Untitled Document
May 18, 2024 [GMT]
கறுப்பானது கடல்- கரையில் படியும் கறை! Top News
[Tuesday 2019-08-20 07:00]

முல்லைத்தீவு நாயாறு தொடக்கம் கொக்கிளாய் வரையிலான கடற்பகுதியில், நேற்று பிற்பகல் முதல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடல் நீர் கறுப்பு நிறத்தில் காணப்பட்டுள்ளதுடன், கடற்கரையில் கறுப்பு நிறத்தில் தார் போன்ற கறை படிந்து காணப்படுகிறது.


கோத்தாவுக்கு ஆதரவு- ஈபிடிபி அறிவிப்பு!
[Tuesday 2019-08-20 07:00]

ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிப்பதென நாம் தீர்மானம் எடுத்துள்ளதாக, ஈபிடிபி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளன.


நாளை பேசுகிறார் ரணில்!
[Tuesday 2019-08-20 07:00]

ஐக்கிய தேசியக் கட்சியின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை கலந்துரையாடவுள்ளார். லரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி விஷேட நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஹர்ச டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


உரிமைகோர எவ்வளவு நெஞ்சழுத்தம்?
[Monday 2019-08-19 19:00]

எவ்­வ­ளவு நெஞ்­ச­ழுத்­தம் இருந்­தால் மந்­தி­ரி­ம­னையை உரிமை­ கோ­ரு­ம் ஒரு ஓலை­யு­டன் எமது அரச திணைக்­க­ளத்­துக்கு வந்­தி­ருப்­பார்? என்று கேள்வி எழுப்­பி­யுள்ளார் வடக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.


சவேந்திர சில்வா நியமனம் - அமெரிக்கா கவலை!
[Monday 2019-08-19 19:00]

இலங்கை இராணுவ தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பாக, ஆழ்ந்த கவலையடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புதிய இராணுவ தளபதியின் நியமனம் தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?
[Monday 2019-08-19 19:00]

சிறிலங்கா அதிபர் தேர்தல் களத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவை மட்டும் நாம் குற்றவாளியாகப் பார்க்கவில்லை. இனப்படுகொலைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசினையே(state) நாம் பார்க்கின்றோம். இனப்படுகொலை அரசின் முகமாக ஆட்சிபுரிந்தவர்கள் அனைவருமே இனப்படுகொலையாளிகளாக உள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.


பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரி கைது!
[Monday 2019-08-19 19:00]

பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியான வைத்தியர் சிவரூபன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குறித்த வைத்தியர் தேடப்பட்டு வந்த ஒருவர் என பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோத்தா ஆளப் பொருத்தமானவர் அல்ல!
[Monday 2019-08-19 19:00]

கோத்தாபபய ராஜபக்ஷ நாட்டை வழிநடத்தக் கூடிய வல்லவர் எனத் தான் நினைக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.


விடுதி மீது குண்டுவீச்சு, வாள்வெட்டு!
[Monday 2019-08-19 18:00]

யாழ்ப்பாணம், கொக்குவில்– ஆடியபாதம் வீதியில் உள்ள விடுதி ஒன்றுக்குள் புகுந்த சிலர், பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்தவர்களை வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். புதிதாக திறக்கப்பட்ட குறித்த விடுதியில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கூட்டணியில் இருந்து விலகினார் வெள்ளிமலை!
[Monday 2019-08-19 18:00]

தமிழர் விடுதலைக் கூட்டணியிலுள்ள அனைத்துப் பதவிகளிலும் இருந்தும் தான் விலகியுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.


சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதி! Top News
[Monday 2019-08-19 18:00]

இலங்கையின் 23வது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.


மூன்று தூதுவர்கள் பொறுப்பேற்பு!
[Monday 2019-08-19 18:00]

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளின் மூன்று தூதுவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். நோர்வே நாட்டின் தூதுவர், ட்ரைன் எஸ்கெடல் (Trine Eskedal), பிரித்தானிய தூதுவர் சாரா ஹல்டன் (Sarah Hulton) மற்றும் நெதர்லாந்து தூதுவர் தஞ்சா கோங்க்க்ரிஜ்ப் (Tanja Gonggrijp) ஆகியோரே இன்று பொறுப்பேற்றுள்ளனர்.


நுழைவாயிலுக்காக போராட்டம்!
[Monday 2019-08-19 18:00]

பலாலி விமான நிலைய நுழைவாயில் இருந்த இடத்திலே மீளவும் அமைக்கப்பட வேண்டும் என்றும், இல்லையேல் வயாவிளான் மக்கள் போராட்டத்தில் குதிப்பர் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.


மஹிந்தவை சந்தித்தார் அகாசி! Top News
[Monday 2019-08-19 18:00]

இலங்கைக்கான, ஜப்பானின் முன்னாள் விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசினார். எதிர்க்கட்சித் தலைவரின் விஜேயராம இல்லத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


மட்டு. பல்கலைக்கு எதிராக போராட்டம்! Top News
[Monday 2019-08-19 18:00]

ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருமாறு கோரி, மட்டக்களப்பு – கிரானில், இன்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிரான் - புலிபாந்தகல் சுற்றுவட்டத்தில் ஒன்று கூடிய பௌத்த பிக்குகள், மற்றும் சிங்கள, தமிழ் பொதுமக்கள் மேற்படி கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கஞ்சா பொதிகளை வீசி விட்டு ஓட்டம்!
[Monday 2019-08-19 18:00]

நெல்லியடி – துன்னாலை வீதியில், நேற்று இரவு 11 மணியளவில், 65 கிலோ கஞ்சா பொதிகளை வீசிவிட்டு தப்பிச் சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார், தெரிவித்தனர்.அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், பொலிஸார் கூறினர்.


கோத்தா குறித்து இன்று விசாரணை!
[Monday 2019-08-19 07:00]

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து ஆணைக்குழு இன்று ஆராயவுள்ளது. கோத்தாபய ராஜபக்‌ஷவின் கடவுச்சீட்டின் உண்மைத் தன்மை மற்றும் இலங்கை பிரஜாவுரிமை குறித்து ஆணைக்குழு ஆராயவுள்ளது.


இழுபறியில் தளபதி!
[Monday 2019-08-19 07:00]

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய தளபதியை நியமிப்பது தொடர்பாக இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமிக்கத் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.


பொறுப்புக்கூறி விட்டு போட்டியிடட்டும்!
[Monday 2019-08-19 07:00]

இறுதிப் போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்து விட்டு கோத்தாபய தேர்தலில் போட்டியிடட்டும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


ஒக்ரோபருக்குள் தயாராகி விடும் பலாலி!
[Monday 2019-08-19 07:00]

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், ஒக்டோபர் மாத நடுப்பகுதிக்குள் சேவைகளை ஆரம்பிக்க முடியுமென விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.


ஓடிப்போன கோத்தா போட்டியிட முடியாது!
[Monday 2019-08-19 07:00]

நாட்டை விட்டு ஓடிப்போனவருக்கு நாட்டின் மீது பற்று இருக்கமுடியாது.வேறுநாடொன்றின் பிரஜையான ஒருவர் நாட்டில் நடைமுறை அரசியலமைப்புக்கிணங்க தேர்தலில் நிற்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.


படகுகளுக்குள் 85 கிலோ ஹெரோயின்!
[Monday 2019-08-19 07:00]

கடற்படையினரால் ஜூலை மாதம் 11 ஆம் திகதி தென்பகுதி கடற்பரப்பில் 6 ஈரானியர்களுடன் கைப்பற்றப்பட்ட படகுகளில் இருந்து 85 கிலோ ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த படகுகளை தீவிர பரிசோதனை செய்தபோது விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு பகுதியில் மிகவும் பாதுகாப்பான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 85 கிலோ ஹெரோயின் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.


விஞ்ஞாபனங்களைப் பொறுத்தே ஆதரவு!
[Monday 2019-08-19 07:00]

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கட்சிகளின் விஞ்ஞாபனங்களின் அடிப்டையிலேயே ஆதரவு தெரிவிப்போம் என ரெலோ தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற தலைமைக் குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


வெள்ளத்தில் மூழ்கிய வவுனியா வீதிகள்! Top News
[Monday 2019-08-19 07:00]

வவுனியாவில் நேற்று மாலை பெய்த கடும் மழையினால் வீதிகள் நீர் நிரம்பி வெள்ள காடாக காட்சியளித்தன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா, மன்னார் வீதி, காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பான பகுதி மற்றும் தாண்டிகுளம், குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன், தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.


சஜித்துடன் பின்வரிசை எம்.பிக்கள் சந்திப்பு!
[Monday 2019-08-19 07:00]

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அமைச்சரகள் பலர் இன்று கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவை சந்தித்து விசேட கலந்துரையாடலை நடத்தவுள்ளனர்.


பிரபாகரன் கூறியபடி நடக்க வேண்டும்!
[Sunday 2019-08-18 18:00]

2005இல் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனாதிபதி ஆவதையோ, அவர் தலை­மை­யி­லான அரசு அமை வ­தையோ விடு­த­லைப் புலி­களின் தலை­வர் பிர­பா­க­ரன் விரும்­பி­யி­ருக்­க­வில்லை. அவ­ரு­டைய வேண்­டு­கோ­ளுக்கு அமை­வாக ஒட்­டு­மொத்த தமிழ் மக்­க­ளும் அந்­தத் தேர்­த­லைப் புறக்­க­ணித்­தி­ருந்­தார்­கள். புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னின் வேண்­டு­கோளை தமிழ் மக்­கள் இப்­போ­தும் ஏற்­றுக் கொள்­கின்­றார்­கள் என்­றால், ரணில் அர­சுக்கு எதி­ரா­கவே ஒட்­டு­மொத்த தமிழ் மக்­க­ளும் வாக்­க­ளிக்­க­ வேண்­டும் என்று கோரியுள்ளார் எதிர்க்­கட்­சித் தலைவர் மகிந்த ராஜ­பக்ச.


கோத்தா வெல்லக் கூடாது!
[Sunday 2019-08-18 18:00]

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் மூலம், தமிழ் தரப்புக்கு பேரம் பேசலுக்கான பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தமிழ்தேசிய மக்கள் முண்ணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து‌ கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.


அனுரகுமாரவே ஜேவிபி வேட்பாளர்! Top News
[Sunday 2019-08-18 18:00]

ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளராக, அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் இன்று மாலை காலி முகத்திடலில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் 20 வருடங்களின் பின்னர் ஜேவிபி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா