Untitled Document
May 23, 2024 [GMT]


பரந்தன் சந்தியில் கவிழ்ந்த டிப்பர்! - ஒருவர் காயம். Top News
[Sunday 2024-04-28 17:00]

கிளிநொச்சி - பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் டிப்பர் வாகனமொன்று புரண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் பின் சில்லு திடீரென காற்று போனதால் வீதியின் நடுவே புரண்டது. விபத்தில் டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருகோணமலை விபத்தில் யாழ்ப்பாண சிறுமி பலி! - சிறுவன் படுகாயம். Top News
[Thursday 2024-05-23 15:00]

திருகோணமலை - ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


மன்னார் தீவு காற்றாலை அமைக்கப் பொருத்தமான இடம் அல்ல!
[Thursday 2024-05-23 15:00]

மன்னார் தீவு கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்தில் காணப்படுகின்றது.இத் தீவு காற்றாலை மின்சாரம் அமைக்க பொருத்தமானதாக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


வல்லரசுகள் இனிமேலும் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்த முடியாது!
[Thursday 2024-05-23 15:00]

தமிழ் மக்களை பயன்படுத்து இதுவரை காலமும் தங்களுடைய பூகோள அரசியல் நலனுக்காக இந்த நாட்டிலே தங்களுக்கு விரும்பிய தலைவர்களை கொண்டு வந்த வல்லரசுகள் இனிமேலும் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்த முடியாது. அதேவேளை இந்தியாவின் பின்னணியில் சிவில் அமைப்புக்கள் செயற்படுகின்றன எனவே பொது வேட்பாளர் ஒரு நாடகம் ஒரு சதி என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.


நாளை வடக்கிற்கு செல்கிறார் ரணில்!
[Thursday 2024-05-23 15:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். 3 நாட்கள் விஜயமாக வடக்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார்.


3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!
[Thursday 2024-05-23 15:00]

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


மீன்பிடிக்கச் சென்றவர் கடலில் விழுந்து மரணம்!
[Thursday 2024-05-23 15:00]

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற ஒருவர் நேற்று கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோணிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.


14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த அக்காவின் காதலன்!
[Thursday 2024-05-23 15:00]

கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் அக்காவின் காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.


சல்லியில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை!
[Thursday 2024-05-23 15:00]

திருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஹெரோய்ன்! - மூவர் கைது.
[Thursday 2024-05-23 15:00]

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதி ஒன்றினுள் போதைப்பொருளை மிக சூட்சுமமாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இலங்கையில் போரில் காணாமல் போனவர்கள் மதிப்பிடப்பட்டதை விட அதிகம்!
[Thursday 2024-05-23 05:00]

இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வட்டுவாகல் பாலத்தின் நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும், இதன்போது காணாமல்போனவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகர் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் மத சுதந்திரம் கரிசனைக்குரிய மட்டத்தில்!- அமெரிக்கா சுட்டிக்காட்டு.
[Thursday 2024-05-23 05:00]

இலங்கையில் மத சுதந்திரம் என்பது கரிசனைக்குரிய மட்டத்திலேயே காணப்படுவதாகவும், மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன மத ரீதியிலான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாகவும் சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


பெண்களை இரவில் கதறக் கதற இழுத்துச் செல்வதற்கு இலங்கைச் சட்டம் அனுமதிக்கிறதா?
[Thursday 2024-05-23 05:00]

பொலிஸாரின் அராஜகமும் அடக்க முடியாத அதிகாரப்பசியும் தமிழ் மக்களின் வாழ்வியலை பறித்தெடுக்கின்றது. இந்த நாட்டில் நீதி மரணித்து விட்டது. சட்டம் சாகடிக்கப்பட்டு விட்டது . இலங்கையின் சட்டத்தினால் தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்காது என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.


மொன்றியலில் கத்திக்குத்துக்கு மூவர் பலி!
[Thursday 2024-05-23 05:00]

மொன்றியலில் இடம்பெற்ற கத்தி கத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மொன்றியலின் பிலாட்டியு மொன்ட் றோயல் போரோவ் (Montreal's Plateau-Mont-Royal borough) பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, 15, 23 மற்றும் 25 வயதான நபர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கையில் மீண்டும் அடிப்படைவாத தாக்குதல்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாது!
[Thursday 2024-05-23 05:00]

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும். இல்லையேல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை போன்ற அடிப்படைவாத தாக்குதல்கள் இலங்கையிலும் எதிர்காலத்தில் நடத்தப்படுவதனை தடுக்க முடியாதென ஆளும் தரப்பு எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.


தேர்தல் அறிவிக்கப்படும் வரை பொது வேட்பாளர் குறித்து முடிவெடுப்பதில்லை என தமிழரசு முவு!
[Thursday 2024-05-23 05:00]

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரை பொது வேட்பாளர் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பில் பறிபோகிறது நெலுகல்மலை - புதிய விகாரை கட்டப்படுகிறது!
[Thursday 2024-05-23 05:00]

மட்டக்களப்பின் எல்லைக்கிராமமான வடமுனை கிராம சேவகர்பிரிவில் உள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற மலையில் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாள் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.


ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு இல்லை!
[Thursday 2024-05-23 05:00]

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்குகளுடன் வருகிறது ஐஸ்!
[Thursday 2024-05-23 05:00]

பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்குகள் ஊடாக இலங்கைக்கு ஐஸ் போன்ற போதைப்பொருட்கள் சூட்சுமமான முறையில் கடத்தப்படுகிறது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அவதானம் செலுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்தார்.


வியன்னா உடன்பாட்டை மீறி உள்ளக விவகாரங்களில் தலையிடுகிறார் ஜூலி சங்!
[Thursday 2024-05-23 05:00]

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வியன்னா ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறார் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.


முதலில் ஜனாதிபதி தேர்தல் தான்!- அமைச்சரவையில் அறிவித்தார் ஜனாதிபதி.
[Wednesday 2024-05-22 20:00]

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.


ஷிரந்தியிடம் கையளிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது?
[Wednesday 2024-05-22 20:00]

இறுதி போரின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவி ஷிரந்தி ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் கேள்வியெழுப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார் சரத் பொன்சேகா!
[Wednesday 2024-05-22 20:00]

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.


இளைஞர்களுக்கிடையே மோதல் - வாள்வெட்டில் பொலிஸ் உள்ளிட்ட 3 பேர் காயம்!
[Wednesday 2024-05-22 20:00]

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்!
[Wednesday 2024-05-22 20:00]

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆம் இன்று மீண்டும் ஆரம்பமானது.இன்று ஆரம்பமான இந்த போராட்டமானது எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.


பாணுக்குள் கண்ணாடித் துண்டு!
[Wednesday 2024-05-22 20:00]

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடிப் துண்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.


வங்காலையில் திடீரென கடல் பெருக்கெடுத்ததால் பதற்றம்!
[Wednesday 2024-05-22 20:00]

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று மதியம் திடீரென கடல் நீர் பெருக்கெடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது.


யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!
[Wednesday 2024-05-22 20:00]

யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஊரெழு கிழக்கை சேர்ந்த 48 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்துக்கு உரிமை கோரும் 4 மனைவிகள்!
[Wednesday 2024-05-22 20:00]

குளியாப்பிட்டிய மருத்துவபீடத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற விபத்தில் ஒரு குடும்பஸ்தர் உயிரிழந்தார். இவரின் சடலத்தை ஏற்றுக்கொள்ள நான்கு மனைவிகள் முன்வந்துள்ளதாக குளியாப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா