Untitled Document
May 2, 2024 [GMT]
ஒருபோதும் பஷில் பிரதமராக முடியாது!
[Saturday 2022-01-01 18:00]

சாதாரண அரச பணியில் கூட ஈடுபட முடியாத ஒரு நபரை அமைச்சராக நியமிப்பதோ அல்லது பிரதமராக்குவதோ நாட்டின் சட்டத்திற்கு முரணானது. இதனை எதிர்த்தே பஷில் ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.


கடந்தகாலத் துன்பியல் நிகழ்வுகளை மறந்துவிட்டு ஓரணியில் பயணிக்க வேண்டும்!
[Saturday 2022-01-01 18:00]

அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் இனமுறுகலை ஏற்படுத்தி சிங்களக் கடும் போக்குவாதிகள் முன்னெடுத்த அரசியலை மறக்க கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.


ஆறு அமைச்சுக்களில் முக்கிய மாற்றம்!
[Saturday 2022-01-01 18:00]

அமைச்சரவையின் முக்கிய ஆறு அமைச்சுகளின் விடயதானங்கள் மாற்றத்திற்குள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அனைவருக்கும் அன்புகலந்த 2022 இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். Top News
[Saturday 2022-01-01 18:00]

செய்தி இணையதள வாசகர்கள் ஆதரவாளர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


காருடன் மோதிய உத்தரதேவி எரிந்து கருகியது! Top News
[Saturday 2022-01-01 18:00]

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த உத்தரதேவி கடுகதி ரயிலுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


12 வீதமான கொரோனா தொற்றாளர்களுக்கு ஒமிக்ரோன்!
[Saturday 2022-01-01 18:00]

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் ஒமிக்ரோன் பிறழ்வு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் நூற்றுக்கு 12 சதவீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளது என்று எதிர்வு கூற முடியும். இது ஒமிக்ரோன் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது என்பதற்கான சிறந்த சாட்சியாகும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்தார்.


பீற்றர் இளஞ்செழியன் கைது! - 4ஆம் திகதி வரை விளக்கமறியல்.
[Saturday 2022-01-01 18:00]

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன் முல்லைத்தீவு பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.


மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால் பதவி விலகத் தயார்!
[Saturday 2022-01-01 18:00]

மக்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தாம் பதவி விலகவும் தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


15 வயதுச் சிறுமியுடன் குடித்தனம் நடத்திய இளைஞன் கைது!
[Saturday 2022-01-01 18:00]

யாழ்ப்பாணம் - ஏழாலையில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து குறித்த 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


நாடு திரும்பினார் அமைச்சர் பசில்!
[Saturday 2022-01-01 08:00]

அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மூன்று தீவுகளை இந்தியாவுக்கு வழங்க அரசு இணக்கம்!
[Saturday 2022-01-01 08:00]

நெடுந்தீவு உட்பட வடக்கில் மூன்று தீவுகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான தீவிர முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.


திருகோணமலை பெற்றோலிய நிறுவனத்துக்கு எதிராகவும் போராட்டம்!
[Saturday 2022-01-01 08:00]

திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடெட்' என்ற துணை நிறுவனத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளமைக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படுவோம் என இலங்கை பெற்றோலியம் கூட்டுதாபனத்தின் சேவை சங்கத்தின் தலைவர் அசோக ரன்வெல தெரிவித்தார்.


2021இல் ஒன்றேகால் இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறினர்!
[Saturday 2022-01-01 08:00]

கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் இவ்வருடத்தில் 120,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.


உருளைக்கிழங்கு, வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 30 ரூபாவினால் குறைப்பு!
[Saturday 2022-01-01 08:00]

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட தீர்வை கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.


2022 அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமைய வேண்டும்!
[Saturday 2022-01-01 08:00]

பிறந்துள்ள 2022 ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமைய வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,


மன்னார் பிரதேச சபை வரவுசெலவுத் திட்டம் மீண்டும் தோல்வி!
[Saturday 2022-01-01 08:00]

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 2 ஆவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.


தோணி கவிழ்ந்து மீனவர் பலி!
[Saturday 2022-01-01 08:00]

மட்டக்களப்பு வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அராலி விபத்தில் இருவர் படுகாயம்!
[Saturday 2022-01-01 08:00]

வட்டுக்கோட்டை, அராலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அராலி, தோப்பச்சி - வாசிகசாலைக்கு அருகே சென்று கொண்டிருந்த பாண் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டியும், சைக்கிளும் நேற்று விபத்துக்குள்ளாகின.


ஊரடங்கு கால கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கும் காலஎல்லை நீடிப்பு!
[Friday 2021-12-31 17:00]

கனேடிய தொழிலாளர்களுக்கு ஊரடங்கு கால ஊக்கத்தொகைக்கான மனுக்கள் பெறும் திகதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலதிக மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களை தகுதி பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வீர மண்ணின் சரித்திரத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டீர்கள்!
[Friday 2021-12-31 17:00]

பாரம்பரிய, எங்களுக்கே உரித்தான, கலாசார நிகழ்வான விசித்திரப் பட்டப் போட்டி இனப்படுகொலை செய்த அரசின் நிகழ்வாக காட்சிப்படுத்தப்படப் போகிறதென்பது மிகவும் கண்டிக்கத் தக்கதும், அவமானத்திற்குறிய செயலாகும் என பிரித்தானிய வல்வை நலன்புரிச்சங்கம் மற்றும் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தினால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


50 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகிறது 14 எண்ணெய் குதங்களின் குத்தகை!
[Friday 2021-12-31 17:00]

திருகோணமலையில் தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எண்ணெய் குதங்கள் மேலும் 50 வருடங்களுக்கு அதே நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


மூன்று ஆண்டுகள் வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை!
[Friday 2021-12-31 17:00]

மக்களுக்கு அரசாங்கத்தை மாற்றும் அதிகாரம் உள்ளது. அதற்காக மூன்று ஆண்டுகள் வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே வெகு விரைவில் அரசாங்கத்தை விரட்டியடிப்பார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.


இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம்! Top News
[Friday 2021-12-31 17:00]

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம் ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டது. வலி. வடக்கு மீனவர் சமரசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணி அளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்று கூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தோல்வியடைந்து விட்டது அமைச்சரவை- தேர்தலை நடத்துவதே நல்லது!
[Friday 2021-12-31 17:00]

அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் பாராளுமன்ற தேர்தலை நடத்துவது சிறந்ததாகும். தமக்கு தேவையான அரசாங்கத்தை தோற்றுவிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கிராமிய கலை கலாசார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.


பிரதமர் மஹிந்த ஓய்வுபெறுகிறாரா?
[Friday 2021-12-31 17:00]

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவு - வடக்கு-கிழக்கின் நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள், துறவிகள் அமைப்பு கவலை!
[Friday 2021-12-31 17:00]

தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின அடக்குமுறைக்கெதிராக முற்போக்குச் சிந்தனையோடு போராடிய ஒரு விடுதலைப் போராளி பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் பயணம் நிறைவடைந்தமையிட்டு வடக்கு-கிழக்கின் நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள், துறவிகள் அமைப்பு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.


புகையிலை தயாரிப்புகளை கையாளுவதற்கான வயதெல்லை அதிகரிப்பு!
[Friday 2021-12-31 17:00]

சிகரட் உட்பட புகையிலை தயாரிப்புகளை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றுக்கான வயதெல்லை அடுத்த ஆண்டு முதல் 21 வயதில் இருந்து 24 வயதாக அதிகரிக்கப்படுவதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


பாலியல் தொழிலுக்காக இலங்கைக்கு கடத்தப்படும் உஸ்பெக் பெண்கள்!
[Friday 2021-12-31 17:00]

உஸ்பெகிஸ்தானில் இருந்து பல பெண்கள் பாலியல் தொழிலுக்காக இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கை மனித கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவர்கள் இவ்வாறு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர்.

Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா