம் தவிர 2 பேர் வங்காள தேசம் மற்றும் அரேபியநாடுகளை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். 4 பேரும் விமானத்தில் ஏறி தங்களது இருக்கைகளில் அமர்ந்தனர். ஆனந்தும், ஆலமும் திடீரென இருக்கை மாற்றி அமர வைக்கப்பட்டனர். அதன் பின்னர் வெள்ளைக்கார விமான பணிப்பெண் வந்து ஆனந்துடன் வங்காள தேசத்தை சேர்ந்த முஸ்லிம் பயணியை விமானத்தில் இருந்து வெளியேறும்படி கூறினார். இது குறித்து அவர்கள் காரணம் கேட்டனர்.


கடந்த 2 ஆண்டுகளில் ஈராக்கில் 18,800 பொதுமக்கள் பலி!
[Wednesday 2016-01-20 21:00]

2014ஆம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து மாத்திரம், 18,800 பொதுமக்கள், வன்முறை காரணமாக ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளதாகவும், 36,000 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகமும் ஈராக்குக்கான ஐக்கிய நாடுகளின் உதவித் திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வன்முறைகளில் பெரும்பாலானவை, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவ்வறிக்கை, பிரிவினைவாத வன்முறையைக் குறைப்பதற்கு, மேலதிகமன நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளது.


பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு:
[Wednesday 2016-01-20 21:00]

பாகிஸ்தானின் பசா கான் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த 3 ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை, 20ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழகத்துக்குள் மேலும் பலர் உயிரிழந்திருக்காலம் என்று சந்தேகிப்பதாக, உள்ளூர் அவசர சேவைப்பிரிவின் ஊடகப்பேச்சாளர் ஒருவர் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.


சிங்கப்பூரில் இரண்டு இந்திய வாலிபர்களுக்கு சிறைத்தண்டனை!
[Wednesday 2016-01-20 21:00]

சிங்கப்பூரில் மோதல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இரண்டு இந்திய வம்சாவளி வாலிபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியர்களான லோகேஸ்வரன் சுப்பிரமணியன், சசி குமார் அசோகன் ஆகியோர் ஒரு கிளப்பில் இருந்து வெளியே வந்தபோது, தனபாலன், ரூபி மற்றும் 4 பேர் சேர்ந்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஒருவருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைதுசெய்தனர்.


சிங்கப்பூரில் கடும்போக்குவாதச் செயல்களில் பங்கேற்க திட்டமிட்ட வங்கதேசப் பிரஜைகள் கைது!
[Wednesday 2016-01-20 12:00]

சிங்கப்பூரில் கடும்போக்குவாதச் செயல்களில் பங்கேற்க திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வங்கதேசப் பிரஜைகள் இருபத்து ஏழு பேரை தடுத்துவைத்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவர்களில் ஒருவர் மட்டும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ஏனையோர் சிங்கப்பூரில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.கட்டுமானத் தொழிலாளர்களாக வேலைபார்த்துவந்த இவர்கள் அனைவரும் அண்மைய வாரங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


ஆங்கிலம் தெரியாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்! - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை!
[Wednesday 2016-01-20 01:00]

இங்கிலாந்தில் வசிக்கும் திருமணமான வெளிநாட்டு பெண்களுக்கு ஆங்கில அறிவை சோதிப்பதற்காக தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தோல்வி அடைபவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட வேண்டும் என்றும், அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் பெண்கள் ஆங்கில அறிவு பெற்றிருப்பது அவசியம். எனவே இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்தில் தங்கியிருக்கும் பெண்களுக்கு ஆங்கில தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம். அக்டோபர் மாதம் முதல் இந்த கொள்கை செயல்படுத்தப்படும். அதற்குள் தயார்படுத்திக் கொண்டு தேர்வில் வெற்றிப் பெறாதவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.


உலக சாதனைக்காக எஜமானர்களுடன் ஒருமணி நேரம் டாகாசனம் செய்த 270 நாய்கள்!
[Tuesday 2016-01-19 21:00]

உலக சாதனைக்காக ஒரே இடத்தில் தங்களது எஜமானர்களுடன் 270 நாய்கள் அமர்ந்து யோகாசனம் செய்த சாகச நிகழ்ச்சி ஹாங்காங் நகரில் நேற்று நடைபெற்றது.ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு ஹாங்காங் நகரில் நாய்களுக்கும் யோகாசன பயிற்சி மையம் நடத்தப்படுகிறது. சுஸெட் அக்கெர்மென் என்பவர் நடத்தும் இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 270 நாய்கள் நேற்று தங்களது எஜமானர்களுடன் ஒரே இடத்தில் அமர்ந்து யோகாசனம் செய்தன.டாகாசனம் (Dog Asanam) என அழைக்கப்படும் இக்கலையை காலை நீட்டியும், மடித்தும் தலையை திருப்பியும் இந்த நாய்கள் செய்துகாட்டியதை நாய்களின் உரிமையாளர்களுடன் ஏராளமான பார்வையாளர்களும் கண்டு ரசித்தனர்.


உலகில் இறந்து பிறந்த குழைந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 25 லட்சம்!
[Tuesday 2016-01-19 21:00]

உலகில் கடந்த ஆண்டு இறந்தே பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை இருபத்து ஐந்து லட்சத்தைவிட அதிகம் இறந்தே பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை உலக அளவில் கடந்த ஓராண்டில் மட்டும் இருபத்து ஐந்து லட்சத்தைவிட அதிகமாக இருந்துள்ளது என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கிலானவை ஆப்பிரிக்காவில் பிறந்தனவாம்.தி லான்ஸெட் சஞ்சிகையில் வெளியான ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.இறந்தே பிறந்த குழந்தைகளின் தொகையில் பாதிக்கும் மேலானவை பிரசவத்தின்போது இறந்தது தான், பயங்கரமான அதிர்ச்சியை தருவதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கை, அப்படியான இறப்புகளில் பெரும்பாலானவற்றை தடுத்திருக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளது.இறந்தே பிறக்கும் குழந்தைகளின் விகிதம் உலகிலேயே அதிகமாக உள்ள நாடு பாகிஸ்தான். அந்த வரிசையில் அடுத்த ஒன்பது இடங்களிலும் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கிலுள்ள ஆப்ரிக்க நாடுகள்தான் உள்ளன.


சீனப் பொருளாதார வளர்ச்சி கடும் சரிவு: - 25 ஆண்டுகால வரலாறு காணாத வீழ்ச்சி
[Tuesday 2016-01-19 16:00]

சீனப் பொருளாதார வளர்ச்சி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.மக்கள் தொகையில் உலகின் முதலிடத்திலும், இந்த ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் 7.3 சதவிகிதமாக இருந்தது. இந்த ஆண்டு 6.9 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளதாக அந்நாட்டு தேசிய புள்ளி விவரங்கள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவில் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்திருப்பதால் உலகம் முழுவதும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.


இங்கிலாந்தில் உடல் பருமனை தடுக்க சர்க்கரை வரி!
[Tuesday 2016-01-19 15:00]

இங்கிலாந்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடை அதிகரித்து உடல் பருமனாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனவே, அதை தடுக்க அந்நாட்டின் தேசிய சுகாதார சேவை மையம் புதிய திட்டம் வகுத்துள்ளது.இனிப்பு பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பதாக பரவலான கருத்து நிலவுகிறது. எனவே, இனிப்பு கலந்த பொருட்கள் மற்றும் உணவு பொருட்களுக்கு


பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள சோதனைச்சாவடி அருகே வெடிகுண்டு தாக்குதல்: - 7 பேர் பலி
[Tuesday 2016-01-19 11:00]

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவரில் உள்ள பரபரப்பான கர்கானோ மார்க்கெட் பகுதியில் சற்று முன் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பலியானவர்களில் 4 பேர் பாதுகாப்பு அதிகாரிகள் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கம்ரூத் கஸ்தார் பகுதியில் பொறுப்பில் உள்ள நவாப் ஷா என்ற அதிகாரியின் காரை குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல்: - 26 பேர் பலி
[Tuesday 2016-01-19 07:00]

ஏமன் தலைநகர் சனாவில் சவூதி கூட்டுப் படை விமானங்கள் போலீஸ் கட்டிடம் மீது நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.சனாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த காவல் துறையினரின் கட்டடத்தின் மீது சவூதி கூட்டுப் படையின் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் கட்டடம் தகர்ந்தது.


கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக ஈரான் அறிவிப்பு!
[Tuesday 2016-01-19 07:00]

தம் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் ஒரு நாளைக்கு 5 இலட்சம் பரல்கள் வரை கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஈரான் அரசு நேற்று உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த அறிவிப்பை அந்நாட்டு பெற்றோலியத் துறை துணை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அணுசக்தி சோதனை விவகாரம் தொடர்பில் ஈரான் மீது ஐ.நா சபை, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன. இதில் முக்கியமாக ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதிக்கப்;பட்டிருந்தது.


உலக சனத்தொகையில் ஒரு சதவீதமான செல்வந்தர்களிடம் உலகின் ஏனைய மக்களிலும் பார்க்க அதிக செல்வம்!
[Monday 2016-01-18 21:00]

சுமார் ஏழரை ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான செல்வத்தை உலக செல்வந்தர்கள் வரிச்சலுகைக்காக வெளிநாடுகளில் வைத்துள்ளனர்'உலக சனத்தொகையில் ஒரு சதவீதமான செல்வந்தர்கள், அதாவது கிட்டத்தட்ட 7 கோடியே 30 லட்சம் பேர் உலகின் ஏனைய மக்களின் ஒட்டுமொத்த செல்வத்திலும் பார்க்க அதிக செல்வத்துக்கு சொந்தக்காரர்கள் என்று ஆக்ஸ்ஃபாம் எனப்படுகின்ற உதவி மற்றும் அபிவிருத்திக்கான தொண்டுநிறுவனம் கூறுகின்றது.உலக சனத்தொகையின் அரைவாசியான 3.6 பில்லியன் அளவான வறிய மக்களின் ஒட்டுமொத்த செல்வத்திலும் பார்க்க அதிக செல்வம் உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ள 62 பேர் வசம் உள்ளதாகவும் உலக ஏற்றத்தாழ்வு பற்றிய ஆக்ஸ்ஃபாமின் புதிய அறிக்கை மதிப்பிட்டுள்ளது.சுமார் ஏழரை ட்ரில்லியன் டாலர் (ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி டாலர்) மதிப்பிலான செல்வத்தை உலக செல்வந்தர்கள் தங்களின் தாய்நாடுகளுக்கு வெளியே உள்ள வரிசெலுத்துவதிலிருந்து தப்பிக்கக்கூடிய இடங்களில் வைத்துள்ளதாக அந்தத் தொண்டுநிறுவனம் கூறுகின்றது. இந்த வரி ஏய்ப்பை முறியடிக்க அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆக்ஸ்ஃபாம் கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு பதுக்கிவைக்கப்பட்டுள்ள செல்வத்தில் சுமார் 50 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு செல்வந்த ஆப்பிரிக்கர்களே சொந்தக்காரர்கள் என்றும் கூறுகின்ற ஆக்ஸ்ஃபாம், அதனால் ஆப்பிரிக்கக் கண்டம் முழுமைக்கும் ஆண்டுக்கு 1400 கோடி டாலர் வரி இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.


புதிய தண்டனைத் தடைகளை அமெரிக்கா விதித்திருப்பதை கண்டித்துள்ள ஈரான்!
[Monday 2016-01-18 19:00]

இரானுடைய யுத்த ஏவுகணைகள் திட்டத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா புதிய தண்டனைத் தடைகளை விதித்திருப்பதை இரான் கண்டித்துள்ளது. இந்த புதிய தடைகளுக்கு சட்ட அடிப்படையோ, தார்மீக அடிப்படையோ இல்லை என்று இரானிய வெளியுறவு அமைச்சு சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.இரானில் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு யுத்த ஏவுகணைப் பரிசோதனையின் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்காவின் கருவூலத்துறை, இரானியப் பிரஜைகள் பதினோரு பேர் மீதும் கட்டமைப்புகள் மீதும் தடைகளை விதித்தது. இரானின் அணுத்திட்டம் தொடர்பான ஒரு சர்வதேச ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தபடும் சூழலில், இரான் மீதான சர்வதேச தண்டனைத் தடைகள் அகற்றப்பட்ட மறுநாள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


முஸ்லீம் பெண்கள் குறித்த இடங்களில் நடைமுறையில் இருக்கும் சீருடைகளையே பயன்படுத்த வேண்டும்: - கெமரூன்
[Monday 2016-01-18 17:00]

முஸ்லீம் பெண்கள் பாடசாலைக்கு அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லும்போது முகத்தினை மூடும் அவர்களின் முக்காட்டை அணிந்து செல்ல முடியாது என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார். குறித்த இடங்களில் நடைமுறையில் இருக்கும் சீருடைகளையே அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.பிரித்தானியக் குடியேற்றவாசிகள் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் பிரதமர், இரண்டரை ஆண்டுகளுக்குள் தமது ஆங்கிலத் தேர்ச்சியை அவர்கள் வெளிக்காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இரண்டரை ஆண்டுக்குள் ஒருவர் ஆங்கில மொழியிலான தனது தேர்ச்சியை நிறுவத் தவறும்பட்சத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப் படுவார் என அவர் மேலும் கூறினார்.


கொலை வழக்கில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் விடுதலை!
[Monday 2016-01-18 16:00]

பாகிஸ்தானில் பலூச் இன மக்களின் தலைவரும் பலுசிஸ்தான் மாகாண முன்னாள் முதல் மந்திரியுமான அக்பர் புக்தியை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பை நீதிமன்றம் விடுவித்துள்ளது. பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண முதல்-மந்திரி பதவி வகித்தவர், நவாஸ் அக்பர் கான் புக்தி. பலூச் பழங்குடி இனத்தலைவராக திகழ்ந்த அவர், பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷரப் பதவியில் இருந்தபோது, கடந்த 2006-ம் ஆண்டு ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு எதிராக அப்போது பாகிஸ்தானில் பெருமளவு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் அவரது கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் உள்துறை மந்திரி அப்தாப் கான் ஷெர்பாவ், பலுசிஸ்தான் மாகாண முன்னாள் உள்துறை மந்திரி மிர் ஷோய்ப் நோஷெர்வானி ஆகியோர் மீது இந்த கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, அவர்கள் மீது குயெட்டாவில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே, தேர்தலில் தோல்வியடைந்து பதவியில் இருந்து இறங்கிய முஷ்ரப், வெளிநாடுக்கு தப்பியோடி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்தார். மீண்டும் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆசையில் பாகிஸ்தான் திரும்பிய முஷரப் இந்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முஷரப்பின் பெயரும் சேர்க்கப்பட்டது. சுமார் ஓராண்டு காலம் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜன் முஹம்மது கோஹர்,


ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக வாலிபர் ஒருவரை கொடூரமான முறையில் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்!
[Monday 2016-01-18 16:00]

சிரியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வாலிபரை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயரமான கட்டிடத்தில் இருந்து கீழேத்தள்ளி கொன்ற கொடூரமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.கண்களையும், உடலோடு சேர்த்து இருகைகளையும் கட்டிய நிலையில் அந்த வாலிபரை சிரியாவில் உள்ள ஏதோவொரு நகரின் மிக உயரமான கட்டிடத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்லும் ஒரு தீவிரவாதி, அங்கிருந்து அவரை துடிதுடிக்க கீழே உருட்டித்தள்ளும் காட்சிகள் அந்த புகைப்படங்களில் பதிவாகியுள்ளன.ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைத்துள்ள கோர்ட்டில் உரியமுறையில் விசாரணை நடத்தப்பட்ட பின்னரே அவருக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அந்த புகைப்படங்களின் அடிக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


அமெரிக்க நிறுவனத்தின் ராக்கெட் கீழே விழுந்து நொறுங்கியது!
[Monday 2016-01-18 16:00]

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து அமைத்த சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் மூலமாக பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் 'ஜேசன் 3' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்தது. சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் எந்திரங்கள், கட்டுமான பொருட்கள் போன்றவற்றை தனியாருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் என்ற ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வந்தன.இந்நிலையில், அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புளோரிடா மாநிலத்தின் கேப் கனவெரல் விமானப்படை நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏவுதளத்தில் இருந்து 23 பிரிவுகளை கொண்ட ஒன்பது நிலைகளில் இயங்கும் "ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9" ராக்கெட் கடந்த மாதம் புறப்பட்டு சென்றது. அதில் தகவல்தொழில்நுட்பம் தொடர்பான 11 செயற்கைக் கோள்கள் இணைக்கப்பட்டிருந்தன.


ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கர்கள் கடத்தப்பட்டதனை உறுதிப்படுத்திய அமெரிக்கா!
[Monday 2016-01-18 10:00]

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சில அமெரிக்கர்கள் கடத்தப்பட்டுள்ளதாக பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.கடத்தப்பட்டவர்களை கண்டறிதல் மற்றும் மீட்பதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் ஈராக்கிய அரசுக்கு வழங்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அரச திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் வெளியிட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத அறிக்கையில், பாக்தாத்தின் தெற்கு பகுதியில் மூன்று அமெரிக்கர்கள் மற்றும் ஈராக்கின் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் கடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்வெளியில் பூத்த ஜின்னியா மலர்: - ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிய நாசா விஞ்ஞானி
[Sunday 2016-01-17 21:00]

விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் பூத்துள்ள மலர் குறித்த படத்தை நாசா விஞ்ஞானி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.பூமியிலிருந்து 250 மைல் உயரத்தில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இங்கு மலர்கள் வளர்ப்பிற்கான சோதனையை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெற்றிக்கிரமாக சோதனை செய்தது.இந்நிலையில் அங்கு பூத்துள்ள ஜின்னியா என்ற மலரின் புகைப்படத்தை விஞ்ஞானி ஸ்காட் கெல்லி ட்விட் செய்துள்ளார்.


ஈரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
[Sunday 2016-01-17 19:00]

ஈரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டுள்ளது, தமது நாட்டுக்கும் இதர உலகத்துக்கும் இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது என அதிபர் ஹஸன் ரௌஹானி கூறியுள்ளார். சர்வதேச அணுசகதி கண்கணிப்பு அமைப்பு, ஈரான் தனது அணுசக்தி செயல்பாடுகளை மட்டுபடுத்தியுள்ளது என்பதை உறுதிசெய்த பிறகு, அது தொடர்பில் இரான் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. இதன் பிறகு நாட்டின் நாடாளுமன்றத்தின் உரையாற்றியபோதே அதிபர் ரௌஹானி இதைத் தெரிவித்தார்.


சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பெண்கள்,சிறுமிகள் உட்பட 400 பேர் கடத்தல்!
[Sunday 2016-01-17 19:00]

சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெண்கள், சிறுமிகள் உள்பட 400 பேரை இன்று கடத்திச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸர் நகரை கைப்பற்றும் நோக்கத்தில் நேற்று பீரங்கி வாகனங்களுடன் வந்த ஐ.எஸ். தீவிரவாதிகள், குண்டுகளை வீசியும், இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும், வாள்களால் தலைகளை வெட்டித் துண்டித்தும் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், சிரியா ராணுவப்படை மற்றும் அதிபரின் ஆதரவாளர் படைகளை சேர்ந்த சுமார் 300 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்ததாகவும் முன்னர் செய்தி வெளியானது.


ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: - 11 பேர் பலி
[Sunday 2016-01-17 14:00]

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் இன்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது 10 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆயினும் அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.


அமெரிக்காவில் உள்ள வளைகுடா நீரோடையில் விடுவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கடல் ஆமைகள்!
[Sunday 2016-01-17 14:00]

அமெரிக்காவில் வட கரோலினாவின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள வளைகுடா நீரோடையில் 130 க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் விடுவிக்கப்பட்டுள்ளன.வட கரோலினா முழுவதும் காலநிலை மாற்றத்தால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த கடல் ஆமைகளை மீட்கும் பணியை வட கரோலினாவின் வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுத்திருந்தது.குறித்த பகுதியில் நிலவிய அதிக குளிர் காரணமாக, நூற்றுக்கணக்கான பச்சைக் கடல் ஆமைகள், கடற்கரையில் மிந்தவாறும் கரையோரத்தில் ஒதுங்கிய நிலையிலும் காணப்பட்டிருந்தன.இதனையடுத்து குறித்த ஆமைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கடற்கரையிலிருந்து கரை நோக்கி சுமார் 15


கிறிஸ்தவ போதகர் உள்ளிட்ட நான்கு அமெரிக்க கைதிகளை விடுவித்த ஈரான்!
[Sunday 2016-01-17 13:00]

வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் செய்தியாளர் , கிறிஸ்தவ போதகர் மற்றும் முன்னாள் அமெரிக்க கடற்படை வீரர் உள்ளிட்ட நான்கு அமெரிக்க கைதிகளை நேற்று ஈரான் விடுதலை செய்துள்ளதாக ஈரானிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.நேற்று ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன நேற்று அறிவித்திருந்தன.இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் ஈரான் செய்தியாளர் ஜேசன் ரெசெய்ன், இடாஹோவின் போதகரான சயித் அபெடினி, மிக்சிகன் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர் அமீர் ஹெக்மரி மற்றும் நுஷ்ரத்துல்லாஹ் கோஸ்ரவி ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய அரச தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா