Untitled Document
April 27, 2024 [GMT]
மன்னாரில் ஓடு பிரித்து இறங்கிய கொள்ளையர்களின் தாக்குதலில் மூவர் படுகாயம்! - பணம், நகைகள் திருட்டு Top News
[Friday 2016-01-22 19:00]

மன்னார்- எழுத்தூரில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீடு ஒன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கி விட்டு, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை, பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


முள்ளியவளை உழவர் விழாவில் பங்கேற்கிறார் கவிஞர் வைரமுத்து!
[Friday 2016-01-22 19:00]

முல்லைத்தீவில் நடக்கவுள்ள வடமாகாண விவசாய அமைச்சு நடத்தும் உழவர் விழாவில் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து பங்கேற்கவுள்ளார். வட மாகாண அமைச்சின் ஏற்பாட்டில் நாளை முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் உழவர் விழா இடம்பெறவுள்ளது. இந்தத நிகழ்வில் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். உழவர்களை கௌரப்படுத்தும் இவ்விழாவில் சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.


சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த யாழ். பொலிசாருக்கு பிரித்தானியா உதவி!
[Friday 2016-01-22 19:00]

யாழ்ப்பாண பொலிசாருக்கு பிரித்தானியா உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த யாழ்ப்பாண பொலிசாருக்கு பிரித்தானியா, ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த உதவிகள் வழங்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.


கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - ஊழியர்களின் உரிமைகளைப் பறிக்கும் நிர்வாகம் Top News
[Friday 2016-01-22 19:00]

கிளிநொச்சி அறிவியல் நகா் பகுதியில் அமைந்துள்ள வானவில் (மாஸ்) ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஊழியா்கள் இன்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிய ஆளணி முகாமையாளா் ஒருவர் காரணமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிா்ப்புத் தொிவித்தே தாங்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக ஊழியா்கள் தொிவித்துள்ளனா்.


ஜனாதிபதி பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது!
[Friday 2016-01-22 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக் கொண்டிருந்த வாகனம் பொரலஸ்கமுவ, வெரஹெர பகுதியில் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்துச் சம்பவத்தினால் ஜனாதிபதிக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஐ.நா அதிகாரிகளுடன் விக்னேஸ்வரன் கலந்துரையாடல்! Top News
[Friday 2016-01-22 18:00]

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதி லயோரி விசேபேர்க் உள்ளிட்ட குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினர். வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், வடமாகாண மக்களின் பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கை புலம்பெயர் தமிழர்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.


யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்களின் கல்வீச்சில் பெண் காயம்!
[Friday 2016-01-22 18:00]

யாழ்.போதனா வைத்தியசாலையில் சில்லறைப் பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வரும் இளம்பெண் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதில் அந்தப் பெண் தலையில் படுகாயமடைந்தார். வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் மேற்படி பெண் வியாபாரம் செய்தபோது, பெண்ணை வெளியில் செல்லுமாறு கூறி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரட்டினர்.


சாவகச்சேரியில் 11 பேரைக் கடித்துக் குதறிய வெறிநாய்!
[Friday 2016-01-22 18:00]

சாவகச்சேரி சிவன் கோவில் பிரதேசத்தில் 11 பேரை கடித்த விசர் நாய், இன்று இறந்துவிட்டது. இந்த விசர் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட 11 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில், நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேரையும் கடித்த நாய், இன்று காலையில் இறந்துவிட்டதையடுத்து, அங்கு சென்ற தென்மராட்சிப் பிரதேச கால்நடை வைத்தியதிகாரி க.இரகுநாதன், நாயின் தலையை வெட்டி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பியுள்ளார். வீடொன்றில் வளர்க்கப்பட்ட இந்த நாய் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேரையே கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளியேன்! - ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டம்
[Friday 2016-01-22 07:00]

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய சம்பந்தன் தலைமையில் உழைப்போம்! - விக்னேஸ்வரன் Top News
[Friday 2016-01-22 07:00]

அரசியல் தீர்வு தொடர்பாக ஒருமித்து செயற்படுவோம். எல்லோருமாக சேர்ந்து மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய தலைவர் சம்பந்தன் தலைமையில் உழைப்போம் என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.


பேரவை உள்ளி்ட்ட அனைத்து தரப்புகளினதும் கருத்துகளை பெற்றே தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படும்! - கூட்டமைப்பு முடிவு Top News
[Friday 2016-01-22 07:00]

தமிழ் மக்கள் பேரவை உட்பட அனைத்து தமிழ்த் தரப்புக்களினதும் கருத்துக்கள் பெறப்பட்டே அரசியல் தீர்வுத் திட்டம் தயா ரிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.


காணாமற்போனோர் தொடர்பான ரணிலின் அறிவிப்பு குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்புவோம்! - சம்பந்தன்
[Friday 2016-01-22 07:00]

காணாமல் போனோர் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து அந்த பிரச்சினைக்கான தீர்வாகாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக காணாமற்போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடப்பட்ட போது, கருத்து வெளியிட்ட பெண் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறிய கருத்தினால் மிகவும் மனவேதனையடைந்துள்ளதாகவும் அவருடைய பேச்சு குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் கேட்டார்.


ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்! - ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
[Friday 2016-01-22 07:00]

ஐ. நா மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை முழுமையாக அமூல்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை வரவேற்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய குழு தெரிவித்துள்ளது.


தமிழர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி! - சுவிஸ் பேட்டியில் ரணில்
[Friday 2016-01-22 07:00]

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் ஆரோக்கியமான முன்னேற்றத்தை கண்டிருப்பதாகவும் குறுகிய காலத்துக்குள் இவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்து தலைநகர் டாவோஸ் நகரில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு உள்ளூர், வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்து பேசினார்.


முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறார் ஹசன் அலி?
[Friday 2016-01-22 07:00]

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹாபிஸ் பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை நியமிக்க கட்சித் தலைமை எடுத்த தீர்மானத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.


அரசியலுக்கு வரத் தயார்! - கோத்தபாயவின் அதிரடி அறிவிப்பு
[Friday 2016-01-22 07:00]

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கோத்தபாய உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளர் வெளிநாட்டுக்கு ஓட்டம்!
[Friday 2016-01-22 07:00]

அமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றிய தமயந்தி ஜயரத்ன, எவ்விதமான முன்னறிவித்தல்களும் இன்றி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தற்போதைய ஆட்சியில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றினார்.


கூட்டு எதிரணியுடன் கைகோர்க்கிறார் சோமவன்ச அமரசிங்க!
[Friday 2016-01-22 07:00]

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இயங்கும் கூட்டு எதிரணியுடன் கைகோர்க்கவுள்ளதாக தெரியவருகிறது. மக்கள் சேவகர்கள் கட்சியை ஸ்தாபித்த அமரசிங்க, தினேஷ் குணவர்தன மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளுடன் அண்மையில் பேசியுள்ளார்.


கிழக்கு பல்கலைக்கழக புதிய உபவேந்தராக கலாநிதி ஜெயசிங்கம் நியமனம்!
[Friday 2016-01-22 07:00]

கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக கலாநிதி ஜெயசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்காக நியமன கடிதம் நேற்று வழங்கப்பட்டதாக கிழக்கு பல்கலைக்கழக செய்திகள் தெரிவித்தன. கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராகவும் பீடங்களின் தலைவராகவும் கலாநிதி ஜெயசிங்கம் இருந்து வருகின்றார்.


ஹுசேன் இலங்கைக்கு வருவது , தேனீர் குடித்து விட்டு செல்வதற்கல்ல..!
[Thursday 2016-01-21 23:00]

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருவது , தேனீர் குடித்து விட்டு செல்வதற்கல்ல. சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காகவே மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகின்றார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களை மறைத்து கொள்வதற்கு உள் நாட்டில் போலியான பிரசாரங்களை செய்து வருகின்றது. அரசியலமைப்பு விடயத்தில் மேற்குலக நாடுகளின் தேவைகளும் புலிகளின் கொள்கைகளுமே காணப்படுகின்றன. ஆகவே இன்று நாடு பேராபத்தில் சிக்குண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தெளிவுப்படுத்துகையிலேயே பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.


ஒற்றையாட்சி முறையை ஏற்கப்போவதில்லை - அதியுச்ச சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றே வேண்டும்: - இரா.சம்பந்தன் தெரிவிப்பு
[Thursday 2016-01-21 22:00]

நீண்டகாலமாக புரையோடிப்யோருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஐக்கிய இலங்கைக்குள் பகிரப்பட்ட இறையாண்மையில் அதியுச்ச சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றே அவசியமாகும். இதனையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஒற்றை ஆட்சிக் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சூளுரைத்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிடக்கூடாது. முஸ்லிம்களையும் அரவணைத்துக்கொண்டு சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளாது நீடித்த நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளவேண்டும். எமது மக்கள் ஏற்காத எதனையும் நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லையென்பது உறுதியானதெனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.


கனடா
[Thursday 2016-01-21 21:00]

கனடாவின் பிரம்டன் தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல்


ஓன்ராறியோ மாகாணசபையில் தமிழர் மரபுரிமை நாள் கொண்டாடப்படவுள்ளது: Top News
[Thursday 2016-01-21 21:00]

ஒன்ராறியோ சட்டமன்றத்தில் ஒன்றாரியோ முன்னேற்றவாத கண்சவேட்டிவ் கட்சி நடாத்தும் தமிழர் மரபுரிமை மாத நிகழ்வுகள் ஜனவரி 28ம் திகதி வியாழக்கிழமை ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. மாலை 8 மணிக்கு ஒன்றாரியோ சட்டமன்ற வளாகத்தில் இடம்பெறும். ஒன்றாரியோ மாகாண கண்சவேட்டிவ் கட்சியின் அவைத்தலைவர் திரு. பற்றிக் பிறவுன் அவர்களும் பல மாகாணசபை உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.


தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுடைய கருத்துக்களை பெற்று அரசியல் யாப்பு யோசனைகளை முன்வைக்க வேண்டும்:
[Thursday 2016-01-21 21:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுக்குள் கலந்து ஆலோசித்து அரசியல் யாப்பு யோசனையை முன்வைக்காது தமிழ் மக்களுடைய கருத்துக்களை பெற்று அதனடிப்படையில் அரசியல் யாப்பு யோசனைகளை முன்வைக்க வேண்டும் என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.


தமிழ் மக்கள் பேரவையிலிருந்து விலகப்போவதில்லை: - முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு
[Thursday 2016-01-21 13:00]

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து தாம் ஒரபோதும் விலகப்போவதில்லையென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமையை ஏற்றுக்கொண்டதையடுத்து உருவாகியுள்ள நிலைமை தொடர்பாக, வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை மாலை வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சருடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இங்கு வடமாகாண சபை உறுப்பினர் சிலரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


இந்தியக் கடற்படை விமானந்தாங்கி போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது!
[Thursday 2016-01-21 12:00]

இந்தியக் கடற்படையின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான-


சட்டவிரோதமாக நியூசிலாந்து செல்ல முயன்ற இலங்கையர்கள் தமிழ்நாட்டில் கைது!
[Thursday 2016-01-21 12:00]

சட்டவிரோதமான முறையில், படகொன்றின் மூலம் நியூசிலாந்துக்குச் செல்ல திட்டமிட்ட ஆறு இலங்கை அகதிகளை, 'கியூ' பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் ராயனூரிலுள்ள முகாமிலிருந்து கே. ஜயராஜ் (வயது 34), ஏ.சந்திரகுமமார் (வயது 36) ஆகிய இருவரும் கோட்டப்பட்டிலுள்ள இலங்கை முகாமில் இருந்து சி.பிரதீபன் (வயது 27), ஆர்.பிரபு (வயது 25) மற்றும் எம்.பிரதீப் (வயது 21), கரூர் மாவட்டத்திலுள்ள கருமத்தப்பட்டியின் முகாமிலிருந்து எஸ்.ஸ்ரேஸ்வரராஜா (வயது 34) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்துக்கு தலைமை தாங்கி ஜயராஜ் என்பவர், படகின் மூலம் நியூசிலாந்துக்குச் செல்வதற்கு ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 1 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


போர்க்குற்ற விசாரணைக்கு முன்னோடியே புதிய அரசமைப்பு என்கிறார் பீரிஸ்!
[Thursday 2016-01-21 12:00]

போர்க்குற்ற விசாரணைக்கு முன்னோடியே புதிய அரசமைப்பு!: பீரிஸின் புதிய கண்டுபிடிப்பு! போர்க்குற்ற விசாரணைக்கு தேவையான நடவடிக்கைகளை வெளிப்படையாக முன்னெடுத்தால் அதற்கு எதிர்ப்பு வலுக்கும் என்பதால், 'புதிய அரசமைப்பு

Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா