Untitled Document
October 25, 2026 [GMT]
 
"இனியும் மக்களின் காணிகளை இராணுவம் வைத்திருப்பதற்கு எந்த நியாயமும் கிடையாது" - மயிலிட்டியில் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்! Top News
[Friday 2026-05-22 17:00]

மக்களின் நிலங்கள் மக்களுக்கே செந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக மக்களின் நிலங்களை விடுவிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். வலி வடக்கு மீள்குடியேற்ற அபிவிருத்திக்குழுவின் காணி விடுவிப்பிற்கான போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், முப்பத்தி ஏழு ஆண்டுகளாக துப்பாக்கி முனையில் அரசு மக்களின் நிலங்களை அபகரித்து வைத்துள்ளது. இவ் அபகரிப்பிற்கு எதிராக யுத்தத்தின் பின்னரான 17 ஆண்டுகளாக தொடர்ச்சியாக எமது மக்கள் போராடி வருகின்றனர். பதவியில் உள்ள அரசாங்கம் மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறியே ஆட்சிக்கு வந்தது.


"மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை" - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்! Top News
[Wednesday 2026-05-20 19:00]

ஏனையவர்களை மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். கருவி நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகள் வள நிலையத் திறப்பு இன்று புதன்கிழமை(20) கோப்பாயில் நடைபெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். போரின் காரணமாக தமிழ் மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். போர் காரணமாக மாற்றுத்திறனாளி ஆக்கப்பட்டவர்களை போசிப்பதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எந்த சிறப்புத் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை.


உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026 தொடர்பாக டொரொண்டோவில் ஊடக சந்திப்பு நடைபெற்றது! Top News
[Friday 2026-05-08 10:00]

டொரொண்டோ — 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டொரொண்டோவில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026 தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று CTCC Business Centre இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு அறிஞர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.


பொன்விழா ஆண்டில் கால்பதிக்கும் தமிழர் உயிர்ப்பின் கோட்பாடுகள்! Top News
[Tuesday 2026-05-05 07:00]

பூமிப்பந்தின் விரிப்பில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவிலே, தமிழர் வாழ்வியலின் அடையாளப் பூர்வீக நிலமாக 'ஈழம்' என்று மரபுவழித் தொடரால் அழைக்கப்பெற்ற தமிழீழ தேசத்தினதும், இலக்கிய மரபுகளின் தனிச்சிறப்பியல்பினால்த் துலங்கும் தமிழ் மொழியினதும் மீட்சிக்கும், விடுதலைக்குமாகத் தமிழினமானது தமது ஆத்ம பலத்தின் அத்திவாரத்திலிருந்து ஆன்ம விழிப்போடு, அற்புதமான தியாகங்களால் நிறைந்து, வலிகளையும், வேதனைகளையும் சுமந்து, குருதி பாய்ச்சி, உயிர்க்கொடைகளால் உரமேற்றி, நம்பிக்கை நாணை இறுகப்பற்றிக் கட்டி வளர்க்கப்பட்ட "தமிழீழ விடுதலைப் புலிகள் " என்ற சுயத்தை இழக்காத வரலாற்று இயக்கத்தின் கோட்பாட்டு உயிர்ப்பானது, ஐம்பதாவது அகவையேற்றம் பெற்று பொன்விழாப் பூண்டுள்ளது.


தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் யேர்மனி நடாத்திய “விடுதலை கானம்பாடி - 2026! Top News
[Tuesday 2026-05-05 07:00]

03.05.2026 ஞாயிற்றுக்கிழமை வூப்பெற்றால் ஶ்ரீநவதுர்க்காதேவி ஆலய மண்டபத்தில் தமிழர் கலைபண்பாட்டுக்கழக யேர்மனிக்கிளையின் ஏற்பாட்டில் விடுதலை கானம்பாடி பாடற்போட்டி நிகழ்வானது, பாசறைப்பாணர் மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கான வணக்கத்துடன் தொடங்கப்பட்டது. யேர்மனியில் வளர்ந்து வரும் இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் வகையில் பலவருடங்களிற்கு மேலாக தொடர்ச்சியாக இப்பாடற்போட்டியானது நடாத்தப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்கள் ஒலிவடிவிலான பின்னனி இசையுடன் பாடப்பட்டு வந்த கானம்பாடி நிகழ்வானது, இந்த ஆண்டு மீண்டும் புத்துயிர் பெற்று, புதுப்பொலிவுடன் நேரடியான பக்கவாத்திய இசைக்கருவிகளோடு போட்டியாளர்கள் பாடக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் “தமிழீழம்” இசைக்குழுவின் இசைகலைஞர்கள் இசைவழங்க போட்டியாளர்கள் தங்கள் போட்டிகளுக்கான பாடல்களை சிறப்பாக பாடினார்கள்.


36ஆவது அகவை நிறைவோடு தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்கள் – லண்டவ்! Top News
[Thursday 2026-04-30 18:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கமைய 36ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களில் அணியமாகித் திட்டமிட்டவாறு நடைபெற்று, நிறைவரங்காகத் தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்கம் லண்டவ் நகரிலே அணிசெய்ய 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை அகவை நிறைவு விழா நடைபெற்றது. குறிஞ்சி நிலக் கரையமைந்த மண்டப வாசலில் கதிரோனின் ஒளிபரவிய காலைப்பொழுதில் பசுமைக்கட்சியின் (Büdnis90/Die Grünen) லண்டவ் நகரசபை உறுப்பினரான சோபியா பேர்லின் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிட விழாத் தொடங்கியது. சிறப்பு விருந்தினர், வெற்றியாளர் மற்றும் மதிப்பளிப்பைப் பெறவந்த அறப்பணியாளர் ஆகியோரைத் தமிழினத்தின் பண்பாடு தழுவிப் பன்னீர் தெளித்துச் சந்தனப் பொட்டிட்டு வாழ்த்திசைப்பாவுடன் அரங்கினுள் அழைத்துவரப்பட்டனர்.


கிளிநொச்சி: ஜெயபுரம் மகாவித்தியாலய மாணவி மரணம் – சமூகத்தை உலுக்கும் துயரம்! Top News
[Saturday 2026-04-25 19:00]

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் கல்வியில் முன்னேற்றம் கண்டுவரும் மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களும் உட்பட அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்சயாவின் இன்முகம், எப்போதும் சிரிப்புடன் பழகும் தன்மை மற்றும் நண்பர்களுடன் இணைந்து கலந்துரையாடும் இயல்பு ஆகியவை அனைவரின் நினைவிலும் நிலைத்து நிற்கின்றன.


ஜெர்மனியின் Herne நகரில் 13.03.2026 - 15.03.2026 வரை நடைபெற்ற பரதநாட்டிய போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது! Top News
[Thursday 2026-04-23 07:00]

இந்த நிகழ்ச்சியை அழகாக ஏற்பாடு செய்த *தமிழ் பெண்கள்* அமைப்பிற்கு எங்களது இதயப்பூர்வமான பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


யாழில் பிரபலமான றியோ கனடாவில் விமரிசையாக திறந்து வைக்கப்பட்டுள்ளதை பெருமையுடன் அறியத்தருகின்றனர்! Top News
[Thursday 2026-04-09 07:00]

இன்று மார்க்கம் நகரின் (மாரக்கம் - எல்சன் ) சந்திப்பில் மிக விமரிசையாக திறந்து வைக்கப் பட்டுள்ளதை பெருமையுடன் அறியத் தருகின்றனர். திரு . செந்தில் குமரனின் நிவாரண உயிர்காப்பு அமைப்பின் மனித நேயப் பணிகளுக்கு எப்பொழுதும் தாராள பொருள் உதவி வழங்கி வரும் இந்நிறுவன உரிமையாளர் என்பது இங்கு கவனத்திற்குரியது.


வாசிங்டன், டி.சி. - யில் நடைபெற்ற 'நேட்னா' முதல் மாநாடு - மாபெரும் வெற்றி! Top News
[Thursday 2026-04-09 07:00]

வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (North American Thamizh National Association, Inc. -- NATNA) முதல் மாநாடு, அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன், டி. சி.- யில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழ் இன உணர்வாளர்களும், பொதுமக்களும் மிகப்பெரிய அளவில் கலந்துகொண்டு மாநாட்டைச் சிறப்பித்தனர். கனடாவின் பல பகுதிகளில் இருந்தும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பல பகுதிகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாகப் பயணித்து வந்து தமிழ்த்தேசியத்திற்கான தேவையையும், வலிமையையும் பறைசாற்றினார்கள்! தமிழ் நாட்டுத் தமிழர், ஈழத்தமிழர், மலேசியத் தமிழர் என உலகளாவிய தமிழ் உறவுகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


சிவ்சங்கர் மேனனுக்குப் பதில்: புலம்பெயர் தமிழர்கள் காலனித்துவ நீக்கக் கோட்பாட்டை முன்வைத்து, இலங்கைக் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டிற்குச் சவால் விடுக்கின்றனர்! Top News
[Monday 2026-03-30 20:00]

டெய்லி மிரர் ஸ்ரீலங்காவுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவசங்கர் மேனன் தெரிவித்த கருத்துக்களுக்கு, அமெரிக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று ஒரு வலுவான பதிலடியை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழ் பிரச்சினையை ஒரு உள்நாட்டு விவகாரமாக வகைப்படுத்த முடியாது என்றும், அது சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பிற்குள் கையாளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருந்தார்கள் .


தமிழ்நாடு முழுவதிலும் டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன! Top News
[Friday 2026-03-20 20:00]

டி-சேவா சென்டர் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்கள், மாவட்டங்கள், மண்டல்கள் மற்றும் ஊராட்சிகளில் டி-சேவா ஆன்லைன் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்களை திறக்க उद्यमிகள் மற்றும் வேலைவாய்ப்பின்மையினோரிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. புதிய PAN அட்டைகள் தொடர்பான விண்ணபங்கள் மற்றும் திருத்தங்கள், பேருந்து, ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள், வங்கிப் பண பரிவர்த்தனைகள், ஆதார்ப் பாவனையால் பண பரிமாற்றம், மைக்ரோ ATM சேவைகள், பண வைப்பு, சுகாதாரம், பைக் & கார் காப்பீடுகள், நிலுவை கட்டணங்கள், 1000 க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு பாடநெறிகளில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கான பதிவு, 500 க்கும் மேற்பட்ட திறன்களுக்கு திறன் சான்றிதழ் தேர்வுக்கான பதிவு, 100 க்கும் மேற்பட்ட அரசுத் தேர்வுகளுக்கான மாக் தேர்வு பதிவு மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை பயனாளர்களுக்கு வழங்கலாம்.


பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக புத்தூரில் போராட்டம்! Top News Top News
[Friday 2026-02-27 12:00]

அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமுறைச்சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என வலியுறுத்தி புத்தூரில் கறுப்புப் பதாகை ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புப் பதாகைகளை வீதியில் கட்சிப்படுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை மதியம் புத்தார் பிரதேச சபையின் முன்பாக தவிசாளர் தியாகராஜா நிரோ~; தலைமையில் ஒன்று கூடிய பிரதேச சபையின் உறுப்பினர்கள் அரசு நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தினையும் நீக்கவேண்டும் என கோசம் எழுப்பியதுடன் புதிய அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தினையும் நீக்கவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஈழத்தமிழர்களுக்கு கரிநாள்: இலங்கையின் சுதந்திர தினத்தில் லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! Top News
[Thursday 2026-02-05 06:00]

ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் சுதந்திர தினம் ஒரு கரி நாள் என்று கூறியும் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் இன்று லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகரகத்திலிருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரைக்கும் பேரணியாக சென்ற புலம்பெயர் தமிழ் உறவுகள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


வாகீசன் இராசையாவுக்கு 'வேல்' வழங்கிப்பாராட்டிய அமைச்சர் விஜய் தணிகாசலம்! Top News
[Monday 2026-01-26 07:00]

கனடாவின் ரொறன்ரோ நகரில்அமைந்துள்ள டூறம் மாநாட்டு மண்டபத்தில்(Durham Convention Centre), ஜனவரி24-ஆம் திகதி சனிக்கிழமை அன்று'எங்கட பெடியள்' என்ற கருப்பொருளில்மாபெரும் கலை நிகழ்ச்சியொன்றுநடைபெற்றது. தேர்ட் ஐ மீடியாபுரொடக்சன் (ThirdEye Media Production) நிறுவனத்தால் மிகவும்நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த'வாகீசன் லைவ் இன் ரொறன்ரோ' (Vaheesan Live in Toronto) இசைச்சங்கமம், உலகத்தமிழர்களை இசையாலும்உணர்வாலும் ஒன்றிணைக்கும் ஒருவரலாற்றுப் பாலமாக அமைந்திருந்தது. இக்கலைவிழாவில், 'சிலோன் ராப்' (Ceylon Rap) சொல்லிசைக்கலைஞர்களின் பங்களிப்பும் அவர்களின்ஆழமான தமிழ்ப்பற்றும் வெகுவாகப்பாராட்டப்பட்டது.


தொல்லியல் இழுபறியால் கவனிப்பாரற்றிருந்த நிலாவரை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் தூய்மிப்பு! Top News
[Monday 2026-01-12 07:00]

நிலாவரை ஆழமற்ற கிணற்றுப் பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக சமூக வலைத்தளம், ஊடகங்களில் வெளியாகிய விமர்சனத்தினைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் விரைவாக துய்மிப்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன. காலாகாலமாக பிரதேச சபையினால் நிலாவரை ஆழமற்ற கிணறு உள்ளிட்ட பகுதிகள் சபையின் சொத்தாக பராமரிக்கப்பட்டன. பிரதேச சபையின் நேரடி முகாமைத்துவத்தின் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் எல்லை மதில்கள் அமைக்கப்பட்டு ஆழமற்ற கிணற்றினைச் சுற்றி பாதுகாப்பு, உலோக வேலிகள், பிரதேசத்தினை அழகுபடுத்தும் மின்குமிழ்கள், பார்வையாளர் இருக்கைகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு திறன்பட வலயம் முகாமை செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் தமிழ் மக்களின் வரலாறும் தொன்மையும் எடுத்தியம்பப்பட்டு வந்தது.


மைக்கேல் ஜாக்சனுடன் நடனம் ஆடிய ஈழ வம்சாவழித் தமிழ்ப்பெண்! Top News
[Sunday 2026-01-11 17:00]

நடன அசுரன் மைக்கேல் ஜாக்சனுடன் ஒரு தமிழ்ப்பெண் நடனம் ஆடி இருக்கிறார். இந்த விசயம் சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. இது 1991-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி. அவரை ஸ்காபரோவில் நடைபெற்ற குமாரி அபீனா சத்தியலிங்கம் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அழைத்திருந்த வேளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட என்னால் சந்திக்க முடிந்தது. 1991 இல் மைக்கல் யக்சனுடன் நடனமாடிய அந்தத் தமிழ்ப்பெண் நயனங்களின் கலை விருந்தாய், மிக நளினமாய் நடனம் ஆடி தமிழ் உலகத்தையே ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். அவர் தான் யமுனா சங்கரசிவம்.


ராவண தேசத்தை மீட்போம்!
[Monday 2025-12-29 17:00]

கடந்த கால சிங்கள அரசாங்கங்கள் தமிழர்களையும் தமிழ அரசியல் தலைவர்களையும் கொலை செய்து அழிப்பதற்காக சிங்கள பகுதிகளில் இருந்த தமிழ் தலைவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து தமிழர்கள் தமிழர்களையே கொலை செய்ய எல்லா வசதிகளும் பணமும் கொடுத்து உதவிசெய்த சிங்களர் அரசியல் தலைவர்கள் இப்போதுதமிழர் பகுதிகளில் குறிப்பாக வட பகுதியில் தங்கள் சிங்கள அரசியலை நிலைநிறுத்தவும் புதிய சிங்கள கட்சிகளுக்கு தமிழ் அடிமைகளை சேர்க்கவும் தங்களுக்கு வடபகுதியில் அஞ்சலாக இருக்கக்கூடிய தங்களால் வளர்க்கப்பட்ட தமிழ் தலைவர்களை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அப்புறப்படுத்தும்வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. இந்த தமிழ் தலைவர்கள் கடந்த காலத்தின் சிங்களவர்களோடு சேர்ந்து செய்த வேலைகளை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், இன்று இந்த டக்ளஸ் தேவானந்தாவின் கைது தமிழர்களுக்கு புதிய மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. வருங்காலத்தில் தமிழ் மக்கள் பெரும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் போல் உள்ளது. அரசியல் காரணங்களுக்காக டக்ளஸ் தேவ ஆனந்தாவை கைது செய்த அரசாங்கம் அவருக்கு ஆயுதம் கொடுத்த ராணுவத்தினையும் அப்போது இருந்த அரசாங்க ஜனாதிபதியையும் எப்போது கைது செய்வார்கள். அத்தோடு 1988,1989 ஆண்டு தங்கள் அரசியல் எதிரிகளை கொலை செய்ய ஜேவிபி இயக்கம் , பிளாட் இயக்கத்தை பயன்படுத்தியது எல்லோருக்கும் தெரியும். அதற்காக சித்தார்த்தன் ஐயும் ஜேவிபி இயக்கத் தலைவர்களையும் விசாரணைக்காக எப்போது கைது செய்வார்கள்.


அவுஸ்ரேலியா தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார்! Top News
[Monday 2025-12-15 07:00]

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் யூத சமூக ஹனுக்கா கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் நவீத் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து 50 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு தெருவை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.


இலங்கையின் வெள்ள நிவாரணத்திற்காக கனடிய அரசு 1 மில்லியன் கனேடிய டாலர் உதவி! Top News
[Sunday 2025-12-07 07:00]

இலங்கையின் வெள்ள நிவாரணத்திற்காக கனடிய அரசு 1 மில்லியன் கனேடிய டாலர் உதவி அறிவித்துள்ளதை கனேடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்கிறது. இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிக்கும் பொருட்டு, 1 மில்லியன் கனேடிய டாலர் மனிதாபிமான உதவியை அறிவித்துள்ள கனடா அரசுக்கு கனேடிய தமிழர் பேரவை (CTC) தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


இனம் தான் இலங்கையின் ஆதி இனம் என்று கூறுவது வரலாற்றிற்கு முற்றிலும் முரணானது!
[Sunday 2025-12-07 07:00]

இலங்கைத் தீவானது இன்று சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தான "சிங்கள தேசம்" என்று முன்னிறுத்தப்பட்டாலும், வரலாற்றின் ஆழமான பக்கங்கள் உண்மையை உரக்கச் சொல்கின்றன. இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; இது தமிழ், சிங்களம், முஸ்லிம் என மூவின மக்களுக்கும் சொந்தமான ஒரு பல்லினப் பண்பாட்டு நாடு (Multicultural Country). ஆனால், வரலாற்றைத் திரித்து, பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் தமிழர்களின் பூர்வீகத்தை மறைக்க நடக்கும் திட்டமிட்ட முயற்சிகளை நாம் சான்றுகளுடன் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து நான்காவது நிவாரண உதவி விமானம் இலங்கையை வந்தடைந்தது! Top News
[Thursday 2025-12-04 07:00]

கடும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜயத்திலிருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிய நான்காவது விமானம் நேற்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது. ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானப்படைக்குச் சொந்தமான C-17A விமானம் மூலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட இந்த உதவிப் பொருட்களை, இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் சஷீந்ர விஜேசிறிவர்தன உத்தியோபூர்வமாகப் பொறுப்பேற்றார்.


"வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உணவுகள் உதவிகள் தேவை" - தவிசாளர் நிரோஸ்! Top News
[Sunday 2025-11-30 19:00]

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அதிக வெள்ளப்பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் எமது பகுதிக்கு உடனடி உணவு உதவிகள் தேவையாகவுள்ளன என உதவிகளை நல்கக் கூடியவர்களின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


"மாவீரர்களின் தியாகம் எம்மை தமிழ்த்தேசிய கொள்கைவழியில் வழிநடத்தகின்றது" - நினைவேந்தலில் தவிசாளர் நிரோஸ்!
[Friday 2025-11-28 07:00]

மாவீரர்களின் தியாகத்தினாலேயே தமிழ் மக்களின் இருப்பு தக்கவைக்கப்பட்டது என தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பிரேதச சபையில் மேற்கொள்ளப்பபட்ட அஞ்சலி நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும,; தமிழ் மக்கள் இந் நாட்டின் தேசிய இனமாக மரபுவழித்தாயகத்தில் வாழ்வதற்கான உரிமையினை இலங்கை அரசு மறுத்தது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது பௌத்த சிங்கள பேரினவாதத்தினை கட்டவீழ்த்து விட்டபோது தமிழ்த் தலைவர்கள் ஜனநாயக ரீதியில் அவட் அடக்குமுறைக்கு எதிராகப் போராடினார்கள்.


அரசபாளையத்தில் மாவீரர் நாள் அஞ்சலி 2025! Top News
[Friday 2025-11-28 07:00]

தமிழீழப் போரில் இன்னுயிர் ஈந்த வீரவேங்கைகளுக்கு அரசபாளையத்தில் மாவீரர் நாள்அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெருந்திரளான மக்கள் மலர் தூவி வீரவணக்கம் செய்தனர். தமிழீழ விடுதலையை நெஞ்சில் ஏந்தி களமாடிய வீரர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றி அவர்கள் மாவீரர்களின் ஈகங்கள், வீர களமுனைச் செய்திகள், ஈழ வரலாற்றில் தமிழினத்தின் எழுச்சிகள் பற்றி விரிவான உரை ஆற்றி, மாண்ட விடுதலை வீரர்களை தமிழர்களின் நெஞ்சில் படமாகச் செதுக்கினார். தொடர்ந்து மாவீரர்களின் எழுச்சி பாடல்களுக்கு கலைநிகழ்வுகள் நடந்தேறின. நிகழ்சிகளை தமிழ் தமிழர் இயக்கம் ஒருங்கிணைத்திருந்தது.


தமிழ் பௌத்தம், தமிழ் இறையாண்மை, மற்றும் தமிழர்கள் பௌத்தத்தை கைவிட்டதற்கான காரணம்!
[Saturday 2025-11-22 16:00]

தமிழர்கள் தங்களுக்கே உரிய திராவிடப் பழமையான சமயத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடைப்பிடித்தனர் — அது புத்தமதத்திற்கு முன்பும், சிங்கள கலாச்சாரம் உருவாகும் காலத்திற்கும் முன்பும் இருந்தது. பின்னர் புத்தமதம் தமிழர்களிடம் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் செழித்து வளர்ந்தது. ஆனால் காலப் போக்கில் சில புத்த பிக்குக்கள் ஊழல், ஒழுங்கின்மை, செல்வச் சேர்த்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதால் தமிழ் சமூகத்தில் புத்தமதத்தின் மீது நம்பிக்கை குறைந்தது. இதுவே பக்தி இயக்கத்தின் வழியாக தமிழ் சைவத்தின் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது.


வலி.தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி! Top News
[Saturday 2025-11-22 07:00]

யாழ்ப்பாணம் , வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில் , மானிப்பாய் நகர் பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டு, பிரதேச சபை முன்பாக விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.


கனடாவின் உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் வாகீசன் மதியாபரணம் பெற்றார்! Top News
[Sunday 2025-11-09 18:00]

இலங்கையில் பிறந்த தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு படைத்துள்ளார். கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் நடைபெற்ற விழாவில், வாகீசன் மதியாபரணத்திற்கு இந்த பெருமை வழங்கப்பட்டது. அகதியாக கனடாவுக்கு வந்த அவர், சுமார் முப்பது ஆண்டுகள் கனடா இராணுவத்தில் பணியாற்றி, அண்மையில் ஓய்வுபெற்றார்.


லேக்சோர் கிழக்கு தொடரி வழித்தடத்தில் 'கோ' தொடரிச் சேவை அதிகரிப்பு!
[Friday 2025-10-31 15:00]

அக்டோபர் 27 முதல், லேக்சோர் கிழக்கு தொடரி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமான நேரங்களில் ஆறு புதிய தொடரிகளை இயக்கவுள்ளோம். இது, ஸ்காபரோ வாழ் மக்களுக்கு நாளாந்தாம் விரைவானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவையை வழங்கும். அதிகூடிய போக்குவரத்து நெரிசல் நேரங்களில் இப்போதுள்ள 15 நிமிடங்களுக்கு ஒருமுறையான சேவை, 10 நிமிடங்களுக்கு ஒரு தொடரி என அதிகரித்து இயக்கப்படும். இதனால், வேலை மற்றும் பாடசாலைகளிலிருந்து வீடு திரும்புவோர் விரைவாக வீட்டிற்குச் செல்ல முடியும். அதிகூடிய போக்குவரத்து நெரிசலுள்ள நேரங்களாக காலை 7 மணி முதல் 8:30 மணி வரையும், பின்நேரம் 4 மணி முதல் 6 மணி வரையுமாக வரையறுக்கப்பட்டுள்ள நேரங்களில், மக்களுக்கு வசதியான சேவைகளை இது உறுதிப்படுத்துகிறது.


திலிபனுக்கு வலி கிழக்கு பிரதேச சபையில் அஞ்சலி: வீதிக்கு பெயரிடவும் சபையில் சிலை அமைக்கவும் தீர்மானம்! Top News
[Friday 2025-09-26 18:00]

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தியாக தீபம் திலிபனின் நினைவு தினத்தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டதுடன் திலிபனின் தியாகத்திற்கு மதிப்பளிக்குமுகமாக தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன. இன்று வியாழக்கிழமை காலை பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ; தலைமையில் சபை முன்றலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் பொதுமக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அஞ்சலிச்சுடரினை இந் நாள் பிரதேச சபையின் உறுப்பினர் விஜயதாரணி ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடந்து தவிசாளரினால் அஞ்சலியுரை நிகழ்த்தப்பட்டது.

Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா