Untitled Document
April 27, 2024 [GMT]
பாகிஸ்தானில் நில நடுக்கம்: - பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்!
[Sunday 2016-01-24 08:00]

பாகிஸ்தானில் கைபர் பக் துங்வா மாகாணத்தில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் புனர், மலாகண்ட், ஸ்வாட் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவானது. அது அஷ்காசாமுக்கு 13 கி.மீ. மேற்கில், 90.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் 80 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி துறை கூறுகிறது.


சீன அதிபர் ஷீ ஜின் பிங் இரான் அதிபருடன் பேச்சுவார்த்தை!
[Saturday 2016-01-23 22:00]

சீன அதிபர் ஷீ ஜின் பிங் இரான் அதிபருடன் பேச்சு நடத்தியுள்ளார்.இரானுக்கான சீனத் தலைவரின் விஜயத்தின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் பற்றி இரண்டு நாடுகளின் தலைவர்களும் பேசியுள்ளனர். இரான் மீதிருந்த சர்வதேச பொருளாதார தடைகள் ஒரு வாரத்திற்கு முன்னர் நீக்கப்பட்ட பின்னர் அந்த நாட்டிற்கு உலக தலைவர் ஒருவர் மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை 600 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க சீனத் தலைவர் ஷி ஜின்பிங் மற்றும் இரான் தலைவர் ஹசன் ரௌஹானி ஆகியோர் இணங்கியுள்ளனர்.


சவுதி இரான் நடுவே எழுந்துள்ள பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக ஜான் கெர்ரி சவுதி பயணம்!
[Saturday 2016-01-23 22:00]

சவுதி இரான் நடுவே எழுந்துள்ள பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக, அமெரிக்க அரசு செயலர் ஜான் கெர்ரி பேச்சு நடத்துவதற்காக சவுதி அரேபியா சென்றுள்ளார். மத்திய கிழக்கில் இரானின் தலையீடு அதிகரித்துவருவதாக அமெரிக்க அரசுத்துறை செயலர் ஜான் கெர்ரி வருத்தம் வெளியிட்டுள்ளார்.சவுதி அரேபியாவில் பேச்சுக்கள் நடத்திய பிறகு பேசிய கெர்ரி,சிரியாவின் உள்நாட்டு போரில், அதிபர் அஸ்ஸத்துக்கு ஆதரவளிக்கும், லெபனானிய ஆயுதக்குழுவான ஹெஸ்புல்லாவுக்கு இரான் அளித்துவரும் ஆதரவை சுட்டிக்காட்டினார்.இரானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை தடுக்க அமெரிக்காவுடன் இணைந்து தாம் செயல்படுவதாக சவுதியின் வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சிரியாவின் பிரச்சனையில் முக்கிய பங்காற்றும் நாடுகளான இரான் மற்றும் சவுதிக்கு இடையிலான இந்த தகராறு, சிரியாவின் அமைதிப்பேச்சுக்களில் சிக்கல் ஏற்படுத்துவதை தடுப்பதற்காக, அங்கு நிலவும் பதற்றத்தை நீக்க அமெரிக்கா முயலுகிறது.


அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியைத் பனிப்புயல் தாக்கியதில் எட்டு பேர் உயிரிழப்பு!
[Saturday 2016-01-23 21:00]

ஒரு மாபெரும் பனி புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை தாக்கியதில், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். டென்னஸி, கெண்டகி, வர்ஜீனியா, மேரிலாந்து உள்ளிட்ட 10 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மிகக் கடுமையான இந்தப் பனிப் புயல் சார்ந்த வானிலை காரணமாக இதுவரை குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வட கரோலைனாவில் இறந்துள்ளதாகவும், அங்குள்ள சாலைகள் ஆலங்கட்டி மழை மற்றும் கருப்பு பனியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. அம்மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


வருடாந்த நிதி பங்களிப்பை செலுத்தாமையினால் ஐ.நாவில் வாக்களிக்கும் உரிமையை இழக்கவுள்ள 15 நாடுகள்!
[Saturday 2016-01-23 21:00]

ஐநாவுக்கு செலுத்தவேண்டிய வருடாந்த நிதி பங்களிப்பை செலுத்த தவறிய பதினைந்து நாடுகள், ஐநாவில் வாக்களிக்கும் உரிமையை இழக்கவுள்ளன.தற்போது ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள வெனிசுவேலாவும் அடங்கும். அந்நாடு மட்டும் ஐ நாவுக்கு மூன்று மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி செலுத்த வேண்டியுள்ளது.வாக்களிக்கும் உரிமையை இழந்த மற்ற நாடுகளின் பட்டியலில் பஹ்ரைன், லிபியா, மாலி மற்றும் புரூண்டி ஆகியவை உள்ளன.ஐநாவின் தடைகள் கடந்த சனிக்கிழமை வரை விதிக்கப்பட்டிருந்த இரானும் வாக்களிக்கும் உரிமையை இழக்கவிருந்த நிலையில், தனது பங்களிப்பை தற்போது செலுத்தியுள்ளது.உள்நாட்டு போர் அல்லது கடும் வறுமையை எதிர்கொள்ளும் ஐந்து நாடுகள் பங்களிப்பு அளிக்கவில்லை என்றாலும் அவைகளுக்கான வாக்களிக்கும் உரிமையை ஐநா நீக்கவில்லை.அப்படி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள் ஐந்து நாடுகளில் யேமன், சொமாலியா மற்றும் கினீ-பிஸ்ஸாவ் ஆகியவை அடங்கும்.


சிறுவர்களை பாலியல் தொந்தரவு செய்த முதியவர் கொலை வழக்கு: - இங்கிலாந்து பெண்ணுக்கு ஏழரை ஆண்டு சிறை!
[Saturday 2016-01-23 19:00]

இங்கிலாந்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை கொன்ற பெண்ணின் தண்டனை உயர்த்தப்பட்டு, ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கிழக்கு லண்டனின் கேனிங் நகரில் கடந்த 2014ம் ஆண்டு மைக்கேல் பிளஸ்டட் (77) என்பவர் சிறுவர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவரை பக்கத்து வீட்டில் வசித்து வரும் சாரா சேண்ட்ஸ் (33) என்ற பெண், நவம்பர் மாதம் கத்தியால் குத்தி கொலை செய்தார். சிறுவர்களை துன்புறுத்தியதால் ஆத்திரத்தில் அவரை 8 முறை கத்தியால் குத்தி கொன்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.


குடிபோதையில் டாக்சி டிரைவரை போட்டுத்தாக்கும் இந்திய இளம் பெண்!
[Saturday 2016-01-23 15:00]

அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஜாக்சன் ஹெல்த் சிஸ்டம் மருத்துவமனையில் நான்காம் ஆண்டு நரம்பியல் மருத்துவ மாணவியாக பயின்று வருபவர், அஞ்சலி ராம்கிசூன் (ராம்கிருஷ்ணன்). சுமார் இருபது வயது மதிக்கத்தக்க இந்திய வம்சாவளி பெண்ணான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மிதமிஞ்சிய குடிபோதையில் டாக்சி டிரைவரை போட்டுத்தாக்கும் காட்சி யூடியூப்பில் பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. உபேர் டாக்சியில் ஏறிவந்த இவர் குடிபோதையில் டிரைவரிடம் தகராறு செய்ததால் நொந்துப்போன டிரைவர், இனி உன்னை வைத்து காரை ஓட்ட என்னால் முடியாது என கூறி நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கிக் கொள்கிறார். அவரை அஞ்சலி வாய்க்கு வந்தபடியெல்லாம மிகமோசமாக திட்டுகிறார்.


அமெரிக்காவில் பாலியல் பலாத்காரம் செய்த காவலருக்கு 263 ஆண்டு சிறை!
[Saturday 2016-01-23 10:00]

அமெரிக்காவில், தனது பணிக் காலத்தின்போது கருப்பினப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் காவலருக்கு 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதுகுறித்து செய்திகள் தெரிவிப்பதாவது:ஓக்லஹோமா மாகாணத்தில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் டேனியல் ஹோல்ட்ஸ்கிளா. கடந்த 2013 முதல் 2014-ஆம் ஆண்டு வரை அவர் கருப்பினப் பெண்களை பாலியல் பலாத்காரம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக புகார் கூறப்பட்டது. அவரால் பாதிக்கப்பட்ட டெமெட்ரியா கேம்பல் என்ற பெண், இது தொடர்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார். டேனியலுக்கு எதிராக குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, அவர் கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டர்.இந்த நிலையில், டேனியல் மீதான 36 குற்றச்சாட்டுகளில் 18 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் அறிவித்தது.இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், டேனியலுக்கு 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.


விசா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா!
[Saturday 2016-01-23 09:00]

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்களை மட்டுமல்ல, குறிப்பிட்ட சிலநாடுகளுக்குச் சென்றுவிட்டு அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதிக்கிறது. விசா இல்லாமல் சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 90 நாட்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.அவ்வாறு பயணம் செய்ய விரும்புவர்கள் மார்ச் 2, 2011 ஆம் தேதிக்குப் பிறகு ஈரான், இராக்,சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்தால், அவர்கள் விசா வாங்கிய பிறகுதான் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும். இது போன்ற மேலும் பல கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது.


கனடாவில் மர்மநபர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலி!
[Saturday 2016-01-23 08:00]

கனடா நாட்டின் சஸ்கட்சேவன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்த மர்மநபர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஐந்துபேர் பலியானதாக தெரியவந்துள்ளது.இங்குள்ள லா லோச்சே பகுதியில் ஏழாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


உயிராபத்தை விளைவிக்காத தற்காப்பு கருவிகளை வாங்க ஆரம்பித்த ஜெர்மனிய மக்கள்!
[Friday 2016-01-22 22:00]

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது ஜெர்மனியின் கொலோன் மற்றும் வேறு சில நகரங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல்களுக்கு பெரும்பங்கு பொறுப்பு குடியேறி இளைஞர்கள் என்று பழிசுமத்தப்படும் நிலையில், ஜெர்மனிய மக்கள் புது வித தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். உயிராபத்தை விளைவிக்காத தற்காப்பு கருவிகளை ஜெர்மனிய மக்கள் அதிக அளவில் வாங்க ஆரம்பித்துள்ளனர்.


அபூர்வ பாலைவன பறவையினமான ஹூபாரா பறவை வேட்டைக்கு விதிக்கப்பட்ட தடை பாகிஸ்தானில் ரத்து!
[Friday 2016-01-22 22:00]

அபூர்வ பாலைவன பறவையினமான , ஹூபாரா பஸ்டார்டை (வேகமாய் ஓடக்கூடிய உயரமான ஒரு பறவை) வேட்டையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான உச்ச நீதிமன்றம் விலக்கியிருக்கிறது.இந்த ஹுபாரா பஸ்டார்ட் பறவையை வேட்டையாடுவதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து பாகிஸ்தான அரசு மனுச் செய்திருந்தது.இந்தத் தடை எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளுடன் பாகிஸ்தானின் உறவுகளைப் பாதிக்கும் என்று அது வாதாடியது.


குடியேறிகள் நெருக்கடி ஐரோப்பிய சமூகம் மொத்தமாகவே ஆட்டங்காணும்: - பிரஞ்சுப் பிரதமர்
[Friday 2016-01-22 19:00]

அகதிகள் நெருக்கடி தொடர்பில் பிபிசிக்கு பிரஞ்சுப் பிரதமர் பேட்டியளித்துள்ளார்.ஐரோப்பாவுக்கு வரும் ஒவ்வொரு அகதியையும் உள்ளே விட்டுக்கொண்டிருந்தால் ஐரோப்பிய சமூகம் மொத்தமாகவே ஆட்டங்காணும் என பிரஞ்சு பிரதமர் மனுவெல் வால்ஸ் எச்சரித்துள்ளார்.இந்தக் குடியேறிகள் நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த எதிர்காலத்துக்குமே மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.குடியேறிகளைக் கரம் நீட்டி வரவேற்கும் விதமான ஜெர்மானிய ஆட்சித்தலைவி அங்கேலா மெர்க்கெல்லின் கொள்கை 'தைரியமான ஒரு விஷயம்' என்று அவர் வர்ணித்தார்.


அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியை தாக்கவிருக்கும் பனிப்புயல்!
[Friday 2016-01-22 18:00]

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிபயங்கர பனிப்புயல் தாக்கவிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பனிப்புயல் காரணமாக தரையில் இருந்து சுமார் இரண்டரை அடி வரை பனிப்படலாம் மூடப்படலாம் என்றும், பொதுமக்கள் அந்த நேரத்தில் வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வாஷிங்டன், நியூயார்க், பால்டிமோர் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சொமாலியா கடலோர விடுதிகளில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இருபது பேர் பலி!
[Friday 2016-01-22 18:00]

சொமாலியத் தலைநகர் மொகதிஷுவில்கடலோரத்து உணவு விடுதிகளில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இருபது பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மாலைப் பொழுதில் இந்த விடுதிகளை ஒட்டி இரண்டு கார் குண்டுகள் வெடித்ததுடன், உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது ஆயுததாரிகள் ஐந்து பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இறந்தவர்களைத் தாண்டி மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கண்மூடித்தனமாக ஆயுததாரிகள் சுட்டதையும், மாடியில் இருந்து ஜன்னல் வழியாகக் குதித்து மக்கள் தப்பித்ததையும் சம்பவத்தைக் கண்டவர்கள் வர்ணித்துள்ளனர்.இத்தாக்குதலை தாங்களே நடத்தியதாக அல்-ஷபாப் அமைப்பு தெரிவித்துள்ளது.


2050-ல் கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் தான் இருக்கும்: - உலக பொருளாதார பேரவை எச்சரிக்கை!
[Friday 2016-01-22 08:00]

உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி குப்பையை கொட்டுவதற்கு சமமானதாகும். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் 2030-ம் ஆண்டுக்குள் இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, 2050-ம் ஆண்டுக்குள் 4 மடங்காக அதிகரித்து விடும். இதன் எதிரொலியாக, கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும் அபாயமான நிலை உருவாகும்.தற்போது, கடலில் 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு 20 மடங்காக அதிகரித்துள்ளது.


நேபாளத்தில் போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட 3 மதேசி இனத்தவர் உயிரிழப்பு!
[Friday 2016-01-22 07:00]

நேபாளத்தின் ஒன்றுபட்ட மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.என் - யூ.எம்.எல்.) தொண்டர்களுக்கும், மதேசி அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட 3 மதேசி இனத்தவர் உயிரிழந்தனர்.இதுகுறித்து செய்திகள் தெரிவிப்பதாவது:முராங் மாவட்டம், ரங்கேலி நகரில் பிரதமர் கே.பி. சர்மா ஓலியை கொளரவிப்பதற்கான நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடத்த சி.பி.என். (யூ.எம்.எல்.) கட்சியின் இளைஞர் அணியினர் திட்டமிட்டிருந்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு "சம்யுக்தா லோக்தந்த்ரிக் மதேசி மோர்ச்சா' என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.


குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப்பைவிட, ஜனநாயகக் கட்சியின் பெர்னி சாண்டர்ஸுக்கு அதிக வாக்காளர்கள் ஆதரவு!
[Friday 2016-01-22 07:00]

அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பிலான வேட்பாளர் தேர்வுப் போட்டியில் முன்னிலையில் இருக்கும் டொனால்டு டிரம்ப், தனது நிலையில் மேலும் முன்னேற்றமடைந்துள்ளார்.அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவுகள், மாகாணவாரியாக நடத்தப்படும்.அந்த வகையில் அயோவா மாகாணத்திலும், அதனைத் தொடர்ந்து நியூ ஹாம்ப்ஷையர் மாகாணத்திலும் வாக்குப் பதிவு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில், சி.என்.என்./டபிள்யூ.எம்.யூ.ஆர். தொலைக்காட்சிகளால் நியூ ஹாம்ப்ஷையரில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிப்பதாவது:


சிரியாவில் 1,000 க்கும் அதிகமானோர் பலி! - ரஷ்ய விமானங்களே பொறுப்பு!
[Thursday 2016-01-21 22:00]

சிரியாவில் நான்கு மாதங்களுக்கு முன்னர் ரஷ்யா தாக்குதல்களை நடத்துவதற்கு ஆரம்பித்தது முதற்கொண்டு இதுவரை 1,000 க்கும் அதிகமான பொதுமக்கள் உயிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் புதன்கிழமை தெரிவித்தது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் ரஷ்யாவால் சிரியாவில் நடத்தப்பட்ட மேற்படி வான் தாக்குதல்களில் 200 சிறுவர்கள் உட்பட 1,015 பேர் பலியாகியுள்ளதாக அந்த நிலையம் கூறுகிறது. அதேசமயம் இந்தத் தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த 893 பேரும் எதிர்க் குழுவைச் சேர்ந்த 1,141 பேரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மருந்துக்கு கட்டுப்படாத புதிய கிருமிகள் உருவாகிவருகின்றன: - உலகின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிப்பு
[Thursday 2016-01-21 22:00]

மருந்துக்கு கட்டுப்படாத புதிய கிருமிகள் உருவாகிவருகின்றன. புதிய அண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்காக ஆராய்ச்சி செய்வதற்கும் அவற்றை உருவாக்குவதற்கும் நிதி உதவி வழங்க புதிய வழிகளை அரசாங்கங்கள் கண்டறிய வேண்டும் என உலகின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. தற்போதுள்ள மருந்துகளுக்கு கட்டுப்படாமல் போகின்ற வீரியமிக்க புது வகை கிருமிகள் பரவுவதால் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும், அவ்வகை கிருமித்தொற்றுகளைத் தடுக்க உலக நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


2016-ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடம், கனடாவின் நிலை3:
[Thursday 2016-01-21 21:00]

உலகில் 2016-ம் ஆண்டில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தையும் கனடா இரண்டாம் இடத்தையும் பிடித்து உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த உலக பொருளாதார மையம் வெளியிட்டு உள்ள தகவலில் 2016-ம் ஆண்டில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடம் பிடித்து உள்ளது. உலக பொருளாதார மையமானது சுமார் 60-து நாடுகளில் ஆய்வு செய்து உள்ளது. நிலைத்தன்மை, துணிச்சல், கலாச்சார செல்வாக்கு, தொழில் முனைவோர், பாரம்பரியம், வணிகம், வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார செல்வாக்கு போன்ற 24 தகுதிகளை கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.


பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக தேசியத் துக்கம் அனுஸ்ரிப்பு!
[Thursday 2016-01-21 18:00]

பாகிஸ்தானின் வடமேற்கே பச்சா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக இன்று தேசியத் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.நேற்று-புதன்கிழமை பச்சா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்டவர்களின் நினைவாக இன்று விழிப்புணர்வும் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.இந்தப் படுகொலைகளை செய்தவர்களை கண்டுபிடிப்பதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தானிய இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.எனினும் அவர்கள் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.ஆனால் இத்தாக்குதலுக்கு தாலிபான்கள் உரிமை கோரியுள்ளனர்.


வடகிழக்கு பிரேசிலில் ஸிக்கா வைரஸ் தாக்கி 5 குழந்தைகள் பலி!
[Thursday 2016-01-21 17:00]

பிரசிலில் ஸிக்கா வைரஸ் தாக்கி 5 குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடகிழக்கு பிரேசிலில் ஸிக்கா வைரஸ் நோய் தாக்கி 5 குழந்தைகள் பலியாகி உள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை 3,893 பேருக்கு மர்ம நோய் தாக்கியுள்ளது. இதில், 224 பேருக்கு ஸிக்கா வைரஸ் நோய் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது.


இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் பெரும்பாலான பாஸ் வேர்ட் 123456!
[Thursday 2016-01-21 13:00]

இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் பெரும்பாலான பாஸ்வேர்டு எளிதில் யூகிக்கும் வகையிலேயே உள்ளது. அதிலும் பெரும்பாலனவர்கள் 123456 என்ற பாஸ்வேர்டையே பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.ஸ்பலாஷ் டேட்டா என்ற இணைவழி பாதுகாப்பு நிறுவனம் ஆண்டுதோறும் இணையப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகில் இணையதளத்தை பயன்படுத்துவோர் '123456' அல்லது ஆங்கிலத்தில் password என்பதையையே பாஸ்வேர்டாக பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்தது.


ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற வன விலங்குகள் பூங்காவில் பராமரிப்பாளரை தாக்கிய புலி!
[Thursday 2016-01-21 13:00]

உலக புகழ்பெற்ற முதலை வேட்டைக்காரர் ஸ்டீவ் இர்வினின் மனைவியால் நடத்தப்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற வன விலங்குகள் பூங்காவின் பராமரிப்பாளர் ஒருவர் புலியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குயீன்ஸ்லேண்ட் மாநிலத்தின் சன்ஷைன் கடற்கரைப்பகுதியில் உள்ள


புதுவகையான மதுபானத்தை கண்டுபிடித்திருப்பதாக வடகொரியா அறிவிப்பு!
[Thursday 2016-01-21 08:00]

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அணு ஆயுதங்களை சோதித்து வருகிற நாடு வடகொரியா. அந்த நாடு, அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு வெடித்து சோதனை நடத்தி இருப்பதாக கடந்த 6-ந் தேதி அறிவித்து, உலக நாடுகளின் கண்டனத்துக்கு ஆளானது.அந்த வடகொரியா ஒரு புதுவகையான மதுபானத்தை கண்டுபிடித்திருப்பதாக இப்போது அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த மதுபானத்தை குடித்தால் தலைவலி உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படாது என வடகொரியா கூறுகிறது.


சிரியாவில் கடத்தப்பட்டவர்களில் 270 பேரை விடுதலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்: - 130 பேரின் கதி என்ன?
[Thursday 2016-01-21 08:00]

இங்கிலாந்தில் ஆங்கில வகுப்பில் எழுத்துப் பிழை: - 10 வயது முஸ்லிம் மாணவரிடம் போலீஸார் விசாரணை
[Thursday 2016-01-21 08:00]

இங்கிலாந்தில் ஆங்கில வகுப்பில் எழுத்துப் பிழை காரணமாக மாடி வீடு(terraced ) என்று எழுதுவதற்கு பதிலாக தீவிரவாத வீடு என்று எழுதிய முஸ்லிம் 10 வயது மாணவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.லாங்கஷர் நகரிலுள்ள ஒரு பள்ளியில் படிக்கும் அந்த மாணவர், ஆங்கில வகுப்பில் "டெர்ரேஸ்டு ஹவுஸ்' (மாடி வீடு) என்பதற்குப் பதிலாக, "டெர்ரரிஸ்டு ஹவுஸ்' (தீவிரவாத வீடு) என எழுத்துப் பிழையுடன் எழுதியதைத் தொடர்ந்து, போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா