Untitled Document
May 9, 2024 [GMT]
ஆளில்லா விமானங்களைத் தாக்குவதற்கு கழுகுகளுக்கு நெதர்
[Saturday 2016-02-06 13:00]

ஆளில்லா விமா


சிரியாவில் போர் தீவிரம்: - பல்லாயிரக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்
[Saturday 2016-02-06 12:00]

சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக அலெப்போ நகரில் சண்டை உக்கிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த நகரில் இருந்து வெளியேறி வருகின்றனர்.அண்டை நாடான துருக்கியின் பிரதமர் அகமது தாவுடக்லு, இதுபற்றி கூறுகையில்,


ஈராக்கில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி பலி!
[Saturday 2016-02-06 07:00]

ஈராக்கில் குர்தீஷ் படையினரின் தன்னாட்சி பிராந்தியந்தின் தலைநகரான அர்பில் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். இதில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் 14 பேர், மேலும் 3 ஈராக்கியர்கள், ஒரு பாலஸ்தீனியர், மற்றும் அடையாளம் காண முடியாத ஒருவர் உட்பட மொத்தம் 19 பேர் இந்த தீ விபத்தில் பலியாகியுள்ளனர். மேலும் இந்த தீ விபத்தால் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அர்பில் சுகாதார துறை தெரிவித்துள்ளது.முதற்கட்ட தகவலின் படி, மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஜிகா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் வசிக்கும் பெண்கள் கருத்தடை,கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்: - ஐ.நா கோரிக்கை
[Saturday 2016-02-06 07:00]

ஜிகா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் வசிக்கும் பெண்கள் கருத்தடை, மற்றும் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவை கோரிக்கை விடுத்துள்ளது.பிரேசில் நாட்டில் கடந்த ஆண்டு தாக்கத்தொடங்கிய ஜிகா வைரஸ், இப்போது தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசியும், சிகிச்சையும் இல்லாத இந்த நோய், கர்ப்பிணிகளை முதல் 3 மாத கர்ப்ப காலத்தில் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தையின் தலை மிகவும் சிறிதாக இருக்கும். மேலும், மூளையில் பாதிப்பு மற்றும் பிற பிறவிக்குறைபாடுகளும் உண்டாக வாய்ப்பு உண்டு.இத்தகைய கொடிய ஜிகா வைரஸ், வேகமாக பரவி வருவது குறித்து, ஆலோசனை நடத்திய உலக சுகாதார அமைப்பு, சர்வதேச ஜிகா வைரஸ் நெருக்கடி நிலையையும் பிரகடனம் செய்துள்ளது. அதேபோல், ஜிகா வைரஸ் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை கருதரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.


விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவுக்கு ஸ்வீடன்,இங்கிலாந்து அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும் - ஐ.நா. குழு அறிக்கை
[Friday 2016-02-05 18:00]

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை சட்டவிரோதமாக காவலில் வைத்திருந்தற்காக அவருக்கு ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐ.நா. சட்டக்குழு தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு மற்றும் ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை தனது விக்கிலீக்ஸ் இணைய தளம் மூலம் கசிய விட்டு பிரபலமானவர் ஜூலியன் அசாஞ்சே (வயது 44). அவரை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்கா காத்திருக்கிறது. ஸ்வீடனில் அவர் மீது பாலியல் புகார் எழுந்தது. இதனால் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட ஜூலியன் அசாஞ்சே 2012 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த நிலையில், தன்னை சட்டவிரோதமாக இங்கிலாந்து, சுவீடன் அரசுகள் காவலில் வைத்துள்ளதாக ஐ.நா. சபையில் அவர் புகார் செய்தார். அதன்பேரில், சட்டத்துக்கு புறம்பான தடுப்புக்காவல் குறித்த ஐ.நா. விசாரணை குழு, விசாரணை நடத்தியது.


பிரிட்டனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை டிவியில் பார்க்கும் பழக்கம் பிள்ளைகளிடையே குறைந்துவருகிறது!
[Friday 2016-02-05 18:00]

திறன்பேசிகள், தொடுதிரைக் கணினிகள் போன்ற நவீன கருவிகளின் புழக்கம் அதிகரித்துவர, வேறு பல இடங்களைப் போலவே பிரிட்டனிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை டிவியில் பார்க்கும் பழக்கம் இளம்பிராயத்தினரிடையே குறைந்துவருகிறது.


பிரான்சில் பயங்கரவாத குற்றங்களுக்கு குடியுரிமையை பறிக்கும் சட்ட விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பம்!
[Friday 2016-02-05 18:00]

பிரான்ஸின் அரசியல்சாசனத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கான விவாதத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் துவங்கியுள்ளது. புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் சாசனத்தில், பயங்கரவாத குற்றச் செயல்களில் தண்டனை விதிக்கப்பட்ட இரட்டை குடியுரிமையுடைவர்களின் பிரெஞ்சுக் குடியுரிமையை நீக்குவதற்கான பரிந்துரையும் வைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஆண்டு நம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து, அரசியல்சாசனத்தில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் பலவற்றில் ஒன்றாக இது இருக்கிறது.புதிய அரசியல் சாசனமானது, ஜிகாதி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அரசாங்கத்தின் இந்த திட்டமானது சிவில் உரிமைகளை கடுமையாக மீறும் ஒரு செயல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.


ஜிம்பாப்வேயில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியை பேரிடராக அறிவித்த அரசு!
[Friday 2016-02-05 07:00]

தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியை அந்நாட்டின் அதிபர் ராபர்ட் முகாபே பேரழிவாக அறிவித்துள்ளார்.நாட்டின் பெரும்பாலான புறநகர் பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், இங்கு வாழும் 26 சதவீதம் மக்கள் உணவு பற்றாக்குறை மற்றும் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த அவலத்தை தவிர்க்கும் வகையில் சர்வதேச கொடையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து விரைவாக நிதியனுப்பி உதவும் வகையில் இந்த பேரிடர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,பசி, பஞ்சத்தால் இங்குள்ள மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக முக்கிய உணவுப்பொருளான சோளம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் ஏழு லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே அரசு மதிப்பிட்டுள்ளது.


ஸிகா நோய்: - அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம்
[Friday 2016-02-05 07:00]

டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிகா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவி வருகின்றது. தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஸிகா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன. இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும்


ஐ.எஸ்.தீவிரவாதிகளை அழிப்பதற்கு தரைப்படைகளை அனுப்பி வைக்க தயார்: - சவுதி அரேபியா அறிவிப்பு
[Friday 2016-02-05 07:00]

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான 65 நாடுகள் அடங்கிய கூட்டுப்படையினர் அங்கு வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இந்த ராணுவ நடவடிக்கையால் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் முயற்சியில் ஓரளவுக்கு வெற்றி கண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மக்களோடு மக்களாய் ஊடுருவி, அப்பாவி பொதுமக்களில் பலரை பிணைக்கைதிகளாகவும், இளம்பெண்களை செக்ஸ் அடிமைகளாகவும் பயன்படுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முழுமையாக முற்றுகையிட்டு அழிக்க இயலாத சூழல் நிலவி வருகின்றது.சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாதின் ஆட்சிக்கு எதிராக போராடிவரும் கிளர்ச்சியாளர்களுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து போராயுதங்களையும் வழங்கிவரும் சவுதி அரேபியா, அண்டைநாடான ஏமனில் அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சியை ஆதரித்து வருகின்றது.


இயந்திர கோளாறு காரணமாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டிரம்ப் பயணம் செய்த விமானம் தரையிறக்கம்!
[Friday 2016-02-05 07:00]

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருப்பவர் டொனால்டு டிரம்ப்.இவர் நியூயார்க் நகரில் இருந்து ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் நகருக்கு போயிங்-757 ரக விமானத்தில் நேற்று பயணம் செய்தார்.இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அதன் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமானி அவசரமாக டென்னிசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில்லே விமான நிலையத்தை தொடர்பு கொண்டு, அனுமதி பெற்று, அங்கு அந்த விமானத்தை அவசரமாக தரை இறக்கினார்.


எகிப்தில் 149 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்
[Friday 2016-02-05 07:00]

எகிப்தில் 149 பேருக்கு விதிக்கப் பட்ட மரண தண்


ஐ எஸ் தீவிரவாத ஆயுதக் குழுவின் மூத்த தளபதிகள் லிபியாவில் தலைமறைவு!
[Thursday 2016-02-04 19:00]

ஐ எஸ் தீவிரவாத ஆயுதக் குழுவின் மூத்த தளபதிகள் இராக்கிலிருந்தும் சிரியாவிலிருந்தும் வெளியேறி லிபியாவுக்குள் நுழைந்திருப்பதாக அந்நாட்டின் உளவுத்துறை உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லிபியாவில், ஐ எஸ் வசமுள்ள சீர்த் நகரில், வெளிநாட்டிலிருந்து வந்த ஆயுததாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அருகிலுள்ள மிஸ்ராட்டாவுக்கு தப்பிவந்த சிலரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இச் செய்தி வெளியாகியுள்ளது.


சிரியா அகதிகளுக்கு உதவ 900 கோடி டாலர்கள் நிதி சேகரிக்கும் மாநாடு!
[Thursday 2016-02-04 19:00]

சிரியாவின் கொடூரமான போரினால் இடம்பெயர்ந்த அகதிகளுக்கு உதவ 900 கோடி டாலர்கள் நிதியை சேகரிக்கும் நோக்கில் கொடையாளிகள் மாநாடு ஒன்று இங்கு லண்டனில் நடக்கிறது. மோதலுக்கு முன்னதாக சிரியாவில் இரண்டு கோடியே இருபது லட்சம் மக்கள் இருந்தனர். இப்போது ஒரு கோடியே பத்து லட்சம் பேர்தான் உள்ளனர்.நாற்பத்தைந்து லட்சம் மக்கள் ஏனைய நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். லெபனானில் தற்போது இருப்பவர்களில் ஐந்தில் ஒருவர் சிரியாவின் அகதியாவர். இருபது லட்சம் சிறார்கள் போர் முற்றுகையில் வாழ்கிறார்கள். இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏனையோரை உதவ ஊக்குவிக்கும் வகையில், மேலதிகமாக நூற்று எழுபத்தைந்து கோடி டாலர்களை வழங்க பிரிட்டன் முன்வந்துள்ளது.


வாட்ஸ் அப் குரூப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 256 ஆக அதிகரிப்பு!
[Thursday 2016-02-04 19:00]

உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து ஆன்லைனில் இணைந்திருக்க 'வாட்ஸ் அப்' குரூப் வசதியை பயன்படுத்துகின்றனர். ஒரு 'வாட்ஸ் அப்' குரூப்பில் அதிகபட்சமாக 50 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது. பிறகு, 2014 நவம்பரில் இந்த எண்ணிக்கை 100-ஆக உயர்த்தப்பட்டது.தற்போது, அந்த எண்ணிக்கையை 256-ஆக அதிகரித்துள்ளது 'வாட்ஸ் அப்'. ஆனால், இந்த புதிய வசதி ஆன்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே வெளிவந்துள்ளது. மற்ற இயங்குதளங்களிலும் விரைவில் வருகிறது.கடந்த 2014-ம் ஆண்டு 'வாட்ஸ் அப்'-ஐ பேஸ்புக் நிறுவனம் 22 பில்லியன் டாலருக்கு வாங்கியது. அதன்பிறகு, அமோக வளர்ச்சியை கண்டு வரும் 'வாட்ஸ் அப்' தற்போது உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில், ஆண்டு சந்தாவாக வசூலிக்கப்பட்டு வந்த ஒரு டாலர் கட்டணத்தையும் 'வாட்ஸ் அப்' ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பாலிஸ்தீன இளைஞரை உயிருடன் எரித்த இருவருக்கு தண்டனை விதிப்பு:
[Thursday 2016-02-04 19:00]

பாலஸ்தீன இளைஞர் ஒருவரை உயிருடன் எரித்த குற்றத்திற்காக இஸ்ரேலியர்கள் இருவரில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றொருவருக்கு இருபது ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மொஹமத் அபு காதர் என்ற இந்த இளைஞர் 2014ஆம் ஆண்டு ஜெருசலேமிலுள்ள ஒரு வீதியில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்தவர்களும் பதின்ம வயதையுடையவர்களாக இருந்தமையினால் அவர்களது பெயரை காவல்துறையினர் அப்போது வெளியிடவில்லை. யூதக் குடியேறியான யூசுப் ஹைம் பென் டேவிட் என்பவர் இந்தத் தாக்குதலை வழிநடத்தியுள்ளார் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சுக்கு சாதகமாக ஐநா தீர்ப்பு!
[Thursday 2016-02-04 15:00]

பிரிட்டன் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளால், தான் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் முறையிட்டிருந்தார்.சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக அசாஞ்ச் லண்டனில் உள்ள ஈக்குடோரியன் தூதரகத்தில் 3 வருடங்களுக்கும் மேலாக தஞ்சமடைந்திருக்கிறார். சுவீடனில் ஒரு பாலியல் வல்லுறவு குறித்த குற்றச்சாட்டுக்கான விசாரணையை அவர் எதிர்கொள்கிறார்.சட்டப்படி அமல்படுத்தப்பட முடியாத தமது முடிவு குறித்து பிரிட்டனுக்கும், சுவீடனுக்கும் ஐநாவின் எதேச்சதிகாரத்துடனான தடுத்து வைப்புக்கள் குறித்த குழு அறிவித்திருக்கிறது.அசாஞ்ச் தூதரகத்தை விட்டு வெளியே வரும்போது அவரை கைது செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று பிரிட்டிஷ் போலிஸ் கூறுகின்றது.


சிரியாவில் உள்நாட்டு போருக்கு ராணுவ தீர்வை நாடுவதாக அதிபர் ஆசாத் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!
[Thursday 2016-02-04 13:00]

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ராணுவ தீர்வை நாடுவதாக அதிபர் ஆசாத் மற்றும் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. சிரியாவில் ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி நடைபெற்று வந்தது. முன்னதாக, சிரியா அரசுப் பிரதிநிதிகள் ஐ.நா. மத்தியஸ்தர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை பூர்வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதும், சிரியா விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் செய்வதுமே, தற்போதைய முதன்மையான நோக்கமாக உள்ளது.இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தை தொடங்கிய சில தினங்களிலேயே நேற்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்தோனேசியாவின் திமோர் தீவில் 5.2 ரிக்டரில் நிலநடுக்கம்!
[Thursday 2016-02-04 11:00]

இந்தோனேசியாவில் கிழக்கு பகுதியில் உள்ள திமோர் தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள குபாங் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் குலுங்கின.அதிகாலை 4.30 மணி அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் பீதி அடைந்தனர். அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர்.நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இதனால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் காயம் அடைந்தவர்கள் விவரம் வெளியிடப்படவில்லை.


பிரிட்டனில் கிறிஸ்த்தவ மதத்தவர்களை விட கூடுதல் மகிழ்ச்சியானவர்களாக இந்துமதத்தவர்கள் உள்ளனர்: - ஆய்வில் தகவல்
[Thursday 2016-02-04 07:00]

பிரிட்டனில் மிகவும் சந்தோசமாக வாழ்பவர்கள் 65 தொடக்கம் 79 வயதானவர்களேபிரிட்டனில் வாழ்பவர்களில் 65 முதல் 79 வயது வரையானவர்கள் அதிக மகிழ்ச்சியோடிருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.வயது வந்தவர்களில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று இதை பரிந்துரைத்துள்ளதாக தேசிய புள்ளிவிவர ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.இந்த வயது இடைவெளியில் உள்ளவர்களே வாழ்க்கையில் நிறைவாகவும், மகிழ்வாகவும் இருப்பதோடு வாழ்க்கையில் முழுமை அடைந்ததாக கருதுவதாகவும் தெரிவிக்கும் இந்த ஆய்வு, ஆனால் இந்த உணர்வுகள் அனைத்தும் 80 வயதுகளில் குறைந்து விடுவதாகவும் தெரிவிகிறது.இதற்கு அவர்களின் உடல் நலிவடைவது, தனியாக வாழநேரும்போது ஏற்படும் தனிமை உணர்வு ஆகியவை காரணமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


படகில் வந்த அகதிகளை நவ்ரூ மற்றும் மனூஸ் தீவுகளுக்கு திருப்பி அனுப்ப அரசுக்கு அதிகாரம் உள்ளது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
[Thursday 2016-02-04 07:00]

ஆஸ்திரேலியாவில் அகதித்தஞ்சம் கோரி வருபவர்களை நாட்டின் பெருநிலப் பரப்புக்கு வெளியே தடுத்து வைத்து, அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஆஸி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சட்டவிரோதமாக படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து அகதித் தஞ்சம் கோரும் நடைமுறையை தடுத்து நிறுத்த அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவ்வகையில் வருபவர்களை நவ்ரூ மற்றும் மனூஸ் தீவுகளுக்கு கொண்டுசென்று அங்கு தடுத்து வைத்து, அவர்களின் மனுக்களை பரிசீலிக்கும் முன்னெடுப்பை ஆஸி அரசு செய்துவருகிறது.


சர்க்கரை கலந்த மென்பானங்களை அதிகம் அருந்தும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் மெக்சிக்கோ!
[Thursday 2016-02-04 06:00]

சர்க்கரை கலந்த மென்பானங்களை அதிகம் அருந்தும் நாடுகளின் பட்டியலில் மெக்சிக்கோ முதலிடத்தில்தனிநபர் அடிப்படையில் பார்க்கும் போது, சர்க்கரை கலந்த மென்பானங்களை அதிகம் அருந்தும் நாடுகளின் பட்டியலில், உலக அளவில் மெக்ஸிக்கோ முதல் இடத்தில் இருக்கிறது.மெக்சிகோவில்தான் உலகிலேயே அதிக பருமனான குழந்தைகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மெக்ஸிக்கோ அரசாங்கம் சர்க்கரை கலந்த மென்பானங்கள் மீது புதிய வரி ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனாலும், அரசாங்கத்தின் இந்த முயற்சி பெரிய அளவு வெற்றியளிக்கவில்லை என்று தற்போது கூறப்படுகிறது.மெக்ஸிக்கோவில், ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக ஒரு நபர் 163 லிட்டர் சர்க்கரை கலந்த மென்பானங்களை குடிக்கிறார்கள் என்று தெரிவிக்கும் புதிய ஆய்வு, அமெரிக்கர் ஒருவர் சராசரியாகக் குடிக்கும் இதுபோன்ற சர்க்கரை கலந்த மென்பானங்களின் அளவை விட மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் 40 சதவீதம் அதிகம் குடிப்பதாகவும் தெரிவித்துள்ளது.


அமெரிக்காவில் மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ரூ.7 கோடி அபராதம்: - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
[Wednesday 2016-02-03 14:00]

அமெரிக்காவில் வசித்தும் வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மணி, மாமியாரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி பகுதியில் வசித்து வருபவர் தஸ்நீம்(47). இவரது மாமியார் சபியா திவான்(73). இந்நிலையில், மாமியார் திவான் கடந்த ஜனவரி 26-ம் தேதி மாலை மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.


தெற்கு சீனாவில் கடும் பனிப்பொழிவு: - ரெயில் நிலையத்தில் 50 ஆயிரம் பேர் சிக்கி தவிப்பு
[Wednesday 2016-02-03 14:00]

சீனாவில் குளிர்காலமான தற்போது வழக்கத்தை விட இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு சீனாவில் கடுமையாக பனி கொட்டுகிறது.இதனால் அங்கு பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சீன போக்குவரத்தில் ரெயில் முதலிடம் வகிக்கிறது. ஏராளமான அதிவேக ரெயில்கள் இயக்கப்படுவதால் அதில் பொதுமக்கள் விரும்பி பயணம் செய்கின்றனர். தற்போது அங்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குவான்ஷு மற்றும் ஷென்செங்கில் இருந்து 27 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டது.


பாகிஸ்தானில் ஏர்லைன்ஸ் ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் இடையே இடம்பெற்ற மோதலில் 3 பேர் பலி!
[Wednesday 2016-02-03 14:00]

பாகிஸ்தானின் பொதுத்துறை விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்சை தனியாருக்கு அளிக்க திட்டமிடப்பட்டு வருவதை எதிர்த்து, அந்த விமான நிறுவனத்தின் அனைத்து சங்க ஊழியர்களின் கூட்டு நடவடிக்கை குழு நேற்று போராட்டம் ஒன்றை நடத்தியது.கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மோதலில் 3 பேர் பலியாகியிருப்பதாகவும், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவில் உடலுறவின் மூலம் தொற்றுநோயாக மாறிய ஸிகா நோய்!
[Wednesday 2016-02-03 13:00]

டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிக்கா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவி வருகின்றது. தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஸிக்கா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன. இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும்


பாகிஸ்தானில் இந்துக்கோவில் மீது தாக்குதல்: - சிறுபான்மை மக்களிடையே பதற்றம்
[Wednesday 2016-02-03 08:00]

பாகிஸ்தானின் துறைமுக நகரம் கராச்சி. அங்கு உயிரியல் பூங்காவின் அருகில் இந்துக்கோவில் ஒன்று உள்ளது. 60 ஆண்டுகள் பழமையான கோவில் இது.இந்த கோவிலுக்குள், சம்பவத்தன்று தாடியுடன் கூடிய 3 பேர், கைத்துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது அங்கு அந்தக் கோவிலை கட்டியவர்களின் குடும்பத்தினரும், பராமரிப்பவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள், துப்பாக்கி ஏந்திய நபர்களைக் கண்டதும் என்ன நடக்கப்போகிறதோ என்று கலங்கினர்.அவர்களை நோக்கி அந்த நபர்கள்,


கென்யத் தலைநகர் நைரோபியில் ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது தாக்குதல்!
[Wednesday 2016-02-03 07:00]

கென்யத் தலைநகர் நைரோபியில் ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்கள் தொடர்பில் அந்நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளைத் துவங்கியுள்ளனர். ஊபர் நிறுவனத்தால் அறவிடப்படும் கட்டணத்திற்கு ஈடுகொடுக்க முடியாத மற்றைய நிறுவனங்களைச் சேர்ந்த ஓட்டுநர்கள் இவ்வாறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.மற்றைய நிறுவனங்களைவிட ஊபர் நிறுவனத்தில் அரைவாசிக் கட்டணம் அறவிடப்பட்டு வருகின்றது.இதனால் இணைய சேவையை நடத்திவரும் ஊபர் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஓட்டுநர்கள் தாக்கப்பட்டுவரும் நிலையில் அவர்களது வாகனங்களும் சேதமாக்கப்படுகின்றன.

Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா