Untitled Document
April 26, 2024 [GMT]
உயர்நீதிமன்றம் செல்கிறது சுதந்திரக் கட்சி!
[Friday 2019-07-26 07:00]

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் மாகாண சபையை கலைப்பதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவுசெய்துள்ளது.


புலிகள் மீதே முதலில் சந்தேகம்!
[Friday 2019-07-26 07:00]

வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களையே முதலில் சந்தேகப்பட்டோம் என குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.


சர்ச்சை வைத்தியர் ஷாபிக்கு பிணை!
[Friday 2019-07-26 07:00]

குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சிஹாப்தீன் ஷாபி, குருநாகல் நீதிவான் நீதிமன்றத்தினால், நேற்றிரவு 7 மணியளவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு இலட்சத்துக்கு 50ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும், 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.


இழுபறிக்கு முரண்பாடே காரணம்!
[Friday 2019-07-26 07:00]

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் சிங்களத் தலைவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற சந்தேகம் தமிழ் மக்களின் மனங்களில் ஆழமாக பதிந்து விட்டது, பிரதான கட்சிகள் மத்தியில் உள்ள முரண்பாட்டு நிலைமையே புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு பிரதான காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன,தெரிவித்துள்ளார்.


சுயநிர்ணய உரிமையை கோரும் தகுதி உள்ளது!
[Thursday 2019-07-25 19:00]

சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர, பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


வெலிக்கடை படுகொலை நினைவுகூரல்! Top News
[Thursday 2019-07-25 19:00]

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் குட்டிமணி மற்றும் தளபதி தங்கதுரை உட்பட 53 பேர் படுகொலை செய்யப்பட்ட வெலிகடைப் படுகொலையின் 36வது நினைவு தினம் இன்று ரெலோவின் மட்டக்களப்பு காரியாலத்தில் கோவிந்தம் கருணாகரம் தலைமையில் இடம்பெற்றது.


நளினி மகளுக்கு யாழ்ப்பாண மாப்பிள்ளை!
[Thursday 2019-07-25 19:00]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி இன்று காலை வேலூர் பெண்கள் சிறையிலிருந்து ஒரேஞ்ச் நிற பட்டுப்புடவை அணிந்து தலையில் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு புன்னகைத்தபடி வெளியே வந்தார். லண்டனில் தங்கியிருக்கும் ஹரித்ராவுக்கு திருமணம் செய்துவைக்க 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்குத் தொடர்ந்தார்.


பங்காளியாக இருந்து ஏமாற்றுகிறது கூட்டமைப்பு!
[Thursday 2019-07-25 19:00]

சிங்களவர்களை, தமிழ் மக்களின் விரோதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரசாரம் செய்து வருகின்றது. அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து கொண்டு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்கே அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டு வருகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.


மாற்று வேட்பாளராக பீரிஸ், தினேஷ்!
[Thursday 2019-07-25 19:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச, கவர்ச்சிகரமான தலைவராக மாறி வரும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரான தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


தமிழரைப் பந்தாடும் முத்தரப்புகள்!
[Thursday 2019-07-25 19:00]

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மூன்று பிரிவுகளாக பிரிந்து அரசியல் தீர்வு விடயத்தில் தமிழினத்தை பந்தாடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார். புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


ஐ.நா நிபுணர் குறித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு!
[Thursday 2019-07-25 19:00]

சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரை பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதிபதிகள் குழு சந்திக்க ஏற்பாடாகியிருந்தமை தொடர்பாக நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெளிவுபடுத்தியுள்ளார்.


புலனாய்வு பணிப்பாளருக்கு ஆலோசனை!
[Thursday 2019-07-25 19:00]

அரசாங்க புலனாய்வு சேவை தனக்கு கீழ் இல்லாவிட்டாலும் அரசாங்க புலனாய்வு சேவையின் தற்போதைய பணிப்பாளருக்கு, முஸ்லிம் பயங்கரவாதம் தொடர்பில், தான் அறிவுரை வழங்கியதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. அழகக்கோன் தெரிவித்துள்ளார்.


ஆலயத்தில் குளவி கொட்டி பக்தர் மரணம்!
[Thursday 2019-07-25 18:00]

யாழ். ஊரெழு அம்மன் ஆலயத்தின் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்த குளவிக்கூடு உடைந்து அதிலிருந்த குளவிகள் கலைந்து வந்து கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், ஊரெழுவைச் சேர்ந்த ஐயாத்துரை அருந்தவராஜா (63) என்பவரே உயிரிழந்துள்ளார்.


வைரவர் கோவில் அழிப்பு! Top News
[Thursday 2019-07-25 18:00]

யாழ்ப்பாணம், சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள மாவிளந்தையடி ஞான வைரவர் கோவில் நேற்று இரவு இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் இருந்த வைரவர் சிலை உள்ளிட்ட விக்கிரங்களையும் அக்கும்பல் களவாடி சென்றுள்ளது.


புலனாய்வு தகவல் அனுப்பப்படவில்லை!
[Thursday 2019-07-25 17:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர்,சில முக்கியமான புலனாய்வு தகவல்கள் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லதீப் தெரிவித்துள்ளார்.


கோத்தா வழக்கை விசாரிக்க தடை!
[Thursday 2019-07-25 17:00]

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


இந்திய மீனவர்கள் நால்வர் கைது!
[Thursday 2019-07-25 17:00]

வடக்கு கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இயந்திரப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டது, இவர்கள் யாழ். மீன்பிடி அலுவலகத்தின் உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திட்டமிட்ட ஒருவர் இன்னமும் வெளியே!
[Thursday 2019-07-25 07:00]

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு திட்டம் தீட்டியவர்களில் ஒருவர் வெளியில் உள்ளார். பயிற்சி பெற்ற , பயிற்சி வழங்கக் கூடிய ஒருவர் இவ்வாறு வெளியில் இருப்பது அச்சுறுத்தலாகும் என பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார்.


25 இடங்களில் தாக்குதலுக்கு திட்டம்!
[Thursday 2019-07-25 07:00]

ஈஸ்டர் தினத்தன்று, 25 தாக்குதல்கள் நடத்த திட்டம் வகுக்கப்பட்டிருந்தது என்று குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


11 கோடி மோசடி வழக்கில் தலையிடும் பெண்!
[Thursday 2019-07-25 07:00]

யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றினால், தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அந்த நிறுவனத்தின் உத்தியோகத்தரான பெண் விசாரணைகளில் தலையீடு செய்கின்றனர். பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவரது கணக்கிலிருந்த பல மில்லியன் ரூபா பணம் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன” என்று பாரிய நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.


4 மணி நேரம் இரகசிய சாட்சியம்!
[Thursday 2019-07-25 07:00]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, அரச புலனாய்வுத் துறையின் தலைவர், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன நேற்று இரவு 4 மணி நேரம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளார். அவரது சாட்சியம் இரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி வாழ்த்து!
[Thursday 2019-07-25 07:00]

பிரிட்டனின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி வளாகத்தில் மோதல்-9 மாணவர்கள் காயம்! Top News
[Thursday 2019-07-25 07:00]

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒன்பது மாணவர்கள் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தகவல் கொடுத்த சாரதிக்கு 50 இலட்சம்!
[Thursday 2019-07-25 07:00]

சாய்ந்தமருது பகுதியில் சஹ்ரான் குழுவினரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய வாகனச் சாரதிக்கு 50 இலட்சம் ரூபாய் பணப்பாிசை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார். ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கான பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இவர் வழங்கிய தகவலுக்கு அமைய சாய்ந்தமருது பகுதியில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.


வடக்கு ஆளுநரை ஐ.நா பிரதிநிதி சந்திப்பு!
[Thursday 2019-07-25 07:00]

இலங்கைக்கு வந்துள்ள சுதந்திர உரிமைக்கான ஐ.நா விசேட பிரதிநிதி கிளெமென்ட் யலெற்சோசி வூலுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.


சஜித்தின் ஓவியத்தை வரைந்தவருக்கு அரச வேலை! Top News
[Thursday 2019-07-25 07:00]

முல்லைத்தீவு - சப்தகன்னிமார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறநெறிப் பாடசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச இருவருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.


ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பில்லை!
[Wednesday 2019-07-24 18:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்புக்கும் ​தொடர்பு இருப்பதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளில் எந்தச் சாட்சிகளும் கிடைக்கவில்லை என்று குற்றப்புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.


புலி உறுப்பினர் மீது ஜேர்மனியில் வழக்கு!
[Wednesday 2019-07-24 18:00]

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக, ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினருக்கு எதிராக ஜேர்மன் பொலிசார் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட 40 வயதான ஜி. நவநீதன் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா