Untitled Document
May 11, 2024 [GMT]
கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரன் பிரதி அமைச்சர் பதவிக்காக மகிந்தவின் பக்கம் பாய்ச்சல்! Top News
[Friday 2018-11-02 18:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சற்றுமுன்னர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


பழைய குரோதங்கள், பின்னணிகளை மறந்து ஒன்றுபட அழைக்கிறார் விக்கி!
[Friday 2018-11-02 18:00]

பழைய குரோதங்கள் மற்றும் கசப்பான சம்பவங்களைப் புறந்தள்ளி கொள்கை அடிப்படையில் கட்சிகள் ஒன்று சேர்ந்து செயற்படுவது அவசியம் என்று, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்வி பதில் பகுதியில் கனேடிய ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


கூட்டமைப்பு நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும்! - பொது அமைப்புக்கள் கோரிக்கை
[Friday 2018-11-02 18:00]

இலங்கையில் ஆட்சிப் பொறுப்பைத் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்ற நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனையுடன் ஆதரவை வழங்குவது தொடர்பில் கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


மைத்திரியின் குட்டு வெளிப்பட்டது - அம்பலப்படுத்தினார் நாமல்!
[Friday 2018-11-02 18:00]

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நான்கைந்து மாதங்களாகப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் என்டிடீவிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச - தமிழர்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளது: - விஜய் தணிகாசலம்
[Friday 2018-11-02 18:00]

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் மற்றும் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டமை குறித்து ஒண்டாரியோ மாகாணத்தின் முதல் தமிழ் பேசும் மாகாணசபை உறுப்பினர்களில் ஒருவரனான Scarborough-Rouge Park தொகுதியின் மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் செவ்வாய் கிழமை உரையாற்றினார்


எதிர்பாராதவர்கள் அரசில் இணைவார்கள்! - என்கிறார் நிமால்
[Friday 2018-11-02 18:00]

இதுவரை எவரும் எதிர்பார்த்திராத சிலர், எதிர்வரும் நாட்களில், அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார். இவ்வாறு அரசாங்கத்தில் இணைந்துகொள்ள உள்ளவர்கள் தொடர்பில், இன்றோ அல்லது நாளையோ தெரிந்து கொள்ள முடியுமென்றும், அமைச்சர் தெரிவித்தார்.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


ஜனாதிபதி மைத்திரியுடன் ஐ.நா பொதுச் செயலர் பேச்சு!
[Friday 2018-11-02 18:00]

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குடாரெஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று இரவு, தொலைபேசியில் ​தொடர்புகொண்டு பேசியுள்ளார். இலங்கையில் சட்டத்தை நிலைநிறுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ஐ.நா பொதுச் செயலாளர், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.


ஐதேமு அரசாங்கம் மீண்டும் வருமானால், தமுகூ, ஸ்ரீமுகா, அஇமகா ஆகிய சிறுபான்மை கட்சிகளே காரணம்: -மனோ கணேசன்
[Friday 2018-11-02 18:00]

திங்கட்கிழமை சவாலில் வெற்றி பெற்று, மீண்டும் ரணில் அரசாங்கம் உருவாகுமனால், அதற்கு பிரதான காரணம் ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று சிறுபான்மை கட்சிகளே பிரதான காரணம். நாங்கள் தடம் மாறி இருந்தோமானால், இந்நேரம் நிலைமை தலைகீழாக மாறி இருக்கும்.


அட்மிரல் விஜேகுணவர்த்தனவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2018-11-02 18:00]

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்யுமாறு, கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார். ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதற்கு முன்னர் அவரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மகிந்த பிரதமரானதும், நீதிமன்ற உத்தரவை மீறி நாயாறில் புத்தர் சிலை!
[Friday 2018-11-02 18:00]

முல்லைத்தீவு, செம்மலை- நாயாறு, நீராவியடி பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் திடீரென புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் நேற்று இச்சிலை நிறுவப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.


தனது அமைச்சில் கடமையாற்றும் சம்பிக்க! Top News
[Friday 2018-11-02 18:00]

பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இன்று தனது அமைச்சுக்கு சென்று கடமைகளில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.


ஒரு எம்.பிக்கு 50 கோடியும், அமைச்சர் பதவியும்! - மகிந்த அணியின் பேரம்
[Friday 2018-11-02 18:00]

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை உறுதிப்படுத்த, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 50 கோடி ரூபாய் பேரமாக பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடிய ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


குடத்தனை தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணும் மரணம்!
[Friday 2018-11-02 18:00]

குடத்தனை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் கடந்த 29ஆம் திகதி அதிகாலை புகுந்த தாக்குதலாளி உறக்கத்தில் இருந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த கணவன் -மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்திருந்தனர்.


ரணிலைச் சந்திக்க அலரி மாளிகைக்குச் சென்ற கோத்தா! - மீண்டும் பரபரப்பாகும் அரசியல்
[Friday 2018-11-02 09:00]

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்‌ஷ நேற்று இரவு ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு தொடர்பாகவே இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன்போது ரணிலின் பாதுகாப்பு தொடர்பாக கோத்தாபய உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மஹிந்தவின் நியமனம் தமிழர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து! - ஒன்றாரியோ பாராளுமன்ற உறுப்பினர் விஜய்
[Friday 2018-11-02 09:00]

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளது, இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானது என ஒன்றாரியோ பாராளுமன்றத்தின், ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் கொன்செர்வேர்ட்டிவ் கட்சி உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


ஆளுநர் மாற்றம் குறித்து எனக்குத் தெரியாது! -ரெஜினோல்ட் குரே
[Friday 2018-11-02 09:00]

வட மாகாணத்தின் ஆளுநர் மாற்றம் தொடர்பில் தனக்கு இதுவரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநரான ரெஜினோல்ட் கூரே மாற்றப்பட்டு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.


ஐதேக மீண்டும் பதவிக்கு வருமானால் அதற்கு சிறுபான்மைக் கட்சிகளே காரணம்! - மனோ கணேசன்
[Friday 2018-11-02 09:00]

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்குமானால், அதற்கு சிறுபான்மை கட்சிகளே முக்கிய காரணமாக இருக்கும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,


அமைச்சர் பதவிகளை ஏற்குமாறு கூட்டு எதிரணியினரை கெஞ்சும் ஜனாதிபதி!
[Friday 2018-11-02 09:00]

அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறு கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தார்.


முன்னாள் போராளியை விசாரணைக்கு அழைக்கிறது ரிஐடி!
[Friday 2018-11-02 09:00]

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 05ஆம் திகதி அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அவர் சமூகமளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.முல்லைத்தீவு-புதியபூமி வீதி தேவிபுரத்தில் வசிக்கும் தம்பையா லோகேஸ்வரன் என்ற முன்னாள் போராளிக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நாங்களும் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போம்! - ரம்புக்வெல
[Friday 2018-11-02 09:00]

நாடாளுமன்றம் கூடும்போதுபெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நாங்களும் தயாராக இருக்கின்றோம் என்று அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது, தாம் 124 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போமென ஐக்கிய தேசிய கட்சி அறிவித்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் நேற்று இதனை குறிப்பிட்டுள்ளார்.


பிரபாகரனுக்கு நிகரானவராம் ரணில்! - சிங்கள ராவய
[Friday 2018-11-02 09:00]

சர்வதேச சமூகம் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு, அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகரானவர் என்பதே காரணம் என்று சிங்கள ராவய தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற, சிங்கள ராவய அமைப்பின் ஊடகச் சந்திப்பில் அதன் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.


சீனத் தலையீடு குறித்து தெரியவில்லை! - சரத் பொன்சேகா
[Friday 2018-11-02 09:00]

இலங்கையில் தற்போதைய அரசியல் நெருக்கடியில் சீனாவின் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


வவுனியாவில் வங்கியில் வைப்பிலிடச் சென்ற 10 இலட்சம் ரூபா கொள்ளை!
[Friday 2018-11-02 09:00]

வவுனியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட 10 இலட்சம் ரூபா பணம்,நேற்று மாலை 6.30 மணியளவில் இனந்தெரியாத இரு நபர்களினால் கொள்ளைக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மீண்டும் மரண பயத்தில் திகைத்து நிற்கும் மக்கள்! - கிறிஸ்தவ அமைப்புகள் கூட்டாக அறிக்கை
[Thursday 2018-11-01 19:00]

நாட்டில் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய ஜனநாயக மீறல் இடம்பெற்று, நீதிக்கும் உண்மைக்கும், மானிட நேயத்துக்கும் எதிரான அவலமான சூழல் வலிந்து ஏற்படுத்தப்பட்டு, சட்டம், ஒழுங்கு, அரசியல் சாசனம் என்பவை முடக்கப்பட்டு, துன்பமிக்க வன்முறைச் சூழலொன்று, நாட்டின் பொறுப்பு மிக்கவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டமையானது, மிகவும் வேதனைக்கும் ஏமாற்றத்துக்குமுரிய விடயமென, இலங்கை மெதடிஸ்த திருச்சபை, வடக்கு, கிழக்கு திருமாவட்ட அவை, நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக்குழு ஆகியவை இணைத்து, விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் 2 அமைச்சர்கள், 5 இராஜாங்க அமைச்சர்கள், 6 பிரதியமைச்சர்கள் பதவியேற்பு!
[Thursday 2018-11-01 19:00]

தயாசிறி ஜெயசேகர, துமிந்த திசநாயக்க உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் மற்றும் சில பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.


ஜனநாயகம், மனித உரிமைகளை முக்கியத்துவப்படுத்திய அமெரிக்காவின் புதிய தூதுவர்!
[Thursday 2018-11-01 19:00]

ஜனநாயகம் மக்களை வலுப்படுத்தும் மற்றும் மனித உரிமைகள் மதிக்கப்படுவது அனைவருக்கும் உறுதிப்படுத்தப்படும் எதிர்காலமொன்றை உறுதிப்படுத்த நாம் ஒன்றுபட்டு உதவ முடியும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்தார்.


அரசியல் கைதிகளுக்குப் புனர்வாழ்வு அளிக்குமாம் மஹிந்த அரசு! - நாமல் ருவிட்
[Thursday 2018-11-01 19:00]

புதிய அரசாங்கம் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதுடன் அவர்களின் நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உதவிபுரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை - இரண்டாவது சந்தேகநபர் விடுதலை!
[Thursday 2018-11-01 19:00]

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கின் இரண்டாவது சந்தேகநபரை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா