Untitled Document
May 17, 2024 [GMT]
500 மில்லியன் டொலர்களை வழங்கியது இந்தியா!
[Wednesday 2022-01-19 08:00]

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கொழும்பிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.


ஒவ்வொருவருக்கும் 8 இலட்சம் ரூபா கடனாளி!
[Wednesday 2022-01-19 08:00]

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 800,000 ரூபாயாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதிகரிப்பு என்பனவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை தற்போதைய நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.


பின்வரிசைக்கு மாற்றப்பட்டார் சுசில்!
[Wednesday 2022-01-19 08:00]

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவின் பாராளுமன்ற ஆசனமும் மாற்றப்பட்டுள்ளது. கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தபோது, அவர் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் 31ஆவது ஆசனத்தைப் பெற்றிருந்தார்.


கஞ்சாவுடன் பிடிபட்டவருக்கு விளக்கமறியல்!
[Wednesday 2022-01-19 08:00]

வவுனியாவில் இருந்து திருகோணமலைக்கு 3 கிலோவும் 100 கிராம் கஞ்சாவை கொண்டு சென்ற நபர் ஒருவரை இம்மாதம் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரஸாக் பயாஸ் உத்தரவிட்டார்.


ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மோசமானது!
[Tuesday 2022-01-18 16:00]

அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று ஆற்றிய உரை, ”மிக மோசமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


தேநீர் விருந்துபசாரத்தைப் புறக்கணித்தது கூட்டமைப்பு!
[Tuesday 2022-01-18 16:00]

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசார நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது.


5 மணியுடன் மின்சாரம் 'அவுட்'!
[Tuesday 2022-01-18 16:00]

நாட்டில் இன்று மாலை 5 மணிக்கு பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு பேரணி! Top News
[Tuesday 2022-01-18 16:00]

பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராகவும், நெல் சந்தைப்படுத்தலை மாவட்டத்திற்குள் மட்டுப்படுத்தக் கோரியும் கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.


பைசர் நிறுவனத்தின் கொரோனா மாத்திரைக்கு கனடா அனுமதி!
[Tuesday 2022-01-18 16:00]

கோவிட் சிகிச்சைக்காக பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைக்கு கனடா சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. பைசர் நிறுவனம், கொரோனா சிகிச்சைக்காக, பாக்ஸ்லோவிட் (Paxlovid) என்னும் மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.


வழிப்பறியில் ஈடுபட்ட சுதந்திரக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் கைது!
[Tuesday 2022-01-18 16:00]

வழிப்பறியில் ஈடுபட்ட, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தன்னாமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் வேலாயுதம் புவிதாசன் உள்ளிட்ட குழுவினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கரைந்தது 500 மில்லியன் டொலர் கையிருப்பு!
[Tuesday 2022-01-18 16:00]

இலங்கை இறையாண்மை முறிக்கான 500 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்த இறையாண்மை முறி இன்று முதிர்வு காலத்தை எட்டியதை அடுத்தே, 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேவாலய வளாகத்துக்குள் பழைமையான கல்லறை! Top News
[Tuesday 2022-01-18 16:00]

வென்னப்புவ- போலவத்த பிரதேசத்திலுள்ள பரலோக ராஜ்ய தேவாலய வளாகத்தில் மிகவும் பழமையான மயானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த தேவாலய வளாகத்தில் கட்டடமொன்றை அமைப்பதற்கு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதே, இந்த மயானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
[Tuesday 2022-01-18 16:00]

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.


பரீட்சை நிலையங்களாகும் வைத்தியசாலைகள்!
[Tuesday 2022-01-18 15:00]

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 'கொவிட்' வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த எந்த நேரமும் தயார்!
[Tuesday 2022-01-18 11:00]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


டில்லிக்கான கடித ஆவணத்துடன் இந்திய தூதுவரை சந்திக்கும் தமிழ்க் கட்சிகள்!
[Tuesday 2022-01-18 11:00]

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இன்று கொழும்பில் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.


இலங்கை இராணுவ அதிகாரிகளை தடை செய்ய தயங்குவது ஏன்?
[Tuesday 2022-01-18 11:00]

ஏனைய நாடுகளில் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ள இலங்கையின் சில இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கலாக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் தடைவிதிப்பதற்கு ஏன் காலதாமதமாகின்றது என்று பிரிட்டனில் இயங்கும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் எலியற் கொல்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.


மனித உரிமை மீறல்களுக்கு இடமில்லை! Top News
[Tuesday 2022-01-18 11:00]

தனது ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்களை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுமக்களைத் தூண்டிவிடுவதைத் தவிர்க்குமாறும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் வகுப்புகளுக்கு தடை!
[Tuesday 2022-01-18 11:00]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதால், இன்று நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


பனி நாளில் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்! Top News
[Tuesday 2022-01-18 11:00]

நாள் முழுவதும் 60 செமீ பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதால், இந்த பனி நாளில் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் லோகன் கனபதி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


நாடாளுமன்ற கலரியில் கிறிஸ்தவ மதகுருக்கள் இல்லை!
[Tuesday 2022-01-18 11:00]

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இரண்டாவது கூட்டத்தொடர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்று காலை 10 மணிக்கு சம்பிரதாகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதில், அழைக்கப்பட்ட மதத் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். பௌத்த தேரர்கள் 16 பேர், இந்து மதகுருமார் ஒருவர், இஸ்லாமிய மதத் தலைவர்கள் இருவர் பங்கேற்றிருந்தனர். கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் எவரும் சமூகமளித்திருக்கவில்லை.


இறக்குமதி மூலம் பொலன்னறுவை அரிசி மாஃபியாவுக்கு பதிலடி!
[Tuesday 2022-01-18 11:00]

பொலன்னறுவை அரிசி மாஃபியாவுக்கு பதிலளிக்கும் வகையில் அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


உடுத்துறை உந்துருளி தீக்கிரை! - மர்ம நபர் கைவரிசை.
[Tuesday 2022-01-18 11:00]

வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரால் உந்துருளி ஒன்று தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு ஒன்பது முப்பது மணி அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஆளுங்கட்சி எம்.பிக்களுடன் பிரதமர் சந்திப்பு!
[Tuesday 2022-01-18 11:00]

ஆளுங்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட சந்திப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் புதிய அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்ததன் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றது.


புதிதாக மரபணு மாற்றக் கொரோனா வைரஸ்கள் உருவாக வாய்ப்பு - கனடிய நிபுணர்கள் எச்சரிக்கை!
[Monday 2022-01-17 19:00]

ஒமக்ரோன் வகை மரபணு மாற்றக் கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் புதிதாக மரபணு மாற்றக் கொரோனா வைரஸ்கள் உருவாக வாய்ப்புள்ளது என கனேடிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


ஐந்தாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் ஆபத்து!
[Monday 2022-01-17 19:00]

ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக நாட்டில் ஐந்தாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.


பேராயரை பொலிஸ்மா அதிபராக நியமியுங்கள்!
[Monday 2022-01-17 19:00]

பொலிஸ் மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வழங்க வேண்டுமென ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பிரதானி கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


ஆனந்தசங்கரிக்கு கோவிட் தொற்று!
[Monday 2022-01-17 19:00]

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் சுகவீனம் அடைந்த நிலையில் நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா