Untitled Document
October 23, 2026 [GMT]
 
திரை துறையில் தனது இலக்கு பற்றி பேசிய விஜய் சேதுபதி!
[Monday 2020-01-06 17:00]

தமிழ் திரையுலகில் தனது யதார்த்தமான நடிப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. அண்மையில் நடந்து முடிந்த ஜீ தமிழ் விருது விழாவில் கலந்து கொண்ட இவருக்கு 'சமூக அக்கறை கொண்ட நடிகர் என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது சேதுபதி அவர்களிடம் 'நீங்கள் ஹீரோ மற்றும் வில்லன் ரோல்களில் நடிக்கிறீர்கள். உங்களது இலக்கு என்ன' என்று தொகுப்பாளர் கேட்டார்.


ரசிகர்களின் அன்பு போதும் - நயன்தாரா!
[Monday 2020-01-06 08:00]

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, சமீபத்தில் சினிமா விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ரசிகர்கள் அன்புக்கு நன்றி. இதற்கு மேல் என்ன வேண்டும்? சமீபகாலமாக ஜோடியாக சந்தோ‌ஷமாக படங்கள் பகிர்வது பற்றி கேட்கிறீர்கள். சந்தோ‌ஷமாக இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோ‌ஷத்தைவிட இப்போது நிம்மதியாக உணர்கிறேன். அந்த நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். உங்கள் பெற்றோர், வாழ்க்கை துணை, துணையாக போகிறவர் என யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். நமது கனவை அவரது கனவாக எடுத்துக்கொண்டு நமக்காக வாழ்பவராக இருக்கலாம். புதுவருட சபதம் எதுவும் எடுக்கவில்லை.


மேடையில் கண்கலங்கிய சூர்யா! Top News
[Monday 2020-01-06 08:00]

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதையும் தாண்டி சமூக நலப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்கும் வகையில் அகரம் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.


நீண்ட இடைவெளிக்கு பின் பிரபல நடிகரின் படத்தில் நடிக்கும் நடிகை சங்கீதா!
[Monday 2020-01-06 08:00]

நடிகை சங்கீதாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். தமிழில் பிதாமகன் மூலம் பிரபலமானவர் இவர். இப்படத்திற்காக அவர் தமிழக அரசு விருதும், ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றதும் நினைவிருக்கும் தானே. பாடகர் கிருஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் பின் படங்களில் சின்ன சின்ன கேரக்டர்கள் மட்டும் நடித்து வந்தார்.


மனைவியை நடிக்க வைக்க துடிக்கும் அட்லி!
[Sunday 2020-01-05 18:00]

2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லி. இந்த படம் ரூ.50 கோடி வசூல் குவித்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ , ‘பிகில்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகிக்கிறார் அட்லி.


மலையாளத்தில் மீண்டும் கால்பதிக்கும் திரிஷா!
[Sunday 2020-01-05 18:00]

மலையாள திரையுலகில் கடந்த வருடம் 'ஹே ஜூடு' என்கிற படத்தில் முதன்முதலாக நடித்தார் திரிஷா. தற்போது மீண்டும் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ராம் என்கிற படத்தில் நடிக்கிறார். திரில்லர் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இந்த படத்தை இயக்குகிறார்.


மனைவிக்காக மீசையை எடுத்த விஜய்!
[Sunday 2020-01-05 18:00]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கர்நாடக மாநிலம், சிமோகாவில் படப்பிடிப்பு நடந்தது. இங்கு, சிறைச்சாலை அரங்கு அமைத்து படமாக்கப்பட்டபோது, மீசையின்றி விஜய் நடித்த தகவல் வெளியாகி உள்ளது.


பிரேமம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷா?..
[Sunday 2020-01-05 08:00]

மூன்று விதமான காதல் கதைக்களம் கொண்டு மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த படம் தான் பிரேமம். இப்படத்தில் மூன்று கதாநாயகிகளின் கதாபாத்திரம் இடம் பெரும். அதில் குறிப்பாக நடிகை சாய் பல்லவியின் மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.


திரையுலகில் நுழையும் ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கர்!
[Sunday 2020-01-05 08:00]

சமீப காலத்தில் மிக அதிகம் பாப்புலர் ஆன யூடியூப் பிரபலங்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பவர் ஹரி பாஸ்கர். ஜம்ப் கட்ஸ் என்ற சேனலில் அனைத்து கதாபாத்திரங்களிலும் இவரே நடித்து வெளியிடும் வீடியோக்கள் பெரிய ஹிட். இந்நிலையில் தற்போது ஹரி பாஸ்கர் சினிமாவில் நுழைந்துள்ளார்.


எனது தந்தையின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க வேண்டும்: ராதிகா!
[Sunday 2020-01-05 08:00]

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியினால், ‘கலையரசி’ என்று பட்டம் சூட்டப்பட்ட ராதிகா சரத்குமார், 43 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 375 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 375-வது படம், மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்.’ இதில் ராதிகா அவருடைய கணவர் சரத்குமாருடன் இணைந்து நடித்து இருக்கிறார். இருவரும் கணவன்-மனைவியாகவே வருகிறார்கள். படம், வருகிற பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் உள்பட தமிழ் பட உலகின் பிரபல நாயகர்கள் அனைவருடனும் ராதிகா சரத்குமார் ஜோடியாக நடித்து இருக்கிறார். தெலுங்கு பட உலகின் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியுடன் மட்டும் 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.


பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த அனுராக் கஷ்யப்!
[Saturday 2020-01-04 18:00]

பாரத பிரதமர் மோடியின் கட்சியில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து பல சினிமா பிரபலங்கள் இணைந்திருப்பது பலரும் அறிந்த விடயமே. அதே வேளையில் சிலர் அவருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அப்படி அண்மையில் ஒரு சர்ச்சையை கிளப்பியவர் நடிகர் அனுராக் கஷ்யப். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை எழுப்பியுள்ளார். அண்மையில் பிரதமர் அலுவலகத்தின் மூலம் வெளியிடப்பட்ட ட்வீட்டுக்கு அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


திரையரங்குகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும் - டி.ராஜேந்தர்!
[Saturday 2020-01-04 17:00]

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள டி.ராஜேந்தர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “1979-ம் ஆண்டு ஒரு தலை ராகம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி 40 ஆண்டு கால அனுபவத்தை பெற்றுள்ளேன். இந்த அனுபவம் முழுமையாக சினிமாவிற்கு தேவை என்று பலர் வற்புறுத்தியதால் தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன். மத்திய அரசு விதிக்கும் ஜி.எஸ்.டி வரியை தவிர மற்ற எந்த வரியையும் மாநில அரசுகள் விதிப்பதில்லை. தமிழகத்தில் மட்டும் 8 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது.


அடுத்தவர் கதையை திருடி படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்!
[Saturday 2020-01-04 17:00]

சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்‌ஷன், அர்ஜுன், அபய் தியோல், இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஹீரோ’. இந்த படம் கதை சர்ச்சையில் சிக்கியது. இயக்குநர் அட்லியிடம் உதவியாளராக இருப்பவர் போஸ்கோ பிரபு. இவர் என் கதையைத் திருடி இயக்குநர் மித்ரன் ’ஹீரோ’ படத்தை எடுத்துவிட்டார் என்று தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்கு இயக்குநர் மித்ரன் ஒத்துழைப்பு தராததால், நீதிமன்றத்தை நாடவும் என்று எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் மூன்று பக்கக் கடிதம் ஒன்றை போஸ்கோ பிரபுவுக்கு எழுதினார். அதில் இரண்டு கதையும் ஒன்றே எனவும் குறிப்பிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் இயக்குநர் மித்ரன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, வெறும் கதைச் சுருக்கத்தை மட்டுமே வைத்து இரண்டு கதையும் ஒன்று என எப்படிச் சொல்லலாம், எழுத்தாளர் சங்கம் எனக்குக் கடிதம் எழுதவே இல்லை உள்ளிட்ட தன் தரப்பு நியாயங்களைத் தெரிவித்தார். இந்நிலையில், திரைக்கதை எழுத்தாளர் அஜயன் பாலா எழுதிய ‘தமிழ் சினிமா வரலாறு’ புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.


பணம் எனக்கு முக்கியமில்லை - ராஷ்மிகா!
[Saturday 2020-01-04 09:00]

இளம் நடிகைகளில் தற்போது ரசிகர்களால் மிக கவனிக்கப்படும் நடிகையாக இருந்து வருகிறார் ரஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார். அண்மையில் ரஷ்மிகா அளித்துள்ள பேட்டியில் பேசியபோது " ஒரு படத்தில் வெற்றி அடைந்தால் பல பட வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.


இந்தியன் 2 படத்தின் தற்போதைய நிலை!..
[Saturday 2020-01-04 08:00]

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடந்து வருகின்றது. இதில் கமல் மட்டுமின்றி சித்தார்த்தும் நடித்து வருகின்றார், இந்நிலையில் இப்படத்தில் பெண்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்குமாம்.


'கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள்' - ரஜினிகாந்த்!
[Saturday 2020-01-04 08:00]

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வருகிற 9-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் திரைக்கு வருகிறது. தெலுங்கு தர்பாரை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு ஐதராபாத்தில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தெலுங்கில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘தர்பார் படம் பெரிய வெற்றி பெறும் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அதனால்தான இந்த விழா இங்கு விமரிசையாக நடக்கிறது. இப்போது எனக்கு 70 வயது ஆகிறது. இந்த வயதிலும் எப்படி சுறுசுறுப்பாக உங்களால் இருக்க முடிகிறது? என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். அதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக பேசுங்கள். இதுதான் எனது சுறுசுறுப்புக்கு காரணம். இந்த விழாவுக்கு வந்து இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எனது முதல் படம் வெளியானபோது பிறந்துகூட இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அப்போது இருந்து தொடர்ந்து நடித்து வருகிறேன். 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன்.


பெண்ணாக மாறிய முன்னணி நடிகர்!
[Friday 2020-01-03 17:00]

முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர் அப்படியே மேக்கப்பில் பெண்ணாக மாறி அனைவரையும் அசர வைத்துள்ளார். தனது நடிப்பு திறமைக்காக அதிகம் பாராட்டப்பட்டவர் நடிகர் ராஜ்குமார் ராவ். அனுராக் பாசு இயக்கும் லுடோ என்ற புதிய படத்திற்காக அவர் பெண் கெட்டப் போட்டுள்ளார்.


மறைந்த நடிகர் ராஜசேகர் மனைவிக்கு ஏற்பட்ட சோகம்!
[Friday 2020-01-03 17:00]

மறைந்த நடிகர் ராஜசேகர் அவர்கள் தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகள் மூலம் ஜெயித்தவர். சினிமாவில் பட வாய்ப்பு குறையவே சின்னத்திரையில் நடித்து வந்தார், அவரது வேடங்களும் நன்றாக பேசப்பட்டது. கடந்த வருடம் உடல் நலக் குறைவால் அவர் முதன்முதலாக சொந்தமாக வாங்கிய வீட்டில் கூட வாழாமல் உயிரிழந்தார். தற்போது அவரது மனைவி தாரா தனியாக அந்த வீட்டில் வசித்து வருகிறார், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.


தன்னை பட்டினி போட்டதாக தெலுங்கு நடிகர் மீது பாலிவுட் நடிகை புகார்!
[Friday 2020-01-03 17:00]

மீடூ இயக்கம் வந்த பிறகு நடிகைகள் நடிகர்கள் மீது புகார் கூறுவது அதிகரித்து வருகிறது. நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றபோது கன்னத்தில் அறைந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவரை தொடர்ந்து இந்தி நடிகை நேகா துப்யா, ஹீரோ ஒருவர் தன்னை பட்டினி போட்டதாக வித்தியாசமான புகார் கூறியிருக்கிறார். தமிழில் அஜீத் நடித்த வில்லன் படத்தை தெலுங்கில் அதே பெயரில் ரீமேக் செய்தனர். இதில் கதாநாயகனாக ராஜசேகரும் கதாநாயகியாக நேகாவும் நடித்தார்கள். மேலும் என்.டி.பாலகிருஷ்ணா நடித்த பரம் வீர் சக்ரா, தருண் நடித்த நின்ன இஷ்டப்படன்னு மற்றும் இந்தி படங்களிலும் நேகா நடித்திருக்கிறார்.


புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடிய இயக்குனர் பா.இரஞ்சித்!
[Friday 2020-01-03 09:00]

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் பா.இரஞ்சித். மக்களை சிந்திக்க வைப்பதே சினிமா என்று பயணித்து வருகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், கூகை திரைப்பட இயக்கம் என சமூக சமத்துவத்தை நோக்கமாக கொண்டு உருவாக்கிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. புத்தாண்டு மற்றும் பீம்கோரேகான் நாளான ஜனவரி முதல் நாளில், ஓசூர் மற்றும் அதனையொட்டி உள்ள கர்நாடகா பகுதிகளில் இயக்குநர் பா.இரஞ்சித் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.


இரண்டுமே சமம்தான் - ராஷ்மிகா!
[Friday 2020-01-03 09:00]

தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தற்போது சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் 2 படங்களும் கன்னடத்தில் ஒரு படமும் கைவசம் வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “வெற்றி எப்போதும் உற்சாகத்தை கொடுக்கும். அதற்காக வெற்றி அடைந்த படங்களை ஒரு மாதிரியும் தோல்வி அடைந்த படங்களை ஒரு மாதிரியும் என்னால் பார்க்க முடியாது. எனக்கு இரண்டுமே சமம்தான். வெற்றி அடைந்த படங்களால் இன்னும் சில பட வாய்ப்புகள் புதிதாக வரலாம். இன்னும் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.


தமிழில் முதல் முறையாக கால் பதிக்கும் அவதார் பட நடிகர்கள்!
[Friday 2020-01-03 09:00]

உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த படம் ‘அவதார்’. ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளி குவித்த இப்படம் ரசிகர்களை பிரமிக்கவும், ஆச்சரியப்படுத்தும் செய்தது. தற்போது இப்படத்தில் நடித்த நடிகர்கள் தமிழில் கால் பதிக்க இருப்பது உலக சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா பக்கம் திரும்ப வைக்க இருக்கிறது. ரீல் கட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இந்தியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரேசில் மற்றும் மலேசியாவிலிருந்து நடிகர்கள் மற்றும் குழுவினர் ஒன்றாக இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் நரேன் பிரனியாஸ் ஆர் இயக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழியில் உருவாகிறது.


இரண்டாவது திருமணம், மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை! Top News
[Thursday 2020-01-02 18:00]

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர் திவ்யா உன்னி. இவர் 2002ம் ஆண்டு சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பின் 2016ம் ஆண்டு பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற 2018ம் ஆண்டு அருண் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு USல் செட்டில் ஆனார்.


மாஸ்டர் படம் குறித்து வந்த முக்கிய தகவல்!
[Thursday 2020-01-02 17:00]

விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் பெரிய நடிகர். இவரது நடிப்பில் தயாராகி வரும் புதிய படம் மாஸ்டர். படத்திற்காக படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா தற்போது சென்னை என மாற்றி மாற்றி நடந்து வருகிறது. கடைசியாக கர்நாடகாவில் படப்பிடிப்பை முடித்த படக்குழு இப்போது சென்னையில் வேலையை ஆரம்பித்துள்ளனர்.


காதலியுடன் புத்தாண்டை கொண்டாடிய விஷ்ணு விஷால்! Top News
[Thursday 2020-01-02 17:00]

கபடி கதைக்களம் கொண்ட வெண்ணிலா கபடிகுழு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் 2018ஆம் ஆண்டு தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரை சில கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து Badminton வீராங்கனையான Gutta Jwala என்பவரும் நடிகர் விஷ்ணு விஷாலும் காதலித்து வருவதாக சில தகவல்கள் இணையத்தில் கசிந்தது.


தன்னுடைய காரை மர்ம நபர் சேதப்படுத்தியதாக நடிகை ஸ்ரீரெட்டி போலீசில் புகார்!
[Thursday 2020-01-02 08:00]

ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் சில தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினர். ஐதராபாத்தில் வசித்து வந்த ஸ்ரீரெட்டி அங்கிருந்து வெளியேறி கடந்த ஒரு வருடமாக சென்னை வளசரவாக்கம் அடுத்த அன்பு நகர் 10-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ‘சென்னையில் உள்ள எனது வீட்டின் அருகே தமன்னா நடிக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அவர்களின் தொல்லை தாங்க முடிய வில்லை. கடந்த 10 நாட்களாக நான் இந்த தொல்லையை அனுபவித்து வருகிறேன். இனி என்னால் பொறுக்க முடியாது. அவர்களிடம் நேரில் சென்று பேசி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டப் போகிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார்.


தயக்கத்தை தூக்கி எறிந்த காஜல் அகர்வால்!
[Thursday 2020-01-02 08:00]

நடிகை காஜல் அகர்வால் பொதுவாக கவர்ச்சியான உடைகளுடன் இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது இல்லை. ஆனால் மாலத்தீவில் உள்ள ரிசார்ட்டில் இருந்து நீச்சல் உடையில் எடுத்த படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அமலாபால், சமந்தா போன்ற திருமணமான நடிகைகளே அவ்வப்போது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் போது, தான் மட்டும் ஏன் தயங்கி நிற்க வேண்டும் என்று காஜல் அகர்வாலும் இப்படி கவர்ச்சி களத்தில் இறங்கியிருக்கிறார். படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாக பலரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை அள்ளி இறைத்து பகிர்ந்து வருகிறார்கள்.


அவரிடம் இருந்து இதை கற்றுக் கொண்டேன் - முன்னணி நடிகர்!
[Thursday 2020-01-02 08:00]

தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். மோகன்லால் நடித்த லூசிபர் படம் மூலம் டைரக்டராக அறிமுகமானார். லால் ஜூனியர் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள டிரைவிங் லைசன்ஸ் மலையாள படம் திரைக்கு வந்துள்ளது. இதையொட்டி தனது ரசிகர்களுடன் பிருத்விராஜ் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் அஜித்குமார் பற்றி கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த பிருத்விராஜ் கூறியதாவது:- “அஜித்குமார் என்னை விட பெரிய நடிகர். எனது வாழ்க்கையில் முக்கியமான பாடத்தை அவரிடம் இருந்தே படித்தேன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா புதிய வீட்டுக்கு குடித்தனம் சென்றார். கிரகப்பிரவேசத்துக்கு என்னையும் அழைத்து இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு அஜித், கார்த்தி, மாதவன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.


கண்டிப்பாக தேசிய விருது வாங்குவேன் - நித்யாமேனன்!
[Wednesday 2020-01-01 17:00]

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் தீவிரமாக நடித்து வரும் நித்யாமேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் த அயன்லேடி படத்தில் நடிக்கவும் தயாராகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “தென் இந்திய மொழி படங்களில் நடித்து நல்ல பெயர் சம்பாதித்து விட்டேன். ‘மிஷன் மங்கள்’ மூலம் இந்தியிலும் அறிமுகம் கிடைத்துள்ளது. நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். ஆனால் தேசிய விருது மட்டும் கிடைக்கவில்லை. ஒரு நடிகையாக தேசிய அளவில் அடையாளம் காணப்படுவது சந்தோஷமான விஷயம். ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு படத்தில் நடித்து அதில் எனது நடிப்புக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.


ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களுக்காக நடிகர் விவேக் செய்த செயல்!
[Wednesday 2020-01-01 17:00]

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மனிதர்களில் அப்துல் கலாம் ஐயா அவர்களும் ஒருவர். இவரின் பல கண்டுபிடிப்புகள் இப்போதும் இந்தியாவிற்கு மிக உதவியாக இருக்கிறது. மேலும் இவரின் தீவிர ரசிகரான திரையுலகை சேர்ந்த நடிகர் விவேக் அவர்கள் அப்துல் கலாம் அவர்களின் சொல்லுபடி மர கன்றுகளை நல்ல முறையில் வைத்து கொண்டு வருகிறார்.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா