Untitled Document
October 23, 2026 [GMT]
 
விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் கைது: பிக்பாஸ் பிரபலத்தின் காதலியும் சிக்கினார்!
[Saturday 2020-01-11 18:00]

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படி ஹிந்தி பிக்பாஸ் 13வது சீசனில் பங்கேற்றவர் அர்ஹான் கான். இவரது முன்னாள் காதலி Amrita Dhanoa. அர்ஹான் கான் தன்னிடம் இருந்து 5 லட்சம் ருபாய் ஏமாற்றிவிட்டதாக அம்ரிதா சமீபத்தில் சர்ச்சை புகார் கூறியிருந்தார். மேலும் போலீசில் புகார் அளித்து அவரை சிறையில் தள்ளப்போவதாகவவும் தெரிவித்தார்.


பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்!
[Saturday 2020-01-11 08:00]

இந்தி நடிகை சோனம் கபூர். அனில்கபூரின் மகளான இவர் தனுசுடன் ராஞ்சனா என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை சரமாரியாக விமர்சித்துள்ளார். சோனம் கபூர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இந்த மாதம் மூன்று முறை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளேன். இதில் இரண்டு முறை எனது உடமைகளை இழந்து விட்டேன். அதை வேறு விமானத்தில் அனுப்பி வைத்து விட்டனர். இதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். இனி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய மாட்டேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


தன்னை மிரட்டுவதாக வடிவேலு மீது பிரபல தயாரிப்பாளர் புகார்!
[Saturday 2020-01-11 08:00]

நடிகர் வடிவேலு எலி திரைப்படத்தில் நடித்த போது அந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் குமாருக்கு தனது நண்பர் ராம்குமாரிடம் ஒன்றரை கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் வடிவேலு கொலை மிரட்டல் விடுத்ததாக சதீஷ் குமார் தரப்பில் மதுரை கே.புதூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் சதீஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:- எலி திரைப்படத்தில் நடிகர் வலுவேலுவை நடிக்க வைத்து 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பல படங்கள் நடிகர் வடிவேலுவால் பிரச்சினை ஆகி பாதியில் நிற்கிறது.


அவர்களின் பேச்சு எனக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது - மதுஷாலினி!
[Saturday 2020-01-11 08:00]

பாலா இயக்கிய அவன் இவன், சசிகுமார் நடித்த பிரம்மன், கமல்ஹாசனின் தூங்காவனம் உட்பட சில படங்களில் நடித்தவர் மது ஷாலினி. பின்னர் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த அவர், இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அவர் நடிப்பில் உருவான பஞ்சராக்‌ஷரம் கடந்த மாதம் வெளியானது. மதுஷாலினி அளித்த பேட்டியில் கூறியதாவது:- இடைவெளி எல்லாம் இல்லை தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் அவை அனைத்துமே ஒரே மாதிரியான கேரக்டர் கொண்டவையாக இருந்தன. நடித்த கேரக்டரிலே நடிக்க வேண்டாம் என்பதால் அவற்றில் நடிக்கவில்லை. இருந்தாலும் மற்ற மொழிகளில் பிசியாகத்தான் நடித்து வருகிறேன்.


குஷ்புவை ஈர்த்த ரஜினி!
[Friday 2020-01-10 18:00]

ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தர்பார் படம் சென்னையில் மட்டும் 26 தியேட்டர்களில் 73 திரைகளில் 337 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. முதல் நாளில் மட்டும் சென்னையில் ரூ. 2.27 கோடி வரை வசூலித்துள்ளது. இப்படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்!
[Friday 2020-01-10 18:00]

தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘கனா’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார். தற்போது தமிழில் வானம் கொட்டட்டும் திரைப்படமும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வொர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்திலும் நடித்து வருகிறார். இவர் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.


பார்வையற்ற தம்பதியின் ஆசையை நிறைவேற்றிய விஜய்! Top News
[Friday 2020-01-10 18:00]

தனியார் டிவி விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு முன்பாக முன்னணி நடிகர்களின் ரசிகர்களை வைத்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் தம்பதியான குமார் - கீதா இருவரும் கலந்து கொண்டனர். இதில் குமார் பேசும் போது, "அண்ணா.. உங்களைப் பார்க்க வேண்டும் என 20 ஆண்டுகளாக பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். அனைத்திலுமே எனக்குத் தோல்விகள்தான் வந்துள்ளது. நான் சாகிறதுக்குள்ள ஒரே ஒரு முறை உங்களைப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் அண்ணா. நீங்கள் நல்லாயிருக்கணும், 100 ஆண்டுகள் நல்லாயிருக்கணும். 1000 வருஷம் நல்லாயிருக்கணும். அண்ணி, குழந்தைகளுடன் சந்தோஷமா இருக்கணும். எங்களுக்கு நிறைய படம் கொடுக்கணும். நிறைய பெயர், புகழ் எல்லாம் சம்பாதிக்கணும். அதாவது உங்களுக்கு முன்பாகவே நாங்கள் இருவரும் செத்துப் போய்விட வேண்டும். நீங்கள் இல்லாத ஒரு உலகத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை" என்று பேசினார்.


அவருக்காக ஒருமணிநேரம் அழுதேன் - நயன்தாரா!
[Friday 2020-01-10 08:00]

சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை அடுத்து ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்ற இவர், அதே நேரம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் கோவில் கோவிலாக, ஊர் ஊரக சுற்றி வருகிறார். இந்நிலையில், நயன்தாரா தனது வாழ்க்கையில் முக்கியமான நபர், அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் கதறி கதறி அழுத சம்பவம் குறித்து பேசியுள்ளார்.


சிவகார்த்திகேயனுடன் இணைந்த பாலிவுட் பிரபலம்!
[Friday 2020-01-10 08:00]

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.


தர்பாரில் குறிப்பிட்ட காட்சியை நீக்குமாறு எச்சரிக்கை!
[Friday 2020-01-10 08:00]

தர்பார் படம் இன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் ரஜினி மும்பை நகர போலீஸ் கமிஷனர் வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் வரும் ஒரு காட்சியில், "சிலர் சிறையில் இருந்து ஷாப்பிங் கூட போய்ட்டு வராங்க" என கூறியிருப்பார் ரஜினி.


கர்ப்பம் தரிக்கும் நிலையில் நான் இல்லை: தீபிகா படுகோனே காட்டம்!
[Thursday 2020-01-09 18:00]

இந்தி நடிகை தீபிகா படுகோனேயும், நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியில் இருக்கும் லேக் கோமாவில் திருமணம் செய்து கொண்டனர். அவ்வப்போது கர்ப்பம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் தீபிகா, நான் கர்ப்பமானால், அதை மறைக்க முடியாது; ஒன்பது மாதமானால், நான் சொல்லாமலேயே என் உடம்பும், வயிறும் உங்களுக்கு காட்டி விடப்போகிறது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை; மறைக்கவும் வாய்ப்பில்லை என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.


புதிய சாதனை படைத்த தர்பார்!
[Thursday 2020-01-09 18:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று தர்பார் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. திருவிழா போல கொண்டாட்டங்கள் இன்று அதிகாலை பல தியேட்டர்களில் நடைபெற்றன. ரசிகர்கள் ஆரவாரத்துடன் உற்சாகத்துடன் படத்தை கண்டு மகிழ்ந்ததை காண முடிந்தது. அண்டை மாநிலமான கேரளாவில் இப்படம் 350 தியேட்டர்களுக்கும் அதிகமாக வெளியாகியுள்ளது.


நஸ்ரியாவின் கணவர் பகத் பாசிலுக்கு என்ன ஆனது?.. Top News
[Thursday 2020-01-09 18:00]

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக கொண்டாடப்பட்டவர் நடிகை நஸ்ரியா. சிறு வயதிலேயே நடிக்க வந்த அவர் மலையாளத்திலும் கொஞ்ச படங்கள் நடித்துள்ளார். பீக்கில் இருக்கும் போதே மலையாள சினிமா நடிகரான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது இருவரும் ஜோடியாக எடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் நடிகர் பகத் பாசிலின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.


ரசிகர்களை ஏமாற்றிய யஷ்!
[Thursday 2020-01-09 08:00]

2018ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த இப்படத்தில் யஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இப்படம் மாபெரும் வெற்றிபெற்றதோடு ஜப்பான், கொரியா முதலிய அயல் நாடுகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ள நிலையில் கே.ஜி.எப் 2 வின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.


சமந்தாவின் ரகசியத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்!
[Thursday 2020-01-09 08:00]

சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மத்தியில் 'டாட்டூ' போட்டுக்கொள்வது வழக்கமான ஒன்று. விதவிதமான எழுத்துக்கள், டிசைன்களில் அந்த டாட்டூக்கள் இருக்கும். நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, அவருடைய சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது வழக்கம். பல லட்சம் பேர் அதற்கு லைக் கொடுப்பார்கள். சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சமந்தா அப்போது அணிந்த ஆடையுடன் சில புகைப்படங்களை வெளியிட்டார். அதில் ஒரு புகைப்படத்தில் அவரது வலது இடுப்பு பகுதியில் இருக்கும் டாட்டூ என்ன என்பதுதான் கடந்த சில நாட்களாக பரபரப்பானது.


தடைகளை உடைத்தெறிந்தது தர்பார்!
[Thursday 2020-01-09 08:00]

நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள தர்பார் என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய். கிரியே‌‌ஷன்ஸ் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில், ‘ரஜினி நடித்த 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தை தயாரிக்க ரூ.12 கோடியை, ஆண்டுக்கு கடனும் கொடுத்தோம். அந்த கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.23 கோடியே 70 லட்சத்தை லைக்கா நிறுவனம் தரவேண்டும்.


குழந்தை பெற்றுக்கொள்ளாதது குறித்து விளக்கமளித்த நடிகை விஜயசாந்தி!
[Wednesday 2020-01-08 18:00]

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த விஜயசாந்தி அரசியலுக்கு சென்றதால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் தெலுங்கு படமொன்றில் மகேஷ் பாபுவின் அம்மாவாக நடித்து இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “என்னை நடிக்க சொல்லி தொடர்ந்து அழைப்புகள் வந்தன. ஆனால் நல்ல கதைகள் அமையாததால் விலகி இருந்தேன். இப்போது மகேஷ் பாபு படத்தில் முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அரசியல்தான் எனக்கு முக்கியம். பிடித்த கதாபாத்திரம் அமைந்தால் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பேன். குழந்தைகள் எனக்கு பிடிக்கும். ஆனாலும் குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்து விடும். அரசியலுக்கு வந்த பிறகு சுயநலத்தை விட்டால்தான் பொது தொண்டு செய்ய முடியும்.


தந்தையுடன் இணைந்து நடிக்கும் துருவ்!
[Wednesday 2020-01-08 18:00]

ஆதித்ய வர்மா மூலம் நல்ல நடிகர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்கிறார் விக்ரமின் மகன் துருவ். நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாவது படத்தின் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் தந்தையும் மகனும். பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் விக்ரமும், துருவ்வும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஜே.என்.யு. போராட்டத்தில் கலந்துகொண்ட தீபிகா படுகோன்! Top News
[Wednesday 2020-01-08 17:00]

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து முகமூடி அணிந்த வன்முறை கும்பல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இதையடுத்து அவரது அடுத்த படமான 'சபாக்' திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் வலதுசாரிகள். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து கடுமையாகத் தாக்கியது. இதில் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவி ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.


மலேசியாவில் தர்பார் படத்துக்கு தடை!
[Wednesday 2020-01-08 09:00]

நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள தர்பார் என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய். கிரியே‌‌ஷன்ஸ் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில், ‘ரஜினி நடித்த 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தை தயாரிக்க ரூ.12 கோடியை, ஆண்டுக்கு கடனும் கொடுத்தோம். அந்த கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.23 கோடியே 70 லட்சத்தை லைக்கா நிறுவனம் தரவேண்டும். இந்த தொகையை தராமல், படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.


திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த சுவாதி!
[Wednesday 2020-01-08 09:00]

தமிழில் 'சுப்ரமணியபுரம்' படம் மூலம் அறிமுகமானவர் சுவாதி. அதன்பின், "போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை" உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2018ம் ஆண்டு அவருடைய காதலரை திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியா நாட்டில் செட்டிலானார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் தெலுங்கில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.


விஜய்சேதுபதி பிறந்தநாளையொட்டி உடல் உறுப்பு தானம் செய்த ரசிகர்கள்!
[Wednesday 2020-01-08 08:00]

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய பிறந்தநாள் ஜனவரி 16. விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் 202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்புதான செய்த சான்றிதழ்களை சமர்பித்தனர்.


நாயை காப்பாற்ற முயன்ற போது உயிரிழந்த இளம் இயக்குனர்!
[Tuesday 2020-01-07 18:00]

மலையாள சினிமாவில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விவேக். த்ரிஷ்யம், மெமரிஸ் போன்ற படங்களில் பயிபுரிந்துள்ளார். தமிழில் குறும்படங்களை இயக்கிய விவேக் கடந்த மாதம் 22ம் தேதி தனது மனைவி அம்ருதாவுடன் திருச்சூர் தாண்டி சென்றுள்ளார். அப்போது திடீரென குறுக்கே வந்த நாயை காப்பாற்ற பிரேக் பிடிக்க நிலை தடுமாறி இருவரும் வேகமாக கீழே விழுந்துள்ளனர்.


கொடிய நோயால் அவதிப்படும் பிரபல தயாரிப்பாளர்!
[Tuesday 2020-01-07 18:00]

விஜய்யின் பிரம்மாண்ட படங்களில் ஒன்று மெர்சல். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் அதிக தொகைக்கு தயாரித்தனர். படமும் அவர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது, படத்தால் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணியும் சந்தோஷத்தில் உள்ளார். ஆனால் அவருக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார். அதாவது அவருக்கு கடல் உணவுகள் சாப்பிட்டால் உடலில் அலர்ஜி ஏற்படுமாம், இதனால் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்.


விஜய் துப்பாக்கி படத்தில் நடிக்க இதுதான் காரணம்!..
[Tuesday 2020-01-07 18:00]

விஜய் திரைப்பயணத்தில் இன்று வரை மிக முக்கியமான பார்க்கப்படுவது துப்பாக்கி படம் தான். இப்படம் தான் விஜய்யின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தி சென்றது. மேலும், விஜய்யின் முதல் ரூ 100 கோடி வசூல் படமும் துப்பாக்கி தான், இந்நிலையில் துப்பாக்கி படத்தை முருகதாஸ் இயக்கினார் என்பது ஊர் அறிந்த விஷயம் தான். ஆனால், அந்த படம் எப்படி தொடங்கியது என்பதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார், அதில் ‘நான் துப்பாக்கி கதையை முதலிலேயே அக்‌ஷய் குமாரிடம் சொல்லிவிட்டேன்.


ரூ.1 கோடிக்கு கார் வாங்கிய ஜெயம் ரவி பட நடிகை!
[Tuesday 2020-01-07 08:00]

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக பூமி படத்தில் நடிப்பவர் நிதி அகர்வால். இந்த படத்தை ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லட்சுமண் டைரக்டு செய்கிறார். நிதி அகர்வால் இந்தியில் மைக்கேல் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் அவர் நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை. இதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யவும் தயங்கினார்கள்.


ஏ.ஆர்.முருகதாஸ் கதை சொன்னதும் அஜித் என்ன சொன்னார் தெரியுமா?..
[Tuesday 2020-01-07 08:00]

தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் நடித்த தீனா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இப்படம் அஜித்தை ஆக்‌ஷன் ஹீரோவாக தரம் உயர்த்தியது என்றே சொல்லலாம். அதேபோல் அஜித்தை அவரது ரசிகர்கள் செல்லமாக தல என அழைப்பர். அதுவும் இந்த படத்தில் இருந்து வந்ததுதான். இப்படி அறிமுக படத்திலேயே அசர வைத்த முருகதாஸ், மீண்டும் அஜித்தை வைத்து மிரட்டல் என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அஜித் அப்படத்தில் இருந்து விலகினார். இந்த கதையை தான் சூர்யாவை வைத்து கஜினி என்ற பெயரில் படமாக எடுத்தார் முருகதாஸ்.


அந்த படம் என் மகளுக்கு பிடிக்காது - பாலிவுட் நடிகை கஜோல்!
[Tuesday 2020-01-07 08:00]

மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் நடித்த கஜோல் மீண்டும் நடிக்க வந்துள்ளார். கரீனா கபூர் `வாட் விமன் வான்ட்' ரேடியோ ஷோவில், `நீங்கள் நடித்த படங்களில் உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காத படம் எது?' என்ற கேள்விக்கு, ``விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட `வீ ஆர் ஃபேமிலி' படம், என் மகள் நைஸாவுக்குப் பிடிக்காத படம். அந்தப் படத்தில் நான் மூன்று குழந்தைகளுக்கு அம்மா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, படத்தின் இறுதியில் இறந்துவிடுவேன். மிகவும் உருக்கமான படம் அது. இந்தப் படம் ரிலீஸானபோது, என் மகன் சின்ன குழந்தை.


சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகர்!
[Monday 2020-01-06 18:00]

டெல்லியில் நேற்று நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கும்பல் திடீரென நுழைந்து ஆசிரியர்கள், மாணவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் கடுமையாக தாக்கப்பட்டதால் காயமடைந்தனர். ஏற்கனவே போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து கடும் எதிர்ப்பு போராட்டமும் வெடித்துள்ளது.


தனுஷ் படத்தில் நடிக்கவிருக்கும் ப்ரியாமணி!
[Monday 2020-01-06 18:00]

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பலவேறு மொழிகளில் சிறந்த நடிகையாக இருந்தவர் தான் நடிகை ப்ரியாமணி. இவர் திருமணத்திற்கு பிறகு திரையுலகில் பெரிதாக படங்களை எதுவும் நடிக்கவில்லை. தமிழ் திரையுலகில் சாருலதா படத்திற்கு பிறகு பட வாய்ப்பும் இவருக்கு அமையவில்லை. ஆனால் தற்போது ஏ.எல் விஜய் இயக்கி வரும் தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரம் நடித்து வருகிறார் ப்ரியாமணி என்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளிவந்தது.

Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா