Untitled Document
May 10, 2024 [GMT]
ஊட்டச்சத்து உணவு பொருட்களை சாப்பிடுவதில் சென்னை முதலிடம் வகிக்கிறது.
[Saturday 2016-02-06 07:00]

காய், கனிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு பொருட்களை சாப்பிடுவதில், இந்திய பெருநகரங்களில், சென்னை முதலிடம் வகிக்கிறது. சர்வதேச பொருளாதார உறவுகள் மீதான, இந்திய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பெங்களூரை சேர்ந்த, இந்திய மேலாண்மை கல்வி மையம் நடத்திய ஆய்வு அறிக்கை விவரம் கீழ்வருமாறு:


பனிச்சரிவில் இறந்த தமிழக வீரர்களுக்கு நினைவு சின்னம் தேவை! - ராமதாஸ் கோரிக்கை
[Saturday 2016-02-06 07:00]


குஜராத்தில் ஆற்றுக்குள் அரசு பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி!
[Friday 2016-02-05 19:00]

குஜராத் மாநிலத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குஜராத் மாநில அரசு பேருந்து 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சூரத் அருகில் உள்ள நவ்சாரியில் இருந்து இன்று மாலை உகாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. சிறிது நேரத்தில், பூர்ணா ஆற்றுப் பாலத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், பலியானவர்களின் உடல்களை மீட்டனர்.


ஒரே ஒரு குடும்பம் மக்களவைத் தேர்தல் தோல்விக்காக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்: -பிரதமர்
[Friday 2016-02-05 19:00]

ஒரு குடும்பம் நாடாளுமன்றம் நடைபெறுவதை தடுக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை கடுமையாக சாடினார் பிரதமர் நரேந்திர மோடி.அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகார்க் மாவட்டத்தின் மோரான் நகரில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பேரணிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மோடி பேசியதாவது:ஒரே ஒரு குடும்பம் நாடாளுமன்றம் நடைபெறுவது தடுக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்காக அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளில் உள்ள சில தலைவர்கள் நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு தயாராக இருக்கும் நிலையில், ஒரே ஒரு குடும்பம் மட்டும் மாநிலங்களவையை நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: -கேரள அரசு தெரிவிப்பு
[Friday 2016-02-05 19:00]

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் உள்ள ஐயப்பனை 18 படியேறி தரிசனம் செய்வதற்கு, 41 நாட்கள் கடும் விரதம் இருந்து இருமுடியுடன் வரும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கபடுகின்றனர். கோயிலின் புனிதத்தை காக்கும் பொருட்டு, மாதவிடாய் ஏற்படும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் பருவம் அடைவதற்கு முன், 10 வயது வரையிலும், மாதவிடாய் நின்றபின் 50 வயதுக்கு மேற்பட்டும் பெண்கள் சபரிமலைக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க கோரி இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன் கடந்த மாதம் (ஜனவரி) 12-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.


டெல்லியில் ஐ.எஸ்.ஆதரவாளர் கைது: - சிறப்பு போலீஸ் படை அதிரடி நடவடிக்கை
[Friday 2016-02-05 19:00]

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அனுதாபி என சந்தேகிக்கப்படும் நபரை டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவு இன்று கைது செய்துள்ளது. மும்பை மேற்கு மலாட் பகுதியைச் சேர்ந்த மொசின் என்ற வாலிபர், இன்று டெல்லி பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது, அவரை டெல்லி சிறப்பு போலீஸ் படையினர் சுற்றி வளைத்து, ஐ.எஸ். தீவிரவாத இயக்க அனுதாபி என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர். அவரை கைது செய்தபோது 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மொசின், ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வரும் சிரியாவிற்கு செல்வதற்கு முயற்சி செய்துவந்துள்ளார். கடந்த மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 4 பேர் பிடிப்பட்டனர்.


ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்!
[Friday 2016-02-05 18:00]

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கில் உயிரிழந்த 10 ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து 19,600 அடி உயரத்தில் உள்ள லடாக்கின் வடக்கு பனி முகட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பனிச்சரிவு அங்கிருந்த ராணுவ முகாமை மூடியது. இங்கு மெட்ராஸ் ரெஜிமென்ட் படைப்பிரிவைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர்.ராணுவ முகாம் மீது விழுந்த அதிகப்படியான பனி, அதனை மிக ஆழத்தில் புதைத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து, 10 வீரர்களும் மரணமடைந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சியாச்சினில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


இரு நாள் பயணமாக இன்று இலங்கை செல்லும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்!
[Friday 2016-02-05 07:00]

வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். அப்போது தமிழக மீனவர் பிரச்சினை உள்பட பல்வேறு விஷயங்களை பேசுகிறார்.வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று (வெள்ளிக்கிழமை) 2 நாள் பயணமாக இலங்கை செல்கிறார். கொழும்பு நகரில் இன்று நடைபெறும் 9-வது இந்தியா-இலங்கை கூட்டுக்குழு கூட்டத்தில் இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீராவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பொருளாதாரம், வர்த்தகம், மின்சாரம், கடல்சார் ஒத்துழைப்பு, சமூக, கலாசாரம், கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், ராணுவ ஒத்துழைப்பு, சுகாதாரம், விமான போக்குவரத்து, சுற்றுலா, இருநாட்டு மக்களின் தொடர்புகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.


உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் ரயில்வே துறையில் முதலீடு செய்ய உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ஜேட்லி!
[Friday 2016-02-05 07:00]

இந்தியாவில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் ரயில்வே துறையில் முதலீடு செய்யுமாறு உலக நாடுகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அழைப்பு விடுத்துள்ளார்.சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை காணப்பட்டாலும், இந்தியப் பொருளாதாரம் நிலையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்தியத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசுப் பிரதிநிதிகள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் அருண் ஜேட்லி பேசியதாவது:இந்தியாவில் முதலீடுகளைப் பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 19 மாதங்களாக முதலீட்டாளர்களுக்கான கதவு திறந்தே இருக்கிறது.


நீதிபதிகளே வெறுப்படையும் அளவுக்கு ஊழல் மலிந்து விட்டது: - இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர்
[Friday 2016-02-05 07:00]

ஊழல் ஒழிப்பை முன் வைத்து சட்டப் பேரவைத் தேர்தலில் பிரசாரம் செய்யப்படும் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.சிவகங்கையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் மேலும் கூறியதாவது:நாடு முழுவதும் ஊழல் பெருகி விட்டது. நீதிபதிகளே வெறுப்படையும் அளவுக்கு ஊழல் மலிந்து விட்டது. ஆட்சியில் இல்லாதபோது ஊழலை ஒழிப்போம் என வாக்குறுதி அளிக்கும் கட்சிகள் அதிகாரத்துக்கு வந்த பிறகு மாறி விடுகின்றன. எனவே, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோஷம் மக்கள் மத்தியில் முக்கியப் பிரச்னையாக முன் வைக்கப்படும்.


மராட்டிய மாநிலத்தில் சிறுவனை கடத்தி கொலை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கு தூக்கு தண்டனை!
[Friday 2016-02-05 07:00]

மராட்டிய மாநிலம் நாக்பூர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் முகேஷ். டாக்டர். இவர் அப்பகுதியில் சிறிய மருத்துவமனை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான ராஜேஷ் தனலால் தவாரே (வயது 21) மற்றும் அரவிந்த் அபிலாஷ் சிங் (25) ஆகியோர், இவரிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டனர்.இதற்காக, இரண்டாம் வகுப்பு படித்து வந்த முகேசின் 8 வயது மகன் யூக் சந்தக்கை கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கடத்தினர். பின்னர், முகேசை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினர். பணத்தை தராவிட்டால், உங்களது மகனை கொன்றுவிடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் கொஞ்சம் கூட ஈவு, இரக்கமின்றி சிறுவன் யூக் சந்தக்கின் கழுத்தை நெரித்து அவனை கொலை செய்தனர். பின்னர், அவனது உடலை சாலையோரம் புதைத்து விட்டு தப்பினர். இந்த சம்பவம் அதே ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி நடைபெற்றது.


ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக திருமாவளவன் அறிவிப்பு!
[Thursday 2016-02-04 22:00]

பாமக நிறுவனர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.சென்னையில் இன்று (வியாழன்) செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோரிடம் இருந்து மக்கள் நலக் கூட்டணி நல்ல பதிலை எதிர்பார்க்கிறது. மரக்காணம் கலவரத்தில் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று ராமதாஸ் அவதூறு பரப்புவதாகவும், இதற்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் கூறினார். முன்னதாக சென்னை பாரிமுனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநில தலைமை அலுவலகத்தை திருமாவளவன் திறந்து வைத்தார். இதில் அக்கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் த.பார்வேந்தன், அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார், மாநில வர்த்தக அணியின் துணைச் செயலாளர் செல்லத்துரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்த விஜயதாரணி: - காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்தும் செற்பட போவதாக அறிவிப்பு
[Thursday 2016-02-04 19:00]

டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை, விஜயதாரணி சந்தித்து பேசினார்.இது குறித்து செய்தியாளர்களிடம் விஜயதாரணி கூறியதாவது:நான் காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து செயல்படுவேன். வேறு கட்சியில் சேருவதற்காக யாரையும் நான் சந்திக்கவில்லை. மத்திய தலைமையின் ஆதரவு எனக்கு உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியை விட்டு நான் விலக மாட்டேன்.இவ்வாறு விஜயதரணி கூறினார்.

-->

தமிழக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கண்டனம்!
[Thursday 2016-02-04 18:00]

உயர் அதிகாரிகள் மீதான லஞ்சப் புகார்களை விசாரணை செய்ய தலைமைச் செயலாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை ஊழலுக்கு துணை போகிற நடவடிக்கையாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமல்லாமல், கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அவர்கள் மீது எந்த லஞ்சப் புகார் வந்தாலும் அரசின் அனுமதி பெறாமல் வழக்கு தொடுக்க முடியாது என்று தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அரசு இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேல் உள்ள எந்த அதிகாரிகள் மீதும் ஊழல் வழக்கு தொடர அரசின் அனுமதி பெற வேண்டும் என்கிற ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு செல்லாது என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசாணை அமைந்துள்ளது.


பிப்ரவரி 4 - ஈழத்தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்ட நாள்:
[Thursday 2016-02-04 11:00]

ஈழத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போராட்டங்களை முன்னெடுக்கும் தொல்.திருமாவளவன் அறிக்கை

கடந்த 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1948 பிப்ரவரி 4ஆம் நாள் இலங்கைக்கு விடுதலை வழங்கினார்கள். சுதந்திரத்தின் பெயரால் நடைபெற்ற அதிகாரக் கைமாற்றம் உண்மையில் சிங்களப் பேரினவாதிகளின் அரசையே நிறுவியது. இதன் மூலம் தமிழீழம் சிங்கள ஆதிக்கத்திற்குட்பட்ட அடிமைத் தேசமாக்கப்பட்டதே இலங்கையின் சுதந்திர நாள்.


புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல்!
[Thursday 2016-02-04 11:00]

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மூன்று பேர் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் மன்சூர் என்பவருக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இரண்டு மீனவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


உத்திரபிரதேசத்திலும் மெகா கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் திட்டம்!
[Thursday 2016-02-04 07:00]

கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் நிதீஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி 178 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 58 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தோல்வியை தழுவியது.இந்த தேர்தலில், பரம எதிரிகளாக கருதப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் தேர்தலுக்காக திடீரென கூட்டணி அமைத்தது. அதற்கு முன்பாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க., பெற்ற அமோக வெற்றியை கருத்தில் கொண்டு நிதிஷ்குமார் இத்தகைய முடிவை எடுத்தார். இந்நிலையில், பீகார் மாநிலத்தை போல் உத்தரபிரதேசத்திலும் மெகா கூட்டணி அமைக்க முதல்-மந்திரி நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


ஜிகா வைரஸ் பரப்பும் நோயை தடுக்க அனைத்து ஆஸ்பத்திரிகளும் தயார் நிலையில் உள்ளது: - தமிழக அரசு
[Thursday 2016-02-04 07:00]

ஜிகா வைரஸ் பரப்பும் நோயை தடுக்க அனைத்து ஆஸ்பத்திரிகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-ஜிகா வைரஸ் நோய், டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள், ஏடிஸ் வகை கொசுக்களால் பரப்பப்படுகிறது. ஜிகா வைரஸ் முதல் முதலில் 1947-ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா என்ற காட்டில் கண்டறியப்பட்டது. இந்த நோயின் தாக்கம் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பசிபிக் நாடுகளில் அதிகமாக உள்ளதால் உலக சுகாதார நிறுவனம்


கேரள அரசின் மீதான மக்களின் ஆதரவை நினைத்து எதிர்க்கட்சிகள் அச்சம் கொண்டுள்ளன: - உம்மன் சாண்டி
[Thursday 2016-02-04 07:00]

சோலார் பேனல் புகாரில் குற்றத்தை நிரூபித்தால் பொதுவாழ்வில் இருந்தே விலகுவதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, உண்மை நிச்சயம் வெளிவரும். கேரள மாநில மக்கள் உண்மையில் நடந்தது என்ன என்பதை அப்போது அறிந்து கொள்வார்கள் என்று கூறினார். உம்மன் சாண்டி மீதான புகார்களை அடுத்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமரிசனத்தை முன்வைப்பது குறித்து பேசிய உம்மன் சாண்டி, கேரள அரசின் மீதான மக்களின் ஆதரவை நினைத்து எதிர்க்கட்சிகள் அச்சம் கொண்டுள்ளன. அதனால்தான் இவ்வாறு விமரிசிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.


பிரபல நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மும்பையில் மனு தாக்கல்!
[Thursday 2016-02-04 07:00]

பிரபல நடிகையும், பாரதீய ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினி நாட்டிய பள்ளி அமைக்க மும்பை புறநகர் ஒஷிவாரா பகுதியில் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் ரூ.4 கோடி மதிப்பு கொண்டது. ஆனால் சதுர மீட்டருக்கு வெறும் ரூ.35 வீதம் மொத்தம் ரூ.70 ஆயிரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அவருக்கு எதிராகவும், மகாராஷ்டிர வருவாய்த் துறை அமைச்சருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மும்பை உயர் நீதிமன்றத்தில், பத்திரிகையாளர் கேதான் திரிகோத்கர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் அமைச்சர் ஏக்நாத் கட்சே மீதும், ஹேமமாலினி மீதும் முறைகேடு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிப்பு: - இந்திய விஞ்ஞானிகள் சாதனை
[Wednesday 2016-02-03 22:00]

உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம் தரித்த பெண்களை ஸிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். பிரேசிலில் இப்படி ஏறத்தாழ 4,074 குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 40 லட்சம்பேரை ஸிகா வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கினால் அதற்கு சிகிச்சையும் இல்லை. வராமல் தடுப்பதற்கு தடுப்பூசியும் இல்லை என்பதால் உலக நாடுகள் அலறுகின்றன.


காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில் புதையுண்ட ராணுவ வீரர்கள்!
[Wednesday 2016-02-03 20:00]

காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கியவர்கள் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், இமயமலைத் தொடரில் 22,000 அடி உயரத்தில் சியாச்சின் ராணுவ நிலை அமைந்துள்ளது. இது உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள ராணுவ நிலையாகும்.இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரிஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ஒர் அதிகாரியும் ஒன்பது வீரர்களும் இன்று காலை சியாச்சின் பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது, திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.


நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
[Wednesday 2016-02-03 14:00]

வாழும்கலை என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். இவரது பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ஹாலிவுட் நடிகர் சூசன், 85 வயதான கிரீஸ் பெண்மணி உள்ளிட்டவர்களோடு ரவி சங்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில்தான் கெயில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட வேண்டும்: - தி.வேல்முருகன்
[Wednesday 2016-02-03 12:00]

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில்,


சிசு பாலினத்தைக் கண்டறிய வேண்டும் என்று நான் கூறியது யோசனை மட்டுமே: - மேனகா காந்தி
[Wednesday 2016-02-03 08:00]

சிசு பாலினத்தைக் கண்டறிய வேண்டும் என்று நான் கூறியது யோசனை மட்டுமே; அமைச்சரவையின் பரிந்துரை அல்ல என்று மத்திய மகளிர், குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி செவ்வாய்க்கிழமை கூறினார்.கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் சோதனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜெய்ப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மேனகா காந்தி, ""பெண் சிசுக் கொலைகளைத் தடுப்பதற்கு, சிசுவின் பாலினத்தைப் பெற்றோர் கண்டறியும் பரிசோதனையைக் கட்டாயமாக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.


இளைய சமுதாயத்தை அறிவுத்திறன் மிக்கவர்களாக உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும்: - விஜயகாந்த்
[Wednesday 2016-02-03 07:00]

மாநில அரசின் பாடத்திட்டம் மோசமாக உள்ளதாக மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் கூறியுள்ளது வேதனை அளிக்கிறது என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் கல்வித்துறையில் நல்ல பல ஆலோசனைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட, மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம், சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பள்ளிக்கல்வித்துறை குறித்து மிகப்பெரிய ஆய்வை நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் ஏற்பட உள்ள அரசியல் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது: - பிரகாஷ் ஜாவடேகர்
[Wednesday 2016-02-03 07:00]

வரும் தேர்தலில் தமிழகத்தில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றத்தைத் தடுக்க முடியாது என்று மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜாவடேகர் பேசினார்.கோவை கொடிசியா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரகாஷ் ஜாவடேகர் பேசுகையில், "தமிழகத்தைக் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் இரு அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரியான ஆட்சியையே வழங்கி வருகின்றன. இதனால், மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தமிழகத்தில் ஏற்பட உள்ள அரசியல் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது' என்றார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "நாட்டில் கடந்த 19 மாதங்களில் மிகப் பெரிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 4 கோடி வங்கிக் கணக்குகளே இருந்த நிலையில், மத்திய அரசின் முயற்சியால் இப்போது 20 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.


தமது புதிய காருக்கு வைக்க திட்டமிட்டிருந்த ஸீகா எனும் பெயரை மாற்றிய டாடா..!
[Wednesday 2016-02-03 07:00]

கொசு மூலம் பரவும் ஸீகா வைரஸ் தொற்றின் அபாயம் குறித்து சர்வதேச அளவிலான எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், டாடா நிறுவனம், தனது புதிய காரின் பெயரை மாற்றியுள்ளது.பிரேஸிலில் ஸீகா வைரஸ் காரணமாக, கருவில் இருக்கும் சிசுக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சுறுத்தல் அதிகரித்துவரும் சூழலில்,பாதிக்கப்பட்டவர்களுக்கான தமது அனுதாபத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கில், தமது புதிய காருக்கு வைக்க திட்டமிட்டிருந்த ஸீகா எனும் பெயரை, டாடா மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.அதேசமயம் அந்த புதிய ரக காரின் பெயர் விவரங்களை டாடா வெளியிடவில்லை.

Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா