Untitled Document
April 26, 2024 [GMT]
173 ரூபாவைத் தாண்டியது அமெரிக்க டொலர்!
[Monday 2018-10-22 18:00]

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதியின்படி இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 173.38 ரூபாயாக பதிவாகியுள்ளது.


'அம்மாச்சி'யை அழிக்க அங்கஜன் திட்டம்! - பெயரை மாற்றுவதில் மத்திய அரசு விடாப்பிடி
[Monday 2018-10-22 08:00]

வடக்கு மாகாணத்தில் பாரம்பரிய உணவுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள உணவகமான அம்மாச்சி உணவகங்களின் பெயர்களை மாற்றம் செய்வது தொடர்பாக ஆராய்வதாக, விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


போர்க்குற்றவாளிகள் இனியும் தப்பிக்க முடியாது! - யஸ்மின் சூக்கா
[Monday 2018-10-22 08:00]

இலங்கை இராணுவ அதிகாரி லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலியிலிருந்து திருப்பியனுப்புவதற்கு ஐ.நா எடுத்துள்ள தீர்மானத்தை சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா வரவேற்றுள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரான யஸ்மின் சூக்கா இலங்கை இராணுவ அதிகாரி தொடர்பான விவகாரம் குறித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளார்


அரசியல் கைதிகள் குறித்த கூட்டமைப்பின் பிரேரணை! - ஜேவிபியின் நிலைப்பாடு
[Monday 2018-10-22 08:00]

அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் கொண்டு வரவுள்ள பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னரே, அது தொடர்பான தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க முடியும் என்று, ஜே.வி.பின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


'ஒருமித்த நாடு' பதம் அரசின் தன்மையை சமஸ்டியின் பக்கம் நகர்த்தும்! சுமந்திரன்
[Monday 2018-10-22 08:00]

புதிதாக தயாரிக்கப்படும் அரசமைப்பில், இலங்கை அரசின் தன்மையை விளங்கப்படுத்தப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ள 'ஒருமித்த நாடு' (ஏகிய ராஜ்ஜிய) என்ற சொற்றொடர் மூலமாக, இலங்கை அரசின் தன்மை, ஒற்றையாட்சித் தன்மையிலிருந்து சமஷ்டியின் பக்கமாக நகர்ந்து விடும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தெரிவித்தார்.


கோண்டாவிலில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!
[Monday 2018-10-22 08:00]

யாழ்ப்பாணம்- கோண்டாவில் மேற்கு, உப்புமடம் சந்திப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்து நின்ற முச்சக்கர வண்டி என்பவற்றின் மீது நேற்றிரவு 7.15 மணியளவில் வாள்வெட்டுக் குழுவினல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டு உந்துருளியில் வருகை தந்த ஐந்து பேரே இத்தாக்குதலை மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.


அயல்நாட்டு அரசியல்வாதிகளை கொல்வதற்காக றோ உருவாக்கப்படவில்லை! - சரத் பொன்சேகா
[Monday 2018-10-22 08:00]

இந்திய புலனாய்வு அமைப்பான றோவிற்கு அயல்நாட்டு அரசியல்வாதிகளை கொலை செய்ய வேண்டிய தேவையில்லை என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


அமைச்சரவைக்குள் 2 கறுப்பு ஆடுகள் கண்டுபிடிப்பு!
[Monday 2018-10-22 08:00]

அமைச்சரவையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பாக ஊடகங்களுக்கு அறிவித்த அமைச்சர்கள் இருவர், யார் என்று இனங்கண்டுள்ளோம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், அவ்விருவரையும் அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.


இன்றும் விசாரணைக்கு வந்தார் டிஐஜி நாலக சில்வா!
[Monday 2018-10-22 08:00]

பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா, குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார். கடந்த வியாழன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்த போது, அவரிடம் இரண்டு நாட்களும் 19 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.


விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி அழைப்பு!
[Monday 2018-10-22 08:00]

மாகா


இந்தியா - மைத்திரி இடையே மோதலை ஏற்படுத்த முனைகிறது ஐதேக! - எஸ்.பி.திஸாநாயக்க
[Monday 2018-10-22 08:00]

இந்தியாவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான உறவுகளில் பிரிவினை ஏற்படுத்த ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டு வருவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த தினங்களில் வெளியான றோ உளவு சேவை தொடர்பான செய்தியும் ஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மூடிய அறைக்குள் தனியாக நடத்திய பேச்சு - ரணிலிடம் மோடி கூறியது என்ன?
[Sunday 2018-10-21 18:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல், இந்திய பிரதமரைச் சந்தித்தார்.


முள்ளிக்குளத்தில் பொதுமக்களின் வீதியை தடை செய்த கடற்படை! - முரண்பட்டதால் பதற்றம்
[Sunday 2018-10-21 18:00]

முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாம் ஊடாகச் செல்லும் பிரதான வீதியை கடற்படையினர் திடீரென முட்கம்பிகளால், மறித்து அடைத்தமையினால் இன்று காலை முதல் முள்ளிக்குளத்தில் நிலை கொண்டுள்ள கடற்படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினை சுமூக நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்தார்.


புதிய கட்சியை ஆரம்பித்தார் அனந்தி சசிதரன்! Top News
[Sunday 2018-10-21 18:00]

வடக்கு மாகாண சபையின் அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில், இந்தப் புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில், அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்றது.


இரண்டு ஆண்டுகளில் 11 ஆயிரம் வெடிபொருட்களை அகற்றியது ஸார்ப்!
[Sunday 2018-10-21 18:00]

வடபகுதியில் ஜப்பானின் நிதியுதவியுடன் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபடும் ஸார்ப் (Sharp) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது கடந்த இரு ஆண்டுகளில் 11,086 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக அந்த நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.


மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டம்! Top News
[Sunday 2018-10-21 18:00]

அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் . பஸ் நிலையம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இரகசியங்களை வெளியிட்ட அமைச்சர்களைக் கண்டறிய விசேட விசாரணை ஆரம்பம்!
[Sunday 2018-10-21 18:00]

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் அமைச்சர்களைக் கண்டறிவதற்கான விசேட விசாரணைகள் ஜனாதிபதியின் கட்டளைக்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த அமைச்சரவை சந்திப்பின் போது, இந்தியாவின் ​


மகிந்தவைப் பிரதமராக நியமிக்கும் யோசனைக்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பு!
[Sunday 2018-10-21 18:00]

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைக்க கூட்டு எதிர்க் கட்சியினர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்துள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


றோவிடம் பணம் பெற்ற அமைச்சர்களின் பெயர்களை வெளியிடக் கோருகிறார் நாமல்!
[Sunday 2018-10-21 18:00]

இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவிடம் பணத்தை பெற்ற அமைச்சரவையில் இருக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களை ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


11 கிலோ மாவாவுடன் ஒருவர் கைது!
[Sunday 2018-10-21 18:00]

தெல்


யாழ். போதனா வைத்தியசாலை படுகொலையின் 31 ஆவது நினைவேந்தல்! Top News
[Sunday 2018-10-21 18:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் , இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மருத்துவர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று காலை நடைபெற்றது.யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில், வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மருத்துவர்கள், தாதியர்கள், வைத்தியசாலைப் பணியாளர்கள், உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.


படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை நினைவுகூரும் நிகழ்வு! Top News
[Sunday 2018-10-21 18:00]

கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில், பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், யாழ். பல்கலைக்கழக மாணவர்களால், நேற்று நினைவு கூரப்பட்டது.


தோசையை போடத் தெரியாதவர்கள் தான் தமிழர்களின் பிரதிநிதிகள்! - முதலமைச்சர் காட்டம்
[Sunday 2018-10-21 08:00]

அர


5 வருடங்களுக்கு முன் நான் செய்த பாவம்! - மாவை சேனாதிராசா
[Sunday 2018-10-21 08:00]

விக்னேஸ்வரனை வட மாகாண முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


பலாலி, மட்டக்களப்புக்கு தென்னிந்தியாவில் இருந்து விமான சேவை!
[Sunday 2018-10-21 08:00]

தென்-இந்தியாவிலிருந்து பலாலி மற்றும் மட்டக்களப்புக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக, இந்தியாவின் உள்துறைள் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


இனப்பரம்பல் மாற்றத்தை தடுக்க முடியாமல் போனதே ஆயுதப் போராட்டத்துக்குக் காரணம்! - சுமந்திரன்
[Sunday 2018-10-21 08:00]

70 ஆண்டுகளுக்கு தொடர்ந்த இனப் பரம்பல் மாற்றத்தை பேச்சுக்கள் ஒப்பந்தங்கள் மூலம் தடுக்க முடியாமல் போனதாலேயே இறுதியில் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் அந்த போராட்டமும் தோல்வியிலேயே முடிந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


சிறைச்சாலைக் கூரையில் 400 கைதிகள் போராட்டம்!
[Sunday 2018-10-21 08:00]

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இன்று அதிகாலை தொடக்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். சிறைச்சாலை கூரை மீதேறி சுமார் 400 கைதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலையின் சில நடவடிக்கைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் 1200 கைதிகளை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


காங்கேசன்துறை, மட்டக்களப்பு ரயில்களில் மோதி யானைகள் பலி!
[Sunday 2018-10-21 08:00]

இருவேறு ரயில் விபத்துக்களில் இரண்டு யானைகள் உயிரிழந்தன. மேலும் ஒரு யானை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் ரயிலுடன், அம்பன்பொல பகுதியில் இரண்டு யானைகள் மோதியுள்ளன. அதில் ஒரு யானை உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு யானை பலத்த காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா