Untitled Document
October 23, 2026 [GMT]
 
விஜய் இல்லத்தில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு!
[Friday 2020-02-07 08:00]

விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பிகில். விஜய்-அட்லி 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்ததாக திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. நேற்று திடீரென ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று வருமான வரித்துறை அதிகாரிகள், 'பிகில்' பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர்.


திரையிசை பாடகர் கே.ஜே.யேசுதாசின் சகோதரர் மர்ம மரணம்!
[Friday 2020-02-07 08:00]

திரையிசை பாடகர் கே.ஜே.யேசுதாசின் இளைய சகோதரர் கே.ஜே.ஜஸ்டின் (வயது 62). காக்கநாடு பகுதியில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர் கடந்த 4ந்தேதி இரவு காணாமல் போனார். இதுபற்றி கேரள போலீசில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், கொச்சி நகரின் வல்லார்படம் பகுதியில் ஆற்றங்கரையோரம் ஜஸ்டினின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.


முத்த காட்சிகள் கலைக்கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்டுள்ளன - ராசி கண்ணா!
[Friday 2020-02-07 08:00]

தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடித்துள்ள வேர்ல்டு பேமஸ் லவ்வர் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளிவந்து ஒரு வாரம் ஆகப் போகிறது. இப்போது அப்படத்தின் டீசரில் ராசி கண்ணா, ஒரு காட்சியில் நிர்வாணமாக குளிப்பது போன்றும், விஜய் தேவரகொண்டாவுடன் முத்தக் காட்சியும் பற்றி சர்ச்சை எழுந்துள்ளது.


விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்!
[Thursday 2020-02-06 18:00]

விஜய் வீடு, அலுவலகங்களில் நடக்கும் சோதனைக்கு அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இணையம் முழுக்க இதற்காக அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். டுவிட்டரில் நாங்கள் விஜய் உடன் நிற்கிறோம் என்று பொருள்படும் வகையில் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டேக்கில் விஜய்க்கு ஆதரவாக பலரும் டுவிட் செய்து வருகிறார்கள்.


முன்னணி நடிகைக்காக விட்டுக்கொடுத்த பிரபாஸ்!
[Thursday 2020-02-06 17:00]

தமிழில் விஜய்சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 96 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டினர். அதோடு ரீமேக் செய்யவும் முனைப்பு காட்டினர். அந்த வகையில் இப்படம் கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆனது. அங்கும் நல்ல வசூல் பார்த்தது. இந்நிலையில், இப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் திரிஷா வேடத்தில் சமந்தா நடிக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 7-ந் தேதி ரிலீசாகிறது. 96 படத்தை எடுத்த பிரேம்குமார் தான் ஜானு படத்தையும் இயக்கியுள்ளார்.


செல்பி எடுத்த பிரபல நடிகைக்கு 2000 ரூபாய் அபராதம்!
[Thursday 2020-02-06 17:00]

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தமிழ், கன்னட படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். பெங்களூரு இந்திரா நகரில் சமீபத்தில் சொகுசு காரில் நண்பருடன் சென்று கொண்டிருந்த சஞ்சனா கல்ராணி, வாகனம் ஓட்டியபடியே மொபைல் போனில், ‘செல்பி’ எடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.


சுந்தர்.சி-யுடன் ஹிப் ஹாப் ஆதி மோதலா?..
[Thursday 2020-02-06 08:00]

சுந்தர்.சி படங்களுக்கு இசையமைத்து அவருடன் நெருக்கமாக இருந்த ஹிப் ஹாப் ஆதி மீசையை முறுக்கு, நட்பே துணை ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது ‘நான் சிரித்தால்’ படத்திலும் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படங்களை சுந்தர்.சியே தயாரித்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. சென்னையில் நடந்த ‘நான் சிரித்தால்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இதுகுறித்து ஹிப் ஹாப் ஆதி பேசியதாவது:- “அரண்மனை 3-ம் பாகத்தில் இசையமைப்பாளர் மாறிவிட்டார் என்பதால் எங்களுக்குள் மோதல் என்ற தகவல் பரவி உள்ளது.


சிங்கப்பூரில் காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை! Top News
[Thursday 2020-02-06 08:00]

சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் முதல் பாலிவுட் வரையில் பல முன்னணி நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் அமைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகைகளில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஐஸ்வரயா ராய், அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா, முன்னனி நடிகர்களான ஷாருக்கான், நடிகர் மகேஷ் பாபு ஆகியோரின் சிலைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.


வருமானத்தை மறைத்ததாக ரஜினிகாந்துக்கு ரூ.66 லட்சம் அபராதம் - வருமான வரித்துறை அதிரடி!
[Thursday 2020-02-06 08:00]

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையில் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதற்காக 2002-03-ம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003-04-ம் ஆண்டுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும், 2004-05-ம் ஆண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாயும் (3 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.66 லட்சத்து 22 ஆயிரத்து 436) நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் வருமான வரித்துறையிடம் மேல்முறையீடு செய்தார். ஆனால் அவருடைய மேல்முறையீட்டை வருமான வரித்துறை ஏற்கவில்லை. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ரஜினிகாந்த் கோரிக்கையை கடந்த 2013-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. மேலும் அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவையும் ரத்து செய்தது.


தகுதிக்கு ஏற்ற மாதிரி சம்பளம் கேட்பது பேராசை இல்லை - ராஷ்மிகா!
[Wednesday 2020-02-05 17:00]

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் ராஷ்மிகா. கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். சூர்யாவுடன் ஜோடி சேர இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவுக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே பெரிய கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருக்க வேண்டுமானால் கடினமாக உழைக்க வேண்டும். நமது திறமையை பார்த்துத்தான் இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள். எனக்கு கோபம் அதிகம் வரும். அதை வெளிப்படுத்தமாட்டேன்.


குணச்சித்திர நடிகர் கோபாலகிருஷ்ணன் மரணம்!
[Wednesday 2020-02-05 17:00]

சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான நாடோடிகள் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கோபாலகிருஷ்ணன். இப்படத்திற்கு பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.


பிகில் சம்பளம் தொடர்பாக விஜயிடம் வருமான வரித்துறை விசாரணை!
[Wednesday 2020-02-05 17:00]

பிகில் திரைப்படத்துக்கு வாங்கிய சம்பளம் தொடர்பாக நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து விநியோகித்திருந்தது. இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில், இன்று காலை 10 மணி முதல் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


பாடகராக அவதாரம் எடுத்த சதீஷ்!
[Wednesday 2020-02-05 08:00]

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். தமிழ்ப்படம் மூலம் ரசிகர்களை ஈர்த்த சதீஷ், தனது காமெடியால் தமிழ் சினிமாவில் பலரையும் கவனிக்க வைத்து வருகிறார். முன்னணி ஹீரோக்கள் மட்டுமில்லாமல் இளம் ஹீரோக்களுடன் இணைந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்திலும் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


பிரபல நடிகைகளை தொடர்ந்து வெப் தொடரில் நடிக்கும் அமலாபால்!
[Wednesday 2020-02-05 08:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். மைனா படத்தின் மூலம் பிரபலமான இவர், தற்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். கே.ஆர்.வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தின் பணிகள் முடிந்து பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது.


திருமணத்திற்கு தயாரான யோகிபாபு!
[Wednesday 2020-02-05 07:00]

யோகிபாபு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி காமெடி நடிகர். விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். ஏன், சூப்பர் ஸ்டார் ரஜினியுடனே நடித்து அசத்திவிட்டார், இந்நிலையில் இவருக்கு வீட்டில் பெண் பார்த்துவிட்டனர். இவருடைய திருமணம் நாளை அவர் சொந்த ஊரில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடக்கின்றது.


பிரபல நடிகையின் கனவை நனவாக்கிய மம்முட்டி!
[Tuesday 2020-02-04 17:00]

மலையாளத்தில் 1995–ல் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சுவாரியர் 50–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர் மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் குடும்ப பிரச்சினையால் திலீப்பை விவாகரத்து செய்து 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். மஞ்சுவாரியரின் ஹவ் ஓல்டு ஆர் யூ தமிழில் ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே என்ற பெயரில் வெளியானது. தனுஷ் ஜோடியாக அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில் மலையாள படமொன்றில் மம்முட்டியுடன் நடிக்க மஞ்சு வாரியரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.


வெப் தொடரில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
[Tuesday 2020-02-04 17:00]

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், ‘விக்ரம் வேதா’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மாதவன் - விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்க, பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தையும் புஷ்கர் - காயத்ரி இயக்குகிறார்கள்.


நடிகைகளிடம் ஆபாச பேச்சு: மெகா தொடர் இயக்குனர் கைது!
[Tuesday 2020-02-04 17:00]

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடரை இயக்குனர் நீராவி பாண்டியன் இயக்கி வருகிறார். அந்த நாடகத்தின் படப்பிடிப்பு, திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. திருமண நிகழ்ச்சி போன்ற காட்சிகளை இயக்குனர் நீராவி பாண்டியன் இயக்கிக் கொண்டிருந்தார். இதற்காக 50க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அப்போது காட்சிகளை இயக்கிக் கொண்டிருந்த நீராவி பாண்டியன், தனது கையில் இருந்த மைக்கில் அனைவரும் கேட்கும் வகையில், துணை நடிகைகளை அறுவறுக்கத்தக்க மற்றும் ஆபாசமான வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த துணை நடிகைகள், படப்பிடிப்பை புறக்கணித்து, மண்டபத்துக்கு வெளியே வந்தனர்.


மாநாடு படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
[Tuesday 2020-02-04 08:00]

சிம்பு நடிப்பில் தற்போது ‘மஹா’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிக்கிறார்.


ஒரு தமிழரை திருமணம் செய்யவேண்டும் - ஸ்ருஷ்டி டாங்கே!
[Tuesday 2020-02-04 08:00]

மேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. நேற்று அவர் ஆரிக்கு ஜோடியாக நடிக்கும் படத்தின் பூஜை நடைபெற்றது. அதுமட்டுமின்றி இவர் தற்போதும் கைவசம் பல படங்கள் வைத்துள்ளார்.


தனது 5-வது கணவரை விவாகரத்து செய்த நடிகை பமீலா ஆண்டர்சன்!
[Tuesday 2020-02-04 08:00]

பிரபல ஆலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். இவருக்கு வயது 52. பாடகர்கள் டாம்மி லீ, கிட் ராக், ‘போக்கர்’ விளையாட்டு வீரர் ரிக் சாலமன் ஆகியோரை திருமணம் செய்து, விவாகரத்து செய்தவர். 12 நாட்களுக்கு முன்னர் பிரபல ஆலிவுட் தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது ஐந்தாவது திருமணம். ஏற்கனவே நான்கு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள். 30 வருடங்களுக்கும் மேலாக காதலித்துவந்த இருவரும் கடந்த ஜனவரி 20-ந்தேதி அன்று, மலிபுவில் திருமணம் செய்து கொண்டார்கள். மலிபு நகரில், தனிப்பட்ட முறையில் நடந்த திருமண நிகழ்ச்சியில், நெருக்கமான நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.


வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நகைச்சுவை நடிகர் போன்டா மணி!
[Monday 2020-02-03 18:00]

சீனாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் Corona Virus நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருக்கும் இந்தியர்கள் அனைவரும் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க தாய்நாடு திரும்பி விட்டனர். சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது அனைவரைக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


கதாநாயகியாக களமிறங்கும் பிக்பாஸ் லாஸ்லியா!
[Monday 2020-02-03 18:00]

பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். அவர் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக வாய்ப்பு கிடைக்கும் என அப்போதே பலரும் பேசினார்கள். பிக்பாஸ் முடிந்து பல மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் நடிகர் ஆரி ஜோடியாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன் பூஜை இன்று நடந்து முடிந்துள்ளது.


தமிழகத்தை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும் - பாரதிராஜா!
[Monday 2020-02-03 18:00]

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது:- அசாமை ஒரு அசாமியர் ஆளுவதைப்போல் மராட்டியத்தை மராட்டியர் ஆள்வதுபோல், கர்நாடகாவை கர்நாடகக்காரர் ஆள்வது போல், கேரளாவை ஒரு கேரளக்காரர் ஆள்வது போல் தமிழகத்தை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும்.


தமிழ் சினிமாவை விமர்சித்த சைக்கோ பட நடிகை!
[Monday 2020-02-03 09:00]

மிஸ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் சைக்கோ கில்லரின் டீச்சர் வேடத்தில் நடித்திருந்தவர் பிரித்தம். 'பீடி இருக்கா?’ என படத்தில் ஜெயிலில் இருந்து கேட்கும் ரோலில் தான் பிரித்தம் நடித்தார். அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் தமிழ் சினிமா துறை பற்றி விமர்சித்துள்ளார்.


ரஜினி சார் மிகவும் எளிமையானவர் - மனோபாலா!
[Monday 2020-02-03 09:00]

தமிழ் திரையுலகின் மிக பெரிய துண் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். இவர் தற்போது சிவா அவர்களின் இயக்கத்தில் தந்து 168வது படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.


பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட அனுஷ்கா!
[Monday 2020-02-03 08:00]

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். இடையில் அவர் உடல்எடை கூடிவிட, அதைக் குறைக்கும் முயற்சியில் இருந்தார். இதற்காக அவர் அமெரிக்கா சென்று வந்ததாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் அவர் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன. இதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகச் செய்திகள் வந்தன. நடிகர் பிரபாசை அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதை இருவருமே மறுத்தனர். அவர் என் நண்பர் என்று அனுஷ்காவும், என் தோழி என்று பிரபாசும் தெரிவித்தனர். ஐதராபாத்தில் 4 படுக்கை அறை கொண்ட பிளாட் ஒன்றை நடிகை அனுஷ்கா வைத்திருந்தார். பிரமாண்டமான இந்த வீட்டை வாங்கிய கொஞ்ச காலத்திலேயே தெலுங்கானா பிரச்சினை தலை தூக்கியது.


மாஸ்டர் படம் குறித்து விஜய் சேதுபதி விளக்கம்!
[Sunday 2020-02-02 18:00]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படம், தமிழ் புத்தாண்டு அன்று வெளிவர இருக்கிறது. இம்மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.


தனது உடற்கட்டமைப்பின் ரகசியத்தை கூறிய தமன்னா!
[Sunday 2020-02-02 18:00]

சினிமா நடிகைகளுக்கு உடல்கட்டு ரொம்ப முக்கியம். எனவேதான் நடிகைகள் நாள் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவும் அப்படித்தான். அதிகாலையே படப்பிடிப்பு என்றால் படப்பிடிப்பு முடிந்து வந்ததும் உடற்பயிற்சி செய்வாராம்.


பிரியங்கா ரெட்டி பாலியல் சம்பவம் படமாகிறது!
[Sunday 2020-02-02 18:00]

ஐதராபாத்தில் நள்ளிரவில் தனிமையில் இருந்த கால்நடை மருத்துவர் ஒருவரை நான்கு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தது நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டது. அவர்களை ஐதராபாத் போலீசார் என்கவுன்ட்டர் செய்து சுட்டுக் கொன்றனர். இந்த உடனடி தண்டனை பொது மக்களின் கூட்டு மனப்பாண்மையை திருப்திபடுத்துவதற்காக செய்யப்பட்டது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த சம்பவத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா, திஷா என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க இருக்கிறார்.

 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா