Untitled Document
October 23, 2026 [GMT]
 
பிரபல பாடகரின் அடுத்த மிரட்டலான வீடியோ! Top News
[Thursday 2020-01-16 18:00]

மக்க கலங்குதப்பா பாடலையும் அந்த குரலுக்கு சொந்தக்காரரான மதுரை மண்ணின் மதிச்சியம் பாலாவையும் மறக்க முடியாது. தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதி மற்றும் இவரின் காம்போ ஹிட்டாக அமைந்தது. தற்போது பாலாவின் அடுத்த ஸ்பெஷலாக பில்டப்ப ஏத்து கெத்த காட்டு என மதுர Song வெளியாகியுள்ளது. பாடல் முழுக்க ஜல்லிக்கட்டு, மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை என மதுரையின் சிறப்புகளையும், மதுரை மக்களின் குணங்களையும் மற்றும் பல சிறப்புகளையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.


காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா!
[Thursday 2020-01-16 08:00]

எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் வாலி, குஷி, நியூ போன்ற சூப்பர் ஹிட் படங்களை எடுத்தவர். இவர் தற்போது ஹீரோவாகவும் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நடிப்பில் வந்த மான்ஸடர் படம் சூப்பர் ஹிட் ஆனது, இந்நிலையில் இதில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார்.


அஜித்தை மிஞ்ச தமிழ் திரையுலகில் ஆளே இல்லை - நடிகர் ஆனந்த் பாபு!
[Thursday 2020-01-16 08:00]

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாட படும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். இவர் தனது கடின உழைப்பினால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். மேலும் இவரை பற்றி புகழ்ந்து பேசாத ஆட்களே தமிழ் திரையுலகில் கிடைத்து என்று தான் கூறவேண்டும்.


அமெரிக்காவில் தலைதூக்கிய தர்பார் - வசூல் மட்டும் இத்தனை கோடிகளா?
[Thursday 2020-01-16 08:00]

அமெரிக்காவில் எப்போதும் ரஜினிக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் இந்த வருடம் ஆரம்பத்திலேயே ரஜினியின் தர்பார் பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படம் மிக குறைந்த அளவிலேயே அமெரிக்காவில் ரிலிஸ் செய்யப்பட்டது, ஆனால், ரிலிஸ் செய்த அனைத்து இடங்களிலும் படம் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.


மாஸ்டர் படத்தின் மிரட்டலான 2-வது லுக்! Top News
[Wednesday 2020-01-15 18:00]

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வரும் படம் தான் மாஸ்டர். சென்ற வருட இறுதியில் இப்படத்தின் First லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் நேற்று மாஸ்டர் படத்தின் 2 லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளிவரும் என்று தெரிவித்திருந்தார்.


சபரிமலையில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது!
[Wednesday 2020-01-15 18:00]

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருதை பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில் 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கபட்டது.


பட்டு வேஷ்டி சட்டையில் ரசிகர்களை சந்தித்த ரஜினி! Top News
[Wednesday 2020-01-15 18:00]

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படும் நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான். அண்மையில் வெளிவந்த தர்பார் திரைப்படம் கூட திரையரங்குகளில் தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பொங்கல் என்பதினால் பட்டு வேஷ்டி சட்டையில் தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார்.


மாஸ்டர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு!
[Wednesday 2020-01-15 08:00]

விஜய்யின் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் கதை படமாகியுள்ளது!
[Wednesday 2020-01-15 08:00]

திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டேவிட் ஆனந்த்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்து வருகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கோபி. இப்படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே ‘நானும் சிங்கிள் தான்’ என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம்.


எனக்கு அவர்தான் தமிழ் கற்றுக் கொடுத்தார் - பி.சுசிலா!
[Wednesday 2020-01-15 08:00]

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சேரன், பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் புகழ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை மூத்த பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குனர் சேரன் மற்றும் பிக்பாஸ் தர்ஷன் இணைந்து பெற்றுக் கொண்டனர். அதன்பின் பாடகி பி.சுசிலா பேசும்போது, ‘எனக்கு என்ன பேசுறது தெரியல, 85 வயதாகி விட்டது. பத்திரிக்கையாளர்கள் எங்களுக்கு துணையாக இருக்கிறார்கள்.


தமிழில் நடிப்பதை குறைத்துக்கொண்ட மாதவன்!
[Tuesday 2020-01-14 18:00]

நடிகர் மாதவன் சென்னையில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். 'தமிழ்ப் படங்களில் நடிப்பதைக் குறைத்துவிட்டீர்களா' என்ற கேள்விக்கு மாதவன், "தமிழ்ப் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டதாக நினைக்கவில்லை. 'விக்ரம் வேதா’ திரைப்படம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. மக்களுக்கு எந்த மாதிரியான கதைகள் பிடிக்கும் என்பதை தேர்வு செய்து நடிக்கிறேன். ஏனென்றால் அது ஒரு பெரிய பொறுப்பு. குடும்பத்தோடு வண்டியில் ஏறி தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும்போது அவர்களை கடுப்பு ஏற்றாமல் வீட்டுக்கு அனுப்புவது ஒரு சவால்.


2020ஆம் ஆண்டின் ஆஸ்கர் பட்டியல்!
[Tuesday 2020-01-14 17:00]

தமிழில் மட்டுமல்லாமல் உலக சினிமாவில் இருக்கும் கலைஞர்களுக்கு இருக்கும் ஆசை எப்படியாவது ஆஸ்கரில் இடம்பிடிப்பது தான். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழில் பார்த்திபன் இயக்கி வெளிவந்த ஒத்த செருப்பு படம் முதலாம் கட்ட ஆஸ்கர் தேர்வில் இடம் பிடித்திருந்தது. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஆஸ்கரின் இறுதி கட்ட தேர்வில் இப்படம் இடம் பெறவில்லை. மேலும் ஹாலிவுட்டை சேர்ந்த ஜோக்கர் படம் 11 இடங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்துள்ள ஆஸ்கர் முழு விவர பட்டியலை பார்ப்போம்.


இணைய தொடரில் களமிறங்கும் காஜல் அகர்வால்!
[Tuesday 2020-01-14 17:00]

தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். சென்ற ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படம் கூட இவருக்கு மிக பெரிய வரவேற்பை தேடி தந்தது.


விஜய்க்கு மட்டும் தான் இந்த தைரியம் இருக்கு - முன்னணி இயக்குனர்!
[Tuesday 2020-01-14 08:00]

தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத நட்சத்திரங்களின் வரிசையில் விஜய்யும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். நடிகர் விஜய்யை பற்றி பல நட்சத்திரங்கள் அளிக்கும் பேட்டியில் புகழ்ந்து பேசுவதை பார்த்திருப்போம்.


துபாய் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட நடிகர் அதர்வா!
[Tuesday 2020-01-14 08:00]

நடிகர் அதர்வா இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் Azerbaijan நாட்டில்துவங்கியுள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக அதர்வா சனிக்கிழமை விமானத்தில் சென்றுள்ளார். துபாயில் இருந்து அவர் Azerbaijan நாட்டிற்கு connecting flightல் செல்லவிருந்தார்.


டேட்டிங் செய்வதற்கு வயது ஒரு தடையில்லை - ரைசா!
[Tuesday 2020-01-14 08:00]

பெங்களூருவை சேர்ந்த விளம்பர மாடல் ரைசா வில்சன், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம், மிகவும் பிரபலமானார். ஹரிஷ் கல்யாணுடன் அவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் சூப்பர் ஹிட்டானதால், அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகிறார்.


பாலிவுட்டில் அடி எடுத்து வைக்கும் ஜீவா!
[Monday 2020-01-13 17:00]

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ல் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. கபீர்கான் இயக்கும் இப்படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார். இதன்மூலம் ஜீவா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதனிடையே இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அப்போது ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் ஜீவாவின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர்.


தமிழ் படம் ஒன்றை இயக்கவிருக்கும் யுவன் சங்கர் ராஜா!
[Monday 2020-01-13 17:00]

சமீபகாலமாக பல்வேறு துறைகளில் ஜாம்பவான்களாக இருப்பவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்று வருகின்றன. நடிகர் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படம் கூட இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியே உருவாகியுள்ளது. இந்த நிலையில் இசையில் பல சாதனைகளைப் படைத்த இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.


நடிகை நதிதாவுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய ரசிகர்!
[Monday 2020-01-13 17:00]

அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நந்திதா ஸ்வேதா. கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நந்திதா நடிப்பில் கடந்த ஆண்டு தேவி 2 படம் வெளியானது. சமூக வலை தளங்களில் தீவிரமாக செயல்படும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சில சமயம் தனது கவர்ச்சியான படங்களையும் பதிவிடுவார்.


இந்த நடிகையுடன் கைலாசா செல்லவேண்டும்: ஹரிஷ் கல்யாணின் ஆசை! Top News
[Monday 2020-01-13 09:00]

ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் பெண் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பிறகு பியார் பிரேமா காதல் உட்பட தொடர்ந்து ரொமான்டிக் படங்களாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியின் விருது விழாவில் கலந்துகொண்டுள்ளார்.


தர்பார் படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம்!...
[Monday 2020-01-13 08:00]

நடிகர் ரஜினிகாந்த் தான் இந்திய சினிமாவில் மிக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் என கூறப்பட்டு வருகிறது. அவர் நடிப்பில் தற்போது தர்பார் படம் வெளிவந்துள்ளது. மூன்று நாட்களில் 100 கோடி வசூலை தாண்டியுள்ளது அந்த படம்.


பெண்ணாக பிறந்தது குற்றமா?: தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை!
[Monday 2020-01-13 08:00]

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வருபவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான சம்பவங்கள் பற்றி கூறி நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் தற்போது ஹிந்தி பிக்பாஸ் 13வது சீசனில் பங்கேற்றுள்ள நடிகை Rashami தனது இளம் வயதில் நடந்த சம்பவங்கள் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். "மிக ஏழ்மையான குடும்பத்தில் தான் நான் பிறந்தேன். நான் பெண்ணாக இருப்பதாலேயே பல பிரச்சனைகளை சந்தித்தேன், என் அம்மாவும் அதிகம் கஷ்டப்பட்டார். 'நமக்கு ஏன் பெண் பிறந்தாள்? அவளால தான பண பிரச்சனை' என கூறுவார். பெண்ணாக பிறந்ததே குற்றம் என நான் நினைக்க ஆரம்பித்தேன்."


ஏன் ஒத்த செருப்பு ஆஸ்கருக்கு அனுப்பப்படவில்லை? - பார்த்திபன் வேதனை!
[Sunday 2020-01-12 18:00]

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பார்த்திபன், மாணவர்களிடம் பேசும் போது கூறியதாவது: மிகுந்த சிரமப்பட்டுத்தான் ஒத்த செருப்பு படத்தை எடுத்திருக்கிறேன். அந்தப் படத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்திருக்கின்றன. பல விருதுகளையும் அந்தப் படம் பெற்றிருக்கிறது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு, அந்தப் படம் அனுப்பப்படவில்லை.


மூன்றாவது மனைவியாக இருப்பது தவறா? - நடிகை நேஹா!
[Sunday 2020-01-12 18:00]

மவுனம் பேசியதே, இனிது இனிது காதல் இனிது உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நேஹா பென்ட்சே. மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்தார். சில டி.வி., சீரியல்களிலும் நடித்து வந்தார். இவர் சமீபத்தில், ‌ஷர்துல் பயஸ் என்ற தொழில் அதிபரை மணந்து கொண்டார். ‌ஷர்துல் பயசுக்கு ஏற்கனவே இருமுறை திருமணமாகி, இருவரையும் விவாகரத்து செய்துவிட்டார். இந்த 2 திருமணம் வழியாக, அவர் 2 குழந்தைகளுக்கு தந்தையானார். இந்த நிலையில், இப்படி மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டுவிட்டீர்களே என, நேஹாவை பலரும் கேட்டுக் கொண்டே இருந்தனர். அதுகுறித்து, அவர் பதில் ஏதும் சொல்லாமலேயே இருந்து வந்தார். தொடர்ந்து இதே கேள்வியே மாற்றி மாற்றி கேட்கப்பட, ஒரு கட்டத்தில், இந்த கேள்வி அவருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி விட்டது.


இலங்கை வருமாறு நடிகர் ரஜினிக்கு இலங்கையின் முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் அழைப்பு!
[Sunday 2020-01-12 18:00]

சென்னையில் உலகத் தமிழா் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ் வா்த்தகச் சங்கம், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதில் சிறப்பு அழைப்பாளராக இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கு சாதனை தமிழா்கள், சாதனை தமிழச்சிகள் என்ற பெயரிலான விருதுகளை வழங்கினார்.


ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு சன்னி லியோன் கண்டனம்!
[Sunday 2020-01-12 09:00]

சமீபத்தில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நுழைந்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன் ஜே என் யு மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இத்தாக்குதல் குறித்து பாலிவுட் நடிகை சன்னி லியோன் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.


மீரா மிதுனை திட்டிய சிம்பு!
[Sunday 2020-01-12 09:00]

நடிகர் சிம்பு எப்போதும் தன் கருத்துக்களை தைரியமாக கூறுபவர். அவர் தொடர்ந்து தமிழ் பிக்பாஸ் சீசன் அனைத்தையும் பார்த்துவருகிறார். சில மாதங்கள் முன்பு முடிந்த மூன்றாவது சீசனில் பங்கேற்ற நடிகை மீரா மிதுனை அழைத்த சிம்பு, 'நீங்க தைரியமா பல விஷயங்கள் செய்ரீங்க' என பாராட்டினாராம்.


புதிய தோற்றத்தில் நடிகர் விஷ்ணு விஷால்! Top News
[Sunday 2020-01-12 09:00]

வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக நம் மனங்களை கவர்ந்தவர் நடிகர் விஷ்ணு விஷால். பின் குள்ளநரி கூட்டம், முண்டாசு பட்டி என கேங்ஸ்டர் படங்களை கொடுத்தார். அதே வேளையில் வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், சிலுக்குவார்பட்டி சிங்கம் என காமெடி கதைகளிலும் நடித்தவர் ராட்சஸன் படம் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக தன் திறமையை பதிவு செய்தார். தற்போது அவர் மனு ஆனந்த் இயக்கத்தில் FIR ஃபைசல் இப்ராஹிம் ரயிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


பையா படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை இவர்தானாம்!...
[Saturday 2020-01-11 18:00]

தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர்களில் ஒருவர் லிங்குசாமி. இவர் இயக்கிய படங்கள் பல வெற்றிப் பெற்றாலும் சில படங்கள் சறுக்கலை தான் சந்தித்துள்ளது. அடுத்து அவர் யாரை இயக்க இருக்கிறார், என்ன படம் என்பது எல்லாம் தெளிவாகவில்லை. இந்த நிலையில் இதுவரையிலான தன்னுடைய படங்களை பற்றி பேசியுள்ளார்.


காதலரை ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை!
[Saturday 2020-01-11 18:00]

கன்னட திரையுலகில் துணை நடிகையாக நடித்து வருபவர் விஜயலட்சுமி. இவர் தற்போது துங்கபத்திரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்பட இயக்குனர் ஆஞ்சநேயா என்பவருடன் இவருக்கு காதல் ஏற்பட திருமண செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் விஜயலட்சுமி அம்மாவுக்கு வளர்ப்பு தந்தைக்கு இந்த காதல் பிடிக்கவில்லை.

Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா