Untitled Document
October 23, 2026 [GMT]
 
அரசியல் பற்றி பேசிய ஸ்ருதிஹாசன்!
[Tuesday 2020-01-21 17:00]

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் மதுரையில் ஒரு நகைக்கடை திறப்பு நிகழ்ச்சிக்காக வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: என் தந்தையுடன் அரசியலில் கரம் கோர்ப்பீர்களா என கேட்கிறீர்கள். அப்பாவிற்கு என் ஆதரவு எப்போதும் உண்டு. சிறுவயதில் இருந்தே அவருக்கு சமூக அக்கறையும், அரசியல் தெளிவும் இருக்கிறது. ஆனால், எனக்கு அந்த தெளிவு கிடையாது. எனவே, அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.


மாஸ்டர் படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றிய விஜய்! Top News
[Tuesday 2020-01-21 08:00]

விஜய் பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்கள் தவிர மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். விஜய் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் பேராசிரியர் வேடத்தில் நடிப்பதால் தான் இப்படத்திற்கு மாஸ்டர் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷை திடீரென நீக்கிய படக்குழு!
[Tuesday 2020-01-21 08:00]

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை படமான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ், அனைத்து மொழி திரையுலகிலும் கவனம் பெற்றுள்ளார். இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கும் ‘மைதான்’ படத்தில் கீர்த்திக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. அஜய் தேவ்கான் சையத் அப்துல் ரஹீமாகவும், அவரது மனைவியாக கீர்த்தி சுரேசும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பிலும் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு நடித்தார்.


தமிழ் திரையுலக இசையமைப்பாளர் நாகேஷ்வர்ராவ் மரணம்!
[Tuesday 2020-01-21 08:00]

ஒரு நடிகையின் வாக்கு மூலம், தேள், மவுனமழை உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் நாகேஷ்வர்ராவ் என்கிற ஆதீஷ். உடல்நலக்குறைவால் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மரணமடைந்தார்.


திருமணம் பற்றி பேசிய த்ரிஷா!
[Monday 2020-01-20 18:00]

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சுமார் 20 வருடங்கள் ஆகிறது. தற்போது வரை அவர் முன்னணியில் தான் இருக்கிறார். அவர் அடுத்து மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது 36 வயதாகும் அவருக்கு சில வருடங்கள் முன்பு திருமணம் ஏற்பாடாகி பின்னர் நின்றுவிட்டது.


அஜித் - ஷாலினியிடம் நடிகை கஸ்தூரி கோரிக்கை!
[Monday 2020-01-20 18:00]

தன்னை பற்றியும் மற்ற பெண்கள் பற்றியும் ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் மோசமான வார்த்தைகளில் பேசுவதாக கூறி நடிகை கஸ்தூரி கொந்தளிப்புடன் பதிவிட்டிருந்தார். #dirtyajithFans என்கிற டேக்கை அவர் பதிவிட்டதும் சர்ச்சையானது.


600 படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மரணம்!
[Monday 2020-01-20 17:00]

தமிழ் திரைப்படங்கள் உலகம் முழுக்க கொண்டு சென்றவர்கள் பலர். அதில் ஒரு சிறப்புக்குரியவர் எஸ்.எம்.உமர். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலை இவருக்கு வயது 96. உடல் நலக்குறைவால் பாதிகப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார். அவரின் உடல் முற்பகல் 11.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 20 வயதில் சினிமாவிற்குள் நுழைந்து உதவி இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என கலக்கியுள்ளார்.


பிரபல நடிகையின் மோசமான கெட்ட பழக்கம்!
[Monday 2020-01-20 08:00]

சினிமாவை தாண்டி பிரபலங்களின் வாழ்க்கையில் சில, பல சர்ச்சைகள் இருப்பது வழக்கமே. இதனால் அவர்கள் சங்கடங்களை சந்திப்பதும் உண்டு. அவ்வகையில் தற்போது சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் பிரபல நடிகையான கல்கி கொச்லின். அண்மையில் வானொலியில் தாரா ஷர்மா நிகழ்ச்சியின் கலந்துகொண்டு பல விசயங்கள் பேசினார்.


பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்: கண்களை கலங்க வைத்த புகைப்படங்கள்!.. Top News
[Monday 2020-01-20 08:00]

எவ்வளவு பாதுகாப்புகள் இருந்த போதிலும் பலரும் சாலை விபத்து என்ற ஒரு கட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் தற்போது மும்பையை சேர்ந்த ஹிந்தி சினிமா நடிகை ஷபானா ஆஸ்மி நேற்று மாலை கடும் விபத்தை சந்தித்துள்ளார்.


அட்லீ - ஷாருக் கான் படம் என்ன ஆனது?
[Monday 2020-01-20 08:00]

பிகில் படம் மிக பிரம்மாண்ட ஹிட். அது 300 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூல் செய்தது. இந்த படத்திற்கு பிறகு அட்லீ எந்த நடிகரை இயக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் உள்ளது. அட்லீ-ஷாருக் கான் இருவரும் இணையவுள்ளதாக கடந்த பல மாதங்களாக செய்திகள் வந்தது. ஆனால் தற்போது வரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. மேலும் அட்லீ சொன்ன கதை தனக்கு திருப்தி இல்லை என ஷாருக் கான் திருப்பி அனுப்பிவிட்டார் என கூறப்பட்டது.


நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகாதது என் அதிர்ஷ்டம் - தமன்னா!
[Sunday 2020-01-19 18:00]

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்வதில் உண்மை இல்லை. கடந்த ஆண்டில் கைநிறைய படம் வைத்து இருந்தேன். எனது படங்களுக்கு நல்ல வியாபாரமும் இருந்தது. முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க அவசியம் இல்லை. எனது படங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். அதை வைத்து படங்கள் இல்லாமல் வீட்டில் நான் சும்மா இருப்பதாக சிலர் பேசி இருக்கலாம். மீ டூ வில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி பலரும் கூறுகிறார்கள். இது சினிமாவில் மட்டும் இல்லை. அனைத்து துறைகளிலும் இருக்கிறது. நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. அது எனது அதிர்ஷ்டம்.


திரையுலகத்திற்கு அது தேவையில்லை - எஸ்.வி.சேகர்!
[Sunday 2020-01-19 18:00]

அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இவ்விழாவில் எஸ்.வி.சேகர் பேசும்போது, ‘அதோ அந்த பறவை போல பாட்டு வரி தான் இப்படத்தின் தலைப்பு. நம்மிடம் இப்படியான படங்கள் வருவதற்கு இப்போது தான் வாய்ப்பு வந்துள்ளது. சினிமாவில் இரண்டு வகை. ஓடும் படம், ஓடாத படம் அவ்ளோ தான். சினிமாவில் ராமராஜன் பசுமாடு வைத்து பால் கறக்கும் படம் ஓடிவிட்டால் அதேபோல் பத்துப்படம் எடுப்பார்கள். ஏன் என்றால் இது வியாபாரம். நாங்கள் படம் எடுத்த காலத்தில் பத்து லட்சத்திலேயே படத்தை எடுத்து விடுவோம். நாம் சரியான பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும். இப்போது ஒரு நாளைக்கு நாற்பது லட்சம் ஆகிறது. சினிமாவில் மட்டும் தான் உள்ளே வந்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.


அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார் - மீரா வாசுதேவன்!
[Sunday 2020-01-19 18:00]

தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன. மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.


கோபிநாத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு! Top News
[Sunday 2020-01-19 08:00]

கோபிநாத் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர். இவர் தொகுத்து வழங்கு நிகழ்ச்சிகளுக்கு என்று பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. இவர் சின்னத்திரை தாண்டி ஒரு சில வெள்ளித்திரை படங்களிலும் தலைக்காட்டியுள்ளார், இவருடைய தந்தை உடல்நலம் முடியாமல் நேற்று இறந்துள்ளார்.


சரவணா அண்ணாச்சியின் படப்பிடிப்பில் இணைந்த முக்கிய பிரபலம்!
[Sunday 2020-01-19 08:00]

legend சரவணா அண்ணாச்சி அவர்கள் தனது சொந்த தயாரிப்பில் ஒரு படம் ஒன்று நடித்து வருகிறார். அண்மையில் கூட இப்படத்தின் பாடல் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. மேலும் இப்படத்தில் பிரபு, கோவை சரளா, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா போன்ற ,முன்னணி நடிகர் நடிகைகளை நடித்து வருகின்றனர்.


இந்த படம் அப்படி இருக்காது - அமலா பால்!
[Sunday 2020-01-19 08:00]

தமிழில் வெளிவந்த மைனா என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான நடிகையானார் அமலா பால். இவரின் ஆடை படம் சென்ற வரும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் A சான்றிதழ் பெற்றதால் வெளிவருவதற்கு முன்பு மக்கள் மத்தியில் ஒரு ஐயம் இருந்தது.


மாநாடு படத்திற்காக கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் சிம்பு!
[Saturday 2020-01-18 17:00]

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள படம் தான் மாநாடு. இப்படத்தின் முழு பட குழு விவரத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளிடுத்திருந்தார். மேலும் இப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாரதிராஜா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்தானாம்!...
[Saturday 2020-01-18 17:00]

ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 20 வருடங்களுக்கு முன்பு வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் படையப்பா. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீலம்பரி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார், இதற்கு பிறகு தான் இவரின் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியது.


அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய ஸ்ருதிஹாசன்! Top News
[Saturday 2020-01-18 17:00]

பிரபலங்கள் படங்கள் நடிக்கிறார்களோ இல்லையோ, போட்டோ ஷுட்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். வாரத்திற்கு ஒன்று, இரண்டு கூட இல்லை தினமுமே வித்தியாசமான போட்டோக்களை பிரபலங்கள் இப்போதெல்லாம் வெளியிடுகிறார்கள். அதிலும் நாயகிகளின் போட்டோக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகின்றன.


சிம்ரனுடன் நடிக்க பயந்த சூர்யா!
[Saturday 2020-01-18 09:00]

சூர்யா, சிம்ரன் மற்றும் சமீரா ரெட்டி நடித்து வெளிவந்த படம் தான் வாரணம் ஆயிரம். இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சூர்யாவிற்கு மிக சிறந்த வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய கவுதம் மேனன் அண்மையில் தான் கலந்து கொண்ட விருது விழாவில் சிம்ரன் அவர்களுக்கு விருது கொன்று கொடுத்தார்.


சர்ச்சையை கிளப்பிய விஜய் பட போஸ்டர்! Top News
[Saturday 2020-01-18 08:00]

விஜய் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் கண்டிப்பாக அவை மினிமம் கேரண்டி தான் என்று கூறலாம். அந்த வகையில் இவரின் நடிப்பில் கோடை விடுமுறைக்கு மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் செகண்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து செம்ம வைரலானது.


சூர்யா-வெற்றிமாறன் கூட்டணிக்கு வரும் பிரச்சனை!
[Saturday 2020-01-18 08:00]

சூர்யா நீண்ட வருடங்களாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கின்றார். இந்நிலையில் இவர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கின்றார், இந்நிலையில் சூர்யாவிற்கு கண்டிப்பாக இப்பட்ம பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அட்லீ!
[Friday 2020-01-17 18:00]

அட்லீ தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கமர்ஷியல் இயக்குனராக வளர்ந்து வருகின்றார். இவர் இயக்கத்தில் வெளிவந்த பிகில் படம் பல கோடிகளை அள்ளியது. ஆனாலும், படத்தின் பட்ஜெட்டை இவர் பல மடங்கு உயர்த்தி விட்டதால், தயாரிப்பாளர் அர்ச்சனா இவர் மீது கோபத்தில் உள்ளதாக சில செய்திகள் கசிந்தது.


வானில் பறந்தபடி பொங்கலை கொண்டாடிய பிக்பாஸ் லாஸ்லியா!
[Friday 2020-01-17 18:00]

பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. இலங்கை பெண்ணான இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார். இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.


இயக்குனர் பாலாவிற்காக பிரபல நடிகர் செய்த செயல்!
[Friday 2020-01-17 18:00]

இயக்குனர் பாலா கடைசியாக ஜோதிகாவை வைத்து நாச்சியார் என்ற படம் இயக்கினார். பின் விக்ரம் மகன் துருவை வைத்து வர்மா என்ற படத்தை இயக்க சில பிரச்சனைகளால் அந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது. தற்போது அடுத்த பட வேலைகளை பாலா ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. அவர் இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே. சுரேஷ்.


கார் ஓட்டுனரால் நடிகை சோனம் கபூருக்கு நேர்ந்த விபரீதம்!
[Friday 2020-01-17 08:00]

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சோனம் கபூர். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது பிரபல uber கால் டாக்ஸியில் தான் செல்லும் போழ்து பயங்கரமான விபரீத அனுபவம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.


கீர்த்தி சுரேஷை பார்த்து கண்ணீர் விட்ட இளம் நடிகை!
[Friday 2020-01-17 08:00]

கீர்த்தி சுரேஷ் நடித்து சென்ற வருடம் வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த பட்ம தான் நடிகையர் திலகம். இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்ட்டி கூட தேசிய விருது கொடுத்தனர்.


புதிய தோற்றத்தில் நடிகர் அரவிந்த் சாமி! Top News
[Friday 2020-01-17 08:00]

தனி ஒருவன் என்ற படம் மூலம் நாம் அனைவரையும் அசத்தும் அளவிற்கு ஸ்டைலிஷ் வில்லனாக நடித்தவர் நடிகர் அரவிந்த் சாமி. அப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நல்ல கதைகள் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவர் தலைவி என்ற பெயரில் கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் எம்ஜிஆராக நடிக்கிறார்.


படுக்கைக்கு அழைத்ததாக இயக்குனர் மீது நடிகை புகார்!
[Thursday 2020-01-16 18:00]

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தொடர்ந்து ‘மீ டூ’ வில் சிக்கி வருகிறார்கள். நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்னார். நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைத்ததாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்களை அம்பலப்படுத்தினார். இந்தி இயக்குனர்கள் சாஜித் கான், சுபாஷ் கபூர், சுபாஷ் கை, லவ் ரஞ்சன், நடிகர் அலோக் நாத் மற்றும் தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் மீது ‘மீ டூ’ புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் பிரபல பெங்காலி இயக்குனர் அரிந்தம் செல் மீது நடிகை ரூபஞ்சனா மித்ரா ‘மீ டூ’ புகார் தெரிவித்துள்ளார்.


பரிதாப நிலையில் மருத்துவமனையில் இருக்கும் நடிகை ஜெயஸ்ரீ! Top News
[Thursday 2020-01-16 18:00]

கடந்த வருடம் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ ஒரு புகார் போலீஸ் நிலையத்தில் கொடுத்திருந்தார். அதில் நடிகரும், அவரது கணவருமான ஈஸ்வர் மற்றொரு சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தொடர்பில் இருப்பதாகவும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஈஸ்வரை கைது செய்தனர். பின் மூவரும் மாற்றி மாற்றி பேட்டி கொடுத்தார்கள்.

 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா