Untitled Document
May 1, 2024 [GMT]
சமரசத்திற்கு வருகிறார் டிரம்ப்; 8 லட்சம் ஊழியர்களின் நிலை என்ன?
[Sunday 2019-01-20 17:00]

அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் ஏறத்தாழ ஒரு மாதமாக தொடர்ந்து வரும் சூழலில் சமரசத்திற்கு இறங்கி வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். மெக்சிகோ எல்லை சுவருக்கான நிதியில் அவர் உறுதியாக இருந்தாலும், சிறு வயதில் அமெரிக்கவிற்கு வந்த குடியேறிகள் தொடர்பாக ஒரு சமரசத்தை முன் வைக்கிறார் டிரம்ப். எல்லைச் சுவர் கட்டுவதற்கான 5.7 பில்லியன் டாலர் நிதியில் அவர் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளவில்லை. ஜனநாயகக் கட்சியினரும் எல்லைச் சுவருக்கு நிதி தர முடியாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் நடந்து வரும் இந்த பகுதியளவு அரசாங்க முடக்கம்தான், அதன் வரலாற்றிலேயே ஒரு நீண்ட அரசு முடக்கமாகும். இதனால் ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


"காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க அரசாங்கம் தீவிரமாக செயல்படும்" - கனேடிய அமைச்சர்கள்!
[Sunday 2019-01-20 04:00]

காணாமல் போனவர்களை வெகுவிரைவில் கண்டுபிடிப்பதற்கு கனேடிய அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். புர்கினோ ஃபாசோவில் காணாமல் போன எடித் ப்ளசிஸின் குடும்பத்தினரை கனேடிய அமைச்சர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்ரியா ஃப்றீலண்டம் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மறி க்ளோட் ஆகியோரே இச்சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்தனர்.


பொம்மை துப்பாக்கியை காட்டி போலீசை மிரட்டிய 14 வயது சிறுவன் சுட்டுக்கொலை.
[Sunday 2019-01-20 04:00]

அமெரிக்காவில் பீனிக்ஸ் புறநகர் பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது 14 வயது சிறுவன் ஒருவன் காரின் அருகே துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தான். போலீசாரை பார்த்ததும் அவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். அவனது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவன் ஒரு கார் திருடன் என நம்பினர். எனவே அவனை விரட்டிச் சென்றனர்.


வெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி - இந்தோனேசியா அதிகாரிகள் அதிரடி.
[Sunday 2019-01-20 04:00]

பாலியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதையடுத்து அந்நாட்டின் அரசு புதிய வரியை விதித்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் உள்ளூர் பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. பாலி தீவின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும், கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் இந்த வருவாய் பயன்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


ஐ.நா. ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மையை பாதிக்காது: கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ.
[Saturday 2019-01-19 22:00]

குடியேற்றத்திற்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம், கனடாவின் இறையாண்மையை பாதிக்காது என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடியர்களிடம் கலந்தாலோசிக்காது ஐ.நா. ஒப்பந்தத்தில் ஏன் கையெழுத்திடப்பட்டது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.


கியூபெக்கிலுள்ள பாடசாலைகளில்
[Saturday 2019-01-19 22:00]

கியூபெக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும்


97 வயதான இளவரசர் பிலிப் கார் விபத்திலிருந்து உயிர் தப்பினார்.
[Saturday 2019-01-19 22:00]

எடின்பர்க்கின் கோமகன் இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. நேற்று மதியம் சுமார் 3 மணியளவில், 97 வயதாகும் இளவரசர் பிலிப் தனது லேண்ட் ரோவர் நிறுவன காரை ஓட்டிச்சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும், எனினும் அவர் காயமேதுமின்றி தப்பிவிட்டதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நேரிட்டதற்கு காரணமான மற்றொரு காரில் இருந்த இரண்டு பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு வீடு திரும்பினர். இரண்டு கார்களும் மோதியபோது இளவரசர் பிலிப்பின் கார் தலைகீழாக உருண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


"ரொறன்ரோவில் கால நிலை மாற்றம்": மக்களுக்கு கடும் குளிர் எச்சரிக்கை!
[Saturday 2019-01-19 22:00]

ரொறன்ரோவில் இவ்வார இறுதியில் கடும் குளிரான காலநிலை காணப்படும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, அநாவசிய வெளிப்பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.


டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யா தலையீடு : ஆதாரம் உள்ளதாக கூறிய மாடல் அழகி கைது!
[Saturday 2019-01-19 22:00]

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு குறித்த ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்த பெலாரசை சேர்ந்த மாடல் அழகி தற்போது ரஷ்ய காவல்துறையினர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நாஸ்டியா யர்ப்கா என்னும் அந்த மாடல் அழகி முன்னதாக தாய்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். பின்னர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ விமான நிலையம் வந்த அவர் கைது செய்யப்பட்டார்.


ட்ரம்ப் - கிம் அடுத்தமாதம் மீண்டும் சந்திக்க முடிவு!
[Saturday 2019-01-19 20:00]

அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை அடுத்த மாத இறுதியில் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இடமும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் விமானங்களில் இசைக்குத் தடை!
[Saturday 2019-01-19 20:00]

விமானங்களில் மெல்லிய இசை ஒலிப்பரப்புவது வழக்கம். ஆனால், பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானங்களில் இவ்வாறு இசை ஒலிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் அரசு விமான நிறுவனமான பி.ஐ.ஏ.வின் செய்தி தொடர்பாளர் மசூத் தாஜ்வார் செய்தியாளர்களிடம் கூறியது:


ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டை தர மறுத்த கணவனை பெற்றோல் ஏற்றி எரித்தார் மனைவி!
[Saturday 2019-01-19 20:00]

இந்தோனேசியாவில் ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டை கூற மறுத்த கணவனை, எரித்துக் கொன்ற மனைவியை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். மேற்கு நுசா தெங்கரா பகுதியை சேர்ந்தவர் டெடி. இவர் மாடியில் பதிக்கப்பட்டிருந்த பளிங்குக் கற்களை சீரமைத்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த அவர் மனைவி இல்ஹம் கயானி, கணவரின் ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டை கேட்டார். அவர் கூற மறுக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.


விபத்தில் கவிழ்ந்தது கார் - 97 வயது இளவரசர் பிலிப் உயிர்தப்பினார்!
[Friday 2019-01-18 21:00]

எடின்பர்க்கின் கோமகன் இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. நேற்று மதியம் சுமார் 3 மணியளவில், 97 வயதாகும் இளவரசர் பிலிப் தனது லேண்ட் ரோவர் நிறுவன காரை ஓட்டிச்சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும், எனினும் அவர் காயமேதுமின்றி தப்பிவிட்டதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண் ஆராய்ச்சியாளரை கொன்று தின்ற முதலை!
[Friday 2019-01-18 21:00]

இந்தோனேசியாவில் பெண் ஆராய்ச்சியாளர் வளர்த்த 14 அடி நீள முதலை அவரை கடித்து கொன்று தின்றது.இந்தோனேசியாவின் சுலவேசி தீவை சேர்ந்தவர் டெசி துவோ 44, ஆராய்ச்சியாளரான இவர் வட சுலவேசியில் மினாஹாசாவில் ஆய்வுக்கூடம் வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார். இவர் தனது ஆய்வுக் கூடத்தின் அருகில் ஒரு முதலையை மேரி என்று பெயர் வைத்து செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார்.


நியூயார்க் தாக்குதலில் தப்பியவர் கென்ய தாக்குதலில் மரணம்!
[Friday 2019-01-18 21:00]

2001 செப்ரெம்பர் 11ல் நியூயார்க் நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர்பிழைத்த அமெரிக்காவை சேர்ந்த ஜேசன் ஸ்பிண்ட்லர்(40) என்ற தொழில் அதிபர் , கென்யாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பரிதாபமாக உயிர் இழந்தார்.


நெடுஞ்சாலை 407 சுரங்கப்பாதை நிலையம் மூடப்பட்டுள்ளது!
[Thursday 2019-01-17 09:00]

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்ததை அடுத்து நெடுஞ்சாலை 407 இந்த ரொறன்ரோ ட்ரஸிட் சேவையின் சுரங்கப்பாதை நிலையம் மூடப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த விபத்தை அடுத்து வோகன் பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலை 407 மற்றும் நெடுஞ்சாலை 400 நெடுஞ்சாலை அருகே உள்ள குறித்த நிலையம் விசாரணைக்காக மூடப்பட்டுள்ளது.


மோசமான நடத்தையால் நாடுகடத்தப்படும் பிரித்தானிய குடும்பம்!
[Thursday 2019-01-17 09:00]

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய குடும்பம் ஒன்று மோசமான நடத்தை காரணமாக நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். பொது இடத்தில் குப்பை போட்டமை, உணவு உண்டதன் பின்னர் உணவகத்தில் பணம் செலுத்தாமை, திருட்டு ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆக்லந்து நகர மேயர் ஃபில் கொஃப் (Phil Goff) பொலிஸாரிடம் கோரியிருந்தார்.


எட்டோபிகோக்கிலுள்ள நெடுஞ்சாலை 401 இன் வளைவு மூடப்பட்டுள்ளது.
[Thursday 2019-01-17 09:00]

நெடுஞ்சாலையில் ட்ரக் ட்ரெயிலர் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து எட்டோபிகோக்கிலுள்ள நெடுஞ்சாலை 401 இன் வளைவு மூடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை 401 இன் கிழக்குப் பாதைகளின் நெடுஞ்சாலை 427-ன் வடபகுதி வழித்தடங்கள் பகுதியில் குறித்த விபத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது.இதன் போது குறித்த ட்ராக் ட்ரெயிலர் வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட பொருட்கள் வீதிகளில் சிதறி கிடந்துள்ளன.


வெள்ளை மாளிகை மீது தாக்குதல் - மர்ம நபர் கைது!
[Thursday 2019-01-17 09:00]

வெள்ளை மாளிகை மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோர்ஜியாவைச் சேர்ந்த 21 வயதான Hasher Taheb என்ற சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். எப்.பி. ஐ தலைமையிலான கூட்டு பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


'சீனாவில் கனடாவை சேர்ந்தவருக்கு தூக்கு' - இரு நாட்டு உறவில் பதற்றம்.
[Wednesday 2019-01-16 17:00]

சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கனடா நாட்டு நபரின் குடும்பம் தங்களின் மிக மோசமான அச்சம் தற்போது நடந்துவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளனர். ராபர்ட் லாய்ட் ஷெல்பெர்க் என்ற அந்நபருக்கு கடந்த நவம்பரில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒரு நீதிமன்றம் முன்னர் விதிக்கப்பட்ட தண்டனை போதாது என்று கூறியது. தற்போதைய மரணம் தண்டனை தீர்ப்பு சீனா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜிய உறவை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ''இது மிகவும் கொடுமையானது, துரதிர்ஷ்டவசமானது. இதயத்தை நொறுக்கும் விதமாக உள்ளது'' என்று நீதிமன்ற தீர்ப்பு குறித்து ராபர்டின் உறவினரான லாரி நெல்சன்-ஜோன்ஸ் இ-மெயில் மூலமாக பிபிசியிடம் தெரிவித்தார்.


அரசுக்கு ஆபத்து? : தெரீசா மேவின் ஒப்பந்தம் பெரும் தோல்வி!
[Wednesday 2019-01-16 17:00]

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே முன்னெடுத்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டன் வரலாற்றில் ஓர் ஆளும் அரசுக்கு ஏற்பட்ட மிக பெரிய தோல்வியாக கருதப்படுகிறது. வரும் மார்ச் 29-இல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு சில விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய இந்த ஒப்பந்தம் தொடர்பாக வாக்களித்த எம்.பி.க்கள் எதிராக 432 வாக்குகளும், ஆதரவாக 202 வாக்குகளையும் பதிவு செய்தனர். தற்போது பிரதமர் தெரீசா மேயின் அரசு மீது தொழிலாளர் கட்சி தலைவரான ஜெர்மி கோபின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ள சூழலில், இது பொது தேர்தலுக்கு வழிவகுக்கக்கூடும்.


மிசிசாகா வைத்தியசாலையில் வெடிகுண்டு மிரட்டல்!
[Wednesday 2019-01-16 17:00]

மிசிசாகாவில் உள்ள கிரெடிட் வொல்லி வைத்தியசாலையில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 6 மணியளவில் ஆணொருவர் தொடர்பினை ஏற்படுத்தி வைத்தியசாலையில் எங்கேயோ ஒரு குண்டு உள்ளது என தெரிவித்துள்ளார். இருப்பினும் வைத்தியசாலையில் இடம்பெறும் சிகிச்சையில் எந்த தாக்கமும் ஏற்படவில்லை என்று பீல் பிராந்திய பொலிஸார் டுவிட் செய்தனர்.


6.6 ரிக்டர் அளவில் வானுட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
[Wednesday 2019-01-16 17:00]

பசுபிக் பெருங்கடலிலுள்ள வானுட்டு தீவில் இன்று (புதன்கிழமை) 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் 47 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாகவும் இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுக்கு சீனா கண்டனம்
[Wednesday 2019-01-16 17:00]

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பொறுப்பற்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவித்து சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றல் சாட்டில் கனேடியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமையானது சீனாவின் தன்னிச்சையான செயற்பாடு எனத் தெரிவித்து கனேடிய பிரதமர் சீனாவை குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், அத்தகைய பொறுப்பற்ற கருத்துகளை வெளியிடுவதை நிறுத்துமாறு சீன வெளியுறவுத்துறை அமைச்சர், கனேடிய பிரதமருக்கு தெரிவித்துள்ளார்.


10 சதவிகிதம் கல்வி கட்டணத்தை குறைக்க ஒன்ராறியோ அரசாங்கம் நடவடிக்கை!
[Wednesday 2019-01-16 17:00]

கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு 10 சதவிகிதம் கல்வி கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் பட்டதாரி மாணவர்கள் சுமார் 660 டொலரை சேமிக்கவும், கல்லூரி மாணவர் 340 டொலரை சேமிக்க வேண்டும் என்பதே இதன் பொருள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.


அணுவாயுத ஒப்பந்தத்தை பாதுகாக்க அமெரிக்காவுடன் இணைய தயார்: 'ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ்'
[Wednesday 2019-01-16 17:00]

இடைநிலை அணுவாயுத ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்கு அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மொஸ்கோவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் இதனை தெரிவித்தார்.


கனேடிய தமிழர்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து!
[Wednesday 2019-01-16 09:00]

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வரும் நேரத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா வாழ் தமிழர்களுக்கு தனது பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பொங்கல் வாழ்த்து குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


ஒட்டாவாவில் காலநிலையில் மாற்றம்! - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அவதானிப்பு நிலையம் தகவல்.
[Wednesday 2019-01-16 08:00]

ஒட்டாவாவில் கடந்த நாட்களில் இருந்த காலநிலை சற்று மாறுபட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் குளிரான காலநிலை மாற்றமடைந்துள்ளதாகவும் உயர்வான வெப்பநிலை

Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா