Untitled Document
October 23, 2026 [GMT]
 
தர்பார் வெளிநாடுகளில் மட்டுமே இத்தனை கோடி வசூலா!
[Sunday 2020-01-26 18:00]

தர்பார் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். இப்பட்ம ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. அப்படியிருந்தும் பொங்கல் விடுமுறை தினத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தர்பார் படம் வெளிநாடுகளில் பல இடங்களில் செம்ம வசூல் சாதனை செய்துள்ளது. அதிலும், அமெரிக்கா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் 1 மில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளது.


சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்றது காதல் - நிவேதா பெத்துராஜ்!
[Sunday 2020-01-26 09:00]

ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தை டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது, பொன்மாணிக்க வேல் திரைப்படம் உருவாகியுள்ளது. தெலுங்கிலும் முக்கிய நடிகையாக இருக்கிறார்.


2 முறை விஜய் பட வாய்ப்பை தவறவிட்டேன் - விஜய் டிவி பிரபலம்!
[Sunday 2020-01-26 09:00]

தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனது எதார்த்தமான நடிப்பினால் நீங்க இடம் பிடித்துள்ளார் தளபதி விஜய். இவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத என்று தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் நடிகைகள் பலரும் நினைப்பார்கள்.


இந்த கெட்ட பழக்கத்தை என்னால் விட முடியவில்லை - ராஜ்கிரன்!
[Sunday 2020-01-26 08:00]

என் வாழ்வில் இந்த கெட்ட பழக்கத்தை மட்டும் விட முடியவில்லை என்று பிரபல நடிகர் கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் அஜித், விஜய், சிம்பு, சூர்யா, தனுஷ், விஷால், லாரன்ஸ் போன்ற நடிகர்களோடு இணைந்து நடித்தவர் தான் ராஜ்கிரண்.


நடிகை ரஞ்சிதாவை பற்றி முக்கிய விஷயத்தை வெளியிட்ட பிரபலம்!
[Saturday 2020-01-25 18:00]

நடிகை ரஞ்சிதாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சினிமாவில் முக்கிய ஹீரோயினாக இருந்தவர், தமிழில் பல படங்களில் நடித்தவர் தற்போது சாமியாராகிவிட்டார். சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் சிஷ்யையை ஆசிரமத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். ரஞ்சிதாவை வைத்த நித்யானந்தாவின் சர்ச்சைகளை தொடங்கியது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் பிரபல எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பரிச்சூரி கோபாலகிருஷ்ணா ரஞ்சிதா மீதான தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


நான் வில்லனாக நடிப்பேன் - விஜய் உறுதி!
[Saturday 2020-01-25 18:00]

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோ என்றால் அதில் தளபதி அவர்களை நம்மால் தவிர்க்க முடியாது. தளபதி விஜய்யை நாம் ஹீரோவாக மட்டும் தான் நடித்து பார்த்திருப்போம், வில்லனாக இதுவரை நாம் பார்த்தில்லை. இந்நிலையில் விஜய் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்தி படமொன்றில் நடிக்கவிருக்கும் டைட்டானிக் நாயகன்!
[Saturday 2020-01-25 18:00]

ஹாலிவுட் வில்லன் நடிகர்கள் தமிழ், இந்தி படங்களில் நடிக்கின்றனர். தற்போது பிரபல ஹாலிவுட் கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோவும் இந்திக்கு வருகிறார். இவர் டைட்டானிக், இன்செப்ஷன், ஏவியேட்டர், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். ‘டைட்டானிக்’ படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி 10 ஆஸ்கார் விருதுகளை வென்றது. தொடர்ந்து டிகாப்ரியோவின் பல படங்கள் ஆஸ்கார் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டன. ‘தி ரெவனன்ட்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.


மாஸ்டர் படத்துடன் மோதும் சூரரை போற்று?
[Saturday 2020-01-25 09:00]

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் தமிழ் புத்தாண்டு அன்று வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்க படும் படம் தான் மாஸ்டர். மேலும் சூர்யாவின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் சூரரை போற்று.


சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது!
[Saturday 2020-01-25 08:00]

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி நடிகை சினேகா மற்றும் பிரசன்னா. அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது இந்த ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.


விஜய் குறித்து அமலாபால் பேச்சு!
[Saturday 2020-01-25 08:00]

தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் அமலா பால். தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் பற்றி பேசியுள்ளார் அவர். "என favorite நடிகர்களில் ஒருவர் விஜய். நான் 10 வருடம் சினிமா துறையில் இருக்கிறேன். அதுவே மிகவும் கடினமாக இருக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல.. போராட்டங்கள் அதிகம். பல விஷயங்களை இழக்க நேர்கிறது. ஆனால் விஜய் இத்தனை வருடங்கள் தொடர்ந்து ஓயாமல் உழைத்துக்கொண்டிருப்பது சாதனை தான்."


யோகிபாபு எடுத்த அதிரடி முடிவு!
[Friday 2020-01-24 18:00]

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு, ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். கடந்த வருடம் மட்டும் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த யோகிபாபு, தற்போது கைவசம் 16 படங்கள் வைத்துள்ளார். இதுதவிர பன்னி குட்டி, மண்டேலா போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் ஒரு நாள் சம்பளமாக ரூ.5 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது.


முதல்முறையாக இணையும் மோகன்லால் - ஜாக்கிசான்!
[Friday 2020-01-24 18:00]

கேரளாவை சேர்ந்த ஏ.எம்.நாயர் என்ற ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர் ஜப்பானில் உள்ள கியாட்டோ நகரில் ஓட்டல் நடத்தி இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வெளிநாடுகளில் ஆதரவு திரட்டினார். இந்திய தேசிய ராணுவத்துக்கும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் உதவியாகவும் இருந்தார். இவரை நாயர் ஸான் என்று அழைத்தனர். இவரது வாழ்க்கையை மலையாளத்தில் சினிமா படமாக எடுக்க 2009-ல் திட்டமிட்டனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாகவும் இருந்தது. ஆனால் படம் திடீரென்று கைவிடப்பட்டது. தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதில் மோகன்லாலும், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானும் இணைந்து நடிக்கின்றனர்.


வாள் வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்!
[Friday 2020-01-24 18:00]

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் துனியா விஜய். இவருக்கு கடந்த 20-ந் தேதி பிறந்தநாள் ஆகும். இதையொட்டி, கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் பெங்களூரு கிரிநகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர், ரசிகர்களுடன் நீண்ட வாள் மூலம் கேக் வெட்டி நடிகர் துனியா விஜய் கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக முறையான அனுமதி பெறாமல் வீட்டுமுன்பு பந்தல் அமைத்திருந்ததாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் நடிகர் துனியா விஜய் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.


அவருடன் நடிக்க மாட்டேன் - கேத்ரின் தெரசா!
[Friday 2020-01-24 08:00]

கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. இவர் தற்போது தமிழ் தெலுங்கு போன்ற இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.


இயக்குனருக்காக 22 கிலோ எடையை குறைத்த நடிகர் பிரசாந்த்!
[Friday 2020-01-24 08:00]

பாலிவுட்டில் வெளிவந்த Andhadhun என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் பிரசாந்த் நடிக்கப்போவதாக தெரிவித்திருந்தனர். இப்படத்தை விஜய் வைத்து இயக்கி வேலாயுதம் எனும் ஹிட் படத்தை கொடுத்த மோகன் ராஜா இயக்கவுள்ளார்.


துணை நடிகைக்கு பாலியல் கொடுமை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
[Friday 2020-01-24 08:00]

சினிமா நடிகைகள் பணியாற்றும் தளங்களில் மட்டுமில்லாமல் சொந்த வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதில் தற்போது துணை நடிகை ஒருவர் தன் கணவர் மற்றும் முதல் மனைவியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகவும், கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த இந்த துணை நடிகை (வயது 39) செனாய் நகரில் சொந்தமாக அழகு நிலையம் மற்றும் யோகி பயிற்சி கிளினிக் நடத்தி வருகிறார். மான் கராத்தே படத்தின் போது நடிகைக்கு அறிமுகமானவர் சரவணன் சுப்பிரமணி. தனக்கு திருமணம் ஆகவில்லை, உங்களை மணக்க விரும்புகிறேன் என கூறியதால் பின் இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.


74 வயது தயாரிப்பாளரை ஐந்தாவதாக திருமணம் செய்த நடிகை!
[Thursday 2020-01-23 18:00]

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். அவரிடம் இருந்து 1998 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 2006-ம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணமும் நிலைக்கவில்லை. 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே இருவரும் பிரிந்தனர். 2014-ம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதுவும் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றனர்.


கர்ப்பிணி பெண்கள் இப்படத்தை பார்க்காதீர்கள் - மிஷ்கின் அறிவுரை!
[Thursday 2020-01-23 18:00]

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'சைக்கே'. இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது எப்படிப்பட்ட படம் என்று. டீசர், டிரைலர்களும் அதையே உணர்த்துகிறது.


நடிப்பதை நிறுத்தவிருக்கும் எமி ஜாக்சன்!
[Thursday 2020-01-23 18:00]

மதராசபட்டணம், தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி போன்ற பல படங்களில் நடித்த எமி ஜாக்சன் கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வராததால் லண்டன் புறப்பட்டு சென்றார். பாய்பிரண்ட் ஜார்ஜ் பனயியோடோவுடன் காதலில் இருந்தார். இதில் எமி கர்ப்பமானார். இதையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் ஆகாமலேயே கடந்த ஆண்டு எமி ஜாக்ஸன் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்து ஆண்ட்ரியாஸ் என பெயரிட்டார். குழந்தை வளர்ப்பில் கவனமாக இருக்கும் எமி ஜாக்ஸன் தனது இன்ஸ்டாகிராமில் தனது 4 மாத குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 'இன்றுடன் 4 மாதம் ஆகிறது. நீ எனக்கு குழந்தையாக பிறப்பதற்கு முன் எனது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நினைக்க கடினமாக இருக்கிறது.


ஒரு படத்திற்காக இணையும் 8 இசையமைப்பாளர்கள்!
[Thursday 2020-01-23 07:00]

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இந்த வரும் வெளிவர காத்திருக்கும் படம் தான் தாராள பிரபு. ஹிந்தியில் அயூஷ்மானி குரானா நடிப்பில் வெளிவந்து ஹிட்டான விக்கீ டோனர் என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இது. இப்படத்தை தெலுங்கு இயக்குனரான கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார்.


போலிஸிடம் சிக்கிய பாடலாசிரியர் - என்ன சொல்லி தப்பினார் தெரியுமா?...
[Thursday 2020-01-23 07:00]

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் கொண்டாடப்படும் நடிகர் தளபதி விஜய். இவரின் படங்களில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது பாடல்கள். அப்படி விஜய் நடித்து வெளிவந்த யூத் படத்தில் ஆல்தோட்டா பூபதி எனும் பாடல் பிரபல பாடலாசிரியர் கபிலன் அவர்களால் எழுதப்பட்டது.


மனப்பதட்டம் என்பது குணமாக்கக்கூடிய ஒரு பிரச்சினைதான் - தீபிகா படுகோனே!
[Thursday 2020-01-23 07:00]

உலக பொருளாதார அமைப்பு 2020-ம் ஆண்டுக்கான கிரிஸ்டல் விருது விழாவை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரத்தில் நடத்தியது. விழாவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்துகொண்டு கிரிஸ்டல் விருது பெற்றார். மனஅழுத்தம், பதற்றத்துக்கு எதிரான சிறந்த விழிப்புணர்வு செயல்பாட்டுக்காக தீபிகாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. விருதைப் பெறுவதற்காக மேடை ஏறிய தீபிகா பேசியபோது, “மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவோரை ‘நீங்கள் தனி ஆள் இல்லை’ என்று சொல்லித் தேற்றுவேன். உறவும் பிரிவும் எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கின்றன. மனிதர்களின் மன அழுத்தத்தால் இந்திய மதிப்பில் 7,11,910 கோடி வரையிலும் உலகப் பொருளாதாரம் பாதிப்பைச் சந்திக்கிறது.


வந்து நடி, பாடு என நான் அவரை மிரட்டுவேன் - ராதிகா!
[Wednesday 2020-01-22 18:00]

வெள்ளித்திரை, சின்னத்திரை என தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வரும் இவர், விரைவில் சின்னத்திரை சீரியலில் நடிக்க உள்ளார். இந்நிலையில் ராதிகா, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.


ட்விட்டரில் மோதிக்கொள்ளும் தமிழ் - தெலுங்கு சினிமா ரசிகர்கள்!
[Wednesday 2020-01-22 17:00]

பாலிவுட் சினிமாவுக்கு அடுத்து இந்தியாவில் அதிக படங்கள் தயாரிப்பது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறைகள் தான். இவற்றில் ஒரு மொழியில் ஹிட் ஆன படம் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். பல தசாப்தங்களாக இது நடந்து வருகிறது.


சரித்திர படத்தில் அர்ஜுன்!
[Wednesday 2020-01-22 17:00]

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்கின்றனர். ரூ.100 கோடி செலவில் தயாராகிறது. பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இந்த படத்தை மார்ச் மாதம் 26-ந்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.


அறிவுரை சொன்னவர்களுக்கு கோபமாக பதிலளித்த இலியானா!
[Wednesday 2020-01-22 08:00]

விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்த பின்னர் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வந்த இலியானா இந்தி சினிமா மோகத்தில் தென்னிந்திய பட வாய்ப்புகளை உதறிவிட்டு சென்றார். இந்திக்கு போன வேகத்தில் முதல் படம் ஹிட்டானது. ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. மேலும் வெளிநாட்டு பாய்பிரண்டுடன் காதல் தோல்வி ஆனதால் மன உளைச்சலுக்கு உள்ளானார். இலியானாவின் இந்த நிலைமையை கண்டு சிலர் அவருக்கு அறிவுரை செய்யத் தொடங்கினர். என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்று அவர்கள் வரிசைப்படுத்தியிருந்தனர்.


பாலியல் தொல்லைக்கு ஆளானேன் - தெலுங்கு நடிகர்!
[Wednesday 2020-01-22 08:00]

தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர நடிகராக இருப்பவர் ராகுல் ராம கிருஷ்ணா. அர்ஜுன் ரெட்டி படத்தில் அறிமுகமான இவர், இயல்பான நடிப்பால் மொழிகள் கடந்து ரசிகர்களைப் பெற்றார். அடிப்படையில் பத்திரிகையாளரான இவர் அர்ஜுன் ரெட்டி வெற்றியைத் தொடர்ந்து பரபரப்பான நடிகரானார். பரத் அனே நேனு, சம்மொஹனம், கீதா கோவிந்தம், கல்கி, புரோ செவ்ரா போன்ற திரைப் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றிய ராகுல், சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் வைகுண்ட புரம்லோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.


நடிகை அமலாபாலின் தந்தை மரணம்!
[Wednesday 2020-01-22 08:00]

பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலாபால். இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. இப்படத்தை தொடந்து, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்தார்.


ரஜினிக்காக களத்தில் இறங்கிய பிரபலங்கள்!
[Tuesday 2020-01-21 17:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் துக்ளக் பத்திரிக்கை விழா பேசிய கருத்துக்களை தற்போது எதிர்கட்சியினர் அரசியலாக்கி எதிர்த்து வருவதோடு ரஜினிக்கு மிரட்டல் விட்டுள்ளனர். மேலும் அவர்கள் ரஜினி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தன்னுடைய மகளுக்காக அஜித் செய்த முதல் விஷயம்!
[Tuesday 2020-01-21 17:00]

அஜித் என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கு ஸ்பெஷல் தான். அவரையும் எப்போதாவது தான் ஸ்பெஷலாக வெளியில் பார்க்க முடியும். தன்னால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட கூடாது என்று ரசிகர்களுக்கு தெரியும்படி வெளியில் வருவதை குறைத்து கொண்டுள்ளார். அவரது குடும்பத்தையும் அவ்வளவு எளிதாக வெளியே காண முடியாது. அண்மையில் ஒரு பேட்டியில் அஜித் மற்றும் அவரது மகள் பற்றி கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் பேசியுள்ளார்.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா