Untitled Document
October 23, 2026 [GMT]
 
நூலிழையில் உயிர்தப்பிய கமல்!
[Thursday 2020-02-20 08:00]

கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் நடந்து வருகிறது. தற்போது சென்னை பூந்தமல்லி அடுத்து உள்ள ஒரு ஸ்டூடியோவில் செட் போட்டு நடத்தப்பட்டு வந்தது. அதில் நேற்று இரவு திடீரென ஒரு கிரேன் சாய்ந்து விழுந்ததில் நசுங்கி மூன்று பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தமிழ் நடிகரை திருமணம் செய்ய விரும்பும் ராஷ்மிகா!
[Thursday 2020-02-20 08:00]

நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த ஒரு வருட காலத்தில் கிடுகிடுவென முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். தெலுங்கு மற்றும் தமிழில் பிசியாக வலம் வரும் இவர், தற்போது தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் கூட இவர் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு திடீரென பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனனுக்கு சென்று விட்டது. தற்போது தெலுங்கில் பீஷ்மா என்கிற படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா, அந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.


இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு!
[Thursday 2020-02-20 08:00]

இயக்குனர் ‌‌ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. அங்கு விசே‌‌ஷ அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். நேற்று மாலை நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் துணை நடிகர்-நடிகைகள் பங்கேற்ற காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர்.


மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் நடிகர் கார்த்திக்!
[Wednesday 2020-02-19 18:00]

தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலமாக கதாநாயனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். இதன்பின் பல படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தார். இவர் திரையுலகில் 125 படத்திற்கும் பெறப்பட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவிற்கு தனுஷுக்கு வில்லனாக அனேகன் படத்தில் நடித்தார்.


ஓரின ஈர்ப்பாளர்களால் அவதிப்பட்ட பிரபல தொகுப்பாளர்!
[Wednesday 2020-02-19 18:00]

தற்போது இருக்கும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மத்தியில் பலரையும் கவர்ந்தவர் வி.ஜே.ரக்‌ஷன். கலக்கப்போவது காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அவர் பெர்மான்ஸும் செய்து வருகிறார். இவரையும் கலாய்க்க தான் செய்கிறார்கள். துல்கர் சல்மான் நடித்துள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிகராக மாறியுள்ளார். அண்மையில் பேட்டியளித்துள்ள அவர் ஓரின ஈர்ப்பாளர்களால் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.


தனது காதலனை பற்றி கூறிய ப்ரியா பவானி ஷங்கர்!
[Wednesday 2020-02-19 17:00]

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் நடித்த மேயாத மான், மான்ஸ்டர் ஆகிய இரண்டு படங்களுமே ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து இவர் இந்தியன் 2 படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகின்றார். மேலும், ப்ரியா ஒரு முன்னணி நடிகரின் படத்திலும் கமிட் ஆகியுள்ளாராம், அதோடு இவர் நடிப்பில் இந்த வாரம் மாஃபியா படம் திரைக்கு வரவுள்ளது. இதற்காக இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், இவரின் காதல் குறித்து கேட்கப்பட்டது, இதில் காதலன் என்று வெளிப்படையாக கூறாமல், அவரை பற்றி பல நல்ல விஷயங்களை பகிர்ந்தார்.


ரஜினியுடன் பணியாற்ற விரும்பும் இயக்குனர் ராணா!
[Wednesday 2020-02-19 09:00]

நான் சிரித்தால் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்து செம்ம வசூல் பெற்று வருகின்றது. படத்தின் விமர்சனம் மோசமாக இருந்தாலும், வசூலில் இப்படம் மாஸ் காட்டி வருகின்றது. அதிலும் ஆதியின் திரைப்பயணத்திலேயே அதிக ஓப்பனிங் பெற்றது இந்த படம் தானாம், இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் உள்ளனர். இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதியை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் ராணாவிடம் வேறு யாரை இயக்க ஆசை என்று பேட்டியில் கேட்டுள்ளனர்.


வலிமை படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய அஜித்!
[Wednesday 2020-02-19 08:00]

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி இருக்கும் படம் வலிமை. இப்படத்தில் அஜித் அவர்கள் நீண்ட நாட்கள் கழித்து ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறாராம். மேலும் இப்படத்தில் இவருக்கு வில்லனாக பல நடிகர்களின் பெயர்கள் அடிப்பட்டு வந்தது. சமீபத்தில் கூட அஜித்துடன் ஏகன் படத்தில் இணைந்து நடித்திருந்த நடிகர் நவதீப் தான் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்போகிறார் என்று கூட சில தகவல்கள் வெளியானது. ஆனால் வில்லன் கதாபாத்திரத்தை பொறுத்தவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


உடையே இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட தோனி பட நடிகை! Top News
[Wednesday 2020-02-19 08:00]

தோனி வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படம் எடுக்கப்பட்டது. இதில் தோனியின் மனைவியாக நடித்தவர் கியாரா அத்வானி. இவர் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை. இவர் நடிப்பில் வெளிவந்த கபீர் சிங் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் கியாரா ஹாட் போட்டோஷுட் நடத்துவது வழக்கம் தான்.


ரஜினிகாந்தின் அடுத்த படம்!
[Tuesday 2020-02-18 17:00]

சூப்பர் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவ்வருடத்தின் தொடக்கமாக பொங்கல் ஸ்பெஷலாக தர்பார் படத்தின் மூலம் மீண்டும் தன் வெற்றியை பதிவு செய்து விட்டார். அண்மைகாலமாக அவரின் பேச்சு குறித்த சர்ச்சைகள் மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கின்றன. தற்போது அவர் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார்.


பிக்பாஸ் கவின் நடிக்கும் புதிய படத்தின் தகவல்!
[Tuesday 2020-02-18 17:00]

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இதன்பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்த கொண்டு பல்லாயிரம் ரசிகர்கள் கவர்ந்தார் என்று கூட கூறலாம். ஆனால் பிக் பாஸிற்கு செல்லும் முன்பே இவர் நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தில் நடிகைரம்யா நபிசன் அவர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.


வரதட்சணை கொடுமை: பாடகி தற்கொலை!
[Tuesday 2020-02-18 17:00]

கன்னட சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுஷ்மிதா ராஜன் (26). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் கன்னட திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாப்ட்வேர் என்ஜினியரான சரத்குமார் என்பவரை சுஷ்மிதா திருமணம் செய்து கொண்டார். இருவரும் குமாரசாமி லே அவுட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் சரத்குமாரின் பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. குறிப்பாக சரத் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் வரதட்சணை கேட்டு அதிகளவு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனதளவிலும், உடல் அளவிலும் சுஷ்மிதா மிகவும் பாதிக்கப்பட்டார்.


மாஸ்டருடன் மோதவிருந்த சூர்யா படம் தள்ளிப்போகிறது?..
[Tuesday 2020-02-18 08:00]

விஜய்யின் மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் மாதம் துவக்கத்தில் தமிழ் புத்தாண்டுக்காக வெளியாகிறது. ஷூட்டிங் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் அது இந்த மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெரிகிறது. இந்த படத்தோடு சூர்யாவின் சூரரை போற்று படம் ரிலீஸ் ஆகவிருந்தது.


2-ம் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன் - அமலா பால்!
[Tuesday 2020-02-18 08:00]

அமலா பால்-ஏ.எல்.விஜய் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதற்கு தனுஷ் தான் காரணம் என ஏ.எல்.விஜய்யின் அப்பா சில வாரங்கள் முன்பு குற்றம்சாட்டியிருந்தார். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்காமல் இருந்த அமலா பாலை அம்மா கணக்கு படத்தில் நடிக்க வைத்தது தனுஷ் தான். அதன் பிறகு தான் பிரச்சனை வந்தது என அவர் கூறினார்.


இயக்குனராகும் நடிகர் விவேக்!
[Tuesday 2020-02-18 08:00]

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். தற்போது காமெடியோடு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி சமூக நல பணிகள் பலவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் அவர்.


பிரபல இயக்குனர் ராஜ் கபூரின் மகன் மரணம்!
[Monday 2020-02-17 17:00]

தமிழில் வெளிவந்த தாலாட்டு கேக்குதாமா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் திரு ராஜ் கபூர் அவர்கள். இவர் விஜய், அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து துணை நடிகராகவும் நடித்திருப்பார். இதன்பின் சுந்தர்.சி எடுத்த பல படங்களில் இவர் நடித்து கொண்டே இருந்தார். ஏன் அவர் தயாரித்த நந்தினி சீரியலை கூட இவர் தான் இயக்கி வந்தார், தற்போது ரன் தொடரையும் இவர் தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


பின்னணி குரல் கலைஞர்கள் சங்க தேர்தல் - ராதாரவி அணி வெற்றி!
[Monday 2020-02-17 17:00]

திரைப்பட பின்னணி குரல் கலைஞர்கள் சங்க தேர்தல் பிப்.,15 ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள 1360 உறுப்பினர்களில் 931 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். அதனை தொடர்ந்து மாலை 7.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை முடிந்து நேற்று வெற்றி பெற்றவர்கள் விபரம் அறிவிக்கப்பட்டது. இதில் ராதாரவியின் அணியை சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர். முன்னதாக தலைவர் பதவிக்கு ராதா ரவியும் பின்னணி பாடகி சின்மயியும் போட்டியிட்டனர்.


ஆதரவற்றோர் இல்லத்திற்கு சம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்!
[Monday 2020-02-17 17:00]

ஆபாச படங்களில் நடித்து கொண்டிருந்த சன்னி லியோன் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். பல்வேறு இந்தி படங்களில் நடித்துள்ள அவர், தற்போது ‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழிலும், ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாக இருக்கிறார்.


ஆஸ்கார் வென்ற பாராசைட் விஜய் படத்தின் காப்பியா?
[Monday 2020-02-17 07:00]

ஆஸ்கர் விருது வென்ற பாரசைட் படம் விஜய் நடித்த மின்சார கண்ணாவின் சாயலில் இருக்கிறது எனவும் அதற்காக சட்டப்படி வழக்கு தொடரப்போவதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இது பற்றி தமிழ்ப்படம் பட இயக்குனர் சிஎஸ் அமுதன் நக்கலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


கடின உழைப்பினால் முன்னேறி வந்தவர் விஜய்: இயக்குனர் களஞ்சியம்!
[Monday 2020-02-17 07:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்து வைத்திருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் விஜய் அவர்களை திட்டி 'ஹிந்து மக்கள் கட்சி' தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.


பிரபல விருது விழாவுக்கு கிளம்பிய எதிர்ப்பு!
[Monday 2020-02-17 07:00]

விருது விழாக்கள் என்றாலே எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சில தினங்களுக்கு முன்பு ஹிந்தி பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கல்லி பாய் படத்திற்கு அதிக விருதுகள் கிடைத்தது. மற்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர். #BoycottFilmFare என்ற ஹாஸ்டேக் தற்போது தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.


ஒல்லியாகவே இருப்பது எப்படி? - தமன்னா.
[Monday 2020-02-17 07:00]

சினிமா நடிகர்கள், குறிப்பாக ஹீரோயின்கள், தங்கள் உடல் எடையை பிட்டாக வைத்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதற்காக அவர்கள் செய்யும் விஷயங்கள் ஏராளம். நடிகை தமன்னா சினிமாவுக்குள் வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தற்போதும் ஒல்லியாக உடலை பிட்டாக வைத்துள்ளார். அதற்காக அவர் மற்றவர்களை போல அரிசி சோறு, முட்டை கரு போன்றவற்றை சாப்பிடாமல் எல்லாம் இருப்பதில்லை.


இயக்குனருடன் சண்டையிட்ட விஜய் தேவரகொண்டா!
[Saturday 2020-02-15 08:00]

விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் நேற்று ரிலீஸ் ஆனது World Famous Lover படம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா, ராசி கண்ணா, Izabelle Leite என நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். நேற்று வெளியான இந்த படத்திற்கு அதிக நெகடிவ் விமர்சனங்களே வந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனருடன் விஜய் தேவரகொண்டா சண்டை போட்டுள்ளார் என்பதும், அவருடன் தற்போது பேசுவது கூட கிடையாது என்ற தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.


எல்லைமீறிய ஷாலு ஷம்மு! Top News
[Saturday 2020-02-15 08:00]

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்திருந்தனர் நடிகை ஷாலு. இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஹாட்டான விடீயோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து 2ல் அவர் நடிக்கவுள்ளார் என்கிற செய்தியும் சில மாதங்களுக்கு முன்பு வந்தது.


பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் கமல்ஹாசன் அதிரடி கருத்து!
[Saturday 2020-02-15 08:00]

நடிகர் கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு பின் முழு நேர அரசியலிலும் இறங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் நிகழ்வு குறித்து பல கருத்துக்களையும் அவர் முன் வைத்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் நிதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


விளம்பரங்களில் நடிக்க மறுக்கும் சாய்பல்லவி!
[Friday 2020-02-14 17:00]

நடிகை சாய் பல்லவிக்கு தென்னிந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்தும் அழகு கிரீம் விளம்பர படத்தில் நடிக்காமல்போனது ஏன்?' என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, 'அந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். வீட்டுக்கு சென்றால் 3 சப்பாத்தி அல்லது கொஞ்சம் சாதம் சாப்பிடுவேன். வேறு எந்த பெரிய தேவையும் எனக்கு இல்லை. என்னை சுற்றியிருப்பவர்களின் சந்தோஷத்துக்கு உதவ முடியுமா என்று பார்க்கிறேன், அவ்வளவுதான்.


தமிழ் திரையுலகை அரசு காப்பாற்ற வேண்டும் - சீமான்!
[Friday 2020-02-14 17:00]

எழுத்தாளர் அஜயன் பாலாவின் ‘பாலுமகேந்திரா நூலகம்’ சென்னை சாலிகிராமம் ஏரியாவில் இயங்கி வந்தது. நூலகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமானத்தைத் தொடர்ந்து புதிய கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இதன் தொடக்க விழா நடைபெற்றது. இயக்குனர்கள் பாரதி ராஜா, சீமான்,அமீர் உட்பட திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள், உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான் சினிமா தற்போது உள்ள நிலை குறித்து தனது வருத்தத்தைப்பதிவு செய்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஏறத்தாழ ஆயிரம் திரையரங்குகள் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் முந்நூறுக்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் வெளியானாலும் முன்னணி நடிகர்கள் நடித்தப் படங்களை மட்டுமே கருத்தில் கொண்டே திரையரங்குகள் செயல்படுகின்றன. மேலும், பண்டிகைக் காலங்களில் சிறு திரைப்படங்களைத் திரையிட முடியாத சூழல்தான் நிலவுகிறது. அப்படங்களுக்குக் கூட்டம் அதிகம் வராத ஒரே ஒரு பகல் காட்சி மட்டுமே திரையிட வாய்ப்பு கிடைப்பதால் அந்த திரைப்படம் நன்றாக இருப்பதை அறிந்து மக்கள் திரையரங்கை நோக்கி வரும்போது அத்திரைப்படங்கள் திரையரங்குகளைவிட்டே நீக்கப்பட்டு விடுகின்றன.


ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மாஸ்டர் படக்குழு! Top News
[Friday 2020-02-14 17:00]

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமான இன்று வெளியிடப்பட்டது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளார்.


அவர்கள் விஷம் நிரம்பியவர்கள் - குஷ்பு!
[Friday 2020-02-14 08:00]

நடிகை குஷ்பூ சினிமா, சீரியல் என தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மையில் அவர் ரஜினியுடன் தலைவர் 168 படத்தில் இணைந்துள்ளார். அதே வேளையில் அரசியலில் இருந்து வரும் அவர் அண்மையில் நடைபெற்று முடிந்த டெல்லி தேர்தலை பற்றி பேசியுள்ளார். அவர் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் தோல்வியடைந்தது. இந்நிலையில் அவர் காங்கிரஸ் மீண்டும் அழிகப்பட்டுவிட்டது. அடிமட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களை சரி செய்ய வேண்டும்.


விஜய்க்காக நான் தான் முதலில் வந்து நிற்பேன் - ராதாரவி!
[Friday 2020-02-14 08:00]

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் விஜய். இவரை பற்றி பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை நேர்காணலில் பதிவிடுவார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் ராதாரவி அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் நடந்த உரையாடலில்: தொகுப்பாளர் கேட்ட கேள்வி "நீங்கள் தற்போது பா.ஜ.க வில் இணைந்துளீர்கள் அப்போது உங்கள் கட்சியை சார்ந்த எச் ராஜா அவர்கள் விஜய்யை ஜோசப் விஜய் என்று தான் அழைக்கிறார்" என்று கேட்டதற்கு.

Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா