Untitled Document
May 20, 2024 [GMT]
சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையின் விமான தாக்குதலில் 15 பேர் பலி!
[Wednesday 2016-02-17 07:00]

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் மனித உரிமைக்கான கண்காணிப்புக் குழு இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. சிரியாவின் ஹசாகெஹ் மாகாணத்தின் வடகிழக்கில் உள்ள அல்-ஷாடாடி பகுதியில் நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.


மே மாதம் வியட்நாம் பயணம் செல்லவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா!
[Wednesday 2016-02-17 07:00]

ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகிற மே மாதத்தில் வியட்நாம் நாட்டிற்கு செல்ல இருக்கிறார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் இன்று கூறியுள்ளார். கலிபோர்னியாவில் நடந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டம் ஒன்றில் வியட்நாம் பிரதமர் எங்குயென் டான் டங் விடுத்த அழைப்பை ஒபாமா ஏற்று கொண்டார்.இது பற்றி வெள்ளை மாளிகை அதிகாரி கூறும்பொழுது, தூதரக உறவுகள் புதுப்பித்தலின் 20வது ஆண்டு தினத்தை குறிக்கும் 2015ம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் வியட்நாம் இடையேயான உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவது குறித்து அதிபர் ஒபாமா மற்றும் பிரதமர் டங் ஆலோசனை நடத்தினர்.


50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா இடையே வர்த்த விமானங்களை இயக்க ஒப்பந்தம்!
[Wednesday 2016-02-17 06:00]
p> 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா இடையே வர்த்த விமானங்களை இயக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன. கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்க போக்குவரத்துத் துறை செயலாளர் அந்தோனி போக்ஸ் மற்றும் கியூபா போக்குவரத்து மந்திரி அடெல் ரோட்ரிகியுஸ் இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தப்படி, அமெரிக்காவின் ஏர்லைன்ஸ் நிறுவனம், நாள் ஒன்றிற்கு இருநாடுகளின் 110 வழித்தடங்கள் வழியாக விமானங்களை இயக்கும். இது தற்போது உள்ளதை விட 5 மடங்கு அதிகம்.


ஈராக்கில் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் பலி!
[Tuesday 2016-02-16 20:00]

ஈராக்கில் ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியானதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஈராக்கின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான பஸ்ராவில் இருந்து இரண்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டரில் குட் நகருக்கு புறப்பட்டுச் சென்றனர். குட் நகரை நெருங்கியபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், தரையில் விழுந்து நொறுங்கியது. இதில், 9 பேரும் உயிரிழந்துவிட்டதாக ராணுவ பிரிகேடியர் ஜெனரல் தெரிவித்தார். ஈராக்கில் ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த விபத்தில் பைலட் பலியாகினார். எம்.பி. உள்ளிட்ட சிலர் காயங்களுடன் உயிர்தப்பினர்.


அமெரிக்காவால் முதல் தடவையாக நடத்தப்படும் ஆசியான் மாநாடு!
[Tuesday 2016-02-16 20:00]

அமெரிக்காவால் முதல் தடவையாக நடத்தப்படும் ஆசியான் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தென்கிழக்காசிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள கலிபோர்னியா வந்துள்ள ஆசியான் நாட்டுத் தலைவர்களை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார்.பல ஆசியான் நாடுகள், தென்சீன கடலில் தமது பகுதிகள் இருப்பதாக பிரகடனம் செய்து, சீனாவுடன் தகராறில் இருப்பது குறித்து தனது வரவேற்புரையில் ஒபாமா குறிப்பிட்டு பேசியுள்ளார்.தென் சீனக் கடல் தொடர்பாக சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையில் நிலவும் முருகல் நிலை மற்றும் சர்வதேச வணிகம் குறித்தும் இங்கு அதிகமாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.


ஜிம்பாவே நாட்டில் சரக்கு விமானத்திலிருந்து கோடிக்கணக்கான பணம்,சடலம் மீட்பு!
[Tuesday 2016-02-16 09:00]

ஜிம்பாவே நாட்டில் ஒரு சரக்கு விமானத்தில் கோடிக் கணக்கான தென்னாப்பிரிக்க பணமும் சடலம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.விமானத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தென்னாப்பிரிக்க ராண்ட் நோட்டுகள் ஏற்றப்பட்டிருந்தன.தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்த அந்த சரக்கு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டபோது, அந்த விமானத்தில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டின் தலைநகர் ஹராரேவிலிருந்து வெளியாகும் தி ஹெரால்ட் நாளிதழ் தெரிவித்திருக்கிறது.


ஐ.எஸ்.மீது தாக்குதல் நடத்த சவூதி தயார்: - துருக்கியில் போர்விமானங்கள் குவிப்பு
[Tuesday 2016-02-16 09:00]

சிரி


தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி - ரோபோக்களால் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் வேலையை இழக்கும் சூழ்நிலை!
[Tuesday 2016-02-16 09:00]

தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி காரணமாக, இன்னும், ௩௦ ஆண்டுகளில் மனிதன் செய்யும் அனைத்து வேலைகளையும், ரோபோக்கள் செய்யத் துவங்கி விடும்,


சிரியாவில் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது ஏவுகணை தாக்குதலில் 50 பேர் பலி: - ஐ.நா தகவல்
[Tuesday 2016-02-16 08:00]

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ மற்றும் இட்லிப் பகுதியில் உள்ள 5 மருத்துவ முகாம்கள் மற்றும் இரண்டு பள்ளிகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் அப்பட்டமான சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல் என்று ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கூறியுள்ளார். கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கமுள்ள ஆலெப்போ பகுதியில் ரஷ்ய ஆதரவு சிரிய அரசு படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வந்ததாக ஐ.நா தெரிவித்துள்ளது.


நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து தீவில் மீண்டும் நிலநடுக்கம் :- 6.2 ரிக்டராக பதிவு
[Tuesday 2016-02-16 07:00]

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து தீவில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. பூமியின் அடியில் சுமார் 53 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்பலி, பொருட்சேதம் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.முன்னதாக, நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன.கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதேபகுதியை தாக்கிய நிலநடுக்கத்துக்கு சுமார் 200 பேர் பலியாகினர். 4000 கோடி டாலர்கள் அளவுக்கு சேதாரம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தான் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி!
[Tuesday 2016-02-16 07:00]

பாகிஸ்தானில் வட மேற்கில் உள்ள கைபர் பக்துன் கவா மாகாணத்தில் பெஷாவர் அருகே சரஸ்தாவில் பச்சா கான் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 20


ரஷ்யா ஒரு தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது: - துருக்கி பிரதமர் கடும் தாக்கு!
[Monday 2016-02-15 19:00]

சிரியாவில் தீவிரவாத அமைப்பு போன்று ரஷ்யா செயல்படுகிறது என துருக்கி பிரதமர் கடுமையாக சாடியுள்ளார்.உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக, தீவிரவாதிகளின் நிலைகள் மீது ரஷ்யா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் துருக்கி-ரஷ்யா இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய விமானப்படையின் ஆதரவுடன் அதிபர் ஆசாத்தின் படை சமீபத்தில் அதிரடி தாக்குதல் நடத்தி போராளிகள் ஆதிக்கம் நிறைந்த அலெப்போ நகரை நெருங்கியது. சண்டை தீவிரமடைந்ததால், அங்கிருந்து துருக்கியை நோக்கி வரும் அகதிகள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.


ஆஸ்திரேலியாவில் உள்ளாடைக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ. ஐயாயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல்!
[Monday 2016-02-15 18:00]

ஆஸ்திரேலியா நாட்டின் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வரலாற்றில் முதன்முறையாக 100 கோடி ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பிலான


டி.என்.ஏ.வை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள்: - அதிர்ச்சி தகவல்
[Monday 2016-02-15 18:00]

உடல் நலத்துக்கு இரும்பு சத்து மிக அவசியமாகும். உடலில் ஆக்சிஜனை எடுத்து செல்வதில் இதன் பங்கு மிகவும் அவசியமாகும். எனவே இதை உலகில் லட்சக்கணக்கானவர்கள் உட்கொள்கின்றனர். அதே நேரத்தில் அவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ரத்த சோகை ஏற்பட்டு உடலில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உருவாகிறது. அனைத்துக்கும் மேலாக சாப்பிட்ட 10 நிமிடத்தில் மிக முக்கியமான டி.என்.ஏ. மூலக்கூறுகள் பாதிப்படைகிறது. இத்தகவல் இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே இரும்பு சத்து மாத்திரைகளை கவனமுடன் கையாளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இஸ்ரேல் முன்னாள் பிரதமர் சிறையில் அடைப்பு!
[Monday 2016-02-15 18:00]

இஸ்ரேல் நாட்டில் 2006-2009 காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்தவர் எகுட் ஒல்மர்ட் (வயது 70). இவர் 1988-1992, 2003-2006 காலகட்டத்தில் காபினட் மந்திரியாகவும் இருந்துள்ளார். 1993-2003 இடையே ஜெருசலேம் நகர மேயர் பதவியும் வகித்து உள்ளார். ஜெருசலேம் மேயர் பதவி வகித்த காலத்தில், இவர் ரியல் எஸ்டேட் விவகாரம் ஒன்றில் லஞ்சம் வாங்கி ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அந்த நாட்டின் கோர்ட்டில் எகுட் ஒல்மர்ட் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.


பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டை: - 10 தீவிரவாதிகள் பலி
[Monday 2016-02-15 07:00]

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு சிபி மாவட்டம், சங்கான் பகுதியில் பலுசிஸ்தான் விடுதலை படையினர் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கி வருகிற தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து பாதுகாப்பு படையினர் நேற்று அங்கு விரைந்து தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட பகுதிகளை சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சரண் அடையுமாறு பாதுகாப்பு படையினர் கூறினர்.ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்காமல், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் தங்கள் துப்பாக்கிகளால் தக்க பதிலடி கொடுத்தனர்.


இஸ்ரேலியப் படையினாரால் பாலஸ்தீன இளைஞர்கள் மூவர் சுட்டுக்கொலை!
[Monday 2016-02-15 07:00]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப் பகுதியில் பாலஸ்தீன இளைஞர்கள் மூவரை இஸ்ரேலியப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.பல தசாபதங்களாக மேற்குக்கரைப் பகுதி பதற்றம் நிறைந்த ஒன்றாகவே உள்ளது இவர்களில் இருவர் ஜெனின் நகருக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கற்களைக் கொண்டு தாக்கி பின்னர் இராணுவ வீரர்களை நோக்கிச் சுட்டுள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. சுட்டுக்கொல்லப்பட்டுள்ள மூன்றாவது நபர் ஜெரூசலேம்-பெத்தலஹம் எல்லைப் பகுதியில் இருந்த காவல்துறையினரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார் எனவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.


சிரியா தொடர்பிலான விஷயங்களில் இணைந்து செயல்பட ஒபாமா-புடின் இணக்கம்!
[Monday 2016-02-15 07:00]

சிரியா தொடர்பிலான விஷயங்களில் இணைந்து செயல்பட அதிபர்கள் விளாடிமிர் புடினும், பராக் ஒபாமாவும் இணங்கியுள்ளனர்.அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிபர்கள் சிரியாவில் நடைபெற்று வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் ம்யூனிக் நகரில் கடந்த வாரம் எட்டப்பட்ட உடன்படிக்கையை நடைமுறைபடுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புகொண்டுள்ளனர்.தீவிரவாதத்துக்கு எதிராக ஐக்கிய முன்னணி ஒன்றை ஏற்படுத்த வேண்டியத் தேவை குறித்து, தொலைபேசி மூலமான உரையாடலில் இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.சிரியா தொடர்பாக ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் நடைபெற்று வரும் கூட்டம் ஞாயிறன்று முடிவடைகிறது.இதனிடையே சிரியாவில் நடைபெற்று வரும் விஷயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் உண்மைகளை புரிந்துகொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கையின் தலைவர் சனிக்கிழமை கூறியுள்ளார்.அப்படியான நிலையைப் புரிந்து கொண்டு யதார்த்தத்தை எதிர்கொள்ள சர்வதேச சமூகம் தயாராக வேண்டும் என ஃபெட்ரீஷியா மொஹெரேனி அம்மையார் கோரியுள்ளார்.


சிரியாவில் ஐ எஸ் அமைப்பு மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய சவுதி!
[Monday 2016-02-15 07:00]

சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுவதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. தாக்குதல் நடத்த தயார் நிலையில் சவுதி இராணுவ விமானங்கள் துருக்கியத் தளம் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் துருக்கியிலுள்ள ஒரு தளத்துக்கு தமது போர் விமானங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.இதுவரை காலமும் அந்த அமைப்பின் மீதான அனைத்து தாக்குதல்களும் சவுதி விமானப்படைத் தளங்களில் இருந்தே நடத்தப்பட்டன.தமது விமானங்களை துருக்கிக்கு நகர்த்துவது, வடக்கு சிரியாவில் தாம் தாக்கத் திட்டமிட்டுள்ள இலக்குகளுக்கு அருகில் செல்ல ஏதுவாக அமையும் என சவுதி இராணுவத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் காதலர் தினத்தையொட்டி 800 பள்ளி மாணவிகளுக்கு ரோஜா மலர் பரிசளித்த மாணவன்!
[Monday 2016-02-15 07:00]

காதலர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. காதல் ஜோடிகள் இந்த விழாவை பல விதங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். இதய வடிவிலான உடைகளை அணிந்து திரிந்தனர். பெரும்பாலானவர்கள் அன்பின் அடையாளமாக திகழும் ரோஜா மலர்களை பரிசளித்தனர்.ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் தனது இதயத்தில் ஏற்பட்ட காதலை வெளிப்படுத்த தனது பள்ளியில் படிக்கும் சக மாணவிகளுக்கு ரோஜா மலர் கொடுத்து அசத்தினான்.அவனது பெயர் ஹைடன் சாட்பிரே. 17 வயதான இவன் உதாவில் உள்ள ஸ்மித்பீல்டு நகரில் ஒரு பள்ளியில் படிக்கிறான். காதலர் தினத்தன்று தனது பள்ளியில் படிக்கும் 800 மாணவிகளுக்கு மணம் கமழும் வண்ண ரோஜா மலர்களை பரிசளித்தான்.


அமெரிக்க உச்சநீதிமன்ற அடுத்த நீதிபதி தமிழரா? - நீதிபதியாக பிரேரிக்கப்படவிருக்கும் பெயர்களில் இடம் பிடித்த தமிழர்
[Sunday 2016-02-14 08:00]

காலமான பழமைவாத நீதிபதி ஸ்கேலியா நீதிபதி ஸ்கேலியா மேற்கு டெக்ஸாஸில் வேட்டையாடச் சென்றிருந்தபோது, சனிக்கிழமை காலை உறக்கத்திலேயே இறந்தார்.79 வயதான ஸ்கேலியா முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் ஆட்சியில் 1986ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இறந்த நீதிபதிக்கு அஞ்சலி செலுத்திய அதிபர் ஒபாமா, அவருக்கு பதிலாக புதிய நீதிபதியை நியமிக்கப்போவதாகஅறிவித்திருக்கிறார். இது அவரது எதிர்க்கட்சியான, குடியரசுக் கட்சியின் எதிர்ப்பைத் தூண்டியிருக்கிறது.புதிய நீதிபதியை நியமிக்க தனக்கும், அவரை விசாரித்து , அவரது நியமனத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த செனட்டுக்கும் ஏராளமான கால அவகாசம் இருப்பதாக ஒபாமா கூறினார்.அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னோட்டமான பிரதான கட்சிகளின் அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்வுக்கான கட்சி 'பிரைமரிகள்' நடந்து கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், இந்த நீதிபதியின் மறைவு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் மரணம்: - அதிர்ச்சி தகவல்
[Sunday 2016-02-14 08:00]

காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் மரணமடைவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்த மரணங்களில் பெரும்பாலானவை, இந்தியாவிலும், சீனாவிலும் நிகழ்வதாக அந்த ஆய்வு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது."அமெரிக்க அறிவியல் முன்னேற்றத்துக்கான சங்கம்' அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு முடிவில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:


நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு மிச்சேலை எனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்ததுதான்: - பராக் ஒபாமா
[Sunday 2016-02-14 08:00]

ஹாலிவுட் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான எல்லென் டி ஜெனரெஸ் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை சந்தித்து, பேட்டி எடுத்து வருகிறார். அவ்வகையில், காதலர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை அவர் நேர்காணல் செய்தார்.அப்போது, தனது மனைவி மிச்சேலை மிகவும் நேசிப்பதாக தெரிவித்த ஒபாமா, நாட்டின் அதிபராக பல உயர்ந்த முடிவுகளை எடுத்திருக்கிறேன். நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு மிச்சேலை எனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்ததுதான் என தெரிவித்தார்.காதலுக்கு பின்னால் அமையும் இல்லற வாழ்க்கையை சண்டை சச்சரவு இல்லாமல் கழிப்பதற்கு தேவையற்ற வாக்குவாதங்களை ஆண்கள் தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்ட ஒபாமா, மிச்சேல் எடுக்கும் முடிவுகள் எப்போதுமே சரியானதுதான் என்பதை 15 ஆண்டுகள் கழித்தே நான் புரிந்து கொண்டேன். அதன்பின்னர், எங்களுக்குள் சச்சரவு ஏற்பட்டதில்லை என கூறினார்.


கியுபாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள்!
[Saturday 2016-02-13 20:00]

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிராஸிஸ், மற்றும் ரஷ்யாவின் மிகப்பழைய ஆர்த்தாடக்ஸ் (பழமைவாத கிறிஸ்தவ பிரிவு) திருச்சபையின் தலைவரான பாட்ரியார்க் கிரில் ஆகியோருக்கிடையே, முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்படும் இந்த சந்திப்பு கியுபாவில் இடம்பெற்றது.ஹவானா விமான நிலையத்தில், இவர்களிடையோன சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது.இச்சந்திப்பின் ஆரம்பத்தில், இரண்டு தலைவர்களும் ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டனர்.


நாடு கடத்தப்படுவதற்கான ஆபத்தை எதிர்நோக்கும் குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மறுக்கும் டாக்டர்கள்!
[Saturday 2016-02-13 20:00]

ஆஸ்திரேலியாவில் நாடு கடத்தப்படுவதற்கான ஆபத்தை எதிர்நோக்கும் ஒரு பெண் குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற அனுமதிக்க மறுக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக அந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் கூடியுள்ளனர்.அந்தக் குழந்தைக்கு ஏதுவான ஒரு வீடு கிடைக்கும் வரை அதனை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கமாட்டோம் என்று அந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.ஆஸ்திரேலியாவுக்கு வெளியே பசுபிக் தீவான நவுருவில் அமைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகி அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


சிரியாவில் நிலைமையை வழமைக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யா,அமெரிக்கா ஒத்துழைப்பு அவசியம்: - ரஷ்ய பிரதமர்
[Saturday 2016-02-13 20:00]

ரஷ்யா, மற்றும் மேற்கத்தேய நாடுகளுக்கு இடையேயான முறண்பாடுகள், உலகை ஒரு புதிய பனிப்போருக்கு இட்டுச் சென்றுள்ளது என, ரஷ்ய பிரதமர் டிமித்ரி மெட்வடேவ் தெரிவித்துள்ளார்.நேட்டோ, ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் ஏனைய நாடுகளுக்கு எதிராக, ரஷ்யா அனேகமாக ஒவ்வொரு நாளும் புதிய அச்சுறுத்தல்களை விடுப்பதாக குற்றஞ்சாட்டப்படுவதாக, மியுனிக்கில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பில் அவர் தெரிவித்தார்.ரஷ்யா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே வழமையான ஒத்துழைப்பு ஒன்றின் மூலமே, சிரியாவில் நிலைமையை வழமைக்கு கொண்டுவர முடியும் என, அவர் மேலும் தெரிவித்தார்.


பாகிஸ்தான் நாட்டு மக்கள் காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டாம்: அதிபர் மம்னூன் ஹுசைன் வலியுறுத்தல்
[Saturday 2016-02-13 18:00]

பாகிஸ்தான் நாட்டு மக்கள் காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டாம் என்று அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹுசைன் வலியுறுத் தியுள்ளார் காதலர் தினம் கொண்டாடுவது இஸ்லாமியர் மரபு இல்லை என்றும், அது மேற்கத்திய கலாச்சாரம் என்றும் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மம்னூன் ஹுசைன், காதலர் தினம் என்பது நமது கலாச்சாரத்தில் இல்லை, இது புறக்கணிக்கப்பட வேண்டியது என்று குறிப்பிட்டார்.


தேம்ஸ் ஆறு நிரம்பி வழிவதால் லண்டனில் வெள்ள அபாயம்!
[Saturday 2016-02-13 16:00]

தேம்ஸ் ஆறு நிரம்பி வழிவதால் லண்டனில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தேம்ஸ் ஆறு ஓடுகிறது. தற்போது அங்கு குளிர்காலம். இருந்தாலும் தேம்ஸ் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் தண்ணீர் நிரம்பி வழிகிறது. கிரீன்விச், தென்கிழக்கு லண்டன் தென்மேற்கு லண்டன் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ள அளவு அதிகரித்துள்ளது.எனவே, லண்டன் நகருக்குள் வெள்ளம் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.லண்டனின் மையப்பகுதியான நியூகாடல் உள்ள கஸ்டம் ஹவுஸ், லைம் ஹவுஸ், தி ராயல் நேவல் கல்லூரி பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லண்டன் வரலாற்றில் குளிர் காலத்தில் தற்போதுதான் முதன் முறையாக தேம்ஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்த வெள்ள அபாயம் இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும். அதன் பிறகு படிப்படியாக குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா