Untitled Document
October 23, 2026 [GMT]
 
ரஜினி நடித்து வரும் 168-வது படத்தின் தலைப்பு அறிவிப்பு!
[Tuesday 2020-02-25 08:00]

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள். மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்து டைட்டில் லுக் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


தனது 83 வயதிலும் கோல்ப் விளையாடும் நடிகை வைஜெயந்தி மாலா!
[Tuesday 2020-02-25 08:00]

தமிழில் இரும்புத் திரை மற்றும் தேனிலவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்தி நடிகையான வைஜெயந்தி மாலா. அவருக்கு தற்போது வயது 83. இவர் 75க்கும் அதிகமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அவர் தற்போது, கோல்ப் விளையாடுவது போன்ற படங்களை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அவர் இந்த வயதிலும் அசராமல் கோல்ப் விளையாடுவதைப் பார்த்து விட்டு, பலரும் அசந்து போய் உள்ளனர். இது குறித்து, வைஜெயந்தி மாலா கூறியிருப்பதாவது: எனக்கு எப்போதுமே கோல்ப் விளையாடுவது பிடிக்கும்; அந்த விளையாட்டை இளம் வயது முதல் நான் நேசிக்கிறேன். என்னுடைய கணவரும் என்னை கோல்ப் விளையாடவிட்டு அதைப் பார்த்து ரசிப்பார்.


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிகாந்த் இன்று ஆஜராக சம்மன்!
[Tuesday 2020-02-25 08:00]

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அதிகாரி மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ஏற்கனவே 18 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 445 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 630 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.


ஜெயலலிதாவை போல் மாறிய நடிகை கங்கனா ரணாவத்!
[Monday 2020-02-24 18:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஜெயலலிதா. அரசியலிலும் பெரும் ஆளுமைச் செய்தவர். இறக்கும் முன் கூட இந்தியாவிலேயே மூன்றாம் கட்சியாக உருவெடுத்தது அவரின் முக்கிய சாதனை. மறைந்த அவரின் வாழ்க்கை தற்போது வரலாற்றுப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக ஹிந்தி சினிமா நடிகை கங்கனா ரணாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடிக்கிறார்.


விஜய்யின் மகனை இயக்கவிரும்பும் இயக்குனர் முருகதாஸ்!
[Monday 2020-02-24 18:00]

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உயரத்தில் பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக பிகில் படம் திரைக்கு வந்தது, இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார், இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. தற்போது விஜய்யின் மகன் நன்கு வளர்ந்துவிட்டார், இதனால், இவரை ஹீரோவாக வைத்து படமெடுக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.


வித்யா பாலனின் கவர்ச்சிக்கு ரசிகர்கள் எதிர்ப்பு! Top News
[Monday 2020-02-24 18:00]

பெங்காலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பாலன். அதன்பின் இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஒருகட்டத்தில் உடல் எடை கூடியதால் சில படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பின் படுமோசமாக கவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்த வித்யா பாலன் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். சமீபத்தில் தமிழில் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்க்ளை கவர்ந்தார்.


மாஸ்டர் பட பாடலை பாராட்டிய ஹாலிவுட் நடிகர்!
[Monday 2020-02-24 08:00]

மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் தற்போது பெரிய ஹிட்ஆகியுள்ளது. தற்போது வரை 21 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது அந்த வீடியோ.


நான் காதலித்துதான் திருமணம் செய்துகொள்வேன் - நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!
[Monday 2020-02-24 08:00]

பிரபல டைரக்டர் பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகளான கல்யாணி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹலோ என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘ஹீரோ’ படத்தில் நடித்தார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


பிரம்மாண்ட அரண்மனையில் தயாராகும் அரண்மனை-3!
[Monday 2020-02-24 08:00]

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார். இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்க உள்ளனர்.


தல, தளபதி குறித்து வெளிப்படையாக கூறிய ராஷி கண்ணா!
[Sunday 2020-02-23 18:00]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நடிகர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவரும் தற்போது தங்களது படங்கள்களில் மிகவும் பிசியாக நடித்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷி கண்ணா. இவர் தமிழில் இமைக்க நொடிகள், அடங்க மறு, அயோக்கிய, சங்கத்தமிழம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


என் ரசிகரென்று தெரிந்தால் கண்ணை மூடிக்கொண்டு காதலியுங்கள் - நடிகர் சிம்பு!
[Sunday 2020-02-23 18:00]

நடிகர் சிம்பு நீண்ட காலத்திற்கு பிறகு நேற்று இரவு ஒரு பிரபல கல்லூரியின் விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் அவர் பாட்டு பாடியும், நடனமாடியும் மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இதனையடுத்து பேசிய அவர் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு கொடுத்துவரும் அன்பு பற்றி உருக்கமாக பேசினார்.


இயக்குனர் மிஷ்கின் தெருவில் செய்த செயல்!
[Sunday 2020-02-23 18:00]

தேசிய விருதை வென்ற ‘பாரம்’ திரைப்படம் பிப்ரவரி 21 அன்று வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பாரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் மிஷ்கின் இந்த படம் வெளியாகும்போது நான் விளம்பரத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன் என கூறி இருந்தார்.


முன்னணி பாடகரின் அலுவலகத்தில் சடலமாக கிடந்த பெண்!
[Sunday 2020-02-23 08:00]

முன்னணி பாடகர் மிகா சிங்கின் ஸ்டுடிவில் அவரது பெண் மேனேஜர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சர்ச்சையானது. இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 3ம் தேதி நடந்தது. அவர் இறந்தது எப்படி என போலீசார் விசராணை நடத்தி விளக்கம் அளித்துள்ளனர். சவும்யா சாமி என்ற அந்த 30 வயது பெண் குடும்ப பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.


திரிஷாவை எச்சரித்த தயாரிப்பாளர்!
[Sunday 2020-02-23 08:00]

24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’. இப்படத்தின் பிரி புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினர்களும் கலந்துக் கொண்டனர். இதில் தயாரிப்பாளரும் நடிகருமான டி.சிவா பேசும்போது, ‘நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள்.


இந்தியன் 2 படப்பிடிப்பில் மூவர் இறக்க காரணமான கிரேன் ஆப்ரேட்டர் பரபரப்பு வாக்குமூலம்!
[Sunday 2020-02-23 08:00]

இந்தியன் 2 படப்பிடிப்பில் மூன்று பேர் உயிரிழக்க முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படும் கிரேன் ஆப்ரேட்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் விபத்து தொடர்பில் ஃபெப்சி அமைப்பு பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில், புதன்கிழமை இரவு நடந்தது. அப்போது கிரேன் இயந்திரம் சரிந்து, உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இயந்திர ஆபரேட்டர் ராஜன் கவனக்குறைவாக இருந்ததே விபத்துக்குக் காரணமென குற்றம்சாட்டப்படுகிறது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை பொலிசார் கைது செய்தனர். பொலிசில் அவர் அளித்த வாக்குமூலத்தில், கிரேன் மீது படத்தின் ஒளிப் பணியாளர்களின் சுமையை ஏற்ற வேண்டாம் என நான் சொன்னேன்.


இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து சிம்பு உருக்கமான பேச்சு!
[Saturday 2020-02-22 18:00]

சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக் காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர்தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். இந்தியன் -2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.


பொது இடத்தில் நடிகை ராஷ்மிகாவிற்கு முத்தம் கொடுத்த ரசிகர்! Top News
[Saturday 2020-02-22 18:00]

ராஷ்மிகா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர். இவர் தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இன்னும் சில வருடங்களில் நடித்தாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவிற்கு எல்லோரின் பேவரட்டாக இருந்து வருகின்றார், இந்நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவர் யாரும் எதிர்ப்பாராத விதமாக அவருக்கு முத்தமிட்டுள்ளார்.


ரஜினியை கிண்டல் செய்தவர் திருட்டு வழக்கில் கைது!
[Saturday 2020-02-22 17:00]

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த தர்பார் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது படம் வெற்றியா, தோல்வியா என்பதில் சர்ச்சை எழுந்தது, இந்நிலையில் இது ஒரு புறம் இருக்கட்டும், தற்போது வந்துள்ள் செய்தி பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்தார். அப்போது ஒரு இளைஞர் ‘நீங்க யார்?’ என்று கேட்க, அதற்கு ரஜினிகாந்த் ‘நான் தான்பா ரஜினிகாந்த்’ என்று பதில் சொன்னார்.


"நித்யானந்தா கூப்பிட்டால் நிச்சயம் போவேன்" என கூறிய மீரா மிதுன்!
[Saturday 2020-02-22 08:00]

பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் எப்போதும் எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். மிஸ் சவுத் இந்தியா பட்டம் தொடங்கி பல்வேறு சர்ச்சைகளை அவர் சந்தித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நித்யானந்தா பேச்சு பிடிக்கும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூப்பிட்டால் நிச்சயம் போவேன் என கூறியுள்ளார்.


வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட ஷில்பா ஷெட்டி!
[Saturday 2020-02-22 08:00]

Baazigar என்ற படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வந்து முன்னணி ஹீரோயின் ஆனார். கன்னடம், தெலுங்கில் சில படங்களில்நடித்துள்ள இவர் தமிழில் குஷி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கடந்த 2007 க்கு பிறகு இவர் சினிமாவில் நடிக்கவில்லை. பின் ஓரிரு படங்களில் கேமியோ ரோலில் நடித்து வந்தார். 2009 ல் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் உரிமையாளர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார்.


இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புதிய தோற்றம்! Top News
[Saturday 2020-02-22 08:00]

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பைக் சேஸிங் காட்சியில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கை மற்றும் கால்களில் அடிப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.


இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்திற்கு இவர் தான் முக்கிய காரணமாம்?.. Top News
[Friday 2020-02-21 18:00]

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து எல்லோரையும் மிகவும் பாதித்துள்ளது. கமல், ஷங்கர் என படக்குழுவினர்கள் அனைவரையும் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். ஆனால், இவ்வளவு பெரிய விபத்திற்கும் ஷங்கரின் மேனஜேர் விமல் தான் முக்கிய காரணம் என்று சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர், இதில் நம் காதிற்கு வந்த செய்தி உங்களுக்காக... அதாவது படப்பிடிப்பில் Iron truss என்ற சாதனத்தை பயன்படுத்தி பிரமாண்ட லைட்ஸுகளை மேலே வைப்பார்கள்.


குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற தனுஷ்! Top News
[Friday 2020-02-21 18:00]

நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்தபிறகு அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இன்று மஹாசிவராத்திரி என்பதால் தனுஷ் தன்னுடைய குடும்பத்துடன் குலதெய்வ கோயிலான தேனியில் உள்ள கருப்பசாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.


யோகிபாபுவை ஒருதலையாக காதலித்த நடிகை!
[Friday 2020-02-21 18:00]

யோகிபாபு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி காமெடி நடிகர். இவர் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்துவிட்டார். இந்நிலையில் யோகிபாபு சமீபத்தில் தான் மஞ்சுபார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார், திரையுலகத்தினர் பலருக்கும் தெரியாமல் மிக எளிமையாக திருமணம் செய்தார். ஆனால், யோகிபாபுவிற்கு திருமணம் நடந்த நாள் துணை நடிகை சுஜி என்பவர், அழுது நான் யோகிபாபுவை ஒரு தலையாக காதலித்தேன் என அழுது டிக்டாக்-ல் வெளியிட்டுள்ளார்.


ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சிம்ரன்! Top News
[Friday 2020-02-21 08:00]

நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், பம்மல் கே.சம்பந்தம் என்று பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை சிம்ரன், புகழின் உச்சியில் இருந்த போதே 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு திரையுலகை விட்டு விலகியே இருந்தார். அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தீவிரமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் வில்லியாக மிரட்டிய சிம்ரனுக்கு ரஜினியுடன் ஜோடியாக நடித்த பேட்ட படம் வரவேற்பை கொடுத்தது. மீண்டும் பழைய சிம்ரனைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரது ரசிகர்களும் கொண்டாடினார்கள்.


இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது வழக்குப்பதிவு!
[Friday 2020-02-21 08:00]

சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. இதன் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. நேற்று இரவு மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


ஆபாசமாக பேசியதாக நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் வழக்கு!
[Friday 2020-02-21 08:00]

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் தன்னை பயன்படுத்தி விட்டு ஏமாற்றி விட்டதாக புகார் கூறினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் இதில் சிக்கினர். அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். முகநூல் பக்கத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் விவரங்களையும் தொடர்ந்து வெளியிட்டார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை சாடினார். 3 திருமணங்கள் செய்தவர். இவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என்றெல்லாம் வசை பாடினார்.


இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் வெளியானது! Top News
[Thursday 2020-02-20 18:00]

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பில் நேற்று கொடூரமான சம்பவம் நடந்தது. ஆம் படப்பிடிப்பில் பயன் படுத்தப்பட்ட கிரேன் ஒன்று கீழே விழுந்து 3 பேர் பலியாகியுள்ளனர். அதில் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, PA மது, மற்றும் சந்திரன் என்பவரும் மரணம் அடைந்துள்ளதாக தற்போது லைக்கா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த விபத்தில் இறந்த மது மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.


இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்தை ஏற்படுத்திய நபர் தலைமறைவு!
[Thursday 2020-02-20 18:00]

கமல் நடித்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. நேற்று இரவு இப்படத்தில் படப்பிடிப்பில் பயன் படுத்தப்பட்ட கிரேன் கீழே விழுந்து கொடூரமான மரண சம்பவம் நடந்தது. இதில் மது, ஸ்ரீ கிருஷ்னன், சந்திரன் என்பவர்கள் மரணம் அடைந்தார்கள், 9 நபர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது இந்த செய்தியை அறிந்த திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


இந்தியன் 2 படப்பிடிப்பில் பலியானவர்களுக்கு கமல் ரூபாய் 1 கோடி நிதி உதவி!
[Thursday 2020-02-20 18:00]

நேற்று இரவு நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் யாரும் எதிர்பாராத விதத்தில் மிக பெரிய கோர சம்பவம் சேர்ந்தது. ஆம் படப்பிடிப்பில் இருந்து கிரேன் ஒன்று அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த நபர்களின் நபர்களின் விழுந்தது. இதில் மது, ஸ்ரீ கிருஷ்ணா, சந்திரன் என்பவர்கள் மரணமடைந்தார்கள். இதில் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர் பிரபல caartoonist மற்றும் விமர்சகருமான மதன் அவர்களின் மருமகன் ஆவர்.

Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா