Untitled Document
April 20, 2024 [GMT]
கனடாவின் வடிவிலான நாணயத்தை வெளியிட கனடா அரசு தீர்மானம்!
[Tuesday 2019-07-16 18:00]

கனடா தினத்தை கௌரவிக்கும் விதமாக ‘கனடா’ நாட்டின் வடிவிலான நாணயம் ஒன்றை வௌியிட ‘தி றோயல் கனேடியன்’ நாணய சபை தீர்மானித்துள்ளது. றோயல் கனேடியன் நாணய அச்சக சபையின் தயாரிப்பு முகாமையாளர் எரிகா மாகா இந்த தகவலை வௌியிட்டுள்ளார். வடிவமைப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு புதுமையான வடிவத்தை உருவாக்க பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் குழுக்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தன.


பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு அனுமதி!
[Tuesday 2019-07-16 08:00]

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகள் வீசின. இதனால், பாகிஸ்தான் வான்வழிப் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி மூடப்பட்டது. இதனால், இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானமும், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.


ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இனவெறி கருத்து!
[Tuesday 2019-07-16 08:00]

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்களுக்கு எதிராக இனவெறி கருத்துகளை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவருக்கு கண்டனம் வலுத்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருக்கும் அவர் பிறநாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் மீது எதிர்மறையான எண்ணங்களை கொண்டு உள்ளார். இதனால் அவர் அவ்வப்போது இனரீதியிலான கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என டிரம்ப் பலமுறை தவறான கருத்தை முன்வைத்துள்ளார்.


காந்தியின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி தென்னாப்பிரிக்காவில் மிதிவண்டி பேரணி!
[Tuesday 2019-07-16 08:00]

மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவர் நிறவெறிக்கு எதிராக போராடிய தென்னாப்பிரிக்காவில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் லெனாசியா நகரில், இந்திய துணை தூதர் கே.ஜே.சீனிவாசா ஏற்பாட்டில் இந்த பேரணி நடைபெற்றது.


போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக கனேடியப் பிரஜைகள் சீனாவில் தடுத்து வைப்பு!
[Tuesday 2019-07-16 08:00]

மாணவர்கள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வழக்கு தொடர்பாக சீன பொலிஸார் கனேடிய நாட்டவர் ஒருவரை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதாக சீனாவின் வெளியுறவு அமைச்சு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இருக்கமான நிலைமை ஏற்பட்டுள்ள தருணத்தில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கடந்த வார இறுதியில் ஒரு கனேடியப் பிரஜை கிழக்கு மாகாணமான சாண்டோங்கில் உள்ள யந்தாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கனடா அரசாங்கம் கூறியது. ஆனால் அதுபற்றிய விவரங்களை வழங்கவில்லை.


50 ஆண்டுகளுக்குப் பின் இரு பழமையான பிரமீடுகள் மக்கள் பார்வைக்கு அனுமதி!
[Monday 2019-07-15 17:00]

எகிப்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் இரு பழமையான பிரமீடுகள் மக்கள் பார்வைக்காக முதன்முறையாகத் திறக்கப்பட்டன. கெய்ரோ தலைநகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பழமையான இரு பிரமீடுகள் அமைந்துள்ளன. 1965-ம் ஆண்டுக்குப் பின் சிதைவடைந்த அந்த பிரமீடுகளில் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, தொல்லியல் துறையின் நீண்ட முயற்சிக்குப் பின் அதைப் சீரமைக்கும் அனுமதி கிடைத்தது.


கனடா – இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இடம்பெறச் சாத்தியமில்லை : தூதுவர்!
[Monday 2019-07-15 17:00]

கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 60 சதவீதம் அதிகரித்து 9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இந்தத் தொகை அடுத்த சில ஆண்டுகளில் மேலும் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இடம்பெற்று வருகின்றன.


கனமழையால் நேபாளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: உயிரிழப்பு 65 ஆக உயர்வு!
[Monday 2019-07-15 17:00]

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. 28 மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சாரம் தடைபட்டுள்ளது. மழையால் நாட்டின் பல தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கனமழையால் நேற்று வரை 60 பேர் பலியானதாக அரசு தெரிவித்திருந்தது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நேபாள காவல்துறை மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


ஒளிப்படங்களை எடுப்பதற்காக சிங்கங்களை சுட்டுக் கொன்ற கனேடியத் தம்பதி! Top News
[Monday 2019-07-15 17:00]

தென்னாப்பிரிக்காவில் ஒரு சஃபாரி பூங்காவில் ஔிப்படம் எடுக்கச் சென்ற கனடா நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இரண்டு வளர்ந்த சிங்கங்களை சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த கனேடியத் தம்பதியினர் உயிரிழந்த சிங்கத்தின் பின்னால் அமர்ந்து கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும் ஔிப்படம் எடுத்துள்ளனர். டெரன் மற்றும் கரோலின் கார்டர் என்ற பெயர்களை கொண்ட குறித்த தம்பதி லெஜீலியா சஃபாரிஸ் வழியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இந்தச் செயலை செய்துள்ளனர்.


இருளில் மூழ்கிய நியூயார்க்!...
[Monday 2019-07-15 08:00]

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏற்பட்ட மின்தடை பல மணி நேரங்களுக்கு பிறகு சீரமைக்கப்பட்டது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட மின்தடையால் 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மின்தடையினால் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர், சுரங்க பாதைகள் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின. பாதுகாப்பு காரணமாக சுரங்க பாதைகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மின் தடை ஏற்பட்டதால் பலர் இரவில் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து சென்றனர்.


பாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி!
[Monday 2019-07-15 08:00]

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில் தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய வளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுரங்க நிறுவனங்கள் இங்கு தங்கம் மற்றும் தாமிரம் வெட்டி எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சிலி மற்றும் கனடாவை சேர்ந்த ‘டிசிசி’ என்கிற கூட்டு நிறுவனத்துக்கு ரெகோ நகரில் சுரங்க பணிகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பலுசிஸ்தான் மாகாண அரசு திடீரென ரத்து செய்தது.


மனிதரால் உருவாக்கப்பட்ட உலகின் மிக ஆபத்தான நகரம்..!
[Monday 2019-07-15 08:00]

விஞ்ஞானம் வேகமாக வளரவேண்டும் என்ற சில நாடுகள் செய்த தவறால் அப்பாவி மக்கள் செத்து குவிந்தனர்... மனிதர்களால் ஆனா சில கொடூரமான அழிவுகளை இவ்வுலகம் பதிவு செய்துக்கொண்டு தான் இருக்கிறது... அதில் ஒன்று தான் செர்னோபில் கோரம். 1970களில் அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் விஞ்ஞானத்தில் யார் முதலிடம் என்று போட்டிபோட்டுக்கொண்ட காலக்கட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சி, அணுஆயுதங்கள், ஒலிம்பிக் பதக்க பட்டியல் என அனைத்திலும் போட்டி பலம்பெற்றது. ஆனால் சோவியத்தோ யாரும் எட்ட முடியா அளவிற்கு அனைத்திலும் முன்னெடுக்க ஆரம்பித்திருந்தது. அங்கு தான் அழிவும் ஆரம்பமாகி இருந்தது... ஆம் அங்கு ஆரம்பித்த பெரும் ஓட்டம் உக்ரேனில் அணுவுலைக்காக பெரும் சம்பிராஜ்யத்தை உருவாக்கி கொண்டிருந்தது. இதில் வேலைபார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏன் அங்கு இருக்கும் விஞ்ஞானிகளுக்கும் அணுஉலை அருகிலேயே வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு தனி ஒரு சாம்பிராஜ்யம்மாக திகழ்ந்தது.


தலாய் லாமா விவகாரத்தில் இந்தியா தலையிடக்கூடாது - சீனா எச்சரிக்கை!
[Monday 2019-07-15 08:00]

அடுத்த தலாய் லாமா சீனாவில் இருந்துதான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் சீனா அறிவித்துள்ளது. 84 வயதை அடைந்துவிட்ட 14வது தலாய் லாமாவுக்கு மாற்றாக புதிய தலாய் லாமாவைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டுள்ளது. திபெத் மீது சீனா ஆக்ரமிப்பு செய்த போது, 1959ம் ஆண்டு திபெத்தை விட்டு வெளியேறிய தலாய் லாமா, இந்தியாவில் அடைக்கலம் பெற்றார்.


சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை!
[Sunday 2019-07-14 17:00]

சட்டவிரோத குடியேறிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிலையில், குடிபெயர்ந்து வாழும் பலர் அச்சத்தில் உள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் நாட்டில் இருந்து வெளியேற்றுவதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்று ஒரு வாரத்திற்கு முன்னர் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இதற்கான சோதனைகள் இன்று முதல் தொடங்கி உள்ளன.


வங்காளதேசத்தின் கடைசி சர்வாதிகாரி எர்ஷாத் உயிரிழந்தார்!
[Sunday 2019-07-14 17:00]

கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் வசித்த மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு இந்தியா துணை நின்றது. பாகிஸ்தானுடன் இந்திய ராணுவம் போர் நடத்தி கிழக்கு பாகிஸ்தானை வங்காளதேசம் என்ற தனிநாடாக இந்தியா மலரச் செய்தது. அங்கு அதிபர் அப்துஸ் சர்தார் தலைமையில் நடைபெற்றுவந்த ஜனநாயக முறையிலான ஆட்சியை 1982-ம் ஆண்டில் ராணுவ புரட்சியின் மூலம் கவிழ்த்த ஹுசைன் முகம்மது எர்ஷாத், அந்நாட்டின் சர்வாதிகாரியாக மாறி, ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 1990-ம் ஆண்டுவரை 8 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். பின்னர், ஏற்பட்ட மக்கள் புரட்சியின் விளைவாக ஆட்சியை விட்டு அகற்றப்பட்டார். எர்ஷாத் ஆட்சிக் காலத்தின்போதுதான் வங்காளதேசம் நாட்டின் தேசிய மதமாக இஸ்லாம் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க அதிபர் டிரம்ப் தீர்மானம்!
[Sunday 2019-07-14 17:00]

துருக்கி நாட்டின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷியாவிடம் இருந்து அதிநவீன S-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால் F-35 ரக போர் விமானம் தயாரிப்பில் துருக்கிக்கு அளித்துவரும் முன்னுரிமையை ரத்து செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். துருக்கி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜூலை 31-ம் தேதிவரை கெடு விதித்திருந்தார்.


மாயமான கனடிய இளைஞர் சடலமாக கண்டெடுப்பு!
[Sunday 2019-07-14 17:00]

கனடாவில் மாயமான இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனடாவின், எட்மன்டன் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி மாயமான இளைஞனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.


கிரீஸ் நாட்டைப் புரட்டிப் போட்ட தீவிரப் புயல் - 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு! Top News
[Sunday 2019-07-14 08:00]

கிரீஸ் நாட்டில் வீசிய புயல் அந்நாட்டின் சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வடக்குப் பகுதியில் உள்ள வெர்ஜியா, ஹல்கிகிடி தீபகற்பம், தீசலோனிகி உள்ளிட்ட இடங்களில் நேற்று வீசிய புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றினால் வீடுகளின் கூரைகள் பறந்தன. சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறு கடைகள் முற்றிலும் சேதமடைந்தன.


நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஈரானின் கப்பலை விடுவிக்கத் தயார் - இங்கிலாந்து அறிவிப்பு!
[Sunday 2019-07-14 08:00]

சிறைபிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய்க் கப்பலை நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்கத் தயார் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் எண்ணெய் கப்பலான ‘சூப்பர்டேங்கர் கிரேஸ்’ ஜிப்ரால்டர் நீரிணையில் இங்கிலாந்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.


நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு! Top News
[Sunday 2019-07-14 08:00]

நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கனமழையால் நேற்று வரை 28 பேர் பலியாகினர் என அந்நாட்டு அரசு அறிவித்தது.


கடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர்! Top News
[Sunday 2019-07-14 08:00]

அமெரிக்க நாட்டின் கடல் எல்லை வழியாக கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோதமாக போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு கடற்படை சார்பில் சிறிய ரக ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் எல்லைகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பசிபிக் கடலின் கிழக்கு பகுதியின் கொலம்பியா-ஈக்வடார் கடற்பரப்பு பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தது. அப்போது, கடற்பரப்பின் மேற்பரப்பில் பாதி தெரிந்த அளவில் நீர்மூழ்கி கப்பல் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. கண்காணிப்பு விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவின் அடிப்படையில் இரண்டு படகுகளில் அமெரிக்க கடற்படை வீரர்கள் நீர்மூழ்கி கப்பல் சென்று கொண்டிருந்த பகுதி நோக்கி விரைந்தனர்.


தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான புதிய வரித்திட்டத்திற்கு பிரான்ஸ் செனட்சபை அங்கீகாரம்!
[Saturday 2019-07-13 17:00]

Google, Facebook உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது 3 சதவீத வரி விதிக்கும் சட்டமூலத்திற்கு பிரான்ஸ் செனட் சபை அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலையும் மீறி பிரான்ஸ் செனட் சபை இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, பிரான்ஸ் நாடாளுமன்றம் Google, Facebook உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது 3 சதவீத வரி விதிக்கும் சட்டமூலத்தினை அங்கீகரித்திருந்தது. குறித்த சட்டமூலம் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை நியாயமற்ற வகையில் குறிவைப்பதாக, அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது.


சோமாலியா உணவு விடுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 26 பேர் உயிரிழப்பு!
[Saturday 2019-07-13 17:00]

சோமாலியா நாட்டின் கிஸ்மேயோ என்ற துறைமுக நகரில் மெடினோ என்ற ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், துப்பாக்கிகளுடன் வந்த தீவிரவாதிகள் சிலர் கார் வெடிகுண்டு ஒன்றை முதலில் வெடிக்க செய்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்பின் ஓட்டலுக்குள் புகுந்தனர்.


அமெரிக்க வர்த்தக சட்டம் 301ஆவது பிரிவின் கீழ், இந்தியா மீதும் விசாரணை? - டிரம்ப் நிர்வாகம்.
[Saturday 2019-07-13 17:00]

இறக்குமதிகளுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்துவதற்கு முன்னோட்டமாக, வர்த்தக சட்டத்தின் 301ஆவது பிரிவின் கீழ் இந்தியா மீதும் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. அண்மையில் இந்தியாவிற்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்தது, பதிலுக்கு அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதிப்பு என உரசல் எழுந்து தற்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழைக்கு 16 பேர் பலி!
[Saturday 2019-07-13 17:00]

நேபாளம் நாட்டில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் 16 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு ஊர்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. பல ஊர்களிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சார வினியோகம் தடைபட்டுள்ளது.


அவுஸ்ரேலியாவில் அரியவகை பறவைகள் உயிரிழந்தமை குறித்து விசாரணை!
[Saturday 2019-07-13 08:00]

அவுஸ்ரேலியாவில் பல பறவைகள் வீழ்ந்து மரணித்துள்ளமைக்கு விச வாயு தாக்குதல் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய மீட்பு பணியாளர்கள் குறித்த சந்தேகத்தினை வெளியிட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவின் பிரதான நகரங்களில் ஒன்றான அடேலைட் நகரின் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் ஏறக்குறைய 57 இற்கும் அதிகமான கொரில் இன பறவைகள் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.


ஈரானை மிரட்டும் விதமாக 2-வது போர்க்கப்பலை அனுப்பியது இங்கிலாந்து!
[Saturday 2019-07-13 08:00]

ஈரானை மிரட்டும் விதமாக பெர்சிய வளைகுடாவிற்கு 2வது போர்க்கப்பலை இங்கிலாந்து அனுப்பியுள்ளது. சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்ற சூப்பர்டேங்கர் கிரேஸ் என்ற ஈரானிய எண்ணெய் கப்பலை இங்கிலாந்து சிறைபிடித்தது. அந்த கப்பலை விடுவிக்காவிட்டால் உரிய பதிலடியை கொடுக்கப் போவதாக இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.


காலி நாற்காலிகளுக்கு அறிவுரை கூறிய பாகிஸ்தான் மந்திரி!
[Saturday 2019-07-13 08:00]

பிரிட்டன் நாட்டின் லண்டன் நகரில் ’ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பிரிட்டன், கனடா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதிகள் விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பத்திரிக்கையாளர் ஒருவர் பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் கருத்துரிமை தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் திடீரென கோஷம் எழுப்பினார். மேலும், சுதந்திரமாக கருத்துக்களை தெரிவித்ததற்காக பாகிஸ்தான் அவரது தனது டுவிட்டர் கணக்கை முடக்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா