Untitled Document
April 27, 2024 [GMT]
தமிழ்நாட்டு மக்கள் ஊழல் மற்றும் பொருளாதார கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்: -ஜி.ராமகிருஷ்ணன்
[Saturday 2016-01-23 08:00]

தருமபுரி பொன்னாகரம் தொகுதி வளர்ச்சி மாநாடு இன்று மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள தருமபுரி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: -மக்கள் நல கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு வரும் 26ம் தேதி மதுரையில் நடக்க உள்ளது. எங்களுடைய குறைந்தபட்ச செயல் திட்ட விளக்கப் பிரச்சாரத்தை அங்கு தொடங்குகிறோம். அதிமுக, திமுக அல்லாத மாற்று கூட்டணி அரசை அமைப்பதற்கான பிரச்சாரமாக அது இருக்கும்.


ஐதராபாத் மாணவர் தற்கொலை விவகாரத்தில் பா.ஜனதாவை எச்சரித்த சிவசேனா!
[Saturday 2016-01-23 08:00]

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் ரோகித் வெமுலா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய மந்திரிகள் ஸ்மிருதி இரானி மற்றும் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் ராஜினாமா செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.மேலும், இந்த விவகாரத்தில் பா.ஜனதா நிர்வாகிகள் சிலர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஐதராபாத் மாணவர் தற்கொலை விவகாரத்தில் பா.ஜனதாவை கூட்டணி கட்சியான சிவசேனா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான


இந்தியாவில் புதிய பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்த முயன்ற 14 ஐ.எஸ். ஆதரவாளர்கள் கைது!
[Saturday 2016-01-23 08:00]

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைப் போன்று, இந்தியாவிலும் புதிய பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்த முயன்றதாக அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் 14 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.இதன்மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் நிகழ்த்த இருந்த பயங்கரவாதத் தாக்குதல்களை என்ஐஏ முறியடித்துள்ளது.ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைப் போன்று "ஜனூத்-உல்-கலிபா-இ-ஹிந்த்' (இந்திய காலிப்புக்கான ராணுவம்) என்ற புதிய பயங்கரவாத அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக என்ஐஏவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் போலீஸார், மத்திய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் என்ஐஏ வெள்ளிக்கிழமை அதிரடிச் சோதனை நடத்தியது.


அரசியல் மாற்றத்துக்கான அடித்தளத்தை இளைஞர்கள் உருவாக்க முடியும்: -மக்கள் நலக் கூட்டணி
[Friday 2016-01-22 22:00]

18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியை தொண்டர்கள் செய்ய வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் இருந்தால் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்குச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று எழுதிக் கொடுக்க வேண்டும்.


தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விஜயதாரணி நீக்கம்!
[Friday 2016-01-22 22:00]

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விஜயதாரணி எம்.எல்.ஏ., அவருக்குப் பதிலாக மறைந்த காங்கிரஸ் தலைவர் ஏ.எஸ்.பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டார்.காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி. ஆரம்பத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளராக இருந்தார். இதனால் கட்சி மேலிடம் விஜயதாரணியை தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்தது.


2016-ம் ஆண்டில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவாகும்: - ஐ.நா. அறிக்கை
[Friday 2016-01-22 19:00]

2016-ம் ஆண்டில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என்று ஐ.நா. அறிக்கை வெளியிட்டு உள்ளது. 7.3 சதவிதத்துடன் இந்தியா உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கும். அடுத்த வருடம் 7.5 சதவீதமாக உயரும் என்றும் ஐ.நா.வின் உலக பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறு வணிகர்களுக்கான அம்மா சிறு வணிகக் கடன் உதவித் திட்டத்தினை துவக்கி வைத்த முதல்வர் ஜெயலலிதா!
[Friday 2016-01-22 18:00]

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (22.1.2016) தலைமைச் செயலகத்தில், பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கான அம்மா சிறு வணிகக் கடன் உதவித் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு தலா 5000 ரூபாய்க்கான கடனுதவி ஆணையினை வழங்கி, இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிகச் சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் தெருவோர சிறுவணிகர்கள், பெட்டிக் கடைகள் நடத்துவோர், முதலீட்டை இழந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக தனியாரிடம் அதிக வட்டியில் கடன் பெறும் நிலையை தவிர்க்கவும், ஏழை, எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெற வகை செய்யும் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும்,


உலகின் மிகச் சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 22-ஆவது இடம்!
[Friday 2016-01-22 07:00]

உலகின் மிகச் சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 22-ஆவது இடம் கிடைத்துள்ளது.பொருளாதார வளர்ச்சி, கலாசாரம், தொழில்முனைதல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட தன்மைகளின் அடிப்படையில் உலக நாடுகளை தரவரிசைப்படுத்தி இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அமெரிக்காவின் செய்தி நிறுவனமான "யு.எஸ். நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட்' மற்றும் பி.ஏ.வி. பொருளாதாரக் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தப் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டன.இந்தப் பட்டியலில் முதலிடத்தை ஜெர்மனி பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் கனடாவும், மூன்றாம் இடத்தில் பிரிட்டனும் உள்ளன.


இந்தியாவுக்கு எதிரான வெறுப்பூட்டும் பிரசாரத்தை மேற்கொள்ளும் கூட்டமைப்பின் ஒரு பகுதிதான் அம்பேத்கர் மாணவர் சங்கம்: - முரளிதர் ராவ்
[Friday 2016-01-22 07:00]

ஹைதராபாதில் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அந்த மாணவர் சார்ந்திருந்த அம்பேத்கர் மாணவர் சங்கம் என்பது இந்தியாவுக்கு எதிரான வெறுப்பூட்டும் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அமைப்பு என்று பாஜக குறைகூறியுள்ளது. இது தொடர்பாக பாஜகவின் பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவ், சமூக வலைதளமான சுட்டுரையில் (டுவிட்டர்) பல்வேறு தரப்பினரின் கேள்விகளுக்கு வியாழக்கிழமை பதிலளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அம்பேத்கர் மாணவர் சங்கம் (ஏஎஸ்ஏ) என்பது இந்தியாவுக்கு எதிரான வெறுப்பூட்டும் பிரசாரத்தை மேற்கொள்ளும் கூட்டமைப்பின் ஒரு பகுதிதான்.


சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜியின் இறுதிச் சடங்கு தொடர்பான ஆவணங்கள் வெளியீடு!
[Friday 2016-01-22 07:00]

சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இறுதிச் சடங்குகள் தொடர்பான ஆவணங்கள் பிரிட்டன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.நேதாஜியின் இறுதி நாள்கள் குறித்த ஆவண ஆதாரங்களை அளிக்கும் புதிய இணையதளம் அண்மையில் லண்டனில் தொடங்கப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகையாளரும், போஸின் பேரனுமான ஆஷிஸ் ராய், தன் வசமுள்ள ஆவணங்களை வெளியிடும் வகையில், ஜ்ஜ்ஜ்.க்ஷர்ள்ங்ச்ண்ப்ங்ள்.ண்ய்ச்ர் என்ற பெயரில் அந்த இணையதளத்தைத் தொடங்கினா


முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்: - ராமதாஸ்
[Friday 2016-01-22 07:00]

தமிழக சட்டப்பேரவையில் இன்று, உறுப்பினர்களின் வினாவிற்கு விடையளித்த தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,


மொழிப்போர்
[Thursday 2016-01-21 22:00]

தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்தும்


பணம் படைத்தவர்கள் ஏழை விவசாயிகளுக்கு உதவினால் தற்கொலைகளை தடுக்க முடியும்: - நீதிபதிகள் அறிவுறுத்தல்
[Thursday 2016-01-21 21:00]

மகாராஷ்டிராவில் 2015-ம் ஆண்டில் மட்டும் ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இந்த பொதுநல வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.


ஒடிசா மாநிலத்தில் குடும்பச் சண்டையில் மனைவி-குழந்தைகள் மீது ஆசிட் வீசிய ஆசாமி: - 7 பேர் படுகாயம்
[Thursday 2016-01-21 18:00]

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் குடும்ப சண்டை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகள் மீது ஆசிட் வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.திர்குட்டி குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர் சுரா பெஹரா. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளன. இவரது மகளுக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி பெஹராவிடம் அவரது மனைவி கூறியுள்ளார்.இதுதொடர்பாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, குடும்பத்தில் பிரச்சினை முற்றியது.


கேரள மாநிலத்தில் கதவை திறக்க தாமதமானதால் காவலரை கொன்ற பீடி தொழிலதிபருக்கு ஆயுள் தண்டனை!
[Thursday 2016-01-21 18:00]

கேரள மாநிலம் திருச்சூரில் வீட்டின் கதவை திறக்க தாமதமானதால், காவலரை காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் பீடி தொழிலதிபரான முகமது நிஷாமுக்கு ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது பணம் மற்றும் அதிகாரத்தால் சட்டத்தை மதிக்காமல், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட முகமது நிஷாம், இறுதியாக கொலை வழக்கில் நேற்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.


கடலூர், நாகையில் மக்கள் நலக்கூட்டணி தேர்தல் பிரசாரம்: - வைகோ தெரிவிப்பு
[Thursday 2016-01-21 13:00]

மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்கள் வைகோ (ம.தி.மு.க.), திருமாவளவன் (விடுதலை சிறுத்தை), ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகத்தில் இன்று கூட்டாக பேட்டி அளித்தனர்.அப்போது வைகோ கூறியதாவது:


ஜல்லிக்கட்டு பற்றி பேசுவதற்கு காங்கிரஸ், தி.மு.க.வுக்கு எந்த அருகதையும் கிடையாது: - ஓ.பன்னீர்செல்வம்
[Thursday 2016-01-21 12:00]

சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி ஜல்லிக்கட்டு பற்றி பேசும் போது, குறுக்கிட்டு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:


வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும்: - மத்திய அரசை வலியுறுத்திய ஆளுநர்
[Thursday 2016-01-21 08:00]

தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.25 ஆயிரம் கோடி நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தியுள்ளார். மேலும், தேசிய ஊரகக் குடிநீர் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டின் அளவு மத்திய அரசால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் கவலை தெரிவித்துள்ளார். இதனால், குடிநீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாடு பாதிக்கப்படும் என்பதால், திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு ஏற்கெனவே இருந்த அளவுக்காவது உயர்த்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த ஆண்டுக்கான (2016-ஆம் ஆண்டு) பேரவை கூட்டத் தொடரை ஆளுநர் கே.ரோசய்யா தனது உரையுடன் புதன்கிழமை தொடக்கி வைத்தார். இதற்காக பேரவை மண்டபத்துக்கு வந்த அவர் ஒரு மணி நேரம் உரையாற்றினார். காலை 10.30 மணிக்கு தனது பேச்சைத் தொடங்கி 11.30 மணிக்கு நிறைவு செய்தார். தமிழக சட்டப் பேரவையில் அவர் நிகழ்த்திய உரை விவரம்:


தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி: ஓரிரு நாளில் கலந்து ஆலோசித்து முடிவு - பிரகாஷ் ஜவடேகர் தகவல்
[Thursday 2016-01-21 07:00]

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறுகிறது. இதற்காக தீவிரமாக களமிறங்கி உள்ள தமிழக அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்கி விட்டன. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பதற்காக ஒவ்வொரு கட்சியும் கூட்டணி வியூகங்களையும் வகுத்து வருகின்றன.பா.ஜனதா கட்சி சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரும், துணை பொறுப்பாளராக மத்திய மின்சாரத்துறை மந்திரி பியூஸ் கோயலும் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பா.ஜனதாவும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது.இந்த நிலையில் தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மத்திய மந்திரியும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.


மதரஸாக்களில் ஆங்கிலம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் பயிற்றுவிக்க வேண்டும்: சிவசேனை கருத்து
[Thursday 2016-01-21 07:00]

மதரஸாக்களில் உருது மற்றும் அரபு மொழிகளில் பயிற்றுவிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்; அதற்குப் பதிலாக ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பயிற்றுவிக்க வேண்டும்'' என்று சிவசேனை கருத்து தெரிவித்துள்ளது.இதுகுறித்து அக்கட்சிப் பத்திரிக்கையான "சாம்னா'வில் புதன்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:திருமணம் செய்துகொண்டு ஐந்தாண்டு "வாழ்க்கைத் துணை விசா' பெற விரும்புவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே அத்தகைய விசா கிடைக்கும்படியான புதிய விதிமுறையை இங்கிலாந்து அரசு கொண்டு வர உள்ளது. ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகள் படிப்பறிவில்லாத முஸ்லிம் பெண்களை திருமணம் செய்துகொண்டு தங்கள் இயக்கத்தின் கருத்துகளை பரப்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கோணத்தில் பிரிட்டன் அரசு சிந்தித்ததில் எந்தத் தவறும் இல்லை.


இலங்கை கடற்படையால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும்,படகுகளையும் விடுவிக்க முதல்வர் கோரிக்கை!
[Wednesday 2016-01-20 22:00]

இலங்கை கடற்படையால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும், ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட படகு உள்ளிட்ட மீன்படி உபகரணங்களையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.கடிதம் விவரம்:இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, 104 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப இருக்கும் நிலையில் மீண்டும் இருவேறு சம்பவங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம் மீனவர் கிராமத்திலிருந்து கடந்த 17 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.


பெஷாவர் பல்கலைக்கழகம் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம்!
[Wednesday 2016-01-20 22:00]

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்துக்குள் இன்று புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இன்று காலை வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் வெடி குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். சுமார் 10 தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒரு பேராசிரியர் உள்பட சுமார் 25 பேர் கொல்லப்பட்டதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்ததாகவும் மாகாண எம்.எல்.ஏ. யூசப்சாய் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.


ஆராய்ச்சி மாணவர் ரோகித் வேமுலா சாவு மத்திய அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: - விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை.
[Wednesday 2016-01-20 21:00]

ஹைதராபாத் பல்கலைகழகத்தின் முனைவர் ஆராய்ச்சி பட்டவகுப்பு மாணவர் ரோகித் வேமுலா 17.01.2016 அன்று பல்கலைகழக விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான ரோகித் வேமுலா உட்பட ஐந்து மாணவர்களை பல்கலைகழக நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. இதனை கண்டித்து இருவார காலம் தொடர் போராட்டத்தில் அம்பேத்கர் மாணவர் சங்கம் உட்பட பல்வேறு மாணவர் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து இந்த அறப்போராட்டத்தை நடத்திவந்தனர். இருவார காலமாக போராட்டம் தொடர்ந்தும் பல்கலைகழக நிர்வாகம் போராடும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த ரோகித் வேமுலா தற்கொலை செய்துகொண்டார்.


ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை அருகே இறந்த நிலையில் 150 க்கும் மேற்பட்ட ஆமைகள்!
[Wednesday 2016-01-20 21:00]

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை அருகே 150-க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள் மற்றும் பாட்டில்நோஸ் டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. பந்தா நிவாஸ் அருகே கடற்கரையில் கிடந்த அந்த சடலங்களை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.கடல்பகுதியில் மீன்பிடி படகுகளால் தாக்கப்பட்டு ஆமைகள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் ஆமைகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் பூரி-பாலுகாந்த் வனத்துறை அதிகாரி சரத் சந்திரா பெஹரா கூறி உள்ளார். ஏராளமான ஆமைகள் முட்டையிடுவதற்காக ககிர்மாதா கடற்கரைக்கு வருகின்றன. எனவே, அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.


வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்று தாய் தீக்குளிப்பு!
[Wednesday 2016-01-20 12:00]

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அசோக் நகர் அன்னை இந்திரா தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (32). சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிதீஷ்கண்ணா(3) என்ற மகனும், அம்மு என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் இருந்தது.இந்த நிலையில் நேற்று மாலை அரக்கோணம் புது பஸ் ஸ்டாண்டுக்கு சிவகுமார் சென்றார். அப்போது அவர்களது வீட்டில் இருந்து குபுகுபுவென தீயும், கருகிய வாடையும் வீசியது. இதை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து சிவகுமாரிடம் தெரிவித்தனர்.


ஃபேஸ்புக்கின் இலவச இணையத் திட்டம்: - இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கடும் கண்டனம்!
[Wednesday 2016-01-20 12:00]

ஃபேஸ்புக் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கும் ஃப்ரீ பேஸிக்ஸ் இன்டர்நெட் திட்டம் குறித்து, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான "ட்ராய்" கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.ஃபேஸ்புக் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கும் ஃப்ரீ பேஸிக்ஸ் இன்டர்நெட் திட்டம் குறித்து, அந்நிறுவனம் மேற்கொண்டுவரும் பிரச்சாரத்திற்கு இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான "ட்ராய்" கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.இந்தத் திட்டத்தை ஆதரிக்குமாறு கருத்துக் கணிப்புகளை மேற்கொள்வது, பெரும்பான்மைக் கருத்தை மிக முரட்டுத்தனமாக திரட்டுவது என ட்ராய் கூறியுள்ளது.இந்த ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை ஃபேஸ்புக்குடன் இணைந்து இந்தியாவில் வழங்குவதை நிறுத்துமாறு முன்னதாக ட்ராய் கூறியிருந்தது.


உயர்கல்வி நிறுவனங்களில் காணப்படும் சாதிய பாகுபாடுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: - ராமதாஸ்
[Wednesday 2016-01-20 12:00]

உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாடு மற்றும் தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவரான ரோகித் வெமுலா கடந்த இரு நாட்களுக்கு தற்கொலை செய்து செய்து கொண்டது நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர் வெமுலாவை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அவமதிப்புகளும், சீண்டல்களும் கண்டிக்கத்தக்கவை.


ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 2 தீவிரவாதிகள் பலி!
[Wednesday 2016-01-20 12:00]

ஜம்மு காஷ்மீரின் தெற்குப் பகுதியான புல்வாமா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.நேற்று மாலை நைனா படபோரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையல் 53வது ராஷ்ட்ரிய ரைபிள் படையினரும், காவல்துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, காவல்துறைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா