Untitled Document
May 11, 2024 [GMT]
 
சர்வதேச நீர்தினம் அனுஷ்டிப்பு! Top News
[Thursday 2023-03-23 21:00]

நேற்று சர்வதேச நீர்தினம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வை மூளாய் சைவப்பிரகாச வித்தயாசாலை சுற்றாடல் கழகமும், எதிர்கால சுற்றுச்சூழல் கழகமும் இணைந்து நடத்தியிருந்தது.


பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை துணி வழங்கும் வேலை திட்டம் ஆரம்பம்! Top News
[Thursday 2023-03-23 21:00]

சீன அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற இலவச சீருடை துணி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைய இச்செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


சந்நிதியான் ஆச்சிரமத்தால் இன்றும் பல்வேறு உதவிகள்! Top News
[Thursday 2023-03-23 21:00]

சந்நிதியான் ஆச்சிரமத்தால் இன்றும் பல்வேறு செயற்றிட்டங்களுக்கு ரூபா 290,000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டம் - செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலைக்கு மூன்றாவது தடவையாக ரூபா 100,000ம் வழங்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 150000/- வழங்கப்பட்டுள்ளது.


போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து கிராமத்தை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு! Top News
[Wednesday 2023-03-22 06:00]

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து கிராமத்தை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மகா சக்தி பெண்கள் அமைப்பின் உருத்திரபுரம் கிழக்கு பெண்கள் குழுவின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.


பங்குனி உற்சவத்தினை முன்னிட்டு பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடு! Top News
[Monday 2023-03-20 21:00]

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி திங்கள் திருவிழா இன்று ஆரம்பமானது. இன்று அதிகாலை பக்த அடியவர்கள் அம்மனுடைய தீர்தகேணியில் நீராடி பன்றி தலைச்சி அம்மனுக்கு பொங்கல் பொங்கியும் அம்மனுக்கு பிடித்த உணவான கஞ்சி சமைத்தும் தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி இருந்தனர்.


வண்ணமயமாக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுர இணைந்த அலங்காரம் திறப்பு! Top News
[Monday 2023-03-20 06:00]

யாழ். நல்லூர் பிரதேச சபையினால் முன்மொழியப்பட்ட தூயநகரம் துரித அபிவிருத்தித்திட்டம் என்னும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்துயிருந்தனர்.


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா! Top News
[Sunday 2023-03-19 17:00]

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று சனிக்கிழமை (18) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. பொதுமக்களிடையே சூழற் கல்வியினூடாகச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கும் விழா நேற்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சி மாவட்ட மகாசக்தி பெண்கள் தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது! Top News
[Sunday 2023-03-19 17:00]

கிளிநொச்சி மாவட்ட மகாசக்தி பெண்கள் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று காலை 10 மணியளவில் விவேகானந்தா நகர் பகுதியில் அமைந்துள்ள மகாசக்தி பெண்கள் சம்மேளன அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.


யாழில் நடைபெற்ற உலக அழகி போட்டி! Top News
[Saturday 2023-03-18 18:00]

தேசிய அழகுகலை மன்றமும் சுற்றுலாத்துறை அமைச்சு இணைந்த எற்பாட்டில் 2023ஆம் ஆண்டுக்கான வடமாகாண மகளிர் அழகுராணிபோட்டி தேர்வு நிகழ்வு இன்று யாழில் உள்ள தனியார் விடுதியில் ஒன்றில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கையின் தேசிய அழகுகலையின் நிபுணரும், பணிப்பாளரும் ஆகிய எஸ்.டி.சதுனி சேனவாயகே கலந்து கொண்டு அழகுராணிப்போட்டியினை ஆரம்பித்துவைத்தார்.


பொது தகவல் தொழில் நுட்ப பரீட்சைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்! Top News
[Saturday 2023-03-18 18:00]

க.பொ.த உயர்தர மாணவர்களின் பொது தகவல் தொழில் நுட்ப பரீட்சை யாழ். இன்று காலை ஆரம்பமானது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் 60 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை இடம்பெறுகிறது.


மாந்தை கிழக்கில் மனை பொருளியல் டிப்ளோமா கண்காட்சி! Top News
[Saturday 2023-03-18 07:00]

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள நிதி அனுசரணையில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையம் இணைந்து நடாத்தும் மனை பொருளியல் டிப்ளோமா கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் (2022 க்கானது) நேற்று பாண்டியன்குளம் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.


யாழ். பண்ணை சுற்றுவட்டம் திறந்துவைப்பு! Top News
[Saturday 2023-03-18 07:00]

யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் திருவள்ளுவரின் சிலையுடன் அமையப் பெற்ற யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாகவுள்ள யாழ்.பண்ணை சுற்றுவட்டம் நேற்று 17/03/2023 மாலை திறந்துவைக்கப்பட்டது.


கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு ரூபா 5 இலட்சம் பெறுமதியான மருந்துகள் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வழங்கிவைப்பு! Top News
[Saturday 2023-03-18 06:00]

கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு ரூபா 5 இலட்சம் பெறுமதியான மருந்துகள் சந்நிதியான் ஆச்சிரமத்தால் 16/03/2023 அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. தற்போது வைத்தியசாலையில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக ரூபா 500,798.00 பெறுமதியான மருந்து வகைகள் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தனது தொண்டர்களுடம் சென்று வழங்கி வைத்தார்.


பெண்கள் தலைமைத்துவமான குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை ஊக்குவிக்க கண்காட்சி ஆரம்பம்! Top News
[Thursday 2023-03-16 06:00]

வடமாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் இணைந்த எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண்கள் தலைமைத்துவமான குடும்பங்களின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் மகளிர்களின் உற்பத்திப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் நேற்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெற்றது.


இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் நேற்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் மேற்கொண்டனர்! Top News
[Thursday 2023-03-16 06:00]

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆசிரியர் சங்கத்தினர் நேற்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


யாழ். இந்திய துணைத்தூதுவர் இன் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு! Top News
[Tuesday 2023-03-14 21:00]

யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு எற்பாட்டு செய்யப்பட்ட சிறப்பு மகளிர் தின பட்டிமன்றம் இன்று மாலை யாழ். இந்திய மத்திய கலாச்சார நிலையத்தில், யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் உதவித்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு பட்டிமன்ற நடுவராக பிரதம விருந்தினராக தென்னிந்திய பிரபல பட்டிமன்றபேச்சாளர் திருமதி கவிதாஜவகர் கலந்துகொண்டு நடுமைபேச்சாளராக உரையாற்றினார்.


புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி! Top News
[Tuesday 2023-03-14 06:00]

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும் யாழ்ப்பாணத்தில் நடைபவனி இடம்பெறறது. நேற்று திங்கட்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவு, இருநூறாவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடும் யாழ். பரியோவான் கல்லூரியுடன் இணைந்து இந்த பேரணி மேற்கொள்ளப்பட்டது.


அராலிப் பகுதியில் இடம்பெற்ற மாவட்ட ரீதியிலான மாட்டுவண்டிச் சவாரி! Top News
[Monday 2023-03-13 06:00]

யாழ். மாவட்ட ரீதியிலான மாட்டுவண்டிச் சவாரி நேற்றைய தினம் அராலிப் பகுதியில் இடம்பெற்றது. இந்த போட்டியில் 68 சோடி மாட்டுவண்டிகள் பங்குபற்றின. இதில் ஏ,பி,சி ஆகிய மூன்று பிரிவுகளிலும் சங்குவேலியைச் சேர்ந்த கேமச்சந்திரன் என்பவரது மாடுகள் முதலிடம் பெற்றன.


தையல் மற்றும் அழகுக்கலை கண்காட்சி! Top News
[Monday 2023-03-13 06:00]

தையல் மற்றும் அழகுக்கலை கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி இன்றையதினம் நடைபெற்றது. வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் சங்கானை பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் குறித்த கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களது உற்பத்தி பொருட் கண்காட்சியே இவ்வாறு நடைபெற்றது. இதன்போது கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.


இராணுவத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! Top News
[Monday 2023-03-13 06:00]

நேற்றைய தினம் காரைநகர் பகுதியில் உள்ள பாடசாலைகளில் தரம் ஐந்தில் கல்வி கற்று மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 11ஆவது இலங்கை காலாட்படை அணி ஏற்பாட்டில், 513வது காலாட்படை தலைமையகத்தின் மேற்பார்வையில், ஸ்ரீ முருகன் பிரதீப லோக அமைப்பினால் இவ்வாறு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின்(ECDO) நிதி அனுசரணையில் விதை கச்சான்கள் துணுக்காயில் வழங்கி வைப்பு! Top News
[Thursday 2023-03-09 21:00]

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிதி அனுசரணையில் பெண்கள் அபிருத்தி நிலையத்தின் ஒழுங்குபடுத்தலுக்கமைய விதை கச்சான்கள் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காயில் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டு அவர்களுடைய வாழ்வாதாரங்களை மேம்ப்டுத்தும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் EDCO நிறுவனத்தால் முன்னெடுக்கப்டிருந்தது.


வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி! Top News
[Thursday 2023-03-09 21:00]

116ஆவது "வடக்கின் போர்" துடுப்பாட்ட போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் பரியோவான் கல்லூரி முதலில் களத்தெடுப்பை தெரிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது முதல் இனிங்ஸில் 66 ஓவர்கள் வரை வரை துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.


வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி! Top News
[Thursday 2023-03-09 21:00]

யாழ். அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் பாடசாலையின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விருந்தினர்கள் மாலை அணிவித்து பான்ட் இசையுடன் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றி வைத்து நிகழ்வு ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டு, மாணவர்களின் போட்டிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் 31வது பிறந்த நாள் கொண்டாட்டம்! Top News
[Wednesday 2023-03-08 20:00]

2016 ம் ஆண்டு பொலிஸாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்பல்கலைக்கழக மாணவர் சுலக்சனின் 31 வது பிறந்தநாள் நினைவு இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு 10 ம் மாதம் 21 ம் திகதி இரவு வேளை வீடு திரும்பிக்கொண்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்சன், ந.கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.


தெற்கு வான் கூவர்தீவுகளில் உள்ள பறவையினங்கள் யாழிலும்! Top News
[Wednesday 2023-03-08 06:00]

காலநிலை மாற்றம் காரணமாக புலம்பெயர்ந்து இருக்கும் தெற்கு வான் கூவர்தீவுகளில் உள்ள பறவையினங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தீவக கடற்கரையிலும் அதிகமாக வருகின்றன. அந்த வகையில் யாழ். அராலி மற்றும் மண்கும்பான், ஊர்காவற்துறையில் உள்ள கடற்கரைகளிலும் இவ் பறவையினம் வந்து வருவதை காணமுடிகின்றது.


பொன் அணிகளின் போர் 20:20 போட்டிகளில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி! Top News
[Wednesday 2023-03-08 06:00]

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். புனித பத்திரிசிரியார் அணிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தின் தொடர்ச்சியாக 20:20 போட்டிகள் நேற்று மாலை யாழ். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணக்கல்லூரி அணி துடுப்பாட்டத்தினை முதலில் தெரிவுசெய்தனர்.


இளையவர்களுக்கான பயிற்சி பாசறை! Top News
[Monday 2023-03-06 21:00]

யாழ்ப்பாணம் பழைய மாணவச்சிப்பாய் அமைப்பினால், யாழ். வலயக்கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன், யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு Change To The Life எனும் பயிற்சி பாசறை அண்மையில் இடம்பெற்றது.


மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்! Top News
[Monday 2023-03-06 21:00]

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (06) வடமராட்சி, கரவெட்டி தெற்கு,மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக பொது ஈகை சுடரினை மாமனிதர் கிட்ணன் சிவனேசன் அவர்களுடைய புதல்வி தாட்சாயினி சிவனேசன் ஏற்றியதை தொடர்ந்து அவரது திரு உருவ படத்திற்க்கு மாமனிதர் அவர்களது புதல்விகள் மலர்மாலை அணிவித்தார். பின்னர் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க.சுகாஸ், மற்றும் உறவுகள் ஆதரவாளர்கள், உட்பட பலரும் அணிவித்ததுடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.


முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் 36 இலட்சம் செலவில் சிறுநீராக சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு! Top News
[Monday 2023-03-06 21:00]

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அமைக்கப்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்காக குருதிமாற்றும் சிகிச்சை நிலையம் கனடாவில் வசிக்கும் செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஊடாக 36 இலட்சம் ரூபாசெலவில் அமைக்கப்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலைய திறப்பு நிகழ்வு முல்லைத்தீவு பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் உமாசங்கர் தலைமையில் நடைபெற்றுள்ளது .


ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த 75 வயது பாட்டி! Top News
[Sunday 2023-03-05 21:00]

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான விக்ரோறியா கல்லூரியில் கடந்த 03.03.2023 வெள்ளிக்கிழமை அன்று இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி.எஸ். சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் மாணவர்களின் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா