Untitled Document
April 18, 2024 [GMT]
தெற்கு சஸ்காச்சுவானில் "H1N1 வைரஸ்" காய்ச்சலினால் ஆறு பேர் உயிரிழப்பு!
[Saturday 2019-01-12 23:00]

தெற்கு சஸ்காச்சுவானில் H1N1 வைரஸ் காய்ச்சலினால், ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சஸ்காச்சுவான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், நடப்பு ஆண்டில் இந்த கொடிய நோயினால், உயிரிழந்த மூன்று பேர் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


102 ஆண்டுகளாக கடலுக்குள் புதைந்துள்ள முதல் உலகப் போர் கப்பலின் சிதைந்த பாகங்கள்.
[Saturday 2019-01-12 23:00]

கடற்கரை மணலுக்குள் புதைந்து கிடந்த முதல் உலகப்போரில் பயன்படுத்தபட்ட நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றின் சிதிலமடைந்த எச்சம் மீண்டும் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இக்கப்பல் ஜெர்மனிக்கு சொந்தமானது. பிரான்சில் உள்ள வீசா கடற்கரை பகுதி அருகே UC-61 என்று பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கிக்கப்பல், 1917ஆம் ஆண்டு ஜூலை மாதம், தரை தட்டியதால் ஈர மணலில் சிக்கிக்கொண்டது. அதை நகர்த்த முடியாமல் போனதால், அந்தக் கப்பலின் குழுவினர் அதை அங்கேயே விட்டுச்சென்றனர். 1930ஆம் ஆண்டுவாக்கில் அந்தக்கப்பலின் பெரும்பாலான பகுதிகள் மணலால் மூடப்பட்டன.


கனடாவின் சில இடங்களில் உறைபனி எச்சரிக்கை!
[Saturday 2019-01-12 22:00]

கனடாவின் லண்டன் பகுதியில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் கனடா அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறித்த காலநிலை காரணமாக லண்டனிலுள்ள வீதிகள் மிகவும் அபாயகரமாக இருக்கும் என வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவில் அரசு பணி முடக்கம்! - 20 நாளாக தொடர்கிறது.
[Saturday 2019-01-12 22:00]

அமெரிக்காவில் இருபது நாட்களுக்கு மேலாக அரசு பணி முடக்கம் தொடர்கின்றது. இதனால் சுமார் எட்டு இலட்சம் அரச பணியாளர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு பணி முடக்கத்தை சீர் செய்ய ட்ரம்புக்கும், குடியரசுக் கட்சி தலைவர்களுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்தைகள் இடம்பெற்றன.


பிரிட்டிஷ் கொலம்பியாவில் நள்ளிரவில் வீடு புகுந்து கத்திகுத்து தாக்குதல்!
[Saturday 2019-01-12 09:00]

பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில், இருவர் மீது கத்திகுத்து தாக்குதல் நடத்திய 40 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரிட்ஜ் மெடோவ்ஸ் என்பவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா தெரிவித்துள்ளனர்.


பெண் பேருந்து சாரதியின் மனதை நெகிழ வைத்த செயல்!.
[Saturday 2019-01-12 09:00]

அமெரிக்காவின் வின்கோன்ஸின்னில் உள்ள மிகப் பெரிய நகர் ஒன்றில் வீதியில் அநாதரவாக சென்ற குழந்தையொன்றை பெண் பேருந்து சாரதியொருவர் உடனடியாக ஓடிச் சென்று பாதுகாப்பாக மீட்டுள்ளார். மில்வாவ்கீ கவுண்டியில் பேருந்து சாரதியாக பணியாற்றும் பெண்ணொருவர் பாலம் ஒன்றை கடந்து சென்ற போது சிறு பெண் குழந்தையொன்று வீதியை கடக்க முற்படுவதை அவதானித்துள்ளார்.


சவுதி அரேபிய பெண்ணுக்கு கனடா புகழிடம் அளித்துள்ளது!
[Saturday 2019-01-12 09:00]

சவுதி அரேபியாவில் இருந்து தாய்லாந்துக்கு சென்ற போது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி சென்று பேங்கொக்கின் பிரதான விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சவுதி பெண்ணுக்கு கனடா புகழிடம் அளித்துள்ளது. 18 வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் என்ற சவுதி பெண் பேங்கொக் வழியாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்தார். அவரது குடும்பத்தினர் அவரின் வருகைக்காக காத்துக்கொண்டிருப்பதால் குவேட்டுக்கு திரும்ப வேண்டுமென ஆரம்பத்தில் அவரிடம் கூறப்பட்டது. அதற்கு மறுத்துவிட்ட அவர், விமான நிலையத்தின் விருந்தக அறையை விட்டு வெளியே வராமல் தன்னைதானே சிறைப்படுத்திக் கொண்டது சர்வதேச கவனத்தை ஈர்த்தது.


உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் ஒன்ராறியோ மாகாணத்திற்கு 4 பில்லியன் டொலர்கள் இழப்பு!
[Friday 2019-01-11 22:00]

ஒஷாவாவில் அமைந்துள்ள ஜெனரல் மோட்டோர்ஸ் வாகன உற்பத்தித் தொழிற்சாலை மூடப்படவுள்ளதால் ஒன்ராறியோ மாகாணத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் 4 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொழிற்சாலை மூடப்படுவதன் காரணமாக, 4,400 பேருக்கான வேலையிழப்புக்கள் உடனடியாக ஏற்படும் என்பதுடன், அது ஒன்ராறியோ பணியாளர் சமூகத்தில் பலத்த பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


கனடாவுக்கு குழந்தைகளை கொண்டுவருவதில் சிக்கல்!
[Friday 2019-01-11 22:00]

இத்தாலியில் பிறந்து கனடா குடியுரிமை பெற்ற தந்தையொருவர், வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தைகளை கனடாவுக்கு கொண்டு செல்வதில் சட்ட சிக்கலை எதிர்நோக்கியுள்ளார். இதன்காரணமாக அவர் கடந்த ஒரு மாதம் வரை பல இடங்களுக்கு ஏறியிறங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இத்தாலியில் பிறந்து கனடா குடியுரிமையை ஜோசப் பெற்றுக் கொண்டாலும், அவரது குழந்தைகள் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் பிறந்ததால் கனடா சட்டப்படி அவர்களுக்கு ஜோசப்பின் குடியுரிமை சட்டரீதியாக பொருந்தாது.


டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்.
[Friday 2019-01-11 22:00]

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார். அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் கடந்த 20 நாட்களாக பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன.


3 ஆண்டுகளில் ஒரு மில்லியன் புதிய குடியேற்றவாசிகளை உள்ளீர்க்க கனேடிய நாடாளுமன்றம் நடவடிக்கை!
[Friday 2019-01-11 22:00]

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு மில்லியன் புதிய குடியேற்றவாசிகளை உள்ளீர்க்கக்க விரும்புவதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி கனேடிய நாடாளுமன்றம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு மில்லியன் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை சேர்க்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவீதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாதவிடாய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் பலி.
[Friday 2019-01-11 22:00]

மாதவிடாய் காலத்தில் குடிசையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு நேபாளி தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் அங்கிருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். குளிர்கால வானிலையிலிருந்து தப்பிக்க அவர்கள் நெருப்பு மூட்டி இருக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சு விடமுடியாமல் அவர்கள் உறங்கும் போது இறந்திருக்கலாம் என ஒரு அலுவலர் தெரிவித்தார்.


தாய்லாந்தில் தஞ்சமடைந்த பெண்ணை கனடா ஏற்க வேண்டும்!
[Friday 2019-01-11 21:00]

தாய்லாந்தில் தஞ்சமடைந்த ரஹாஃப் மொகமது அல் குனான் என்னும் 18 வயது இளம்பெண்ணை கனடா அல்லது அவுஸ்ரேலியா ஏற்க வேண்டும் என தாய்லாந்து குடிவரவு திணைக்கள தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தினரே தன்னை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கூறி அந்த பெண் குவைத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி அவுஸ்ரேலியா செல்ல முடிவெடுத்துள்ளார். இதற்காக தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையம் வந்தவரை சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் சுற்றி வளைத்ததாகவும் அவரின் பயண ஆவணங்களைப் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.


எல்லையை பார்வையிட சென்ற டிரம்ப் - அமெரிக்காவில் முடங்கிய அரசாங்கம்!
[Friday 2019-01-11 21:00]

மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை வழங்க காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லை எனில் அவசர நிலைபிரகடனம் செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். "அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு எனக்கு எல்லா உரிமையும் உண்டு" என எல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு செல்லவிருந்த டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மெக்சிகோ மறைமுகமாக இதற்கான செலவை ஏற்கும் என்றும் அவர் கூறினார். கடந்த 21 நாட்களாக அமெரிக்காவின் அரசாங்கம் பகுதியளவு முடங்கியுள்ளது. இதனால், சுமார் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியம் பெறாமல் உள்ளனர். அமெரிக்கா - மெக்சிகோ எல்லை சுவர் கட்டுவதற்கான 5.7 பில்லியன் டாலர்கள் நிதிக்கு ஒப்புதல் வழங்கவில்லை எனில் சட்டத்துக்கு கையெழுத்திட்டு, அரசாங்க செயல்பாட்டை மீண்டும் தொடங்க முடியாது என்று அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார்.


'அமெரிக்க - மெக்ஸிகோ' எல்லைப் பகுதியில் 20 சடலங்கள் கண்டுபிடிப்பு!
[Friday 2019-01-11 09:00]

அமெரிக்க மற்றும் மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் 20 சடலங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் , அவற்றில் 17 கருகிய நிலையில் காணப்பட்டதாகவும் மெக்ஸிகோ தெரிவித்துள்ளது. குறித்த சடலங்களை நேற்று (புதன்கிழமை) கண்டுபிடித்ததாகவும் அவற்றுக்கு அருகில் 5 வாகனங்களும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


அமேசான் உரிமையாளர் மனைவியை பிரிந்தார்!
[Friday 2019-01-11 09:00]

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 54). இவரது தற்போதைய சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர் ஆகும். இவருடைய மனைவி மெக்கென்சி (48). இவர் நாவலாசிரியர் ஆவார். இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 3 ஆண் குழந்தைகள் உள்ளன. மேலும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டியா?
[Friday 2019-01-11 09:00]

அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானார். மூத்த வக்கீலும், எழுத்தாளருமான கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினர் மற்றும் அமெரிக்க மக்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளது. எனவே அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் இவர் டிரம்பை எதிர்த்து களம் இறங்குவார் என அமெரிக்க ஊடகங்களில் பரவலாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவெடுப்பேன் என தற்போது கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:- அமெரிக்க மக்கள் தங்களுக்கான தலைவரை சரியாக தேர்வு செய்யும் திறனை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் தலைவரை தேர்வு செய்வதற்கான கூடுதல் பொறுப்பை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.


ரொறன்ரோ - வீடொன்றில் இருந்து இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு!
[Thursday 2019-01-10 22:00]

ரொறன்ரோவின் ஸ்கார்பாரோ சந்திப் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பின் வீடொன்றில் இருந்து இருவர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கிழக்கு செயிண்ட் கிளேர் அவென்யூற்கு தெற்கே, 544 பேர்ச்மவுண்ட் வீதியில் அமைந்துள்ள குறித்த அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்து நேற்று பிற்பகல் 2.30 அளவில் அந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் ஒன்று 40 வயதுடைய ஆணினதும், மற்றையது 30 வயதுடைய பெண்ணினதும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. முதலில் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதை பொலிஸார் கண்டுள்ளதைத் தொடர்ந்தே அங்குள்ள வீடு ஒன்றினுள் பெண் ஒருவரும் சடலமாக கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஜனநாயக கட்சியுடனான கூட்டத்திலிருந்து ட்ரம்ப் அதிரடி வெளியேற்றம்.
[Thursday 2019-01-10 22:00]

அமெரிக்க- மெக்சிகோ எல்லை சுவர் அமைப்பதற்கான நிதி வழங்கல் குறித்த ஜனநாயக கட்சி தலைவர்களுடனான சந்திப்பிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக வெளியேறியுள்ளார். இதேவேளை, வெள்ளை மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கூட்டம் நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். எல்லையில் சுவர் அமைப்பது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை ஜனாதிபதி ட்ரம்புக்கு சாதகமாக அமையாததால் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.


வெள்ளையின மேலாதிக்கத்தில் கனடா செயற்படுகிறது என சீனா குற்றச்சாட்டு.
[Thursday 2019-01-10 22:00]

மேற்கத்தேய ஏகபோகம் மற்றும் வெள்ளையின மேலாதிக்கத்துடன் கனடா செயற்படுகின்றதென சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. சீனாவில் இரு கனேடிய பிரஜைகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்குமாறு கனடா இவ்வாறான மனப்பான்மையுடன் வலியுறுத்தல் விடுத்துவருவதாக சீன தூதுவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், சீனாவின் ஹூவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் தலைமைய நிதி நிர்வாகி கைதுசெய்யப்பட்டமை எவ்வித அடிப்படையும் அற்றதென சீனா குறிப்பிட்டுள்ளது.


ஜப்பான் அதிரடி! - ஐந்தாவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 2 லட்சம் சன்மானம்.
[Thursday 2019-01-10 22:00]

ஜப்பானில் பாரியளவில் வீழ்ச்சி கண்டு வரும் சனத்தொகையை ஒரு நிலைப்படுத்துவதற்காகவும், மக்கள் தொகையைப் பெருக்கும் முயற்சியாகவும், ஐந்தாவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 2 லட்சம் ரூபா பெறுமதியான நிதியுதவி வழங்கப்படும் என்று ஜப்பானிய நகரம் ஒன்றில் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. சீனா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிற்கு பெரும் பூதாகரமாக நிலவி வரும் பிரச்சினைகளில் மக்கள் தொகைப் பெருக்கம் பாரிய இடத்தை வகிக்கின்றது.


சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு!
[Thursday 2019-01-10 22:00]

2019 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் தரவரிசையில் கனடாவின் நிலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த பட்டியலில் கனடா 7 ஆவது இடத்தில் உள்ளது. அதன்படி கனடாவின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 184 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்று வரலாம். கடந்த 2014 ஆம் ஆண்டு உலக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருந்த கனடா 2015 இல் 4, 2016 முதல் கடந்த வருடம் வரை கனடா 6 ஆவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.


யெமனில் மீண்டும் தாக்குதல்!
[Thursday 2019-01-10 21:00]

யெமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களால் யெமனி இராணுவத்தினர் மீது இன்று ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்-அனாட் இராணுவ தளத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் குறைந்தது ஆறு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யெமனில் மூன்று வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு கடந்த டிசம்பர் மாதம் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் யெமன் அரசுக்குமிடையே ஐக்கிய நாடுகள் சபையினால் சமாதான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.


அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ் அதிகாரிக்கு டிரம்ப் அனுதாபம்.
[Thursday 2019-01-10 09:00]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நியூமன் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கார்பரல் சிங் (வயது 35). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், கடந்த மாதம் 26-ந் தேதி, போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது, மெக்சிகோவை சேர்ந்த வாலிபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அந்த வாலிபரை கலிபோர்னியா போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


2025 இற்குள் ஆகாய டாக்ஸிகள் கனவை நனவாக்கும் பெல் ஹெலிகாப்டர் நிறுவனம்.
[Wednesday 2019-01-09 23:00]

வீதிகளில் போக்குவரத்து நெரிசலா? ஆகாய டாக்ஸியில் பயணம் செய்வது இதற்கு ஒரு தீர்வாக அமையும் என பலரும் கருதுகின்றனர். இது தற்போது நனவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்ற தகவல் வெளியாகி பலரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த ஆண்டியின் பயனீட்டாளர் மின்னியல் பொருள் கண்காட்சியில், Bell Nexus என்ற ஆகாய டாக்ஸிக்கான மாதிரியை அறிமுகம் செய்துள்ளது Bell Helicopter.


சீனா - "பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லறைகள்"!
[Wednesday 2019-01-09 22:00]

சீனாவிலுள்ள பல்கலைக்கழக வளாகம் ஒன்றில் பழைமையான கல்லறைகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்சீனாவின் குவாங்டோங் மாகாண குவாங்ஷோ நகரில் அமைந்துள்ள சண்-யட்-சென் பல்கலைக்கழக வளாகத்தில் இவ்வாறு 13 பழைமையான கல்லறைகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு 37 பண்பாட்டு சின்னங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சீன மொழியில் சோங்ஷான் பல்கலைக்கழகம் என்று அறியப்படும் சண்-யாட்-சென் பல்கலைக்கழகம் சீனப் புரட்சியின் பெரும் தலைவர்களில் ஒருவரால் 1924ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.


பிரிட்டிஷ் கொலம்பிய ஆர்ப்பாட்டதால் பிரதமரின் உரை ரத்து!
[Wednesday 2019-01-09 22:00]

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஒட்டாவாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இதனால் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கலந்துக் கொள்ளவிருந்த நிகழ்வொன்றுக்கும் தடை ஏற்படுத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டம் காரணமாக பிரதமரின் உரையும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு தபாலில் மர்ம பொதிகள்!
[Wednesday 2019-01-09 22:00]

அவுஸ்ரேலிய தலைநகர் கன்பரா மற்றும் மெல்பேர்னிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளிட்ட சுமார் 20 இற்கும் மேற்பட்ட இடங்களுக்கு இன்று(புதன்கிழமை) சந்தேகத்துக்கிடமான பொதிகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து குறித்த கட்டடங்கள் உடனடியாக மூடப்பட்டதுடன், அங்கிருந்த உத்தியோகத்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மெல்பேர்னிலுள்ள அமெரிக்க, பிரித்தானிய தூதரகங்கள் உள்ளிட்ட ஐந்து வெளிநாட்டு தூதரகங்களுக்கு குறித்த மர்மப் பொதிகள் அனுப்பட்டமை ஆரம்பத்தில் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், தற்போது ஏனைய சில தூதரகங்களும் குறித்த மர்மப்பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா