Untitled Document
May 3, 2024 [GMT]
2022-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப பாகிஸ்தான் திட்டம்!
[Friday 2019-07-26 08:00]

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை 2022-ஆம் ஆண்டில் செயல்படுத்த உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் அவர், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆட்கள் தேர்வு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். முதலில் 50 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அவர்களில் இருந்து 25 பேரை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!
[Friday 2019-07-26 08:00]

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து உலக நாடுகளுக்கு வடகொரியா சிம்மசொப்பனமாக விளங்கி வந்தது. ஆனால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அடாவடி போக்கை கைவிட்டு, அமைதிக்கு திரும்பியது. எனினும் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவது, அதற்கு பிரதிபலனாக அந்நாடு மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை திரும்பப்பெறுவது தொடர்பான விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் நீடிக்கிறது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இருநாட்டு தலைவர்களின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் நிலைமை மேலும் மோசமானது.


150 ஆண்டுகள் சிறை தண்டனையை குறைக்க வலியுறுத்தி நிதி நிறுவன அதிபர் கோரிக்கை!
[Friday 2019-07-26 08:00]

அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆலோசகர் பெர்னி மடோப் (வயது 81). இவர் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கி மக்களிடம் இருந்து பல பில்லியன் அமெரிக்க டாலர்களை சுருட்டியது, கடந்த 2008-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய சிட்பண்ட் மோசடியாக இது கருதப்படுகிறது.


லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடியின் காவல் ஆக.22 வரை நீட்டிப்பு!
[Thursday 2019-07-25 17:00]

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.


தீய சக்தியை அகற்றுவதாக கூறி மகளை கொன்ற தாய்!
[Thursday 2019-07-25 17:00]

மகளின் உடலிலிருந்து தீய சக்தியை அகற்றுவதாக கூறி, அவரை கொலை செய்த அமெரிக்க பெண்ணுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அர்கன்சாஸ் பகுதியை சேர்ந்த ஏஞ்சலா பஹ்கின் என்ற பெண் ஒருவர், கடந்த 2016ம் ஆண்டு வருங்கால கணவர் உன்ட்வான் ஸ்மித்துடன் கலிபோர்ணியா மாகாணத்துக்கு குடிபெயர்ந்தார். அங்கு வசித்து வந்த அவர், 3வயது மகள் மையாவுக்கு பேய் பிடித்திருப்பதாகவும், அவரை வெயிலில் அமர வைத்தால் தீய சக்தி அகன்றுவிடும் என நினைத்து சுமார் 10 மணிநேரம் காரில் தனியே அமர்த்தி சென்றுள்ளார்.


பிரிட்டன் அமைச்சரவையில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த 3 பேருக்கு முக்கிய பொறுப்பு!
[Thursday 2019-07-25 17:00]

பிரிட்டன் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் உள்ளிட்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரிட்டனின் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் உள்துறை அமைச்சர். இதேபோல, இணையமைச்சர் பொறுப்பில் இருந்த அலோக் சர்மா, கேபினட் அந்தஸ்துடன் சர்வதேச மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு நாடகமாடிய கணவன்!
[Thursday 2019-07-25 17:00]

பிரேசிலில் மனைவியை தூக்கி வந்து அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்த நபரே, அவரை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். செவ்வாய் அன்று சான்டா காடரினாவில் உள்ள பெதஸ்டா மருத்துவமனையில் மாலை நேரத்தில் திடீரென மருத்துவமனைக்குள் ஓடிவந்த ஒருவன், எமர்ஜென்ஸி என அங்கிருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து தன் காரின் பின்புறத்தில் கிடத்தியிருந்த மனைவியை கையில் தூக்கிக் கொண்டு ஓடி வந்தான்.


ஆஸ்திரேலியாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது!
[Thursday 2019-07-25 09:00]

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள போலீஸ்நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது, வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதையடுத்து விபத்துக்கு காரணமான வேனை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஈஸ்ட்வுட் நகருக்கு அருகே அந்த வேனை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வேனை சோதனையிட்டபோது, அதில் பொட்டலம் பொட்டலமாக போதைப்பொருள் கடத்தி சென்றதை கண்டு அதிர்ந்துபோயினர்.


சிங்கப்பூரில் கப்பலில் கடத்தப்பட்ட யானை தந்தங்கள் பறிமுதல்!
[Thursday 2019-07-25 09:00]

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாம் நாட்டுக்கு சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக சிங்கப்பூர் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சிங்கப்பூர் துறைமுகம் வந்தடைந்த அந்த கப்பலில் சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கப்பலில் இருந்த 3 கன்டெய்னர்களை திறந்து பார்த்த போது 8.8 டன் (8,800 கிலோ) எடை கொண்ட யானை தந்தங்களும், 11.9 டன் எடை அளவிற்கு எறும்புதின்னி விலங்கின் செதில்களும் இருந்தது தெரியவந்தது.


சுற்றுலா படகு மூழ்கிய போதும் தனது முயற்சியால் 20 பேரை காப்பாற்றிய கனடா பிரஜை!
[Thursday 2019-07-25 09:00]

பிலிப்பைன்ஸூக்கு அண்மையில் சுற்றுலா சென்றிருந்து வௌிநாட்டவர்கள் சிலர் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளான போதும், அதில் பயணித்த கனடா நாட்டவர் ஒருவர் அனைவரையும் காப்பாற்றியுள்ளார். 20 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சென்ற படகொன்று சிபு மாகாணத்தில் உள்ள சிறிய தீவுப் பகுதிக்கு அருகில் பயணித்த போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதன்போது, சுற்றுலாப்பயணிகள் நீரில் தத்தளித்தனர். பெரும்பாலானவர்களின் கைத்தொலைபேசிகள் நீரில் மூழ்கியதால் செயலிழந்து போயின.


பிரேசிலின் பாட்ரே மார்சிலே ரோஸி நகரில் பாதிரியாரை மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்! Top News
[Wednesday 2019-07-24 17:00]

குண்டாக இருப்பவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்கள் எனக் கூறிய பாதிரியார் மேடையில் இருந்து தள்ளிவிடப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், அவரைத் தள்ளிவிட்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கண்டறியப்பட்டுள்ளது. பிரேசிலின் பாட்ரே மார்சிலே ரோஸி நகரில் பாதிரியார் ஒருவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். தன் கரங்களுக்கு ஏசுவுக்கு சொந்தமானது என பேசியபோது, திடீரென அவருக்குப் பின்னால் ஓடி வந்த 32 வயதான பெண் ஒருவர், பாதிரியாரை கீழே தள்ளிவிட்டார்.


தமிழ் மீது அலாதி பிரியம் கொண்ட கனடா பெண்! Top News
[Wednesday 2019-07-24 17:00]

தன்னை கனடா பொண்ணு என்றும் சென்னை தனது இரண்டாவது தாய்வீடு என்றும் நெகிழ்ச்சியுடன் கூறும் அளவிற்கு தமிழ் மீது அலாதி பிரியம் கொண்ட பாடகியொருவர் தமிழ் பாடல்களை மிகத் தௌிவாக பாடி வருகிறார். கனடாவைச் சேர்ந்த பிரபல பொப் பாடகி அரி (Ary R) என்பவர், தமிழ் பாடல்களை மிகவும் தெளிவாக பாடி அசத்துவதோடு, தனக்கு ‘கனடா பொண்ணு’ என்று அடைமொழியும் வைத்துக் கொண்டுள்ளார்.


இந்தோனேஷியாவில் புகழ்பெற்ற கொமோடோ பூங்கா ஓராண்டுக்கு மூடப்படவுள்ளது..!
[Wednesday 2019-07-24 17:00]

இந்தோனேஷியாவில், அழிவின் விளிம்பில் உள்ள கொமோடா டிராகன்கங்களை பாதுகாக்க, புகழ்பெற்ற பூங்காவை அந்நாட்டு அரசு ஓராண்டு மூட முடிவுசெய்துள்ளது. கொமோடா தீவில் பெரிய அளவிலான பல்லி போன்ற கொமோடா டிராகன் எனும் உயிரினத்தை பாதுகாக்க கடந்த 1991ம் ஆண்டு தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது. அதன்பின் பூங்காவில் மான், எருதுகள், கடல் உயிரினங்கள் என பல வகை உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது. இதையடுத்து யுனெஸ்கோ இப்பூங்காவை உலக பாரம்பரிய தலமாக அறிவித்தது.


கறுப்பு ஜூலை படுகொலையை நினைவு கூர்ந்தார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
[Wednesday 2019-07-24 17:00]

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலையின்போது உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களையும் இடம்பெயர்ந்தவர்களையும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைவுகூர்ந்தார். ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட மிலேச்ச தனமான கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் மக்களால் நினைவு கூரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சர்ச்சை எழுந்ததால் பேச்சை மாற்றியது அமெரிக்கா, ‘‘காஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு விவகாரம்’’ என கருத்து!
[Wednesday 2019-07-24 08:00]

‘‘பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில், மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக்கொண்டார்’’ என வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் கூறினார். இதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரவேற்றார். இது குறித்து அவர் பாக்ஸ் நியூசுக்கு அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீர் பிரச்சினையில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் தீர்வு ஒருபோதும் வராது. காஷ்மீர் பிரச்சினையில் ஒரே ஒருமுறை, பர்வேஸ் மு‌ஷரப் அதிபராகவும், இந்திய பிரதமராக வாஜ்பாயும் இருந்தபோது தீர்வை நெருங்கினோம். ஆனால் அதன் பின்னர் எதிர் எதிர் துருவங்கள் ஆகிவிட்டோம். இந்தியா பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும். இதில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பு செய்ய முடியும்’’ என குறிப்பிட்டார்.


வெளியுலகத்துடன் தொடர்பே இல்லாமல் வாழும் பழங்குடியின மக்கள்!
[Wednesday 2019-07-24 08:00]

அமேசான் காடுகளில் வாழும் வெளியுலகத் தொடர்பில்லாத ஆதிவாசி மக்கள் அழியும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் மாரன்ஹாவோ ((Maranhao)) என்ற இடத்தில் ஆவா இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பலநூறு ஆண்டுகளாக வெளியுலகின் தொடர்பில் இல்லாமல் தனித்து வாழ்ந்து வரும் இவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹெலிகாப்டரில் சென்ற ஆய்வாளர்களை வில் அம்புகளால் தாக்கும் வீடியோவை நேஷனல் ஜியோகிராபிக் சேனல் வெளியிட்டது.


பேச்சுவார்த்தை மூலம் ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படுத்துவது கடினம் - டிரம்ப் பேட்டி!
[Wednesday 2019-07-24 08:00]

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட மோதல் உச்சத்தை எட்டி இருக்கிறது. இருநாடுகளும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் ஈரானில் அமெரிக்காவுக்காக உளவு பார்த்த 17 பேரை கைது செய்து இருப்பதாகவும், அவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதித்ததாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இது இரு நாடுகளின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.


இருளில் மூழ்கியது வெனிசூலா!
[Wednesday 2019-07-24 08:00]

எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசூலாவில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. மேலும் அங்கு பொருளாதார நெருக்கடியும் நிலவுகிறது. பொதுத்துறை நிறுவனமான மின்சார நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளன. மொத்தம் உள்ள 23 மாகாணங்களில் 18 மாகாணங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒசாமா பின்லேடன் இருந்த இடத்தை அமெரிக்க உளவுத்துறைக்கு சொன்னது யார்? -இம்ரான்கான் புதிய தகவல்!
[Tuesday 2019-07-23 17:00]

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் 2011 மே 2-ம் தேதி அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க உளவுத்துறை (சிஐஏ) சிறப்பு நடவடிக்கையால் கொன்றது. அபோதாபாத்தில் பின்லேடன் மறைவிடத்தை அமெரிக்காவிற்கு கூறியது யார்? என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியது. ஆனால் ஒசாமா பின்லேடன் இருப்பிடம் சம்பந்தமாக தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றே பாகிஸ்தான் அரசு மறுத்துவந்தது. இந்நிலையில் ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்க உளவுத்துறைக்கு சொன்னது யார்? என்பது தொடர்பாக இம்ரான் கான் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.


சீனாவும், ஆஸ்திரேலியாவும் பசிபிக் தீவுகளில் பலப்பரீட்சை!
[Tuesday 2019-07-23 17:00]

பசிபிக் தீவுகளுக்கு சீனா பணத்தை வாரி இறைப்பது ஆஸ்திரேலியாவை கவலை கொள்ளச் செய்துள்ளது. பப்புவா நியூ கினியா உள்ளிட்ட பசிபிக்கில் உள்ள 14 முக்கிய தீவு நாடுகள், இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படுபவை. அந்த தீவுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் தான். இதன் காரணமாக, பிறநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த தீவுகள் உள்ளன. அந்தத் தீவுகளுக்கு ஆஸ்திரேலியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.


இங்கிலாந்தின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் தேர்வு!
[Tuesday 2019-07-23 17:00]

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது.


இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்ற கப்பல் உடைக்கப்படவுள்ளது!
[Tuesday 2019-07-23 17:00]

இறுதியுத்தக் காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்று கனடாவின் வான்கூவர் தீவை அடைந்த எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் உடைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெடரல் அரசாங்கம் MV Sun Sea என்னும் அந்த கப்பலை உடைப்பதற்காக 4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. 2010 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறிய நூற்றுக்கணக்கான தமிழர்களை சுமந்து கொண்டு அந்த கப்பல் கனடாவின் வான்கூவர் தீவை அடைந்தது. அதன்பின்னர் குறித்த கப்பல் பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கப்பலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில், அது பின்னர் கனேடிய எல்லை பாதுகாப்பு முகவரகத்தின் சொத்தாக மாறியது.


காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்ய தயார் என டிரம்ப் அறிவிப்பு!
[Tuesday 2019-07-23 09:00]

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் செய்யத் தயார் என்று இம்ரான்கானிடம் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்பின் யோசனையை இந்தியா நிராகரித்துள்ளது. பிரதமர் மோடி உதவும்படி கேட்டுக் கொண்டதாக டிரம்ப் கூறியதையும் இந்திய வெளியுறவுத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மூன்றுநாள் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். அப்போது காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய டிரம்ப், இந்த விவகாரத்தில் உதவ முன்வருமாறு பிரதமர் மோடி தம்மிடம் கேட்டுக் கொண்டதாகவும், தேவைப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரச பேச்சு நடத்த தாம் மத்தியஸ்தராக இருக்க விரும்புவதாகவும் அப்போது டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், இம்ரான்கான் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் காஷ்மீர் பற்றிய டிரம்ப்பின் சமரச முயற்சி குறித்து குறிப்பிடப்படவில்லை.


அமெரிக்காவை சேர்ந்த 17 சிஐஏ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து ஈரான் உத்தரவு!
[Tuesday 2019-07-23 08:00]

ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட 17 சிஐஏ அதிகாரிகளுக்கு அந்நாடு மரண தண்டனை விதித்துள்ளது. ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்ததில் இருந்து அமெரிக்கா -ஈரான் இடையே கடந்த மூன்று மாதங்களாக கடுமையான மோதல் வலுத்துள்ள நிலையில் சிஐஏ உளவு நிறுவனத்திற்காக பணியாற்றும் 17 பேரை கைது செய்ததாக அறிவித்த ஈரான் அரசு நேற்று அந்த 17 பேருக்கும் மரண தண்டனையை அறிவித்தது.


தென் ஆப்பிரிக்காவில் தடை நீங்கியதால் கொடூரமாக கொல்லப்படும் யானைகள்!
[Tuesday 2019-07-23 08:00]

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் ஜெஸ்டின் சுலிவான். இவர் ஒரு ஆவணப்பட இயக்குனர் ஆவார். இவர் சமீபத்தில், போட்ஸ்வானா பகுதியின் வனத்திற்குச் சென்றார். அந்த வனத்தில் உள்ள விலங்குகளின் அரிய புகைப்படங்களை எடுக்க பல்வேறு விதமான நவீன புகைப்பட கருவிகளுடன் சென்றார். அவர் வனத்தில் ஏதேனும் அரிய காட்சிகள் இருக்கிறதா? என்பதை கவனிக்க டிரோனை பறக்கவிட்டு இயக்கினார். சிறிது நேரம் பறந்த டிரோன், ஓர் துயர காட்சியை காண்பித்தது. அந்த காட்சியில் யானை ஒன்று, தும்பிக்கை தனியாகவும், உடல்பகுதி தனியாகவும் துண்டிக்கப்பட்டு இறந்துக் கிடந்துள்ளது. இதனை கண்டு ஜெஸ்டின் கடும் அதிர்ச்சிக்குள்ளானர்.


2024-ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் - நாசா நிறுவனம் அனுப்புகிறது!
[Tuesday 2019-07-23 08:00]

நிலாவில் மனிதன் முதல் முறையாக கால் பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024-ம் ஆண்டு நிலாவுக்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு ‘ஆர்ட்டிமிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.


எகிப்து செல்லும் விமான சேவைகளை ரத்து செய்தது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்!
[Sunday 2019-07-21 18:00]

எகிப்தின் தலைநகர் கெய்ரோ செல்லும் விமானங்களை ஒரு வாரம் ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விமானங்களை ரத்து செய்வதற்கான சரியான காரணத்தை அந்நிறுவனம் தெரிவிக்காத போதிலும், உலக முழுவதும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


மீண்டும் ஹாங்காங்கில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்..!
[Sunday 2019-07-21 18:00]

ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டோரை சீனாவிற்கு கொண்டு சென்று விசாரிக்க வகை செய்யும், மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், வன்முறையில் ஈடுபட்ட காவலர்கள் மீது தனி விசாரணை நடத்த கோரி பல்லாயிரக் கணக்கானோர் பேரணி நடத்தினர். சீனா கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், குற்றஞ்சாட்டப்படுபவர்களை சீனாவிற்கு கொண்டு சென்று விசாரிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் நாடாளுமன்றம் நோக்கி கண்டன பேரணி நடத்தினர்.

Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா