Untitled Document
May 5, 2024 [GMT]
இன்று வருகிறது ஐரோப்பிய ஒன்றிய குழு!
[Monday 2019-08-05 07:00]

இலங்கையில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கண்ஐரோப்பிய ஒன்றியக்குழு காணிப்பு பயணம் ஒன்றை இந்த வாரத்தில் மேற்கொள்கிறது. இன்று முதல் 13ஆம் திகதிவரை இந்த பயணம் இடம்பெறவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமான பிரசல்ஸில் இருந்து இந்தக்குழு இலங்கைக்கு வருகிறது. இந்தக்குழு தேர்தல் கண்காணிப்பு பணிகள் தொடர்பில் இலங்கையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளது.


ஆட்சிமாற்றத்தின் பலன்கள் கிட்டவில்லை!
[Monday 2019-08-05 07:00]

ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல கிட்டவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெறவில்லை என்பதே உண்மையான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


இரு வாரங்களுக்கு ஒருமுறை புலனாய்வு கூட்டம்!
[Monday 2019-08-05 07:00]

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புலனாய்வுப் பிரிவை கூட்டி பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மதிப்பீடுகளை செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.


காணாமல்ஆக்கப்பட்டவர்களை தேடும் சங்கத்தின் உபதலைவி மீது தாக்குதல்!
[Monday 2019-08-05 07:00]

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் தலைவியும், வட- கிழக்கின் எட்டு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் அமைப்பின் உப தலைவியுமான அமலநாயகி அமல்ராஜும், அவரது மகளும் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.


கோத்தாவுக்கு நீடிக்கும் சிக்கல்!
[Monday 2019-08-05 07:00]

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் கோத்தபாய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் தாம் இலங்கையின் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக அவர் கூறியிருப்பதும் தற்போது பிரச்சினையை தூண்டிவிட்டிருக்கிறது.


செட்டிக்குளம் விபத்தில் இளைஞன் பலி! - மூவர் காயம்
[Monday 2019-08-05 07:00]

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் நேற்றிரவு இரு மோட்டர் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!
[Monday 2019-08-05 07:00]

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாவதாக, பரீட்சைத் திணைக்களம் அளிவித்துள்ளது. ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளது. நாடு தழுவிய ரீதியில் இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 315 பரீட்சை இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


மூன்றாவது அணி அமைக்க மைத்திரி- சஜித் இரகசிய கூட்டு!
[Sunday 2019-08-04 18:00]

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ ஆகி­யோரின் கூட்டில், பல­மான மூன்­றா­வது அணி­யொன்றை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் திரை­ம­றைவில் இடம்­பெற்று வரு­வ­தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கொலைக் குற்றச்சாட்டு இல்லாதவருக்கு ஆதரவு!
[Sunday 2019-08-04 18:00]

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஒருபோதும் எதிராக செயற்படமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.


விபத்தில் இளைஞன் பலி! மற்றொருவர் படுகாயம்
[Sunday 2019-08-04 18:00]

திருகோணமலை, துவரங்காடு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


காணாமல்போன விமானப்படையின் ராடர்!
[Sunday 2019-08-04 18:00]

இலங்கை விமானப்படையின் எவ்-7 போர் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒரு ராடர் கருவி திருத்தப் பணிகளுக்காக சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளது.இந்த சம்பவம் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


சிறுவனுக்கு எமனாகிய கயிறு!- விளையாட்டு வினையானது
[Sunday 2019-08-04 18:00]

யாழ்ப்­பா­ணம்- தெல்­லிப்­ப­ழை­ பகுதியில் கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் ஒருவர் அதில் சிக்­கி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார். சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளார்.


நெடுங்கேணியில் இளம்பெண் மீது தாக்குதல்!
[Sunday 2019-08-04 18:00]

வவுனியா வடக்கு - நெடுங்கேணியில் பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிப்பு!
[Sunday 2019-08-04 18:00]

இந்த மாதத்தில் நடைபெறும் பல்வேறு முக்கிய மத நிகழ்வுகளை முன்னிட்டு நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். சிலாபம் தலவில் புனித அன்னமாள் ஆலயத்தின் வருடாந்த ஆடி மாதத் திருவிழா இன்று இடம்பெறுகின்றது. அத்துடன், எதிர்வரும் நாட்களில் கண்டி எசல பெரேஹரா மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய த்திதிருவிழா என்பன இடம்பெறவுள்ளன.


வழக்கமான பாதுகாப்பு அறிவுறுத்தல் தான்!
[Sunday 2019-08-04 17:00]

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்க தூதரகம் விடுத்திருந்த எச்சரிக்கை, தமது நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட வழமையான அறிவுறுத்தல் தான் என அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்ளிட்ஸ் தெரிவித்துள்ளார்.


விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மரணம்!
[Sunday 2019-08-04 17:00]

முல்­லைத்­தீவு - முள்­ளி­ய­வளை பூதன் வ­யல் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற விபத்­தில் காய­ம­டைந்த சிறுமி சிகிச்சை பய­னின்றி நேற்று உயி­ரி­ழந்­தார். பிர­தீ­பன் ரிசா­யினி (வயது-7) என்ற சிறு­மியே யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் உயி­ரி­ழந்­துள்­ளார்.


ஐதேகவின் கூட்டணி உடன்பாடு ஒத்திவைப்பு!
[Sunday 2019-08-04 17:00]

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில், பங்காளிக் கட்சிகள் இணைந்து உருவாக்கவுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணியை அமைக்கும் நிகழ்வு நாளை இடம்பெறும் என, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், அந்த கூட்டம் மற்றுமொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.


மாகாணசபை தேர்தலுக்கு 10 நாட்களே அவகாசம்!
[Sunday 2019-08-04 17:00]

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தின் உத்தரவு கிடைக்காவிட்டால் இந்த வருடத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாமல் போகும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


சஹ்ரானுடன் பயிற்சி பெற்றவர் கைது!
[Sunday 2019-08-04 17:00]

சஹ்ரானுடன் நுவரேலியாவில் ஆயுத பயிற்சி பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் அநுராதபுரம் மாவட்ட தலைவர் என தெரிவிக்கப்படுகின்றது.


பஸ்கள் மோதி கோர விபத்து -6 பேர் பலி, 52 பேர் படுகாயம்! Top News
[Sunday 2019-08-04 08:00]

களுத்துறை- வஸ்கடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் பலியாகினர். 52 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அமெரிக்கா எச்சரிக்கை - இராணுவம் மறுப்பு!
[Sunday 2019-08-04 08:00]

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.


கீர்த்தியும் விலகினார்!
[Sunday 2019-08-04 08:00]

தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன், தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கைளித்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, தனது பதவியை இராஜினாமா செய்தார். அதற்கு முன்னதாக, ஊவா மாகண ஆளுநர் மார்ஷ்ல் பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கைளித்தமை குறிப்பிடத்தக்கது.


ரணிலின் ஹெலியினால் இருவர் காயம்!
[Sunday 2019-08-04 08:00]

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயணித்த ஹெலிகொப்டரின் காற்றாடிகளில் இருந்து வீசிய காற்றில் மரக் கிளைகள் முறிந்து வீழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் சென்ற வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


பலாலி விமான நிலையத்துக்கு சர்வதேச அங்கீகாரம்!
[Sunday 2019-08-04 08:00]

பலாலி விமான நிலையத்தில் இருந்து சர்வதே விமானங்களை இயக்குவதற்கு சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் (IATA) அனுமதி அளித்துள்ளது என சிவில் விமான சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஐதேக திண்டாட்டம் - மஹிந்த கொண்டாட்டம்!
[Sunday 2019-08-04 08:00]

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நிறுத்துவதா அல்லது கரு ஜயசூரியவை நிறுத்துவதா என்று தெரிவு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடம் திண்டாடுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.


புதிய கூட்டமைப்பு - இன்னமும் முடிவு இல்லை!
[Sunday 2019-08-04 08:00]

புதிய கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் கலந்துரையாடல் மட்டத்திலே உள்ளதாகவும் இன்னும் அது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


முதல் செய்மதிப் படத்தை அனுப்பியது ராவணா! Top News
[Sunday 2019-08-04 08:00]

இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா-1 முதலாவது ஒளிப்படத்தை அனுப்பி வைத்துள்ளது. ஆர்தர் சி கிளார்க் நிலையத்தைச் சேர்ந்த, இலங்கை ஆய்வு விஞ்ஞானிகளான தரிந்து தயாரத்ன, துலானி சமிக்கா ஆகியோரால், ஜப்பானின் கையூஷூ தொழில்நுட்ப நிறுவனத்தினால் இந்த செய்மதி, வடிவமைக்கப்பட்டது.


கருவுடன் மைத்திரி இரகசிய பேச்சு!
[Sunday 2019-08-04 08:00]

சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் உரையாடியுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகக் கரு ஜயசூரியவே களமிறங்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ள நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்தத் தொலைபேசி உரையாடலை ஜனாதிபதி நடத்தியுள்ளார்.

Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா