Untitled Document
October 23, 2026 [GMT]
 
அர்த்தம் தெரியாமல் கெட்ட வார்த்தை பேசும் பிரபல நடிகை!
[Sunday 2020-02-02 08:00]

நடிகை நித்யா மேனன் தமிழ்ரசிகர்கள் மத்தியில் அதிக பிடித்தவராக இருப்பதற்கு அவரது நடிப்பு முக்கிய காரணம். அவர் சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். வீல் சேரில் இருக்கும் கதாபாத்திரம் என்றாலும் அவரது நடிப்பு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. அவர் தைரியமாக கெட்ட வார்த்தைகள் பேசுவது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.


உலக புகழ்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினி!
[Sunday 2020-02-02 08:00]

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். கர்நாடகாவில் உள்ள காட்டு பகுதிகளில் அவர் Bear Grylls உடன் சென்று ஷூட்டிங் செய்தனர். அவரை தொடந்து ஹிந்தி நடிகர் அக்ஷய் குமாரும் ஒரு நாள் பங்கேற்றார்.


கோலாகலமாக நடந்த மகத் - பிராச்சி மிஸ்ரா திருமணம்!
[Sunday 2020-02-02 08:00]

மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். பின்னர் நடிகர் மகத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார். இதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.


மன்சூர் அலிகான் எடுத்த முயற்சி!
[Saturday 2020-02-01 18:00]

தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். கடந்த ஆண்டு ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இந்தாண்டு நடிகர் சந்தானம், அதர்வா, விதார்த், விமல், ரெஜினா என நட்சத்திரங்களுடன் பத்துக்கும் மேலான படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.


ரசிகர்களை ஏமாற்றிய பிரபல நடிகைகள்!
[Saturday 2020-02-01 18:00]

இந்தி திரையுலகின் பிரபலமான நாயகிகள் தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத். இருவரும் தனி கதாநாயகிகளாக நடித்த ‘சப்பக்‘ மற்றும் ‘பங்கா’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளிவந்தன. ஆனால், இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெற முடியாமல் தோல்வியைத் தழுவியது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு படங்களின் பட்ஜெட்டும் ஏறக்குறைய ஒன்றுதான்.


தன்னை ஏமாற்றியதாக கூறிய சனம் ஷெட்டி: தர்ஷன் கொடுத்த பதிலடி!
[Saturday 2020-02-01 17:00]

பிக்பாஸ் தர்ஷன மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் பிரச்சனை பற்றி பல்வேறு விஷயங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. நேற்று சனம் ஷெட்டி பேட்டி அளித்த நிலையில் இன்று தர்ஷன் தன் தரப்பு வாதத்தை பேட்டியில் தெரிவித்துள்ளார். இரண்டு மாதம் முன்பே பிரேக்கப் செய்துவிட்டேன் என கூறியுள்ளார் அவர். "அவர் என் profile பிக்பாஸ் டீமுக்கு அனுப்பியது உண்மைதான். ஆனால் அது ரிஜெக்ட் ஆகிவிட்டது. அதன்பிறகு பிக்பாஸ் 2 புகழ் ரம்யா தான் என் ப்ரோபைலை மாடல் என கூறி அனுப்பிவைத்தார். அதன் பிறகு தான் என்னை interviewக்கு அழைத்தனர். அது பற்றி சனம் ஷெட்டியிடம் கூறியபோது interviewல் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என கூறாதே, சொன்னால் என்னை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என கூறினார். நானும் அவர் சொன்னதை கேட்டு நானும் நிச்சயதார்த்தத்தை மறைத்தேன்."


நிர்வாணமாக நடிக்க ஒப்புக்கொண்ட ஐஸ்வர்யா தத்தா!
[Saturday 2020-02-01 08:00]

பிரபல நடிகை அமலா பால் ஆடை படத்தில் மிக தைரியமாக ஆடையில்லாமல் காட்சிகளில் நடித்தது பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது சுத்தமாக ஆடையில்லாமல் PUBG படத்தில் நடித்துள்ளாராம் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா.


சண்டை போட்ட இயக்குனருடன் சூர்யா மீண்டும் கூட்டணி!
[Saturday 2020-02-01 08:00]

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடிப்பில் சூரரை போற்று படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறது. அதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அடுத்து சூர்யா ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சூர்யா கவுதம் மேனனுக்காக பேசிய வீடியோ ஒன்று திரையிடப்பட்டுள்ளது. அதில் காக்க காக்க, வாரணம் ஆயிரம் பற்றி சூர்யா உருக்கமாக பேசியுள்ளார்.


ரஜினியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா!
[Friday 2020-01-31 18:00]

ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தற்போது மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.


ரசிகர்களின் ஆறுதலுக்கு பதிலளித்த ஓவியா!
[Friday 2020-01-31 18:00]

ஓவியா சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்குகிறார். தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவதுடன் அவ்வப்போது கருத்துக்களும் பகிர்கிறார். சமீபத்தில், 'வாழ்க்கைக்கு அர்த்தமில்லை' என்ற ஒரு பதிவை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார். அதை கண்ட ரசிகர்கள், ஓவியா மனவருத்தத்தில் இருப்பதாக எண்ணினர்.


நாடோடிகள்-2 படத்துக்கு இடைக்கால தடை!
[Friday 2020-01-31 08:00]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெளியாக இருந்த ‘நாடோடிகள்-2’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகர் சசிகுமார், நடிகை அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நாடோடிகள்-2’. இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதற்கிடையில், இந்த திரைப்படத்தை வெளியிட தடை கேட்டு எப்.எம். பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பிரவீண்குமார், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


விருது விழாக்கள் என்றாலே போலி - அமலாபால்!
[Friday 2020-01-31 08:00]

அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், பொதுவாகவே நடித்தவர்கள் சினிமா விழாக்களுக்கு வந்தால் எப்போதும் மிகப்பெரிய அளவில் அவர்களை புகழ்ந்து தள்ளி விடுவார்கள். ஆனால் அதையெல்லாம் போலி என விமர்சனம் செய்துள்ளார் நடிகை அமலா பால்.


நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா மரணம்!
[Thursday 2020-01-30 18:00]

நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி.எஸ்.ராகவேந்திரா. இவரது இயற்பெயர் விஜயரமணி. விஜயரமணி என்ற பெயரிலேயே ஆரம்பக்காலங்களில் இவர் திரைப்படங்களில் பின்னணி பாடி வந்தார். பின்னர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான வைதேகி காத்திருந்தாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதில் ரேவதியின் தந்தையாக நடித்திருந்தார்.


15 வருடத்திற்குப் பிறகு ராஜமவுலியுடன் இணையும் பிரபல நடிகை!
[Thursday 2020-01-30 18:00]

ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவகன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் புதிய சேர்க்கையாக நடிகை ஸ்ரேயா சேர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.


இந்த படத்தை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை - வசுந்தரா!
[Thursday 2020-01-30 18:00]

பாணியின் தன்னாட்சி குடில் படைப்பு மற்றும் பார்ச்சூன் பிக்சர்ஸ் சார்பில் செல்வராம் மற்றும் வெங்கடேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஞானச்செருக்கு’. இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கி ஓவியர் வீரசந்தானம் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப்படம் ‘விரைவில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வ.கௌதமன், பன்னீர்செல்வம், சுப்பிரமணிய சிவா, அஜயன்பாலா, நடிகைகள் மதுமிதா, வசுந்தரா, கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அஜித்தை தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்!
[Thursday 2020-01-30 07:00]

இன்று நடந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் நடிகர் அஜித்தை தாக்கி பேசியுள்ளார். அஜித் கஷ்டப்பட்டு தான் வளர்ந்தார். ஆனால் அஜித்தை முதன்முதலில் ஹீரோவாக அறிமுகம் செய்தவர் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம். அவர் இப்போது கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்.


நடிகை டாப்ஸியிடம் தவறாக நடக்க முயன்ற நபர்!
[Thursday 2020-01-30 07:00]

நடிகைகள் என்றில்லை பொதுவாகவே பெண்களுக்கு பொது இடங்களில் வரும் தொல்லைகள் அதிகம். அப்படி தான் சினிமாவுக்கு வரும் முன்பு சந்தித்த ஒரு மோசமான சம்பவம் பற்றி டாப்ஸி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். "நாங்கள் Gurpurab சமயத்தில் குருதுவாரா செல்வது வழக்கம். அங்கு வெளியில் உணவு கொடுக்கும் ஸ்டால்கள் இருக்கும். அங்கு பொதுவாகவே கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் முட்டி மோதிக்கொண்டிருப்பார்கள். அப்போது ஒருவர் என் பின்னால் தவறாக தொட முயன்றது தெரிந்தது."


ரசிகரின் கைபேசியை பறித்த சல்மான் கான்!
[Wednesday 2020-01-29 15:00]

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், நேற்று கோவாவுக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்து கொண்டிருந்தபோது, ஒரு ரசிகர் நெருங்கி வந்து அவருடன் ‘செல்பி‘ எடுக்க முயன்றார். அதனால் கோபமடைந்த சல்மான் கான், அந்த ரசிகரின் செல்போனை பறித்தார்.


குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை தொடங்கிய சமந்தா!
[Wednesday 2020-01-29 15:00]

சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இதையடுத்து சமந்தாவுக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. விஜய், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்த அவர், கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


கதாநாயகனாக களமிறங்கும் மொட்டை ராஜேந்திரன்!
[Wednesday 2020-01-29 15:00]

பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன். இப்படத்தில் கொடூர வில்லன் வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து சில படங்களில் வில்லனாக நடித்த அவர், பின்னர் காமெடி வேடங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.


பிரபல நடன இயக்குனர் மீது பெண் பாலியல் புகார்!
[Tuesday 2020-01-28 18:00]

பாலிவுட்டில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் கணேஷ் ஆச்சாரியா. இவர் தமிழில் ஜீவா-ஸ்ரேயா நடிப்பில் வெளியான ரெளத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில பாலிவுட் படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், கணேஷ் ஆச்சார்யா மீது 33 வயது பெண் ஒருவர், மராட்டிய பெண்கள் ஆணையம் மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில் நடன இயக்குனர் தனது வருமானத்திலிருந்து கமிஷன் கேட்டதாகவும், ஆபாச வீடியோக்களைப் பார்க்க கட்டாயப்படுத்தியதாகவும் கூறி உள்ளார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அனுஷ்காவுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகர்!
[Tuesday 2020-01-28 18:00]

'சாஹோ' படத்திற்கு பிறகு ராதா கிருஷ்ண குமார் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். காதல் கதையாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இத்தாலியில் நடந்தது. பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போது அவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபாஸ் - பூஜா ஹெக்டேயின் கெமிஸ்ட்ரி சிறப்பாக வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என ராதா கிருஷ்ண குமார் டுவீட் செய்துள்ளார்.


அதில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது - சிருஷ்டி டாங்கே!
[Tuesday 2020-01-28 18:00]

சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ராஜாவுக்கு செக். எஸ்டிசி நிறுவனம் வெளியிட்ட இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து இருந்தார். ஒரு காட்சியில் நிர்வாணமாகவும் நடித்து இருந்தார். அவரது இந்த அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சாய்ராஜ்குமார் அந்த சர்ச்சைக்குரிய காட்சியும் சொன்னார். நான் தயங்கினேன். அந்த காட்சி கதைக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் எப்படி எடுக்க இருக்கிறோம் என்பதையும் அவர் விளக்கியதால் சம்மதித்தேன். அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் படத்தில் மிக முக்கியமான காட்சியாக அதை பார்க்கும்போது நடித்ததன் முக்கியத்துவம் புரிந்தது.


இவர்தான் நடிகை பிரியா பவானி ஷங்கரின் காதலர்!
[Monday 2020-01-27 18:00]

சீரியலில் முன்னணி நாயகியாக நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். சின்னத்திரையை தொடர்ந்து அவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.


நடிகர் சரத்குமாரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்!
[Monday 2020-01-27 18:00]

நடிகர் சரத்குமார் திரை உலகில் உச்சத்தில் ஒரு நடிகர். சுப்ரீம் ஹீரோ என அவரை ரசிகர்கள் அழைத்தது ஒரு காலம். தற்போது அவர் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். அதே வேளையில் உடற்பயிற்சி, விளையாட்டு என இப்போதும் துடிப்பாக இருந்து வருகிறார்.


மாஸ்டர் படத்தின் போஸ்டர் செய்த மாபெரும் சாதனை! Top News
[Monday 2020-01-27 18:00]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். கோடை விடுமுறை ஸ்பெஷலாக தமிழ் புத்தாண்டை ஒட்டி படம் வெளியாகவுள்ளது. இதன் மூன்றாவது லுக் போஸ்டர் நேற்று வெளியானது. வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதியின் லுக் இதில் இடம்பெற்றதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியானது.


ரஜினிக்கு கொலை மிரட்டல்!
[Monday 2020-01-27 09:00]

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. பெரியார் ஆதரவாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசியதாக தெரிகிறது. இது குறித்த சி.டி. ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினர் புகார் அளித்தனர். இந்த நிலையில் ரஜினிக்கு பாதுகாப்பு வழங்க ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.


திரையுலகில் நிலைத்திருக்க அதுதான் முக்கியம் - ஸ்ரேயா!
[Monday 2020-01-27 09:00]

தமிழில் விஜய், ரஜினி, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 2018-ல் ரஷிய தொழில் அதிபர் ஆண்ட்ரு கோச்சேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டன. திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறேன். எனது படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தமிழ் படமொன்றிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. சினிமாவில் பெரிய நடிகை, சிறிய நடிகை என்ற பாகுபாடுகள் கிடையாது.


பத்மஸ்ரீ விருது பெறும் பாலிவுட் பிரபலங்கள்!
[Sunday 2020-01-26 18:00]

கல்வி, கலை, இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில் 7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 16 பேருக்கு பத்ம பூ‌ஷண் விருதும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 34 பேர் பெண்கள். 18 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். மறைந்த முன்னாள் மத்திய மந்திரிகள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்பட 12 பேருக்கு மரணத்துக்கு பிறகு விருதுகள் கிடைத்து இருக்கின்றன. திரைத்துறையில் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு விருது கிடைத்துள்ளது. இந்தி நடிகை கங்கனா ரணாவத், இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் மற்றும் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், பாடகர்கள் சுரேஷ் வாட்கர், அத்னன் சமி, டி.வி. நடிகர் சரிதா ஜோஷி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


தொகுப்பாளினி அஞ்சனாவிடம் உடலமைப்பு குறித்து தவறாக கேள்வி கேட்ட ரசிகர்! Top News
[Sunday 2020-01-26 18:00]

ரசிகர்கள், பிரபலங்கள் எப்போதும் இணைப்பில் இருப்பதற்கு உதவுகிறது சில சமூக வலைதளங்கள். அதன் மூலம் ஆசை பிரபலங்களுடன் பேசுகிறோம் என்று சிலர் சந்தோஷப்பட்டாலும் ஒருசிலர் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள். தொகுப்பாளினி அஞ்சனா எல்லோருக்கும் பேவரெட், இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா