Untitled Document
October 23, 2026 [GMT]
 
விருதுகளை அள்ளி குவித்த விஸ்வாசம்!
[Sunday 2020-03-01 08:00]

தல அஜித் நடிப்பில் சென்ற வருட பொங்கலுக்கு வெளிவந்த படம் விஸ்வாசம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. இதற்கு முக்கிய காரணம் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம்ம ஹிட் அடித்தது தான், இந்நிலையில் விஸ்வாசம் படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.


உலக அளவில் ஜோக்கர் செய்த சாதனை!
[Sunday 2020-03-01 08:00]

ஜோக்கர் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், ஜோக்கர் படம் உலகளவில் பிரமாண்ட வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது, இப்படம் உலகம் முழுவதும் 1071 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.


"பொருத்தமான மணமகனுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்" - கேத்ரின் தெரசா!
[Sunday 2020-03-01 08:00]

பா. ரஞ்சித் இயக்கி கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பு கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். இதன்பின், தமிழில் நடித்த பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் என்று கூட கூறலாம்.


விமல் நடிக்கும் படங்களை தடை செய்யக்கோரி தயாரிப்பாளர் கடிதம்!
[Saturday 2020-02-29 18:00]

களவாணி, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விமல். நான்கு கோடி ரூபாய் கடன்பாக்கி வைத்துள்ளதால், அவரை வைத்து படம் தயாரிப்போர், என்னிடம் ஆலோசிக்க வேண்டும்‘ என, தயாரிப்பாளர் சங்கத்திற்கு, தயாரிப்பாளர் கோபி என்பவர் கடிதம் எழுதி உள்ளார். அரசு பிலிம்ஸ் சார்பில், தயாரிப்பாளர் கோபி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- நடிகர் விமல் தயாரித்த, மன்னர் வகையறா படத்திற்கு, அவர் கேட்டதால், 5.35 கோடி ரூபாய் கடன் கொடுத்தேன். படம் வெளிவந்து நான்கு மாதங்களுக்கு பின், 1.35 கோடி ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்தார்.


"சாப்பிட கூட காசில்லாமல் 75 நாட்கள் விரதமிருந்தேன்" - பார்த்திபன் உருக்கம்!
[Saturday 2020-02-29 17:00]

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட மிகச்சிலரில் நடிகர் பார்த்திபனும் ஒருவர். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என ஜொலித்து வருகிறார். கடந்த வருடம் அவரின் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் எழுதிய கிறுக்கல்கள், கவிதைத்தொகுப்பு, கதை திரைக்கதை வசனம் திரைப்படத்தின் இயக்கம் ஆகிய புத்தகங்களை அறிமுகப்படுத்தும் விழா கோவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் சிங்கிள் ஷாட்டில் இரவில் நிழல் படத்தை இயக்குகிறேன்.


மிரட்டி எடுக்கும் திரௌபதி: ரசிகர்கள் கொண்டாட்டம்!
[Saturday 2020-02-29 17:00]

மோகன் இயக்கத்தில் கூட்டு பண முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் திரௌபதி. சமூகத்தில் பணக்கார வீட்டை குறிவைத்து நடத்தப்படும் நாடக காதல் மோசடியையும் அதனால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கையில் இப்படம் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.


"நல்ல கதையம்சம் இருக்கும் படங்கள் தான் எனக்கு முக்கியம்" - தீபிகா படுகோனே!
[Saturday 2020-02-29 08:00]

கன்னட திரையுலகில் அறிமுகம் ஆகி, இந்தி பட உலகிற்கு சென்று, அங்கு முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர், தற்போது கபீர்கான் இயக்கத்தில் 83 என்ற படத்தில் தன்னுடைய கணவர் ரன்வீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார். பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கின்றனர். இந்தப் படத்தில் கபில் தேவாக ரன்வீர் கபூர் நடிக்க, அவருடைய மனைவி ரெமி தேவ்வாக தீபிகா படுகோனே நடிக்கிறார். அதேபோல, மகாபாரதம் கதையை திரவுபதி கண்ணோட்டத்தில் படமாக்க இருக்கின்றனர்; அந்தப் படத்திலும் தீபிகா படுகோனே நடிப்பார் எனத் தெரிகிறது.


"எனக்கு தனிமை பிடிக்காது" என கூறிய கௌதம் மேனன்!
[Saturday 2020-02-29 08:00]

கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் ஒரு படம் வருகின்றது என்றாலே மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும். ஏனெனில் கௌதம் படம் என்பதற்காக ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, அப்படித்தான் அத்தனை வருடங்கள் கழித்து வந்தும் எனை நோக்கி பாயும் தோட்டாவிற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கௌதம் தற்போது படம் இயக்குவது தாண்டி நடிப்பிலும் களம் இறங்கிவிட்டார், இவர் நடிப்பில் சமீபத்தில் ஒரு மலையாள படம் வந்தது.


ஏப்ரல் 9-ம் தேதி வெளியீட்டில் எந்தவித மாற்றமும் இல்லை - மாஸ்டர் படக்குழு!
[Saturday 2020-02-29 08:00]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. இதில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கௌரி கிஷண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியீடு என்று திட்டமிடப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கியமான திரையரங்குகளிலும் பெரிய அளவிலான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் தணிக்கையாகவில்லை என்பதால் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவிக்காமல் உள்ளது.


தொடர் நடிகை சித்ராவின் புதிய பரிமாணம்..! Top News
[Friday 2020-02-28 18:00]

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சில தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார். ஆனாலும் இவர் தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் இவருக்கு நல்ல ரீச் தேடி தந்தது. இதனை சித்ராவே பல நிகழ்ச்சிகளிலும், மேடைகளிலும் கூறியுள்ளார்.


பெண்களை இழிவுபடுத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டேன் - ராஷி கன்னா!
[Friday 2020-02-28 17:00]

தமிழில் அடங்க மறு, அயோக்யா படங்களில் நடித்துள்ளவர் ராஷி கன்னா. தற்போது சுந்தர்.சியின் அரண்மனை 3-ம் பாகத்தில் நடிக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அவர் கூறியதாவது:- “கதாநாயகியாக ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டேன். இனிமேல் எனது படங்களின் வசூல் கணக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது எல்லோரும் வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தை பார்த்து கவர்ச்சியில் எல்லை மீறி இருக்கிறீர்களே இது உங்களுக்கு தேவையா என்று கேட்கின்றனர்.


இந்தியன் 2 விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி - ஷங்கர்!
[Friday 2020-02-28 17:00]

ஜென்டில்மேன், முதல்வன், ஐ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டைரக்டர் ‌ஷங்கர். கமல்ஹாசன் நடிப்பில் 1996-ல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் கடந்த 19-ந்தேதி நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் சினிமா உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஷங்கர் இந்த சம்பவம் குறித்து நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியில் இருந்தும், வேதனையில் இருந்தும், மன உளைச்சலில் இருந்தும், இன்னும் மீளவில்லை. மீள முயன்று கொண்டிருக்கிறேன்.


பாலியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டேன் - நடிகை ஹனி ரோஸ்!
[Friday 2020-02-28 08:00]

சிங்கம் புலி, மல்லுகட்டு, கந்தர்வன் என தமிழில் ஒரு சில படங்களில் நடித்த ஹனி ரோஸ் பின்னர் மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் திரைக்கு வந்து 15 ஆண்டுகளாகிறது. பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டது பற்றி அவர் சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில், ‘சினிமாவில் நடிக்க வந்த பிறகுதான் நிறைய விஷயங்களை கற்கத் தொடங்கினேன். சினிமா என்பது இளம் பெண்களின் கனவு. ஆனால் சினிமாவில் நான் எதிர்பார்த்தபடி என்னால் பிரகாசிக்க முடியாத நிலை இருந்தது. அதுவும் ஒருவகையில் நல்லாதாகவே இருந்தது. அப்போதுதான் நல்ல கதைகளை தேர்வு செய்யத் தொடங்கினேன்.


பிரபல நடிகரிடம் சம்பளத்தை திருப்பி கேட்ட தயாரிப்பாளர்!
[Friday 2020-02-28 08:00]

விஜய் தேவரக்கொண்டா மிக குறுகிய காலத்தில் அதிகம் பாப்புலர் ஆனவர். அர்ஜுன் ரெட்டி படம் பற்றிய பேச்சு அவரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. ஆனால் தற்போது அவர் கேரியர் அதள பாதாளத்தில் விழுந்துள்ளது. World Famous Lover படத்தில் அவர் நான்கு ஹீரோயின்களுடன் நடித்திருந்தார். அதற்கு மோசமான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது. படமும் படுதோல்வியடைந்தது.


மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்! Top News
[Friday 2020-02-28 08:00]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முறை நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தில் இருந்து விஜய் தனது சொந்த குரலில் பாடி, 'ஒரு குட்டி ஸ்டோரி எனும் பாடல் வெளிவந்திருந்தது. இப்பாடல் தமிழில் மட்டுமல்லாமல் உலகளவில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டப்பிங் வேலைகளில் விஜய் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து லேட்டஸ்டாக புதிய புகைப்படம் ஓன்று கசிந்துள்ளது.


இந்தியன் 2 விபத்து: இயக்குனர் ஷங்கரிடம் பொலிஸார் விசாரணை!
[Thursday 2020-02-27 18:00]

கடந்த பிப்ரவரி 19ம் தேதி சென்னையில் EVP பிலிம் ஸ்டூடியோவில் நடிகர் கமல் நடித்துவந்த இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி மத்திய குற்றபிரிவு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இயக்குனர் ஷங்கர் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் இரண்டரை மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.


ஆதரவற்ற நிலையில் தெருவில் பிச்சைக்காரனாக கிடந்த உதவி இயக்குனர்!
[Thursday 2020-02-27 18:00]

சினிமாவில் சாதிக்க வேண்டும் என துடிப்பவர்கள் பலர். ஏதாவது பாதை கிடைத்தால் அதைக்கொண்டு தனக்கான இடத்தை பிடித்துவிடலாம் என போராடுபவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் சென்னை வடபழனி சாலையோரம் அழுக்கு படிந்த கிழிந்த உடையுடன், சிக்கு பிடித்த தலையோடு கையில் பேப்பர் பேனாவுடன் இருந்தவரை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அவரிடம் அருகில் சென்று விசாரித்த போது அவர் தன்னுடைய கதைகளை திருவிட்டனர் என கூறியுள்ளனர். மேலும் அவர் கவிதைகள் பல எழுதி வைத்திருந்தாராம்.


படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகளே அதிகம் வருகிறது - ஆண்ட்ரியா வேதனை!
[Thursday 2020-02-27 17:00]

தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரியா கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வடசென்னை திரைப்படத்தில் ஆண்ட்ரியா படுக்கையறை காட்சியில் மிக நெருக்கமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.


முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கோப்ரா படக்குழு!
[Thursday 2020-02-27 08:00]

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.


திருமணத்தை பற்றி மனம் திறக்கும் பிரியா பவானி சங்கர்!
[Thursday 2020-02-27 08:00]

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். சீரியலை தவிர்த்து இவர் முதன் முறையாக ரத்தாகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் எனும் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் மான்ஸ்டர், அருண் விஜய் நடிப்பில் மாஃபியா போன்ற படங்களில் நடித்து வந்தார்.


"ஹரிஷ் ஜெயராஜின் இசைக்கு நான் அடிமை" - வெளிப்படையாக பேசிய விஜய்!
[Thursday 2020-02-27 08:00]

தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்களில் மிக முக்கியமான நடிகர் என்றால் அது கண்டிப்பாக தளபதி விஜய் தான். இவர் முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருவதை நாம் அறிவோம். இப்படத்தின் டப்பிங் வேளைகளில் தான் தற்போது விஜய் ஈடுபட்டுள்ளதாக சில தகவல்கள் வெளிவந்திருந்தது. மேலும் இவர் பல மேடைகளில் பேசியதை நாம் கேட்டிருப்போம். பலரையும் புகழ்ந்து பேசியும் நாம் பார்த்திருப்போம்.


"அப்பாவுடன் பணியாற்றும்போது அதிகம் பயப்படுவேன்" - கல்யாணி பிரியதர்ஷன்!
[Wednesday 2020-02-26 18:00]

தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கத்தில் அகில் நடித்த 'ஹலோ' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். அதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனரான பிரியதர்ஷனின் மகள்தான் கல்யாணி பிரியதர்ஷன். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' படத்தின் மூலம் கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகமானார். தற்போது மலையாளத்தில் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'வரனே ஆவஷ்யமுண்டு' படத்தின் மூலம் அறிமுகமானார்.


கங்குலியின் வாழ்க்கை படத்தில் நடிக்கவிருக்கும் ஹிருத்திக் ரோஷன்!
[Wednesday 2020-02-26 17:00]

விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மில்கா சிங், மேரி கோம், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), சாய்னா நேவல் (பாட்மின்டன்), கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகியோரது படங்களும் தயாராகி வருகின்றன.


அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகர் பிரஷாந்த்! Top News
[Wednesday 2020-02-26 17:00]

தமிழில் 1990ஆம் ஆண்டு வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் பிரஷாந்த். இவர் பிரபல இய்குனார் தியாகராஜன் அவர்களின் மகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சமீபத்தில் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளிவந்த வினை விதை ராமா என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


என்னை விட வடிவேலு சார் தான் அழகு - ராஷ்மிகா! Top News
[Wednesday 2020-02-26 08:00]

தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் கதாநாயகியாக வந்தவர் ராஷ்மிகா மந்தனா. ஏற்கனவே தெலுங்கில் கீதா கோவிந்தம், தேவதாஸ் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நிதினுடன் ராஷ்மிகா நடித்த பீஷ்மா படம் தற்போது திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை விளம்பரப்படுத்த ராஷ்மிகா விதவிதமான உடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்தினார். ஒவ்வொரு புகைப்படத்துக்கும் முகத்தை வெவ்வேறு கோணங்களில் வைத்து போஸ் கொடுத்தார்.


உலகத்தர படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!
[Wednesday 2020-02-26 08:00]

தமிழ் திரையுலகில் இசைஞானி என்றால் அது கண்டிப்பாக இளையராஜா அவர்கள் மட்டும் தான். இசையை பொறுத்த வரை இவர் தான் ராஜா என்று கூட கூறலாம் அது தவறாகாது. இதற்கு அண்மையில் இவரது இசையில் வெளிவந்த சைக்கோ படம் கூட ஒரு எடுத்துகாட்டு தான். ஆம் இப்படத்தில் இடப்பெறும் உண்ண நினைச்சு பாடல் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.


பிரபல நடிகையை சோகத்தில் ஆழ்த்திய தற்கொலை சம்பவம்!
[Wednesday 2020-02-26 08:00]

தமிழ் சினிமாவில் மதராச பட்டினம் படம் மூலம் வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன் அறிமுகமானார். அதன் பின்னர் தாண்டவம், ஐ, கெத்து, தங்க மகன், தெறி, தேவி, 2.0 என சில படங்களில் நடித்திருந்தார். சூப்பர் கேர்ள்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரிலும் இவர் நடித்து வந்தார். அண்மையில் தன் காதலரை திருமணம் செய்துகொண்டவர் குழந்தையும் பெற்றெடுத்தார். கர்ப்ப காலத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர் தற்போது உருக்கமான பதிவை சோகத்துடன் வெளியிட்டுள்ளார்.


வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் மிஷ்கின்!
[Tuesday 2020-02-25 18:00]

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர். இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படம் மிக பெரிய வெற்றியடைந்தால், துப்பறிவாளன் 2 படத்திற்காக மிஷ்கின் சம்பளத்தை உயர்த்தி கேட்டதாக விஷால் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.


சர்ச்சைக்குரிய படத்தை பாராட்டிய குஷ்பு!
[Tuesday 2020-02-25 18:00]

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’ஷுப் மங்கள் ஸ்யாதா ஸாவ்தான்’. இந்த படத்துக்கு இந்தி திரையுலகில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களின் திருமணத்துக்காக எப்படி பெற்றோரை சம்மதிக்க வைக்கிறார்கள் என்பதை இந்த படம் விளக்குகிறது. விமர்சகர்களும் இந்தப் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்ததற்காக ஆயுஷ்மான் குரானாவுக்கு நடிகை குஷ்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.


முன்னணி நடிகைக்கு உதட்டில் முத்தமிட்ட கமல்: பல வருடம் கழித்து வெடித்த பிரச்சனை!
[Tuesday 2020-02-25 18:00]

கமல்ஹாசன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இதோடு கமல்ஹாசன் தற்போது அரசியல் கட்சி தொடங்கி தேர்தலையும் சந்தித்து வருகின்றார், இந்நிலையில் பல வருடங்கள் கழித்து தற்போது ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. தமிழ் சினிமாவின் முதல் லிப்-லாக் முத்தக்காட்சியாக புன்னகை மன்னன் படத்தை தான் சொல்வார்கள்.

Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா