Untitled Document
October 23, 2026 [GMT]
 
மாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா!
[Friday 2020-02-14 07:00]

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா நடித்துள்ளார். கோடை விடுமுறையில் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை தழுவியே இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு ‘வெய்யோன் சில்லி’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று மதியம் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானத்தில் பாடல் வெளியிடப்பட்டது. சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் கீழ் படிக்கும் மாணவர்கள் 70 பேர் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் சூர்யா, சிவகுமார், இயக்குனர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டனர்.


விஜய்க்கு பயம் இருக்கிறது - தம்பி ராமையா!
[Thursday 2020-02-13 18:00]

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் மிக முக்கிமான நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடன் பணிபுரிந்து அதில் அவரிடம் இருந்து கற்று கொண்ட பல விஷயங்களை பிரபலங்கள் நேர்காணலில் கூறுவதை நாம் பார்த்திருப்போம்.


வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை!
[Thursday 2020-02-13 18:00]

பிரியாணி என்ற தமிழ் படத்தில் நடித்தவர் லீனா மரியா பால். மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி படத்திலும், மலையாளத்தில் ரெட் சில்லிஸ், ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா ஆகிய படங்களில் நடித்திருந்தார். கொச்சியில் சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வருகிறாராம். இவர் தனது காதலருடன் சேர்ந்து சென்னை அம்பத்தூரில் உள்ள வங்கியில் போலி ஆவணம் மூலம் கடன் மோசடி செய்திருப்பதாக வந்த புகாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இது தான் சிறந்த படம் - சூர்யா!
[Thursday 2020-02-13 18:00]

தமிழ் திரையுலகில் நடிகனாக மட்டும் இல்லாமல் சக மனிதனாகவும் உதவி செய்து கொண்டு வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று. அண்மையில் கூட இப்படத்தின் டீசர் மற்றும் மாறா தீம் மியூசிக் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


காவல் நிலைய வாசலில் கதறி அழுத சனம் ஷெட்டி!
[Wednesday 2020-02-12 17:00]

சனம் ஷெட்டி தமிழ் சினிமாவில் அம்புலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிரபல மாடல் தர்ஷனை காதலித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், தர்ஷன், சனம் ஷெட்டி தொடர்ந்து டார்ச்சர் தருகின்றார் என காதலை முறித்துக்கொண்டார், இவர்களுக்குள் நிச்சயத்தார்த்தம் கூட நடந்து முடிந்துவிட்டது. அப்படியிருக்கையில் இவர்கள் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகின்றது, இந்நிலையில் தர்ஷன் பெயில் இரண்டு முறை நீக்கப்பட்டுள்ளது, இதனால் தர்ஷன் அழுதுக்கொண்டே காவல்நிலையத்தை விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.


விஜய் எடுத்த செல்பியின் மாபெரும் சாதனை!
[Wednesday 2020-02-12 17:00]

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட பீக்கில் இருக்கின்றார் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் படங்களுக்கான வரவேற்பு இருந்து வருகின்றது. அவர் நின்றால் செய்தி, நடந்தால் செய்தி என்பது போல் இருக்க, தற்போது நடந்த வருமானவரித்துறை சோதனை விஜய்க்கு சாதகமாகவே அமைந்துவிட்டது.


வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி!
[Wednesday 2020-02-12 17:00]

விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்தது. இந்த படம் ரூ.300 கோடி வருமானம் ஈட்டியதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர், ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் பண்ணை வீடு, நீலாங்கரை மற்றும் சாலிகிராமம் வீடுகள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.


பிக்பாஸ் வனிதா எடுத்த அதிரடி முடிவு!
[Wednesday 2020-02-12 07:00]

பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவர் தற்போது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருவதும் நாம் அறிவோம்.


2-ம் திருமணம் செய்யும் 49 வயது தயாரிப்பாளர்?..
[Wednesday 2020-02-12 07:00]

முன்னணி தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. அவர் சமீபத்தில் வெளிவந்த 96 ரீமேக் படமான ஜானு படத்தை தயாரித்திருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார் என செய்தி பரவி வருகிறது.


யோகி பாபுவுக்கு நடிகர் தனுஷ் கொடுத்த பரிசு!
[Wednesday 2020-02-12 07:00]

நடிகர் யோகி பாபுவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. மஞ்சு பார்கவி என்பவரை சென்ற 5ம் தேதி அவர் கரம்பிடித்தார். இந்நிலையில் தற்போது தனுஷ் நடித்துவரும் கர்ணன் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.


தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 23 வயது நடிகை!
[Tuesday 2020-02-11 18:00]

23 வயதாகும் சீரியல் நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் கொல்கத்தாவை சேர்ந்து தொலைக்காட்சி நடிகை சுபர்ணா ஜாஸ். இவர் பல தொடர்களிலும் சில படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்ற வாரம் ஞாயிறு கிழமை அன்று இவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த இவரது பெற்றோர்கள் உடனடியாக இவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சுபர்ணா ஜாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நீடிப்பேன் - சமந்தா!
[Tuesday 2020-02-11 18:00]

விஜய்சேதுபதி - திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.


காதலர் தினத்தன்று முக்கிய தகவலை வெளியிடும் மாஸ்டர் படக்குழு!
[Tuesday 2020-02-11 18:00]

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்கள் தவிர மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். விஜய் பேராசிரியர் வேடத்தில் நடிப்பதால் தான் இப்படத்திற்கு மாஸ்டர் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9 -ந்தேதி வெளியாக உள்ளது.


தர்ஷனுக்கு பெயில் வழங்க மறுத்த நீதிமன்றம்!
[Tuesday 2020-02-11 08:00]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் தர்ஷன். இவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் நடிக்கவிருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருடைய காதலி சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக சொல்லி ஏமாற்றிவிட்டார் என புகார் அளித்திருந்தார்.


ரஜினியின் சம்பளம் குறித்து புது தகவல்!
[Tuesday 2020-02-11 08:00]

தர்பார் படம் நஷ்டம் எனவும் அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என கூறி சில நாட்களுக்கு முன்பு விநியோகஸ்தர்கள் சிலர் ரஜினி வீட்டுக்கு சென்று அவரிடம் பேச முயன்றனர். ஆனால் அவர்களை போலீஸ் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அடுத்து ரஜினி நடித்துவரும் 168வது படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடக்கிறது.


புதிய அவதாரம் எடுக்கும் ரம்யா நம்பீசன்!
[Tuesday 2020-02-11 08:00]

பல படங்களில் ஹோம்லியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல நடிகை ரம்யா நம்பீசன். அவர் பல பாடல்களையும் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவர் திரைப்படத்தை தான் இயக்குகிறாரோ என் நினைந்து அவரிடம் கேட்டால் அவர் அதை மறுத்துள்ளார்.


வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மன்: கால அவகாசம் கேட்கும் விஜய்!
[Monday 2020-02-10 18:00]

கடந்த வாரம் விஜய் ,AGS groups மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனைகள் நடந்தது. விஜய் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட கணக்கில் வராத பணம் எதுவும் மீட்கவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார்கள். அன்புச்செழியன் வீட்டில் இருந்து ரூபாய் 77 கோடி மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விசாரணைக்கு வருமான வரித்துறை விஜய்யை ஆஜராக சொல்லி அவருக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளார்கள். இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.


மீண்டும் திரைக்கு வரும் அருண் பாண்டியன்!
[Monday 2020-02-10 18:00]

கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ஹெலன். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து வந்தது. மலையாளத்தில் வினித் சீனிவாசன் தயாரிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ஹெலன். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து வந்தது. நர்சிங் மாணவியான ஹெலனுக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது கனவு. அவரது தந்தைக்கு அது பிடிக்கவில்லை. ஒருநாள் காதலருடன் ஹெலன் வெளியே சென்று திரும்பும்போது போலீசார் தடுத்து நிறுத்தி, காதலன் மது அருந்தி இருந்ததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்கின்றனர்.


ஆஸ்கர் 2020 - முழு விவரம்!
[Monday 2020-02-10 18:00]

ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கிய 92-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.


ஆஸ்கர் விருதுகளை அள்ளி குவித்த 1917 திரைப்படம்!
[Monday 2020-02-10 18:00]

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a time in Hollywood) என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிராட் பிட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதும் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.


திருமணத்திற்கு முன் குழந்தை பெற்ற அஜித் பட நடிகை!
[Sunday 2020-02-09 17:00]

பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த பிரெஞ்சு பெண் கல்கி கோச்சலின். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரும் பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், நடிகர் அனுராக் காஷ்யப்பும் காதலித்து 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இவர்கள், 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்தியில் தேவ் டி, சைத்தான், த்ரிஷ்னா, ஷாங்காய், ஹேப்பி என்டிங், கல்லி பாய் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.


இவரை போல தான் மனைவி வேணும் - நடிகர் சர்வானந்த்!
[Sunday 2020-02-09 17:00]

நடிகை சமந்தா தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு, சினிமாவையும், சொந்த வாழ்க்கையையும் இணையாக கொண்டு செல்கிறார். பிளான் போட்டது போல சினிமாவில் அவருக்கு வெற்றி கிடைத்து வருகிறது. நீண்ட நாட்களாக ஒரு வெற்றியை பதிவு செய்ய நாக சைதன்யாவும் போராடி வருகிறார். இந்நிலையில் தன் கணவரின் வெற்றிக்காவும் அவர் பாடுபட்டு வருகிறார். அப்படியான முயற்சியாக இருவரின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் மஜிலி.


ரஜினியை முந்திய விஜய்!
[Sunday 2020-02-09 17:00]

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் மிக முக்கியமான நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய். இவர்களை பற்றியும் இவர்களின் படங்களை பற்றியும் பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம் தான்.


அழவைக்கிற படங்களை பார்க்க மாட்டேன் - தமன்னா!
[Sunday 2020-02-09 08:00]

தமன்னா நடிப்பில் கடந்த வருடம் கண்ணே கலைமானே, தேவி-2, பெட்ரோமாக்ஸ், ஆக்‌ஷன் ஆகிய 4 படங்கள் வந்தன. தற்போது போலோ சுதியான் என்ற இந்தி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “சினிமா என்பது வினோதமான சாதனம். திரையில் எதையாவது சொல்லுங்கள். எதையாவது காட்டுங்கள். ஆனால் படத்தை பார்க்கிறவர்கள் இரண்டரை மணி நேரம் வெளி உலகத்தை மறந்து ஜாலியாக சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் அழவைக்கிற படங்களை பார்க்க மாட்டேன். அவற்றில் நடிக்கவும் விருப்பம் இருக்காது.


அவருடன் தங்கையாக நடிக்கமாட்டேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்!
[Sunday 2020-02-09 08:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கதாநாயகியாகவும், குழந்தைகளுக்கு அம்மாவாகவும், தங்கையாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திலும், தற்போது விக்ரம் பிரபுக்கு தங்கையாக ‘வானம் கொட்டட்டும்’ படத்திலும் நடித்துள்ளார்.


ஒவ்வொரு பாடலையும் புதிதாகத்தான் உருவாக்குவேன் - இளையராஜா!
[Sunday 2020-02-09 08:00]

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி துபாயில் நடக்கிறது. இதுகுறித்து துபாயில் இளையராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தற்போது தமிழ் பட உலகில் இருக்கும் இசையமைப்பாளர்கள், திரைப்படங்களுக்கு சுதந்திரமாக இசையமைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.


மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன் - மீரா வாசுதேவன்!
[Friday 2020-02-07 18:00]

உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன், மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மந்த்ரா படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். 2005-ல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2010-ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் உள்ளார்.


விஜய் வீட்டில் சோதனை நடத்த இதுதான் காரணம்!
[Friday 2020-02-07 18:00]

விஜய் வீட்டில் நேற்று முன் தினம் தொடங்கி வருமான வரித்துறையின் அதிரடி சோதனை சுமார் 23 மணி நேரம் நீடித்ததாக சொல்லப்படுகிறது. நேற்று முடிவடைந்த இந்த சோதனையில் விஜய்யின் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும் படப்பிடிப்பு தளத்திலிருந்த விஜய்யை வருமான வரித்துறை தங்கள் வாகனத்தில் வைத்து அழைத்து வந்தது குறித்தும், இந்த சோதனையில் பின்னணியில் அரசியல் பின் புலன் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.


நடிகை பறவை முனியம்மாவின் தற்போதைய நிலை!
[Friday 2020-02-07 18:00]

ஏ சிங்கம் போலே நடந்து வரான் செல்ல பேராண்டி இந்த பாடலை யாராலும் மறக்க முடியாது. தன்னுடைய மாஸ் குரலால் பட சினிமா பாடல்கள் பாடி மக்களை கவர்ந்திருக்கிறார். அண்மையில் இவர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்கு பணம் கூட இல்லாமல் அவதிப்பட்டது நமக்கு தெரிந்த விஷயம் தான். அவரின் இந்த நிலைமை அறிந்த நடிகர் அபி சரவணன் அவருடனேயே இருந்து முனியம்மாவுக்கு சிகிச்சை உதவி செய்தார்.


ரகசிய திருமணம் குறித்து யோகி பாபு விளக்கம்!
[Friday 2020-02-07 18:00]

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் இப்போது முன்னணியில் இருக்கும் காமெடி நடிகர். புதுப்படங்களில் யார் இருக்கிறார்களோ இல்லையோ யோகி பாபு இருக்கிறார். அவரது காமெடிகள் தான் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெறுகின்றன. அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்துவிட்டார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி அவரது குல தெய்வ கோவிலில் பார்கவி என்ற பெண்ணை அவசரமாக, ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.

Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா